Friday, January 28, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 470 – 490 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  452 – 469 இன் தொடர்ச்சி)

470. கதிரிய நீரியல்

 Radiohydrology

471. கதிரிய நுட்பியல்

Radiotechnology

472. கதிரியக் கால நிரலியல்

Radio Chronology

473. கதிரிய ஏமவியல்

எதிரூக்கி யியல் என்கின்றனர். அவ்வாறு சொல்வதைவிடச் சொற்சீர்மை கருதி கதிரிய ஏமவியல் என்பது ஏற்றதாக இருக்கும். 

Radioimmunology

474. கதிரிய வளைசலியல்

Radioecology

475. கதிரியப் பண்டுவம்

Radiotherapy

476. கதிரியப் பனியியல்

Radioglaciology

477. கதிரியப் புவியியல்   

Radiogeology

478. கதிரியல்

Radiology

479. கதிர்வீச்சு இயற்பியல்

Radiation physics

480. கதிர்வீச்சு வளைசலியல்           

Radiation Ecology

481. கத்தி இயல்

Machirology

482. கபால யியல்

மண்டை உளப்பான்மை உறவியல், கபால அளவையியல், போலி மனவியல்  என்கின்றனர்.

phrēn என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் மனம். இத்துறை, மண்டை ஓட்டின் மீதுள்ள புடைப்புகளை அளவிட்டு மனநலப் பண்புகளைக் கணிக்கும் போலி அறிவியல் துறை. சுருக்கமாகக் கபால இயல் என்றே சொல்லலாம்.

Phrenology(1)

483. கரிசியல்

Hamartiology

484. கரிம வேதியியல்

Organic Chemistry

485. கருதுகை விலங்கியல்

Cryptozoology மறை விலங்கியல், அழி விலங்கியல், கருதுகை விலங்கியல்  எனப் படுகிறது.

Crypto என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கு மறை, கமுக்கம் முதலிய பொருள்கள். இங்கே கருதப்படுதல் என்னும் பொருளில் வந்துள்ளது.

 இச்சொல்லின் நேர் பொருள் மறைக்கப்பட்ட விலங்குகள் பற்றிய ஆய்வு என்பதாகும். இஃது உண்மையில் விலங்கியலோ அறிவியலோ அல்ல. போலி அறிவியலாகும். எனவே, விலங்கியலாகக் கருதப்படுவதால்,

 கருதுகை விலங்கியல் Cryptozoology  எனலாம்.

Cryptozoology

486. கருத்தடை நுட்பியல் 

Contraceptive Technology

487. கருத்திணைவியல் (மெய்யியல் துறை)

Hodology(1)

488. கருத்திய  வாயு இயங்கியல்

Ideal aerodynamics

489. கருத்தியல்

Ideology

490. கருப்பொருளியல்

இலக்கிய அடிப் பொருளாய்வு, அடிப் பொருள் ஆய்வு, கருப்பொருள் ஆய்வு, உரிப் பொருளாய்வு, மையப் பொருளாய்வு எனப்படுகிறது. இலக்கியங்களின் மையக் கருத்துகள்  குறித்த ஆய்வு. முதலில் கருத்தியல் எனக் குறித்திருந்தேன். கருத்தியல் தனியாக உள்ளதால் இலக்கியக் கருப்பொருளை ஆராயும் இதனைக் கருப் பொருளியல் என மாற்றியுள்ளேன்.

Thematology

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Tuesday, January 25, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 452 – 469 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல






(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  431 – 451 இன் தொடர்ச்சி)
453. கணித இயற்பியல்Mathematical physics
454. கணிணி சார் பொறியியல்Computer-Aided Engineering
455. கணிதப் புவியியல்Mathematical Geology
456. கணித வியல்Mathematics
457. கணிப்பி மொழியியல்Computational linguistics
458. கணிப்பிப் பொறியியல்Computer Engineering
459. கணிப்பியப் பாய்ம இயங்கியல்Computational Fluid Dynamics
460. கணிப்பியப் புள்ளியியல்Computational statistics
461. கணிப்பொறி வரைவியல்Computer Graphics
462. கணிய நுட்பியல்Software Technology
463. கணன வானிலையியல் Astrometeorology – சோதிடக் கலை மூலம் வானிலையைக் கணிப்பது.  எனவே இதனைக்   கணன வானிலையியல் – Astrometeorology எனலாம்.Astrometeorology
464. கணிவட்டிலியல்Gnomonology
465. கணையனியல்Cenematics
466. கணையாழி இயல் கணையாழி / மோதிரம் என்னும் பொருள் கொண்ட கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது.Dactyliology(1)
467. கண்ணியல் Ophthalmology – கண் இயல், கண் மருத்துவம், கண்ணியல், கண்ணாய்வு நூல்,  கண்ணமையப்புப் பாயுனுல், கண்ணமைப்புப்பாய்வு நூல், விழியியல், கண் மருத்துவயியல், கண் சிகிச்சை எனப்படுகிறது. கண்ணமையப்புப்பாயுனுல், கண்ணமைப்புப்பாய்வு நூல் என்பன கண்ணமைப்பாய்வு என்றே இருக்க வேண்டும். தட்டச்சுப்பிழை. முதல் சொல்லில் வேறு தட்டச்சுப் பிழையும் உள்ளது. கண்கள், கண்நோய்கள், கண்மருத்துவம் முதலியவை பற்றிய அறிவியல். எனவே, மேற்கண்டவாறு கூறப்படு கின்றன. இவற்றுள் சிகிச்சை தமிழ்ச்சொல்லல்ல.  Ophthalmós என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கண். Ophthalmo என்றால் கண் தொடர்பான எனப் பொருள். எனவே மேற்குறித்த யாவும் சரிதான். எனினும் தரப்படுத்தல் கருதிச் சுருக்கமான கண்ணியல் என்றே குறிப்பிடுவோம்Ophthalmology
468. கண்ணி நுட்பியல்Loop Technology
469. கதிரிய உயிரியல் Actinobiology – கதிரிய உயிரியல், கதிர் விளைவியல், ஒளிக் கதிர் உயிரியல், ஒளிய உயிரியல், (நிற) ஒளிய உயிரியல். ஒளி விளைவியல், ஒளிவேதி இயற்பியல், மின்காந்தக் கதிர்வீச்சியல் எனப்படுகின்றது. Radiobiology என்பது கதிரியக்க உயிரியல் எனப்படுகிறது. Actin என்பது கதிர் என்னும் பொருளுடைய கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது. எனவே, Actinobiology / Radiobiology கதிரிய உயிரியல் எனலாம். மின்காந்தக் கதிர்வீச்சியல்  என்பது  electromagnetic radiation ஆகும். எனவே அதனை இதனுடன் சேர்க்க வேண்டா. ஒளிவேதி இயற்பியல் என்பது Photo-physics and photochemistry ஆகும். எனவே, இதனையும் இதனுடன் சேர்க்க வேண்டா. Actinobiology / Radiobiology

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Monday, January 24, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 431 – 451 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  421 – 430  இன் தொடர்ச்சி)

431. கடலியல்

Oceanology

432. கடல் உயிரியல்

Marine biology 

433. கடல் பொறியியல்

Marine Engineering

434. கடல் வானிலையியல்

Naval Meteorology

435. கடல்சார் தொல்லியல்           

Marine Archaeology

436. கடல்முள்ளி யியல்

Acanthology

437. கடற்கரைப் பொறியியல்

Coastal Engineering

438. கடற் பாசியியல்

Algology (2)

439. கடற்பரப்பு வானிலையியல்   

Marine Meteorology

440. கடைக்கால் பொறியியல்

Foundation Engineering

441. கடைத்தேற்ற இயல்

Soteriology என்றால் கடைத்தேற்ற இயல்  என்றும் விடுபாட்டு நெறியியல் என்றும் குறிப்பிடுகின்றனர்.

Soteria என்றால் பழங் கிரேக்கத்தில்  கடைத் தேற்றம்/உய்தி/விடுபடு எனப் பொருள்கள். எனவே, இரு வகையும் சரிதான். எனினும் நடைமுறையில் உள்ள சொல்லைக் கொண்டு கடைத்தேற்ற இயல் – Soteriology  இங்கே குறிக்கப்பட்டுள்ளது.

Soteriology

442. கட்சி யியல்

Stasiology

443. கட்டக உயிரியல்

Glycobiology

444. கட்டட ஒலியியல்

Architectural Acoustics

445. கட்டட வளைசலியல்

Arcology 

446. கட்டடக்கலைப் பொறியியல்

Architectural Engineering

447. கட்டடக் கலையும்  அமைப்புப்  பொறியியலும்

Architecture And Structural Engineering

448. கட்டுப்பாட்டுப் பொறியியல்

Control Engineering

449. கட்டுப்பாட்டு  நுட்பியல்

Control Technology

450. கட்டுமானப் பொறியியல்

Construction Engineering

451. கணன இயல்

Astrology என்பதைச் சோதிடம், சோதிட நூல், சோதிட வியல், சோசியம், யோசியம், (ஞ்)சோசியம், ஓராசாத்திரம் (தமிழ் ஓரையின் அடிப்படையில் உருவான சமற்கிருதச்சொல் ஃகோராசாத்திரம்), ஐந்திரம், கணிநூல், கணிப்பியல், கணியம், கணியவியல், கணியியல், நாட்டம், ஆரூடம், ஆரூடவியல், வானவியல், சித்தர் நூல் எனப் பலவகையாகக் கூறுகின்றனர். (ஆரூடம் என்பது தமிழ்ச்சொல்லே.) எனினும் நம் முன்னோர் விண்ணில் உழலும் கோள்கள் இயக்கத்தைக் கணக்கிட்டுக் கூறுதல் என்னும் பொருளில் கணனம் என்று சொல்லியுள்ளனர். கோள்கள் இயக்கத்தைக் கணக்கிட்டுக் கூறும்  இச்சொல்லையே பின்னர், அதனடிப்படையில் ஒருவரின் வாழ்க்கையைக் கணிப்பதற்கும் பயன்படுத்தி உள்ளனர். நாம் கணனம் குறித்த அறிவியலைக் கணன இயல் எனலாம்.

Astrology என்பதைக் கணனவியலாக வரையறுத் துள்ளதால்  astronomy என்பதைக் கணனவியலாகப் பயன் படுத்துவதைத் தவிர்க்கலாம்.

Astrology

 

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Sunday, January 23, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 421 – 430 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  404 – 420 இன் தொடர்ச்சி)
421. ஓடிலி யியல்Limacology
422. ஓட்டுடலியல்Crustaceology / Malacostracology
423. ஓமரியல்Homerology
424. ஓய்வறை எழுத்தியல்Latrinology
425. ஓரையியல் hōra என்னும் இலத்தீனில் இடம் பெற்ற பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நேரம்/ காலம். எனவே, கால  அளவியல் என்றும் நேர அளவையியல் என்றும் குறிப்பிடுகின்றனர். ஓரா என்னும் கிரேக்க/ இலத்தீன் சொல்லின் மூலம் தமிழ்ச்சொல்லான ஓரை.    “மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோற்கில்லை”  என்கிறார் தொல்காப்பியர்.  “விடி வோரையி லெழுந்து” (குருபரம்.115.பன்னீ.) என்னுமிடத்தில் நேரம் என்னும் பொருள் வருகிறது. பிற இலக்கியங்களிலும் இச்சொல்லைக் காணலாம். எனவே, நாம் ஓரையியல் என்றே கூறலாம். ‘ஓரை’ எனச் சங்கக் காலத்தில் மகளிர் தனித்தும் ஆடவருடன் இணைந்தும் விளையாடும் விளையாட்டும் இருந்துள்ளது. இந்த இடத்தில் நேரம் என்னும் பொருளில்தான் நாம் கையாண்டுள்ளோம்.  Horology
426. கசகசாப் பாலியல்Meconology
427. கசிவியல்Eccrinology
428. கடப்பாட்டியல்Comitology
429. கடப்பாட்டு அறவியல்Normative ethics
430. கடமை யியல் Deontology- கடப்பாட்டியல், கடமையியல், கடமை இயல், கடமை இயல் ஒழுக்க நூல், அறநெறியியல், மருத்துவ ஒழுக்கவியல், கடமை நடை முறையியல் எனப் பலவாறாகக் குறிக்கப்படுகிறது.  Deon என்பது பழங்கிரேக்கத்தில் கடப்பாடு என்னும் பொரு ளுடையது. 19 ஆம் நூற்றாண்டில் கடப்பாட்டிற்குரிய நன்னெறியையும் குறிக்கலாயிற்று. எனவே, நாம்பொதுவாகக் கடமையியல்  – Deontology (1) அறவியலில் அறநெறியியல் – Deontology (2) மருத்துவ இயலில் மருத்துவ ஒழுக்கவியல் – Deontology (3) என்று வகைப்படுத்திப் பயன்படுத்தலாம். அறநெறியியலில் ethics  எனத் தனியாக உள்ளதால் அதனை இப்பொருளில் பயன்படுத்துவதி லிருந்து விலக்கி விடலாம்.Deontology(1)

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000