(வெருளி நோய்கள் 1091-1095 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1096-1100
- சூன்று வெருளி- Wiccaphobia
பில்லி சூனியம் பற்றிய பேரச்சம் சூன்று வெருளி
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை (அகநானூறு : 381.6)
நிழலினை அகழ்ந்து உண்ட, செல்லத் தொலையாத நீண்ட இடத்திலுள்ள என்பது பொருள். சூன்று என்பது அகழ்ந்துஎடுப்பதை தோண்டுவதைக்குறிக்கின்றது. நாலடியாரில்(44) நுங்கு சூன்றிட்டன்ன கண்ணீர்மை என்னும்பொழுது தெளிவாகப் பொருள் புரிகிறது. மண்ணைத் தோண்டி அதில் தகரம் அல்லது ஏதாவது ஒன்றைப் புதைத்துத் தீவினை ஆற்றுவதால் சூனியம் எனப் பெயர் வந்துள்ளது.
00
- செங்கல் வெருளி – Touvlophobia
செங்கல் குறித்த வரம்பற்ற பேரச்சம் செங்கல் வெருளி.
Touvlo என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் செங்கல் எனப் பொருள்.
00
- செங்கற் சூளை வெருளி – Kilnphobia
செங்கற் சூளை குறித்த வரம்பற்ற பேரச்சம் செங்கற் சூளை வெருளி.
செங்கற் சூளைகளில் முன்பணம் கொடுத்து வேலைக்கு அமர்த்திவிட்டுப் பின்னர் கொத்தடிமைகள் நடத்தும் நிகழ்வுகள் மிகுதியாக உள்ளன. உரிய கூலியைக் கேட்டாலோ வீடு திரும்ப முயன்றாலோ அடக்கு முறைகளை முதலாளிகள் பயன்படுத்துகின்றனர். தொழிலாளிகளைச் சூளைகளில் எரித்து மறைத்த நேர்வுகள் குறித்தும் செய்திகள் வந்துள்ளன. இதன் காரணமாகச்செங்கற் சூளை குறித்து அளவு கடந்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
kiln என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் செங்கற்சூளை எனப் பொருள்.
00
- செங்குத்துப் பாறை வெருளி-Cremnophobia
செங்குத்துப்பாறை பற்றிய அளவுகடந்த பேரச்சம் செங்குத்துப்பாறை வெருளி.
செங்குத்தான பாறைகள் அல்லது கொடும்பாறைகள் மீது ஏறும் சூழல் வந்தாலும் வராவிட்டாலும் அதைப்பற்றிய சிந்தனை வந்தாலம் அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
creno என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் செங்குத்துப்பாறை
00
- செஞ்சிறுமர வெருளி – Dogwoodphobia
செஞ்சிறுமரம்(Dogwood tree) குறித்த வரம்பற்ற பேரச்சம் செஞ்சிறுமர வெருளி.
செஞ்சிறுமரம் என்பது இலையுதிர் பருவத்தில் தண்டும் இலைகளும் சிவப்பாக மாறவல்ல சிறுமர வகை.
Dogwood என்றால் நாய் மரம் என மொழிபெயர்க்கக்கூடாது. நாய்/dog என்பது பல பொருள் தரும் ஒரு சொல்லாகும். அவற்றில் ஒன்று அற்பம் என்பதாகும். செஞ்சிறுமரத்தின் மலர் விரும்பத்தகாத மணத்தை உடையது. எனவே அற்ப மணம் கொண்ட மரவகை என்னும் பொருளில் Dogwood எனக் குறிப்பிட்டிருக்கலாம் என்கின்றனர் அறிஞர்கள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
No comments:
Post a Comment