(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 107- 132 இன் தொடர்ச்சி)

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 133 – 145

133. இரத்தஇயங்கியல்   பழங்கிரேக்கத்தில் haimo  என்றால் குருதி/ இரத்தம்  எனப் பொருள்.Haemodynamics
134. இருப்பியல்   Ontology – இருத்தலியல், இருப்பியல் மெய்மையியல், உணமையியல், இயல்வியல், உள்ளதன்இயல், இருப்பியல், தனி வளரியல் எனப்படுகின்றது. இவற்றுள் ஒர் உயிரியின் வாழ்க்கை வரலாற்றில் நடைபெறும் பல மாற்றங்களையும் ஆராயும் துறை ஆகிய தனி வளரியல் என்பது உயிரியலின் ஒரு பகுதி. ontologia என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் இருத்தல். எனவே, சுருக்கமான இருப்பியல் என்பது ஏற்கப்பட்டுள்ளது. இருப்பியல் – Ontology(1) தனி வளரியல் Ontology(2)Ontology(1)  
135. இருப்புப்பாதைப் பொறியியல்Railway Engineering/Railroad Engineering
136. இரும்புநீர்ம இயங்கியல்   கலிசியன்(Galician) மொழியில் ferro என்றால் iron எனப் பொருள். பழங்கிரேக்கத்தில் húdōr என்றால் தண்ணீர் எனப் பொருள். இதிலிருந்து  hydro உருவானது.Ferrohydrodynamics
137. இரும்புக் காந்தவியல்Ferromagnetics
138. இரும்புத் தாதியல்   pyrite என்னும் பிரெஞ்சுச் சொல் இரும்புத்தாதுவையும் குறிக்கும்.Pyritology
139. இரைப்பையியல்   Gastro Enterology இரைப்பை இயல், உணவுப்பாதை நோய் இயல், குடல் நோய் இயல், செரிமான மண்டல இயல், குடலியல், இரையகக் குடலியவியல், இரையியக் குடலியவியல், இரைப்பைக் குடலியல், செரிமானவியல்  எனப் பலவகையாகக் கூறப்படுகின்றன. இவை யாவும் சரியாக இருந்தாலும் ஒற்றைச்சொல் நிலைப்பே நன்று. இரைப்பைபற்றிப் படிக்கும் பொழுதே இரைப்பைக்குச் செல்லும் குடல், இவற்றின் செரிமானம், இவற்றில் ஏற்படும் நோய்கள் முதலிய அனைத்துமே அடங்கும். எனவே, சுருக்கமாக இரைப்பையியல் – gastro enterology எனலாம். gastḗr என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் வயிறு. ஆங்கிலத்தில் குடல் என்பதற்கான முன்னொட்டுச் சொல்லாகப் பயன்படுத்துகின்றனர். enter என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குடல். Gastrology – இரைப்பை அறிவியல், இரைப்பை நோயியல், இரைப்பையியல் என மூவகையாகக் குறிக்கின்றனர். இதனைத் தனியாகக் குறிக்காமல் Gastro Enterology  உடன் இணைத்துவிடலாம்.Gastro Enterology / Gastrology
140. இலக்கணவியல்   Grammatology  – இலக்கணவியல், எழுதலியல், எழுத்தாள்வியல் எனப் படுகிறது. நேர்பொருள்படி எழுதலியல், எழுத்தாள்வியல் ஆகியவை சரியே. இவற்றைக் குறிப்பதுதான் இலக்கணவியல்.Grammatology
141. இலக்கியயியல்   Philology, மொழிநூல்கலை, இலக்கியப் பற்றார்வம், மொழிநூல், மொழி வரலாற்றைக் கூறும் சாத்திரம், மொழிவரலாற்றியல், மொழியியல், எழுத்தொலியியல் எனப்படுகிறது. கற்பதில் காதல், இலக்கியக் காதல் என்னும் பொருளுடையது philología என்னும் சொல். மொழியைக் கருவியாகக் கொண்டு உரைக்கப்படுவதுதான் இலக்கியம். எனினும் மொழியியலில் இருந்து இதனை வேறுபடுத்துவதற்காக இலக்கிய இயல் – Philology எனலாம்.Philology / Literaturology /Literaturology
142. இலக்கியல்   பழங்கிரேக்கத்தில் télos என்றால் நோக்கம்/இலக்கு எனப் பொருள்கள்.Teleology
143. இலக்கிலி இயல் dys- என்னும் புதுஇலத்தீன் சொல்லின் பொருள் கெட்ட. கெட்ட இலக்கு என்று சொல்லாமல் இலக்கு இல்லாதது என்னும் பொருளில் இலக்கிலி எனப்பட்டது.Dysteleology
144. இலச்சினையியல்Emblematology
145. இலைநிறவியல் olio என்பது இலை >உதிரும் இலை >உதிரும் இலை நிறம் எனப் பொருள்படுகிறது.Foliology

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000