Monday, June 22, 2026

வெருளி நோய்கள் 1616-1620 : இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 1611-1615 தொடர்ச்சி)

பிறரின் பரந்த சிந்தனை குறித்த அளவுகடந்த பேரச்சம் பரந்த சிந்தனை வெருளி.
Librophobia என்றால் சிலர் புத்தக வெருளி என்கின்றனர். இது தவறு. Libro என்பது புத்தகத்தைக் குறித்தாலும் புத்தகங்களைப் படிப்பதால் ஏற்படும் பரத்த சிந்தனையையே இங்கே குறிக்கிறது. புத்தகங்கள் மீதான பேரச்சத்தை நூல் வெருளி – Biblio phobia என்பர்.
00

பரவிசை(pop music) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பரவிசை வெருளி.
மக்களால் பரவலாக வரவேற்கப்படும் இசை வடிவம். எனவே பரவிசை எனலாம்.
இசை வெருளி உள்ளவர்களுக்குப் பரவிசை வெருளி வர வாய்ப்புள்ளது.
ஒரே வகையான திரும்பத் திரும்ப வரும் ஒலிகளால் எரிச்சலுற்று பரவிசை வெருளிக்கு ஆளாகின்றனர்.
00

குதிரையேற்றம் குறித்த தேவையற்ற மிகையான பேரச்சம் பரி வெருளி.
நல்ல பயிற்சி பெற்ற குதிரையாக இருந்தாலும் உதைக்கும், தாக்கும், கீழே தள்ளும் என்றெல்லாம பேரச்சம் கொள்வர்.
குதிரை கீழே தள்ளியதோடு குழியையும் பறித்ததாம்” என்னும் பழமொழியை எண்ணிக் குதிரை, இடையிலேயே கீழே தள்ளிவிடும் என்று அஞ்சுவர்.
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார்
தமரின், தனிமை தலை

என்று திருவள்ளுவர் (திருக்குறள் 814) பயிற்சி இல்லாக் குதிரை போர் முனையில தன் மீதுஉள்ள வீரனைக் கீழேதள்ளிவிட்டு ஓடும் என்கிறார். இதனை எல்லாக் குதிரைக்கும் பொருத்திப்பார்த்துக் குதிரை மேல் செல்வதற்கும் குதிரை வண்டியில் பயணம் செய்வதற்கும் அஞ்சுவர்.
குதிரைவெருளி-Oicophobia என முதலில் குறிப்பிட்டிருந்தேன். Oicophobia என்பது ஒலிப்பில் Oikophobia உடன் தொடர்பு படுத்தப்பட்டு மனைப்பொருள் வெருளி எனப் பொருள் கொள்ளப்படுகிறது. எனவே, இதனை நீக்கி விட்டேன்.
equus என்னும் இலத்தீன் சொல்லின் பொருளும் hஅppos என்னும் கிரேக்கச்சொல்லின் பொருளும் குதிரை.
00

பரிசுப் பொதியைத்(Gift Parcel) திறப்பது குறித்த வரம்பற்ற பேரச்சம் பரிசுத் திறப்பு வெருளி.

பரிசுப்பெட்டிகளை அல்லது பரிசுப் பொதிகளைத் திறக்கும் பொழுது அவற்றுள் பேரிடர் விளைவிக்கும் பொருள் இருக்கலாம் அல்லது விரும்பத்தகாத பொருள் இருக்கலாம் அல்லது உயிர் பறிக்கக்கூடிய வெடி பொருள் ஏதும் இருக்கலாம் என ஏற்படும் ஒரு பகுத்தறிவற்ற பயம் ஆகும். இந்த அச்சம் பலருக்குக் குழந்தைப் பருவத்தில் இருந்தே உருவாகிறது.
Doron என்பது பரிசு என்னும் பொருள் கொண்ட, ஈபுரு மொழியிலும் பழங்கிரேக்க மொழியிலும் உள்ள சொல்லாகும்.
00

  1. பரு மூ மா வெருளி-Brontosaurusphobia பரு மூ மா(brontosaur) குறித்த வரம்பற்ற பேரச்சம் பரு மூ மா வெருளி.
    brontē என்னும் கிரேக்கச் சொல்லிற்கு இடி என்றும் sauros என்னும் கிரேக்கச் சொல்லிற்குப் பல்லி என்றும் பொருள். brontosaur என்பதன் பன்மை brontosauruses
    இம் மூ மா, மெல்லிய நீண்ட கழுத்தையும் சிறிய தலையையும் பருத்த உடலையும் நீண்ட சாட்டை போன்ற வாலையும் உடையது. நேர் பொருளாக இடி பல்லி எனக் குறிக்காமல், பருத்த உடல் அடிப்படையில் பரு மூ மா எனக் குறித்துள்ளேன்.
    00

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5

Sunday, June 21, 2026

வெருளி நோய்கள் 1611-1615 : இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 1607-1610 தொடர்ச்சி)

பயனிலி வலைத்தளங்கள் தொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் பயனிலித்தள வெருளி.
பயனிலித் தளம்(The Useless Website) என இப்பொழுது நூற்றுக்கு மேற்பட்ட தளங்கள் உள்ளன.
தேவையற்ற தகவல்கைளத் தருவனவாகவும் பயனற்ற விவரங்களை அளிப்பனவாகவும் தவறான பொருள் விளக்கம் தருவனவாகவும் பல தேவையற்ற இணையத் தளங்கள் உள்ளன.இவற்றால் தவறாக வழிகாட்டப்படுவோம், தீய விளைவிற்கு ஆட்படுவோம் என்றெல்லாம் தேவையற்ற காரணமற்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். பயனற்ற தளங்களை அடையாளங் கண்டால் முற்றிலுமாக அவற்றைப் புறக்கணிக்க வேண்டும்.
00

சுற்றுலாப்பயணிகள் குறித்த தேவையற்ற பேரச்சம் பயணியர் வெருளி.
சுற்றுலாப் பயணிகளால் ஒழுங்கற்ற ஊர்திகள் நிறுத்தம், சில நேரங்களில் பண்பாட்டுச் சீரழிவு, உண்மைவிலையறியாமல் பொருள்களை வாங்கித் தேவையற்ற விலையேற்றத்தை உருவாக்குதல் போன்ற பல தொல்லைகளுக்கு உள்ளூர் மக்கள் ஆளாகின்றனர்.
இத்தொல்லைகளால் சுற்றுலாப் பயணிகள்மீது அளவுகடந்த தேவையற்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
viator என்னும் இலத்தீன் சொல்லிற்குப் பயணி எனப் பொருள்.
00

சுட்டுரைக் கணக்கைத் தவறாகப் பயன்படுத்தல் அல்லது தவறான எழுத்தொலிப்பில் பயன்படுத்தல் குறித்த அளவுகடந்த பேரச்சம் பயன்பாட்டு வெருளி.
சுட்டுரை மட்டுமல்லாமல் பிற குமுகத் தளங்கள் அல்லது கடவுச்சொல் மூலம் காணக்கூடிய தளங்களுக்கும் இது பொருந்தும். எனவேதான், தவறான சுட்டுரைக்கணக்கு எனக் குறிப்பிடாமல் பயன்பாட்டு வெருளி எனக் குறிக்கப்பெற்றது.
00

தாவரங்கள் குறித்த தேவையற்ற அறிவுக்குப் பொருந்தாத மிகையான பேரச்சம் கொள்வது பயிர் வெருளி.
செடி கொடிகள், மூலிகைகள், மரங்கள் இவற்றின் மீது இவை வளர்ந்து தன்னை அழித்துவிடும், தீங்கு இழைக்கும், ஒவ்வாமை ஏற்படும் என்றெல்லாம் அஞ்சுவர். எல்லாத் தாவரங்கள மீதும் பேரச்சம் இருக்க வேண்டும் என்றில்லை. சில தாவர வகை மீது மட்டும் சிலருக்குப் பேரச்சம் இருக்கும். பூக்கள் வெருளியும் (Anthophobia) இது போன்றதே.
botane என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் புல் அல்லது தீவனம்.
batno என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் தாவரம்.
00

பரத எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் பரத எண் வெருளி.
yotta என்றால் ஒன்றுடன் நாற்பத்திரண்டு சுன்னங்களைக் கொண்ட பேரெண். பிரித்தானிய வழக்கில் கோடி கோடி கோடி கோடி கோடி கோடி. அமெரிக்க, பிரஞ்சு வழக்கில் ஆயிரங் கோடி கோடி கோடி.
தமிழில் பரதம் எனப்படும். நாட்டியத்தைக் குறிக்கும் பரதம் வேறு.
தமிழில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பெற்ற இத்தகைய கணக்கு எண்கள் இப்போது கணிணியில் பயன்படுத்தப்படுகிறது.
பரத எண்ணின் மதிப்பு 10,00,00,00,00,00,00,00,00,00,00,000.
00

Saturday, June 20, 2026

வெருளி நோய்கள் 1607-1610 : இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 1601-1606 தொடர்ச்சி)

  1. பந்தய ஊர்தி வெருளி – Saichephobia
    பந்தய ஊர்தி(race car) மீதான வரம்பற்ற பேரச்சம் பந்தய ஊர்தி வெருளி.
    பந்தய ஊர்திகள் நேர்ச்சிகள் குறித்த செய்திகளாலும், பங்கேற்பர்களிடம் போட்டி மனப்பான்மை இல்லாமல் பொறாமை மேலோங்குவதாக அறிய வருவதாலும் சாலைவழி செம்மையாக இருக்குமா என்ற கவலையாலும் பேரச்சத்திற்கு உள்ளாகின்றனர்.
    00
  2. பந்து வீச்சு வெருளி – Bowlingphobia/ Pallosmokarfitsophobia
    பந்து வீச்சு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பந்து வீச்சு வெருளி.
    பந்தைச் சரியாக வீச முடியுமா என்ற பயம், தசைகளில் ஏற்படும் இறுக்கம், முந்தைய தவறுகளைப் பற்றிய தேவையற்ற சிந்தனைகள் பந்துவீச ஓடிவரும் போது அல்லது மட்டையாளைப் பார்க்கும்போது ஏற்படும் கடுமையான பயம் அல்லது நடுக்கம், பிழை வீச்சு(No Ball)அகல் வீச்சு(Wide Ball) ஏற்படுமோ என்ற காரணமற்ற கவலை ஆகியவற்றால் பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
    00
  3. பயண வெருளி-Amaxophobia / Hamaxophobia
    பயணம் மேற்கொள்வது தொடர்பில் தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் கொள்வது பயண வெருளி.
    யாத்திரை என்பதும் தமிழ்ச்சொல்லே. எனவே, யாத்திரை வெருளி என்றும் சொல்லலாம். ஆனால், இருவகை வேண்டா.
    பயண வெருளி உள்ள பலர் தாங்களே ஓட்டுநராக இருக்கும் பொழுது அஞ்சுதில்லை. ஓட்டுநர் மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கும் பொழுதும் சிலர் அஞ்சுவதில்லை.
    சாலைப்பயணத்தில்/இருப்பூர்திப் பயணத்தில்/கடல் பயணத்தில் /வானூர்திப் பயணத்தில் இடையூறு ஏற்படும், நேர்ச்சி(விபத்து) ஏற்படும், உடன் பயணம் செய்யாத பிற ஓட்டுநர், நடப்போர், கடப்போர், விலங்கினங்கள், வானிலை போன்ற பிற சூழல்களால் நேர்ச்சி ஏற்படும் என்று அஞ்சி இதன் தொடர்பிலான கவலைகளையும் அச்சத்தையும் வளர்த்துக் கொண்டு பயணம் மீது பேரச்சம் கொள்வர்.
    Amaxo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் வாகனம்.
    hயmaxa என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் வண்டி / ஊர்தி.
    காண்க: பொறிஊர்தி வெருளி-Motorphobia; ஊர்தி வெருளி – Ochophobia
    00

Friday, June 19, 2026

வெருளி நோய்கள் 1601-1606 : இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 1591-1600 :தொடர்ச்சி)

பத்தாம் வகுப்பு நிலை குறித்த அளவுகடந்த காரணமற்ற பேரச்சம் பத்தாம் வகுப்பு வெருளி.
பொதுவாகத் தேர்வு வெருளி உள்ளவர்களுக்குப் பத்தாம் வகுப்பு வெருளி வருகிறது. பள்ளியின் இறுதி நிலையாக அல்லது அடுத்த நிலைக்குச் செல்வதற்குரிய முதன்மை நிலையாகப் பத்தாம் நிலை உள்ளது. எனவே, தேர்வு அச்சம் ஏற்பட்டுப் பத்தாம் வகுப்பில் பயில்வது குறித்துத் தேவையற்ற அளவுகடந்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
00

ஆண்டின் பத்தாம் வாரம் குறித்த அளவுகடந்த பேரச்சம் பத்தாம் வார வெருளி.
00

சிலவகை உணவுகளை உண்ணக்கூடாது எனத் தடுக்கப்படுவது குறித்த பேரச்சம் பத்திய வெருளி.
மருந்து உண்ணும்பொழுது உணவுவகைகள் சிலவற்றை விலக்கச் சொல்வதுதான் பத்தியம். எனினும் உடல் எடை குறைப்பு போன்ற பிற காரணங்களால் உணவு தவிர்க்கப்படுவதும் பத்திய வெருளியில் அடங்கும்.
00

ஆண்டின் 19ஆம் வாரம் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் பத்தொன்பதாம் வார வெருளி.
00

பத்தடுக்கு நூறு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பத்தடுக்கு நூறு வெருளி.

பத்தடுக்கு நூறு என்பது எண்களால் பின்வருமாறு குறிக்கப் பெற வேண்டும். 10,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000
00

  1. பந்தக வீசி வெருளி – Zloqingphobia/Paintballphobia

விளையாட்டில் பயன்படுத்தப்பெறும் பந்தக வீசி (paintball gun/ paintball marker/ paint gun/marker) குறித்த வரம்பற்ற பேரச்சம் பந்தக வீசி வெருளி. இதனால் யாரையும் கொல்ல முடியாது.
00

Thursday, June 18, 2026

வெருளி நோய்கள் 1591-1600 : இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 1586-1590 :தொடர்ச்சி)

ஆண்டின் பதினொன்றாவது வாரம் குறித்த அளவுகடந்த பேரச்சம் பதினொன்றாவது வார வெருளி.
00

பதின்மூன்றின் கூறுகள் குறித்த வரம்பற்ற பேரச்சம் பதின்மூன்றுகள் வெருளி.
00

ஆண்டின் 16ஆம் வாரம் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் பதினாறாம் வார வெருளி.
00

ஆண்டின் 17ஆம் வாரம் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் பதினேழாம் வார வெருளி.
00

ஆண்டின்18ஆம் வாரம் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் பதினெட்டாம் வார வெருளி.
00

பதினொன்றாம் வகுப்பு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பதினென்றாம் நிலை வெருளி.
00

பதினொன்றுகள் குறித்த வரம்பற்ற பேரச்சம் பதினொன்றுகள் வெருளி.
00

ஆண்டின் பதின் மூன்றாவது வாரம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பதின் மூன்றாவது வார வெருளி.
00

பதும எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் பதும எண் வெருளி.
பதுமம் என்பது 10,00,00,00,00,00,000 ஐக் குறிக்கும்
00

பத்தடுக்கு எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் பத்தடுக்கு எண் வெருளி.
பத்துப் பாகங்களாகப் பிரிக்கப்படும் பதின்பகுப்பு எண்ணும் இவ்வச்சத்தில் அடங்கும்.
00

Wednesday, June 17, 2026

வெருளி நோய்கள் 1586-1590 : இலக்குவனார் திருவள்ளுவன்

      18 June 2026      



(வெருளி நோய்கள் 1581-1585 தொடர்ச்சி)

  1. பதினகவை வெருளி – Decannophobia
    பதினகவை குறித்த வரம்பற்ற பேரச்சம் பதினகவை வெருளி.
    பதினகவைப் பருவத்தினருக்கு ஏற்படுவது பதினகவை வெருளி. பதினகவைப் பருவத்தினரைக் கண்டு பிறருக்கு ஏற்படுவது பதினகவையர்வெருளி
    காண்க: பதினகவையர்வெருளி-Ephebiphobia
    00
  2. பதினகவையர்வெருளி-Ephebiphobia
    பதினகவைப் பருவத்தில் அல்லது பதினகவையினர் மீது ஏற்படும் வரம்பு மீறிய வெறுப்பு அல்லது பேரச்சம் பதினகவையர்வெருளி
    ephebi என்னும் சொல்லின் மூலமான கிரேக்கச்சொல்லின் பொருள் இளம்பருவம் அல்லது வளரிளம்பருவம்.
    மகார் வெருளி/குழந்தைகள் வெருளி/சிறார் வெருளி (paedophobia), இளந்தை வெருளி (Hebephobia), மூப்படைவு வெருளி(Gerascophobia), முதுமை வெருளி (Gerontophobia) என்று வகைப் படுத்தலாம்.
    காண்க: பதினகவை வெருளி – Decannophobia
    00
  3. பதினாயிர எண் வெருளி – Decemmillephobia
    பதினாயிர எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் பதினாயிர எண் வெருளி.
    Decemmillephobia என்னும் இத்தாலியச் சொல்லிற்குப் பத்தாயிரம் எனப் பொருள்.
    00
  4. பதினான்காவது வார வெருளி -Juyonshuphobia
    ஆண்டின் பதினான்காவது வாரம் குறித்த அளவுகடந்த பேரச்சம் பதினான்காவது வார வெருளி.
    00
  5. பதினைந்தாம் வார வெருளி – Jugoshuphobia
    ஆண்டின் பதினைந்தாம் வாரம் குறித்த அளவுகடந்த பேரச்சம் பதினைந்தாம் வார வெருளி.
    00

Tuesday, June 16, 2026

வெருளி நோய்கள் 1581-1585 : இலக்குவனார் திருவள்ளுவன்

      17 June 2026      


(வெருளி நோய்கள் 1576-1580 : தொடர்ச்சி)

பண்ணை விலங்குகள் மீதான அளவுகடந்த பேரச்சம் பண்ணை விலங்கு வெருளி.
விலங்கு வெருளி(zoophobia) உள்ளவர்களுக்குப் பண்ணை விலங்கு வெருளி வர வாய்ப்புள்ளது.
கிரேக்க மொழியில் agros என்றால் பண்ணை என்றும் zoo என்றால் விலங்கு என்றும் பொருள்.
00

பண்ணை(farm) குறித்த வரம்பற்ற பேரச்சம் பண்ணை வெருளி.
பண்ணைகள் மீதான அச்சம் என்பது பொதுவாக வேளாண் தொழிலில் வேதியல் பயன்பாடு, புதிய பண்ணைச் சட்டங்கள், நலக் குறைபாடுகள், பயிர்த் தொற்றுநோய்கள், பண்ணை விலங்குகள் மீதான தொற்று நோய்கள் முதலியன குறித்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
fundum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் பண்ணை.
00

வலைப்பூக்கள் முதலான இணையத்தளங்களில் முதலில் பதிவிட வேண்டும் என்ற பரபரப்பிற்கு ஆளாவதால் ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் பதிவூட்ட வெருளி. இதனைச் சுருக்கமாகப் பதிகை வெருளி எனலாம்.
தவறான பதிவுகளை மேற்கொண்டு பின்னர் மக்களின் எதிர்ப்பிற்கும் காவல் துறையின் வழக்கிற்கும் ஆளாகுபவர்கள், அல்லது ஆளாகுபவர்கள் பற்றிய செய்திகளைப் படிப்பவர்கள், பதிகை வெருளிக்கு ஆளாவர்.
00

நெஞ்சப்பதிவு காட்டி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பதிவி வெருளி.
நெஞ்சுத் துடிப்புகளைப் பதிவுசெய்த பின்தான் திரையகத்தில்(monitor) காட்டுகிறது. இதன் நெஞ்சகச் செயலபாட்டைப் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, அடிப்படைப்பணியின் அடிப்படையில் heart monitorஐப் பதிவி எனலாம்.
இதயச்சீர்நோக்கி ஆகிய நெஞ்சப் பதிவியின் செயல்பாடு, பழுதாக இருக்குமோ என்ற அச்சம் முதலியன குறித்துக் கவலைகள் கொண்டு பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். இயல்பான நிலையைக் காட்டினாலும், அதன் மூலம் பார்ப்பதால் உயிருக்குக் கேடுவருமோ என அஞ்சுவோர் உள்ளனர்.
00

தான் பதியும் அல்லது பகிரும் படங்களைப் பிறர் பதிவேற்றம் செய்ய மாட்டார்கள் என அளவுகடந்த பேரச்சம் கொள்வது பதிவேறா வெருளி.
பதிவேற்றம் சரியாக அமையாமல் போகிறது என்பதால் பிறர் பதிவேற்றவில்லை எனக் கவலைப்படுவர்.
Turpis என்னும் இலத்தீன் சொல்லிற்கு மோசமான எனப் பொருள்.
00