(வெருளி நோய்கள் 1196-1200 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1201-1205
- தள விளக்கு வெருளி – Luodophobia
தள விளக்கு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தள விளக்கு வெருளி.
தளங்களில் உள்ள தரை விளக்குள் மீதான வெருளியையும் இது குறிக்கும்.
தள விளக்குகள் மீதான தேவையற்ற பகுத்தறிவிற்குப் பொருந்தாத பேரச்சம் குறித்து இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. விளக்குகள் மீது வெருளி உள்ளவர்களுக்குத் தள வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00- தள வெருளி – Tabulatophobia
தளம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தள வெருளி.
தளங்களில் உள்ள குப்பைகள், துப்புரவுக் கேடு முதலியவற்றால் ஒவ்வாமை, நோய் முதலியன ஏற்படும் என்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
காண்க: திடல் வெருளி(Terramophobia)
00 - தளர்மன வெருளி-Dementiaphobia
தளர்மனம் தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தளர்மன வெருளி.
மனத்தளர்ச்சி, பித்து நிலை என்னும் பொருள்கள் கொண்ட dementia என்னம் இலத்தீன் சொல்லில் இருந்து இரவல் பெறப்பட்டு Dementia உருவானது.
00 - தள்ளாட்ட நடை வெருளி-Nipiophobia
தள்ளாட்ட நடையினர் குறித்த அளவு கடந்த பேரச்சம் தள்ளாட்ட நடை வெருளி.
toddle என்பது குழந்தைகளின் தள்ளாட்ட நடையைக் குறிக்கும். toddler 1 ஆண்டு முதல் 3 ஆண்டு வரை உள்ள பருவத்தைச் சேர்ந்த தள்ளாட்ட நடை உள்ள குழந்தைகளைக் குறிக்கும்.
00 - தள்ளுபெட்டி வெருளி – Rotathecaphobia தள்ளுபெட்டி( trolley suitcase) மீதான அளவுகட ந்த பேரச்சம் தள்ளுபெட்டி வெருளி.பெட்டியை எளிதாக எடுத்துச் செல்வதற்காகக் சக்கரங்கள் இணைக்கப் பட்டு இழுத்து அல்லது தள்ளிச் செல்லும் வகையில் பெட்டிகள் உள்ளன. இவற்றைத் தள்ளச் செல்லும் பொழுது சக்கரங்கள் புரண்டு பெட்டி கவிழ்ந்துவிடும் என்பது போன்ற அச்சத்தால் தேவையற்ற அச்சத்தை உருவாக்கிக் கொள்வோர் உள்ளனர். rotat என்பது இலத்தீனில் சுழலும் சக்கரத்தைக் குறிக்கிறது. rotatheca – சுழல் சக்கரம் உடைய பெட்டி.
தொடரும்இலக்குவனார் திருவள்ளுவன்வெருளி அறிவியல் 2/5- தள விளக்கு வெருளி – Luodophobia
தமிழில் எண்ணற்ற அறிவியல் செய்திகள் உள்ளன. இன்றைக்குக் காணப்படும் அறிவியல் உண்மைகள் அன்றே கண்டறியப்பட்டுள்ளன. அறிவியல் தமிழின் அன்றைய வளத்தையும் இன்றைய உண்மையையும் உணர்த்த அனைவருக்குமான அறிவியல் தமிழ் என்னும் நூல் கணியச்சில் உருவாக்கப்பட்டது. 10 ஆண்டுகளாக உறங்கிக் கிடக்கும் உண்மைகளை இணையத்தில் ஏற்றலாம் என இவ்வலைப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. புதிய பதிவுகளும் மேற்கொள்ளப்படும்.
Saturday, February 28, 2026
வெருளி நோய்கள் 1201-1205 : இலக்குவனார் திருவள்ளுவன்
Friday, February 27, 2026
வெருளி நோய்கள் 1196-1200 : இலக்குவனார் திருவள்ளுவன்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 28 February 2026 அகரமுதல
(வெருளி நோய்கள் 1191-1195 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1196-1200
- தவறுகை வெருளி – Alterdissemophobia
பார்க்காத அலைவரிசையில் பார்க்கவேண்டிய நிகழ்ச்சியைத் தவறவிடுவோமோ எனப் பேரச்சம் கொள்வது தவறுகை வெருளி.
தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே மற்ற அலைவரிசையில் இன்றியமையா நிகழ்ச்சியைப் பார்க்காமல் போகிறோமோ எனக் கவலைப்படுவர். சில நேரங்களில் குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க எண்ணியிருப்பர். என்ன நிகழ்ச்சி, எந்தத் தொலைக்காட்சி அலைவரிசை என நினைவின்றி அதனைப்பார்க்க இயலவில்லையே எனக் கவலைப்படுவோரும் உள்ளனர்.
நிகழ்ச்சி தவறுதல் குறித்த வெருளி என்பதால் தவறுகை வெருளி என முதலில் குறிப்பிட்டிருந்தேன்.
இருப்பினும் தவறுகை எனப் பொதுச்சொல்லில் குறிக்காமல், அலைவரிசை மாறிப்போவதை நேரடியாகக் குறிக்கும் வகையில் இப்பொழுது மாற்றலை வெருளி எனக் குறித்துள்ளேன்.
00
- தவிட்டி மா வெருளி – Browniephobia
தவிட்டி மா(brownie) தொடர்பான வரம்பற்ற பேரச்சம் தவிட்டி மா வெருளி.
தவிட்டு மா என்றால் தவிட்டால் செய்யப்பட்ட எனப் பொருள் வரும். எனவே, தவிட்டு நிறமுடைய திண்மா என்னும் பொருளில் தவிட்டி மா எனலாம்
00
- தழும்பு வெருளி – Oulinophobia
தழும்பு குறித்த வரம்பற்ற பேரச்சம் தழும்பு வெருளி.
காயங்கள் விட்டு வைக்கும் நிலையான அடையாளம் தழும்புகள். தழும்புகள் உடல் பகுதி வெளியே தெரியும் முகம், கை, முதலான உறுப்புகளில் இருந்தன என்றால் அழகு குறைவாகத் தோன்றும் என்று பேரச்சம் கொள்கின்றனர்.
Oulin என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தழும்பு.
00
- தழுவல் வெருளி-Charminphobia
கட்டித் தழுவப்படுதல் குறித்த அளவுகடந்த பேரச்சம் தழுவல் வெருளி.
சிறுவர் சிறுமியருக்கு வீட்டிற்கு வரும் உறவினர்கள் கட்டிப்பிடித்தால் பிடிக்காமல் போய்விடுகிறது. இதுவே நாளடைவில் வெறுப்பாக மாறிப் பேரச்சத்தை உருவாக்குகிறது. தவறான நோக்கில் சிலர் கட்டிப்பிடிப்பதை அறிவதாலும் இத்தகைய வெறுப்பு வருகிறது.
00
- தளச் சூடேற்றி வெருளி – K2nqiphobia
தளம் சூடேற்றி(space heater)பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் சூடேற்றி வெருளி.
தளச்சூடேற்றியின் மிகப்பெரும் தீங்கு தீப்பற்றல் ஆகும். அமெரிக்க நாட்டுப்புள்ளி விவரம் ஒன்று, ஆண்டிற்கு 55,000 தீ நேர்ச்சிகள் நடைபெறுவதாகவும், 450பேர் இறப்பதாகவும் 1500 பேர் காயமுறுவதாகவும் தெரிவிக்கின்றது. உலகளாவிய புள்ளிவிவரம் இதைவிட மிகுதியாகத் தெரிவிக்கும் எனலாம். இதற்கு மிகுதியாக மின்சாரம் தேவைப்படுகிறது. மின்சுற்றில் மிகைச்சுமை ஏற்பட்டு, மின்தடை அல்லது தீ நேர்ச்சி நேர்கிறது. இவைபற்றியெல்லாம கவைலப்படுபவர்கள் தளச் சூடேற்றி மீது காரணமற்ற அளவுகடந்த பேரச்சத்தை வளர்த்துக் கொள்கின்றனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
Thursday, February 26, 2026
வெருளி நோய்கள் 1191-1195 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1186-1190 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1191-1195
- தவறான புரிதல் வெருளி – Ambiguphobia
தவறான புரிதல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தவறான புரிதல் வெருளி.
இத்தகையோர் விதிமுறைகள், வரையறைகள் முதலியவற்றில் தவறான புரிதல் ஏற்பட்டால் கெடுவிளைவு ஏற்படும் என்ற பேரச்சத்திற்கும் ஆளாகின்றனர்.
00
- தவறான வரிசை வெருளி – Agmenophobia
தவறான வரிசையில் நின்றுவிட்டோமோ எனப் பேரச்சம் கொள்வது தவறான வரிசை வெருளி.
வரிசையில் நின்றபின், தான் நிற்கும் வரிசை மெதுவாக நகர்வதாகவும் தவறான வரிசையில் நின்றுவிட்டோம், மாடம் அருகில் செல்வதற்கு முன்னர் பயணச்சீட்டு, திரைச்சீட்டு முதலியவை விற்று விடும், என்பனபோன்று அச்சம் கொள்வர். சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களுக்கான பல வரிசைகள் இருக்கும் பொழுது, வரிசை தவறானதாக இருந்து மீண்டும் வேறு வரிசையில் நின்று நேரம் செலவழிக்க வேண்டும் என்றும் அஞ்சுவர். இத்தகையோருக்குச் சரியான வரிசையில் நிற்கும் பொழுதும் இத்தகைய எண்ணம் வந்து மனப்பதற்றம் வரும்.
agmeno என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் படைவரிசை. இங்கு பொதுவான வரிசையைக் குறிக்கிறது.
00
- தவறான விடை வெருளி – Errophobia / Erratophobia
தவறான விடைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் தவறான விடை வெருளி.
Erratophobia(தவறிழைப்பு வெருளி)யும் இதுவும் ஒன்றே எனப் பலர் விளக்கங்கள் உள்ளன.
எனினும் தவறான விடை வெருளி(Errophobia) என்பதை அதன் பகுதியாகவும் அதே நேரம் தனியாகவும் குறிப்பிடலாம். தவறான விடையைத் தெரிவு செய்துவிட்டு அல்லது செய்துவிட்டதாக எண்ணி அளவு கடந்த பேரச்சம் கொள்வர் இத்தகையோர். தவறான விடை என்னும் பொழுது தேர்வுத்தாளில் வினாவிற்கான விடை என்று மட்டுமல்ல. சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கும் தவறான ஒன்றைத் தெரிவு செய்வதையும் குறிப்பிடலாம்.
Erro என்றால் இசுபானிய மொழியில் தவறு என்றும் போர்த்துக்கீ சிய மொழியில் பிழை என்று் பொருள்கள்.
00
- தவறிழைப்பு வெருளி – Erratophobia
தவறிழைப்பு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தவறிழைப்பு வெருளி.
ஒரு செயலில் இறங்கும் பொழுது தவறு நேரிடும் என்று காரணமற்ற வரம்பற்ற பேரச்சம் கொள்ளல். இதற்கு முன்பு நேர்ந்த தவற்றினை நினைத்து இவ்வாறு கவலையும் அச்சமும் கொள்வர். அறிவியலறிஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள் பல தவறுகள் மூலம்தான் முன்னேற்றம் கண்டு வெற்றி அடைந்தனர். எனவே, தன்னம்பிக்கையுடன் இருந்தால் தவறிழைப்பு வெருளி வராது.
காண்க: தவறான விடை வெருளி(Errophobia).
Errato என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் தவறு.
00
- தவறுகள் வெருளி – Lathophobia / Falsuphobia
தவறுகள்பற்றிய அளவுகடந்த பேரச்சம் தவறுகள் வெருளி.
அறிந்தும் அறியாமலும் நாம் செய்யும் தவறுகளால் பேரிடர், தோல்வி, இழப்பு வருவது குறித்துத் தேவையற்று மிகையான பேரச்சம் கொள்வர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
வெருளி நோய்கள்
Wednesday, February 25, 2026
வெருளி நோய்கள் 1186-1190 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1181-1185 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1186-1190
- தலை வெருளி-Kefaliphobia
தலை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தலை வெருளி.
தலையின் தோற்றம், வடிவம், அழகு, வரக்கூடிய நோய்கள் முதலானவைபற்றிக் கவலைப்பட்டுத் துன்புற்றுப் பேரச்சத்திற்கு ஆளாவது தலை வெருளி.
Kefali என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தலை.
00
- தலைகீழ் வெருளி – Tronicteliponitrianirikssiophobia/ Anapodaphobia
உடலில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகப் பேரச்சம் கொள்வது தலைகீழ் வெருளி.
நோய் வெருளியைப் போன்றதுதான் இதுவும்.
Anapoda என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் தலைகீழ் எனப் பொருள்.
00
- தலைக்காப்பி வெருளி – Cranophobia/ Kranosophobia
தலைக்காப்பி (Helmet) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தலைக்காப்பி வெருளி.
தலைக் கவிப்பு, தலைக்கவசம், தலை காப்பணி ,தலையணி எனப் பலவைகயாகக் குறிக்கப் பெறுவதைச் சுருக்கமாகத் தலைக்காப்பி எனக் கூறலாம்.
Kratos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தலைக்காப்பி (தலைக்கவசம்)
00
- தவளை வெருளி – Ranidaphobia
தவளை குறித்த தேவையற்ற வெறுப்பும் அளவுகடந்த பேரச்சமும் தவளை வெருளி.
சிலர் தவளையைப் பார்க்க நேர்வதைத் தீய நிமித்தமாக எண்ணுவர். தீயது நிகழப்போவதாக அஞ்சுவர்.
rani என்னும் இலத்தீன் சொல்லிற்குத் தவளை எனப் பொருள்.
00
- தவறாண்மை வெருளி – Detrectophobia
தவறான மேலாண்மை குறித்த வரம்பற்ற பேரச்சம் தவறாண்மை வெருளி.
ஆண்மை என்றால் ஆளுமை எனப் பொருள்.
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு (குறள் 612)
என்கிறார் திருவள்ளுவர்.
அஃதாவது, ஒரு செயலை அது கெடுமாறு கையாளக்கூடாது என்கிறார். அப்படிப்பட்டவரை உலகம் கை விட்டு விடுமாம்.
இத்தகைய தவறான மேலாண்மையால் தொழிலாளர் நல்லுறவின்மை, வருாய் இழப்பு, தொழில் தேய்தல் போன்ற கேடுகள் நிகழும். எனவே, தவறாண்மை குறித்துப் பேரச்சம் வருவது இயற்கைதான். ஆனால், தேவையற்றுக் காரணமின்றிப் பேரச்சம் கொள்ளக் கூடாது. அவ்வாறு அஞ்சினால் தவறாண்மை வெருளிக்கு ஆளாவர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
வெருளி நோய்கள்,
Tuesday, February 24, 2026
நாலடி நல்கும் நன்னெறி 25 : சமயங்கள் வெவ்வேறு: உணர்த்தும் நெறி ஒன்றே! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 25 February 2026 அகரமுதல
(நாலடி நல்கும் நன்னெறி 24: நிலையான பயன் தரும் அறம் செய்க!: தொடர்ச்சி)
நாலடி நல்கும் நன்னெறி 25
சமயங்கள் வெவ்வேறு: ஆயினும் அவை உணர்த்தும் நெறி ஒன்றே!
ஆவே றுருவின வாயினும் ஆபயந்த
பால்வே றுருவின அல்லவாம்; – பால்போல்
ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல்
உருவு பலகொளல் ஈங்கு.
நாலடியார் பாடல் 118
கருத்து:
பசுக்கள் வெவ்வேறு வண்ணங்களை உடையனவாக இருந்தாலும் அவை தரும் பாலின் நிறம் வெண்மைதான். அதுபோல், சமயங்கள் வெவ்வேறு வகையில் இருந்தாலும் அவை அறிவுறுத்தும் அறநெறி ஒன்றே!
பதவுரை:
ஆ = பசுக்கள்; வேறு உருவின = நிறத்தாலும் வடிவத்தாலும் வெவ்வேறு உருவங்களைக்; ஆயினும்=கொண்டிருப்பினும்; ஆ பயந்த பால் = பசுக்கள் தரும் பாலும் பால் மூலம் பெறும் தயிர், நெய் முதலிய பாற் பொருள்களும்; வேறு உருவின= வெவ்வேறு வண்ணங்களை; அல்லவாம் = உடையன அல்லவாம்; அறநெறி = அறத்தின் வழி; பால்போல்=பால் போன்று;ஒருதன்மைத் தாகும்= ஒத்ததன்மையுடையனவாகும்; ஆபோல் = பசுக்கள் போல் ; உருவு பலகொளல் ஈங்கு=பல வேடங்களையுடைய சமயங்களும் இங்கு
சமயங்கள் கொள்கையினால், வழி பாட்டு முறைகளினால், சடங்குகளால், நோன்பு முறைகளால், நூல்களால், வெவ்வேறாக உள்ளன. ஆனால் அவை உணர்த்தும் அடிப்படை அறநெறி ஒன்றுதான். இவ்வுண்மையையே பசுக்கள் பல வண்ணமாக இருந்தாலும் அவைதரும் பாலின் நிறம் ஒன்றுதான் எனக் கூறி உணர்த்துகிறார் பாடலாசிரியர்.
இப்பாடல் சமயப்பொறைக்கு வழி காட்டுகிறது. வெவ்வேறு சமயத்தவர் தத்தம் சமயமே உயர்ந்தது என்றோ தங்கள் சமயம் கூறும் படைப்புக் கடவுளை உயர்ந்ததாகவோ கூறக்கூடாது. வழிபாட்டு முறைகளினாலும் நடைமுறைகளாலும் ஒவ்வொரு சமயமும் வெவ்வேறு வகையாகத் தோன்றலாம். சமயக் கடவுள்களின் தோற்றங்களும் வெவ்வேறு நிலையாக இருக்கலாம். ஆனால், அவை உணர்த்தும் அடிப்படை நெறி ஒன்றே. அவ்வாறிருக்கும் பொழுது ஒவ்வொருவரும் தத்தம் சமயமே உயர்ந்தது என்று சொல்லாட, போராட வேண்டிய தேவை என்ன? எனவே, சமயங்களின் அடிப்படை ஒருமை உணர்வைப் புரிந்து கொண்டு சமயப்பொறையுடன் வாழ வேண்டும் என நாலடியார்ப் பாடல் உணர்த்துகிறது எனலாம்.
நாடெங்கும் சமயச்சண்டைகள் தலைவிரித்தாடுகின்றன. அவற்றை நிறுத்துவதற்கு இப்பாடலைப் பொருளுடன் விளக்கி உணர்த்தலாம். சமயப் பொறையே நமக்குத் தேவை. சமயக்கருத்துகளில் உள்ள வேண்டாதனவற்றை விலக்கி உட்கருத்தான அறநெறியை உணர்ந்து போற்றுவோம்!
–
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி நோய்கள் 1181-1185 : இலக்குவனார் திருவள்ளுவன்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 25 February 2026 அகரமுதல
(வெருளி நோய்கள் 1176-1180 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1181-1185
- தம்பா வெருளி – Tampaphobia
தம்பா(Tampa) மாநகரம் தொடர்பான தேவையற்ற பேரச்சம் தம்பா வெருளி.
ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தம்பா மாநகரம் உள்ளது. இம் மாநிலம், மாநில மக்கள், விளைபொருள்கள், பழக்க வழக்கங்கள், தொடர்பானவை குறித்துக் காரணமற்ற பேரச்சம கொள்வர் இத்தகையோர்.
00
- தராசு வெருளி-Zygariaphobia
தராசு தொடர்பிலான அளவு கடந்த பேரச்சம் தராசு வெருளி.
தராசு நிறைகோல் என்றும் துலாக்கோல் என்றும் அழைக்கப் பெறும்; தட்டுத்தராசு, வில் தராசு, மின்னணு தராசு, வேதியல் தராசு எனப் பலவகைப்படும். தராசுகளில் மோசடி செய்து எடையைத் தவறாகக் காட்டுவர், இதனால் இழப்பு ஏற்படும் என்பன போன்ற பேரச்சத்திற்கு ஆளாவர்.
00
- தரை விரிப்பு வெருளி – Hibernicaphobia
தரை விரிப்பு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தரை விரிப்பு வெருளி.
தரை விரிப்பு கீழே விழ வைத்து விடும், அதிலுள்ள தூசிகள்போன்றவற்றால் ஒவ்வாமை ஏற்பட்டு நலக்குறைவு ஏற்படும், என்பனபோன்ற கவலைகளால் தரைவிரிப்பு மீதான வெருளி ஏற்படுகிறது.
00
- தல்ல ஃகசீ வெருளி – Tallahasseephobia
தல்லஃகசீ (Tallahassee) நகரம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தல்லஃகசீ வெருளி.
தல்லஃகசீ, அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் தலைநகரம். இம்மக்கள், இம்மக்கள் தொடர்பானவை என அளவுகடந்த பேரச்சம் கொள்வதே தல்லஃகசீ வெருளியாகிறது.
00 - தலை வலி வெருளி-Kefalalgiaphobia/Cephalalgiaphobia
தலைவலி குறித்த அளவுகடந்த பேரச்சம் தலைவலி வெருளி.
தலைவலி, ஒற்றைத் தலைவலி முதலான தலைநோவுகள் குறித்து அளவு கடந்த பேரச்சம் கொள்வர். இதனால் மருந்து அளவைக் கூடுதலாக எடுத்துக் கொண்டு மேலும் துன்புறுவர். தலைவலி மற்றொரு நோயின் அறிகுறி என, மற்றொரு நோய்குறித்து ஆராய்ந்து வரம்பற்ற பேரச்சத்தை வளர்த்துக் கொள்வர். தலைவலி வரும் என்று கவலைப்பட்டுத் தலைவலி வெருளிக்கு உள்ளாவோரும் உள்ளனர்.
cephalic, algia ஆகிய இலத்தீன் சொற்களுக்கு முறையே தலை, வலி எனப் பொருள்கள். இதன் ஒலிப்பு முறை மாற்றம்தான் Kefalalgia என்னும் சொல்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
Monday, February 23, 2026
வெருளி நோய்கள் 1176-1180 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1171-1175 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1176-1180
- தந்தையர் நாள் வெருளி-Imeratoupateraphobia
தந்தையர் நாள் (Father’s Day) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தந்தையர் நாள் வெருளி.
தந்தை வெருளி(Patrophobia) உள்ளவர்களுக்குத் தந்தையர் நாள் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00
- தந்தையின் உடன்பிறப்பர் வெருளி – Fibliphobia
தந்தையின் உடன்பிறப்புகளான அத்தையர், பெரியப்பா, சித்தப்பாக்கள் ஆகியோர் மீதான தேவையற்ற பேரச்சம் தந்தையின் உடன்பிறப்பர் வெருளி
தந்தையின் உடன்பிறப்புகள் காட்டும் கண்டிப்புகளால் அவர்கள் மீது வெருளி வருகிறது.
00
- தந்தைவழி மாமன் வெருளி – Patruusphobia
தந்தைவழி மாமன் தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தந்தைவழி மாமன் வெருளி.
தந்தைவழி மாமன் கண்டிப்பைப் புரிந்து கொள்ளாமல் அவரகள்மீது தேவையற்ற வெருளி கொள்கின்றனர்.
00
- தப்பு வெருளி – civerophobia
அரசியலில் தப்பான நிலைப்பாடு எடுத்துள்ளதாக அடையும் அளவுகடந்த பேரச்சம் தப்பு வெருளி.
இதனை மகிழ்ச்சி கண்டு அளவுகடந்த பேரச்சம் கொள்ளும் களிப்பு வெருளி எனத் தவறாகக் குறிப்பிடுகின்றனர்.களிப்பு வெருளி(cherophobia) எனத் தனியாக உள்ளது. எனவே, குழப்பிக் கொள்ள வேண்டா.
அரசியல் வெருளி என்றால் அரசியலர் வெருளி(civiliphobia) எனப் பொருள் கொள்ள நேரும்.
00
- தமிய வெருளி – Auto phobia
பிறருடன் இருந்தாலும் யாரும் இல்லையென்று கவலைப்படுவதும் அளவுகடந்த பேரச்சம் கொள்வதும் தமிய வெருளி. தொடர்பற்றுத் தனித்து இருப்பது குறித்த பேரச்சம் கொண்டிருப்பர் இத்தகையோர்.
“தமியர் உறங்கும் கௌவை இன்றாய் இனியது கேட்டு இன்புறுக இவ்வூரே” (குறு:34:2-3).
தமியளாய சீதைக்கும்(கம்பரா. மாயாசீதை. 80).
“மடை மாண் செப்பில் தமிய வைகிய பொய்யாப் பூவின் மெய் சாயினளே” (குறு:9:2-3).
தானே தமியன்வந்தன னளியன் (மணி. 16, 58).
எனத் தமிய நிலை தமிழ் இலக்கியங்களில் குறிக்கப்பெற்றுள்ளது.
தமியனேன் தனிமை தீர்த்தே(திருவாச. 5, 68). (திருவாச 12, 3).
என மாணிக்கவாசகர் இறைவன் திருப்பெருந்துறையில் தனிமையில் விட்டு மறைந்தமையை எண்ணி வருந்தியு்ள்ளார். வருந்தும் தனிமை நிலைமையைத் ‘தமியனேன்’ என்கிறார் அவர். இதனடிப்படையில் தமியன் சொல் இங்கே கையாளப்படுகிறது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
Sunday, February 22, 2026
வெருளி நோய்கள் 1166-1170 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1161-1165: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1166-1170
- தசைக்கனி வெருளி- Mourophobia
தசைக்கனி (Berry) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தசைக்கனி வெருளி.
இதனைச் சிலர் Fructophobia என்கின்றனர். fructus என்னும் இலத்தீன் சொல்லிற்குப் பழம் எனப் பொருள். எனவே, Fructophobia என்பதைப் பழ வெருளி எனப் பொதுவாகக் குறிப்பிட வேண்டும். Mourophobia என்பது குறிப்பாகத் தசைக்கனியைக் குறிப்பது.
தசைக்கனியில் வழல் நச்சம்(சப்போனின்/saponin) என்னும் நச்சுக் கலவை உள்ளது. இது குமட்டல், வாந்தி, வயிற்றுப் பிடிப்பை முதலியவற்றை ஏற்படுத்தக் கூடும். இதனால் தசைக்கனி மீது அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
- தடத்தள வெருளி – Oikoechophobia
குடும்பத்தட(Family Echo) வலைத்தளம் தொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் தடத்தள வெருளி.
குடும்ப வழி வழி மரபினரைக் குறிப்பிடும் குடும்பத்தட விளக்கப்படத்தைக் குடும்ப மரம்(Family Tree) என்றும் கூறுவர்.
00
- தடைப்பி வெருளி – Frenophobia
தடைப்பி(brake) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தடைப்பி வெருளி.
தடைப்பி சரியாகச் செயல்படாதிருக்குமோ, நேர்ச்சி(விபத்து) ஏற்படுமோ உயிருக்கு அல்லது உடலுக்குக் கண்டம் (ஆபத்து)வருமோ என்று தேவையற்ற பேரச்சத்தை வரம்புமீறி அடைவர் இத்தகையோர்.
Freno என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தடைப்பி(brake).
00
- தட்டிசை வெருளி – Hiphopphobia
தட்டிசை(hip hop) குறித்த வரம்பற்ற பேரச்சம் தட்டிசை வெருளி.
தட்டிசை(hip hop)யைக் கேட்பதற்கே பேரச்சமாக உள்ளதாகச் சிலர் கூறுகின்றனர். இரைச்சல் ஒலி கேட்பவரை வன்முறைக்குத் தூண்டும் எனச் சிலர் கூறுகின்றனர். தட்டிசைக்கு எதிரான கட்டுரைகள் இதழ்களில் வந்துள்ளன. இவற்றையெல்லாம் கேட்டும் படித்தும் பிறருக்கும் தட்டிசை குறித்த பேரச்சம் வருகிறது.
00
- தண்கலன் வெருளி – Psygephobia
தண்கலன்(refrigerator) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தண்கலன் வெருளி.
சிறு பருவத்தில் தண்கலைனைப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட அச்சம் நாளடைவில் காரணமின்றிச் சிலருக்கு வளர்ந்து விடுகிறது. கெடு நாளுக்குப் பின்னரும் உணவுப் பொருளை வைத்து விட்டு அது கெட்டு அதனால் நலக்குறைவு ஏற்பட்டால் தண்கலன்தான் காரணம் என எண்ணி அதன் மீது வெறுப்பை வளர்ப்பவர்களும் உண்டு. அன்றைக்குச் சமைத்த உணவைச்சுடச்சுட உண்ண வேண்டும்.இதற்கு மாறாகத் தண்கலன் பயன்பாடு உள்ளது என அதனை வெறுப்பவர்களும் உள்ளனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5