Monday, May 18, 2026

வெருளி நோய்கள் 1436 -1440: இலக்குவனார் திருவள்ளுவன்



வெருளி நோய்கள் 1431 -1435: தொடர்ச்சி)

நன்னீர் மீன் வெருளி – Pestrofaphobia

நன்னீர் மீன்(trout) குறித்த வரம்பற்ற பேரச்சம் நன்னீர் மீன் வெருளி.

ஒருவரின் கடந்த கால அதிர்ச்சிகரமான நிகழ்வுகளால் மீன் வெருளி தூண்டப்படலாம். அவ்வாறில்லாமல் எதிர்பாராத விதமாகவும் மீன் வெருளி ஏற்படலாம்.

மீன்களைப் பார்ப்பது, முகர்வது, கேட்பது, தொடுவது மற்றும் உண்பது குறித்த பேரச்சத்தைக் குறிப்பிடும் மீன்வெருளி(Ichthyophobia) உள்ளவர்களுக்கு நன்னீர் மீன் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.

Pestrofa என்னும் கிரேக்கச் சொல்லிற்கு நன்னீர் மீன் எனப் பொருள்..

00

நாவற்பழம் அல்லது நாகற்பழம் மீதான வரம்பற்ற பேரச்சம் நாகற்பழ வெருளி.
நாவற் பழம், இரத்தத்தில் உள்ள சருக்கரை அளவைக் குறைக்கவும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும். எனினும் முன்னரே குறைந்த சருக்கரை அளவும் குறைவான இரத்த அழுத்தமும் இருப்பின் மேலும் குறைந்து உடற் தீங்கு ஏற்படும், மயக்கம் வரலாம், உயிருக்குக் கேடு வரலாம் என அஞ்சுவோர் உள்ளனர்.
Vatomouro என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் நாவற்பழம்.
00

நாக்கு குறித்த வரம்பற்ற பேரச்சம் நாக்கு வெருளி.
சக்கரவர்த்தி திருமகள் படத்தில் போட்டிப்பாடலில்
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
நிலைக்கெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குதான் அது

என வினா-விடை வரும்.
எனவேதான் திருவள்ளுவரும்
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
(குறள் 127)
என்கிறார். எனவே நாக்கு குறித்து விழிப்பு தேவைதான். ஆனால், தேவையற்ற சூழலில் காரணமின்றிப் பேரச்சம் கொண்டு வெருளிக்கு ஆளாகின்றனர் சிலர்.
00

நாடகம் குறித்த வரம்பற்ற பேரச்சம் நாடக வெருளி.
நாடகக் கலைஞர்கள், குறிப்பாகப் பெண்கலைஞர்கள் குறித்து ஒழுக்கமற்றவர்கள் எனத் தவறாகக் கருதுவதால், நாடகம் பார்ப்பவர்கள் தீய வழிக்குச் செல்வர் என நாடகம் குறித்தும் பேரச்சம் கொள்கின்றனர்.
துன்பக் காட்சிகளும் வன்முறைக் காட்சிகளும் கயவர்கள் புரியும் கயமைக் காட்சிகளாலும் நாடகம் மீது பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
காண்க: நாட்டியவெருளி(Choreophobia/Chorophobia/saltaphobia/Saltophobia)
00

தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பது குறித்த அளவுகடந்த பேரச்சம் நாடகத் தொடர் வெருளி.
காட்சித் தொடர் என்று சொன்னால் கதையில்லாத பிற தொடர்களையும் குறிக்கும். பொதுவாகக் கதைத்தொடர்களால் வரும் பேரச்சங்களையே குறிப்பதால் நாடகத் தொடர் எனலாம்.
sapo என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் நாடகத் தொடர்.
00

Sunday, May 17, 2026

வெருளி நோய்கள் 1431 -1435: இலக்குவனார் திருவள்ளுவன்

      18 May 2026      



(வெருளி நோய்கள் 1426 -1430: தொடர்ச்சி)

நற்பேறு குறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்வது நற்பேற்று வெருளி.
eutýchēma என்னும் கிரேக்கச் சொல்லிற்கு நற்பேறு எனப் பொருள்.
00

எளிதில் ஈரம் உறியாத மேற்பரப்புடைய பொருள்கள் குறித்த அளவுகடந்த பேரச்சம் நனையா வெருளி.
தீவிர நீர் விலக்கும் தன்மையைக் கொண்ட தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாமல் இருப்பதால் இதனைத் தாமரை இலை விளைவுப் பேரச்சம் என்றும் கூறுவர்.

00

மூச்சு நல்லதாக இருக்க வேண்டும் என்ற அளவுகடந்த பேரச்சம் நன்மூச்சு வெருளி.
கெட்ட மூச்சு குறித்து அச்சம் கொண்டால் இயற்கையாக எண்ணலாம். ஆனால் நல்ல மூச்சு குறிததுத் தேவையற்ற, பகுத்தறிவிற்கு ஒவ்வாத பேரச்சம் கொள்வோரும் உள்ளனர்.
செயற்றை நுண்ணறிவில் கலோசு(kalos) என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் அழக. எனவே, இது அழகான பொருள்களைக் கண்டு வரும் பேரச்சமான அழகு வெருளி எனக் குறிப்பு இருக்கும். Callophobia என்பதுடன் தவறான தொடர்பு கொண்டு பிழையான விளக்கம் தந்துள்ளது.
00

  1. நன்றி நாள் வெருளி-Gratiarophobia நன்றி தெரிவித்தல் நாள் (Thanksgiving day) தொடர்பான அளவு கடந்த தேவையற்ற பேரச்சம் நன்றி நாள் வெருளி.
    நன்றி தெரிவித்தல் நாள் (Thanksgiving day) அமெரிக்கா, கனடா, ஆத்திரேலியா முதலான நாடுகளில கொண்டாடப்படும் மரபு சார்ந்த விழாவாகும். இதற்குச் சில நாடுகளில் விடுமுறையும் உண்டு. நன்றி தெரிவிப்பதன் அடையாளமாக விருந்து அளிப்பதால் நன்றி விருந்து வெருளி எனவும் கூறலாம்.
    நன்றி தெரிவித்தல் நாள் விருந்தில் வான்கோழி முதன்மை இடம் பெறுகின்றது. எனவே, வான்கோழி இறைச்சி வெருளி – Meleagrisphobia இதனுடன் தொடர்புடையது.
    gratiarum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நன்றி நவிலல்.
    00

00

Saturday, May 16, 2026

வெருளி நோய்கள் 1426 -1430: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 1421 -1425: தொடர்ச்சி)

நல வாழ்வு தொடர்பான அளவற்ற பேரச்சம் நல வாழ்வு வெருளி.
பெரும்பாலும் தூய்மையின் மீதான மிகுதியான நாட்டம், நோய்வாய்ப்படுவோமோ என்ற பெருங்கவலை ஆகியவற்றால் உருவாகும் தேவையற்ற பேரச்சம்.
தோய்நிலை வெருளி(Hagiophobia) நோய் வெருளி, நோய்மி வெருளி உள்ளவர்களுக்கு நலவாழ்வு வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00

நலக்குறைவு குறித்த அளவுகடந்த பேரச்சம் நலமிலி வெருளி.
காய்ச்சல், நோயால் வருந்துதல் முதலியவற்றால் பெருங்கேடு விளையப்போவதாக அஞ்சும் பொழுது நலமிலி வெருளி வருகிறது.
patho என்னும் கிரேக்கச் சொல்லிற்கு வருந்துதல் எனப் பொருள். இங்கே நோயால் வருந்துவதைக் குறிக்கிறது.
00

நவம்பர்(November) மாதம் குறித்த வரம்பில்லாப் பேரச்சம் நவம்பர் வெருளி.
Shஅyī yuè என்னும் சீனச்சொல்தான் 11ஆவது மாதம் என்னும் பொருளில் நவம்பரைக் குறிக்கும்.
00

நள்ளிரவு பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நள்ளிரவு வெருளி.
இருட்டு குறித்து அஞ்சுவோருக்கு நள்ளிரவு வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
காண்க இரவு வெருளி(Noctiphobia)
00

நல்ல செய்தியைக்கேட்கும் பொழுது உருவாகும் அளவு கடந்த பேரச்சம் நற்செய்தி வெருளி.
பிறருடைய மகிழ்ச்சியையும் பிறருடைய மகிழ்ச்சியையும் பகிர்வதற்கு இயலாதவர்களாக இருப்பார்கள்.
Euphobia என்பதை விடியல் வெருளி என்னும் பொருளில் ஒருவர் குறித்துள்ளார். துயரங்கள் எப்பொழுது தீரும் என்பதற்கு விடிவுக் காலம் எப்பொழுது பிறக்கும் என்று சொல்லுவோம். இருளில் இருந்து ஒளிபிறக்கும் பொழுதை விடியல் என்கிறோம். அதுபோல், துயர இருளில் இருந்து நற்கால ஒளி பிறப்பதைக் குறியீடாக விடியல் எனச் சொல்வதை எண்ணி இவ்வாறு குறித்திருக்கலாம். எனினும், விடியல் வெருளியைக்குறிப்பிடும் வகையில் வைகறை வெருளி என உள்ளதால், நேரடியாக நற்செய்தி வெருளி என்பதே சரியாக இருக்கும்.
eu என்னும் கிரேக்கச் சொல் நன்மையைக் குறிக்கிறது.
00

Friday, May 15, 2026

வெருளி நோய்கள் 1421 -1425: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 1416 -1420: தொடர்ச்சி)

ஒருவர் மீது நம்பிக்கை வைப்பது தொடர்பான பெருங்கவலையும் பேரச்சமும் நம்பக வெருளி.
நம்பிக்கை வைப்பது தொடர்பான பேரச்சம் பிறருடான உறவையும் நல்லிணக்கத்தையும் பாதிக்கும். பொதுவாகக் காதலர்களிடையே நம்பிக்கை வெருளி ஏற்படுவது காதலை முறிக்கும்.
நம்பிக்கை மோசடியைச் சந்தித்தவர்கள் அல்லது பிறரது நம்பிக்கை மோசடியை அறிந்தவர்கள் பிறரை நம்புவது குறித்துக் கவலைப்படுவர்.
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும்
உயிரெல்லாம் கல்லாகும்

எனப் ‘பறக்கும் பாவை’யில் வரும் கண்ணதாசன் பாடல் வரிகள் நம்பக வெருளியின் வெளிப்பாடே.
‘எங்க ஊர் ராசா’ படத்தில் வரும் கண்ணதாசனின் பாடலும் நம்பக வெருளியின் விளைவே!

குளத்திலே தண்ணி இல்லே
கொக்குமில்லே மீனுமில்லே
குளத்திலே தண்ணி இல்லே
கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே
பெத்த புள்ளே சொந்தமில்லே
யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே
வாங்கடா வாங்க
தென்னைய பெத்தா இளநீரு
பிள்ளைய பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனமே பித்தம்மா
பிள்ளை மனமே கல்லம்மா
பானையிலே சோறிருந்தா
பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா
சொந்தமில்லே பந்தமில்லே

என்னும் பாடல் பிள்ளைகளின் மீதான நம்பக வெருளியை உணர்த்துகிறது.
ஒரு நிகழ்வின் மீதான எதிர்பார்ப்பில் விளைவது நம்பிக்கை(faith). அந்த நம்பிக்கையை உறவு முறையில் அல்லது பணிமுறையில் ஒருவர் மீது வைப்பது நம்பகம்(trust).
காண்க: நம்பிக்கை வெருளி – Eupistophobia
00

நம்பிக்கை குறித்த வரம்பற்ற பேரச்சம் நம்பிக்கை வெருளி.
தனக்கோ பிறருக்கோ நேர்ந்த நம்பிக்கை மோசடியினால் நம்பிக்கை வெருளிக்கு ஆளாகின்றனர்.
வெறுங்கை என்பது மூடத்தனம்
உன் விரல்கள் பத்தும் மூலதனம்!
கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும்
உன் கைகளில் பூமி சுழன்றுவரும்!
தோள்கள் உனது தொழிற்சாலை
நீ தொடுமிட மெல்லாம் மலர்ச் சோலை!
தோல்விகள் ஏதும் உனக்கில்லை
இனி தொடுவா னம்தான் உன்எல்லை!
என்னும் கவிஞாயிறு தாராபாரதியின் பாடல் வரிகளை நினைத்து உற்சாகம் கொண்டால் நம்பிக்கையுடன் இருந்து நம்பிக்கை வெருளியை ஓட்டலாம்.
காண்க: நம்பக வெருளி – Pistanthrophobia
00

நீதி பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நயன்மை வெருளி.
இவ்வெருளிக்கு ஆளானவர்கள் சட்டத்தை மீறுவதற்கு அஞ்சுவர் என்ற அளவில் வரவேற்கத்தக்கதே. ஆனால், இதைப்பற்றிக் குழப்பத்தில் ஆழ்த்திக் கொள்வர்.
தவறான நீதிகளால், நீதி முறைமைகளால் வெறுப்பு ஏற்படுவதும் இதில் அடங்கும்.
சட்டத்தின் ஆட்சி சமம் என்று சொல்லிக் கொண்டே இராசீவு காந்தி கொலை வழக்கில் சிக்கிவைக்கப்பட்ட எழுவரின் விடுதலை தொடர்பான நடவடிக்கைகளைப் பார்க்கும் பொழுது பாதிப்புள்ளானவர்களுக்கும் அவர்களின் நலன் விரும்பிகளுக்கும் வெறுப்பு வருவது இயற்கைதானே!
பொய்ச்சான்று, தவறான உசாவல்(விசாரணை) முறைமை, அடக்கு முறைமை போன்றவற்றால் நீதி மறுக்கப்பட்டுத் தண்டனை வழங்கப்படும் என்ற பேரச்சமும் வருவது இயற்கையாகிறது. நீதி முறைமை குறித்து அச்சம் வராமல் பாதுகாவல் என்ற நம்பிக்கை வருவதே நன்று.
dik என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் நீதி.
00

நரிகள் மீதான அளவுகடந்த பேரச்சம் நரி வெருளி. விலங்கு வெருளி வகையைச் சேர்ந்ததே இதுவும்.
தந்திர நரி(fox) வெருளியை Alepouphobia என்றும் குள்ளநரி(jackal) வெருளியை Sakaliphobia என்றும் வேறு படுத்திக் கூறுகின்றனர்.
00

உடல் நலத்திற்கான உணவுகள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நல உணவு வெருளி.

நலம் தரும் உணவு(ஆரோக்கியத்திற்கான உணவு) என்று மிகுதியாக உட்கொள்வதால் உடல் எடைகூடும் என்ற பேரச்சம் வரும். நல உணவுகளால் செலவு மிகும், சுவை இருக்காது, மன நிறைவளிக்காது என்று எண்ணிப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.

ஊட்ட உணவு மிகு விருப்பர்களுக்கு நல உணவு வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
Salute cibo என்னும் இத்தாலியச் சொல்லிற்கு நல உணவு எனப் பொருள்.
00

Thursday, May 14, 2026

வெருளி நோய்கள் 1416 -1420: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 1411 -1415: தொடர்ச்சி)

நடை பேசி குறித்த வரம்பற்ற பேரச்சம் நடை பேசி வெருளி.
நடைபேசிகள்(walkie-talkies) காவல் துறையினரால் பயன்படுத்தப் படுகின்றன. எனவே, காவல் துறையின் குறியீடாகக் கொண்டு இவை குறித்துப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். காவலர் சிலர் கவனக் குறைவால் தமக்குரிய நடைபேசியைத் தொலைத்துள்ளனர்.இதுபற்றி அறிந்த பிறர் விழிப்பாக இருப்பதற்கு எண்ணி அளவு கடந்து கவலைப்படுகின்றனர்.
00

முகநூலில் ஒருவர் விடுக்கும் நப்புக் கோரிக்கையை மற்றவர் ஏற்காததால் வரும் அளவுகடந்த பேரச்சம் நட்பு ஏற்காமை வெருளி.
எல்லாக் குமுகத் தளங்களிலும் கோரிக்கை ஏற்காமை குறித்த பொது வெருளியாக இதைக் கருதலாம். கோரிக்கை ஏற்கப்படாததால் வெறுப்போர் இருப்பதாகக் கருதி அளவு கடந்த பேரச்சம் கொள்கின்றனர்.

Amicus என்னும் இலத்தீன் சொல்லிற்குப் பொருள் நட்பு. இங்கே நட்பு மீது அச்சம் ஏற்பட்டு அதனை ஏற்காமையைக் குறிக்கிறது.
00

நண்டு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நண்டு வெருளி.
உயிருள்ள நண்டுகள் குறித்துப் பேரச்சம் கொள்வோரும் உள்ளனர். நண்டுக்கறி குறித்துப் பேரச்சம் கொள்வோரும் உள்ளனர்.
Kavouri/kabouros ஆகிய கிரேக்கச் சொற்களுக்கு நண்டு எனப் பொருள்.
காண்க: கடல் நண்டு வெருளி(Astakophobia)
00

நண்பர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நண்பர் வெருளி.
நண்பர்களால் தம்முடைய கமுக்கச் செய்திகள் பரவுமோ, நண்பர்கள் திசைமாறிப் போவார்களோ என்ற கவலை பேரச்சமாக மாறி நண்பர் வெருளிக்கு ஆளாகின்றனர்.
நட்பிற்கும் கூடா நட்பிற்கும் வேறுபாடு காணத் தெரியாமலும் நண்பர் வெருளிக்கு ஆளாகின்றனர்.
Amico என்னும் இத்தாலியச் சொல்லிற்கு நண்பன் எனப் பொருள்.
00

நமைச்சல் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நமைச்சல் வெருளி.
pruritus என்னும் இலத்தீன் சொல்லிற்கு நமைச்சல் எனப் பொருள்.
00


Wednesday, May 13, 2026

வெருளி நோய்கள் 1411 -1415: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 1406 -1410: தொடர்ச்சி)

நடுகல் குறித்து அறிவுக்குப் பொருந்தாத மிகையான பேரச்சம் கொள்வது நடுகல் வெருளி.
நடுகல் குறித்துச் சங்க இலக்கியங்கள் 18 இடங்களில் குறித்துள்ளன. நடுகல் வணக்கம் தொன்றுதொட்டே உள்ளது. நாட்டிற்குக் காவலாக விளங்கிப் போரில் வீர மரணம் அடைந்தவர்க்குத்தான் நடுகல்கள் அமைக்கப்பட்டன.
கல்லறைவெருளி-Coimetrophobia / Koimetrophobia), அழி பொருள் வெருளி(Necrophobia), புதைவுவெருளி-(Taphephobia/ Taphiphobia/ Taphophobia/Taphosphobia) ஆகியவற்றுடன் தொடர்புடையது நடுகல் வெருளி.
coimetro என்னும் கிரேக்கச் சொல்லுக்குப் புதைவிடம் எனப் பொருள்.
00

நடுக்கம் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நடுக்க வெருளி.
நடுக்கம் பொதுவாகக் கைககளில் முதலில் வருகிறது. இதனால் எழுதும் எழுத்திலும் நடுக்கம் வெளிப்படுகிறது. பல் நடுக்கம், தலை நடுக்கம் முதலான நடுக்கங்களும் ஏற்படுகின்றன. நடுக்கம் செயலையும் பாதிக்கிறது.
காண்க: வெதிர்ப்பு வெருளி – Tourettephobia
00

நடுநிலைப்பள்ளி குறித்த வரம்பற்ற பேரச்சம் நடுநிலைப்பள்ளி வெருளி.
தொடக்கப்பள்ளி வெருளி(Dimotikophobia) உள்ளவர்களுக்கு நடுநிலைப்பள்ளி வெருளி வர வாய்ப்புள்ளது.
00

நடைபாதை (பக்கப் பாதை/sidewalk) குறித்த வரம்பற்ற பேரச்சம் நடைபாதை வெருளி.
Pezodromio என்னும் கிரேக்கச் சொல்லிற்குப் பக்கப் பாதை எனப் பொருள்.
00

நடை அல்லது வீழ்தல் தொடர்பான பெருங்கவலையும் பேரச்சமும் நடை வெருளி.
நடப்பதற்கும் நடக்கும் பொழுது கீழே விழுந்து விடுவோம் என்று கவலைப்பட்டும் பேரச்சம் கொள்கின்றனர்.
உயர்ந்த இடத்தில் இருக்கும் பொழுது கட்டுப்பாட்டை இழப்பதாக அல்லது கீழே விழப்போவதாகப் பேரச்சம் கொள்கின்றனர்.
ambul என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நடை
காண்க: நிற்பு வெருளி-Stasibasiphobia, Stasiphobia
00

Tuesday, May 12, 2026

வெருளி நோய்கள் 1406 -1410: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 1401 -1405:  தொடர்ச்சி)

நகம் வெட்டல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நகவெட்டல் வெருளி.
நகத்தைச் சரியாக வெட்ட முடியாமல் போய்விடுமோ இதனால் ஏதும் கேடுவிளையுமோ என்று பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00

நகை குறித்த வரம்பற்ற பேரச்சம் நகை வெருளி.
கழுத்தணி, ஆரம், காதணி என்பன போன்று குறிப்பிட்ட வகை நகைமீது சிலருக்கு வெறுப்பு இருக்கும். சிலருக்குப்பொதுவாகவே நகைகள் மீது இருக்கம். சிலருக்கு ஒரு முறை நகையால் அரிப்பு ஏற்பட்டு, நகை ஒவ்வாமை உள்ளதாக எண்ணி வெறுப்பர். சிலர் பிறரின் நடமாடும் நகைக்கடை போன்ற தோற்றத்தைப் பார்த்து நகைமீது வெறுப்பர்.சிலர் தங்களின் இயலாமையால் நகை மீது வெறுப்பும் அச்சமும் கொள்வர்.
00

நகைச்சுவை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நகைச்சுவை வெருளி.
இருபொருள் கொண்டநகைச்சுவை, தங்களைக் கேலி செய்யும்நகைச்சுவை, மனத்தைத் துன்பப்படுத்தும் வகையிலான நகைச்சுவை, தரங் கெட்ட நகைச்சுவை முதலியவற்றுள் ஒன்றையோ பலவற்றையோ கேட்டு அதனால் நகைச்சுவை என்றாலே வெறுப்பவர் உள்ளனர்.
00

நக்கப்படுதல் குறித்த அளவுகடந்த பேரச்சம் நக்குதல் வெருளி.
நக்குதல், நாவினால் துழாவுதல் முதலியவற்றால் பேரச்சம் கொள்வர். நக்குதல் மூலம் தொற்று நோய் வரும் என்ற கவலையில் மூழ்குவர். நாய், பூனை, முயல் முதலிய செல்ல உயிரிகள் வளர்ப்போருக்கும் அவற்றின் அருகில் வருவோருக்கும் அச்சம் வந்து, நக்கப்பட்டால் தூய்மை செய்வதாகப் பலமுறை நக்கப்பட்ட பகுதியைக் கழுவுவோரும் உள்ளனர். இதுவும் ஒருவகை வெருளியே.
வேறு சில நக்கப்படும் சூழல் குறித்து நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
நாக்கு நீட்டப்படுவதைப் பார்த்தாலே அஞ்சுவோர் உள்ளனர்.
lingo, lambo ஆகிய இலத்தீன் சொற்களின் பொருள் நக்கு.
00

நச்சுப்பொருள் அல்லது நச்சுப்பொருளாக இருக்குமோ என்ற ஐயத்தில் எழும் அளவுகடந்த பேரச்சம் நஞ்சு வெருளி.
இத்தகையோர், குடி பானங்கள், உணவு என எதுவாயினும் நஞ்சு கலந்திருக்கலாம் அல்லது நச்சுத்தன்மை பெற்றிருக்கலாம் என எண்ணி எதையும் குடிக்கவோ உண்ணவோ மாட்டார்கள்.
io என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் நஞ்சு.
tox என்னும் கிரேக்கச்சொல்லின் பொருளும் நஞ்சு.
00