(வெருளி நோய்கள் 704 -708 : தொடர்ச்சி)

ஏனம் கழுவிக்கான தேய்ப்புத்தூள் (dishwasher detergent) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் கழுவுத் தூள் வெருளி.

தேய்ப்புத் தூள் என்றால் கைகளால் பாத்திரங்களை அலம்பும் பொழுது பயன்படுத்தும் தூளைக் குறிக்கும்.

காண்க: கழுவு நீர்ம  வெருளி – Xiwophobia

00

நம்மிடம் இருந்து யாரும் திருடி விடுவார்கள் என்ற அச்சமும் நாம் யாரிடமிருந்தாவது திருடுவோம் என்ற அச்சமும் ஆகிய இரண்டும் களவு வெருளி/திருட்டு வெருளி எனப்பெறும்.

போதிய காரணமின்றி நம் பொருள்கள் திருடு போகும் என்று பரபரப்பாகவும் மன அழுத்தத்துடனும் இருப்பதும் உண்டு. பிறர் பொருளை யாரும் அறியாமல் எடுத்துவிடுவோம் என்று அஞ்சி உள்ளம் நடுங்குவதும் உண்டு. அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் யாரும் அறியாமல் பிறர் பொருளை எடுக்கும் பழக்கத்தில் உள்ள நிகழ்வுகளை நாம் பார்த்திருக்கிறோம்.  இத்தகையோர் களவு வெருளிக்கு ஆளாகின்றனர்.

clepto / klepto  ஆகிய என்னும் கிரேக்கச் சொற்களுக்குத் திருடுவது, திருட்டு, திருடன் எனப் பொருள்கள்.

00

களிப்புச் சூழல் குறித்த அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் களிப்பு வெருளி.

களிப்புச் சூழல் வந்தால் மகிழ வேண்டும்.

கள்ளுண்டு மகிழ்தலைக் களிப்பு என்பர். களிப்பு என்பது மகிழ்ச்சி தரும் கொண்டாட்டம்.

மகிழ்ச்சி வெருளியும் களிப்பு வெருளியும் தொடர்புடையனவே.

‘chero’ என்னும் கிரேக்கச்சொல்லுக்கு மிகுமகிழ்வெய்தல் என்று பொருள்.

00

களை வெட்டி(weed eater) குறித்த வரம்பற்ற பேரச்சம் களை வெட்டி வெருளி.

களையை வெட்டும்பொழுது களையல்லாதனவும் வெட்டப்படுமோ என்று எண்ணிக் களைவெட்டிகுறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.

00

களைச்செடி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் களைச்செடி வெருளி.

தேவையற்ற தாவரமாகவோ தவறான இடத்தில் வளரும் தாவரமாகவோ பயிர்களிடையே வளரும் களைகள் பயிர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு பயிர்களுக்குண்டான ஊட்டச்சத்துக்கள், நீர், சூரிய ஒளி, வளர்வதற்கான இடம் போன்றவற்றைப் பெருமுனைப்புடன் பகிர்ந்து கொள்கிறது. எனவே,பயிர்களின் வளர்ச்சி பாதிப்புறுவதால் களைகள் குறித்த பேரச்சம் உருவாகி வளர்கிறது.

00

(தொடரும்)