Saturday, February 28, 2026

வெருளி நோய்கள் 1201-1205 : இலக்குவனார் திருவள்ளுவன்











  1. (வெருளி நோய்கள் 1196-1200 : தொடர்ச்சி)

    1. தள விளக்கு வெருளி – Luodophobia
      தள விளக்கு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தள விளக்கு வெருளி.
      தளங்களில் உள்ள தரை விளக்குள் மீதான வெருளியையும் இது குறிக்கும்.

    தள விளக்குகள் மீதான தேவையற்ற பகுத்தறிவிற்குப் பொருந்தாத பேரச்சம் குறித்து இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. விளக்குகள் மீது வெருளி உள்ளவர்களுக்குத் தள வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
    00

    1. தள வெருளி – Tabulatophobia
      தளம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தள வெருளி.
      தளங்களில் உள்ள குப்பைகள், துப்புரவுக் கேடு முதலியவற்றால் ஒவ்வாமை, நோய் முதலியன ஏற்படும் என்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
      காண்க: திடல் வெருளி(Terramophobia)
      00
    2. தளர்மன வெருளி-Dementiaphobia
      தளர்மனம் தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தளர்மன வெருளி.
      மனத்தளர்ச்சி, பித்து நிலை என்னும் பொருள்கள் கொண்ட dementia என்னம் இலத்தீன் சொல்லில் இருந்து இரவல் பெறப்பட்டு Dementia உருவானது.
      00
    3. தள்ளாட்ட நடை வெருளி-Nipiophobia
      தள்ளாட்ட நடையினர் குறித்த அளவு கடந்த பேரச்சம் தள்ளாட்ட நடை வெருளி.
      toddle என்பது குழந்தைகளின் தள்ளாட்ட நடையைக் குறிக்கும். toddler 1 ஆண்டு முதல் 3 ஆண்டு வரை உள்ள பருவத்தைச் சேர்ந்த தள்ளாட்ட நடை உள்ள குழந்தைகளைக் குறிக்கும்.
      00
    4. தள்ளுபெட்டி வெருளி – Rotathecaphobia தள்ளுபெட்டி( trolley suitcase) மீதான அளவுகட ந்த பேரச்சம் தள்ளுபெட்டி வெருளி.பெட்டியை எளிதாக எடுத்துச் செல்வதற்காகக் சக்கரங்கள் இணைக்கப் பட்டு இழுத்து அல்லது தள்ளிச் செல்லும் வகையில் பெட்டிகள் உள்ளன. இவற்றைத் தள்ளச் செல்லும் பொழுது சக்கரங்கள் புரண்டு பெட்டி கவிழ்ந்துவிடும் என்பது போன்ற அச்சத்தால் தேவையற்ற அச்சத்தை உருவாக்கிக் கொள்வோர் உள்ளனர். rotat என்பது இலத்தீனில் சுழலும் சக்கரத்தைக் குறிக்கிறது. rotatheca – சுழல் சக்கரம் உடைய பெட்டி. 
    தொடரும் 
    இலக்குவனார் திருவள்ளுவன் 
    வெருளி அறிவியல் 2/5

No comments:

Post a Comment