Friday, March 11, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1044 – 1061 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1040 – 1043 இன் தொடர்ச்சி)

1044. நுண்ணுயிரி நுட்பியல்           

Microbial technology

1045. நுண்ணூசி ஈர்ப்பு உயிர்மி யியல்

Fine needle aspiration cytology

1046. இயலறிவு உளவியல்

 folk  என்றால் நாட்டுப்புறம், நாட்டார், மக்கள், மக்களினம் எனப் பொருள்கள். இங்கே மக்களின் இயல்பான அறிவைக் குறிக்கிறது. எனவேதான் இவ்வியலின் மற்றொரு பெயர் Commonsense Psychology   என்பதாகும். பகுத்தறிவு உளவியல் என்று சிலர் குறிப்பிட்டாலும் பொதுவாக இயலறிவு உளவியல் என்றே குறிப்பது சிறப்பாகும்.

  Folk psychology / Commonsense Psychology

1047. நுண்பயிரியல்

Microphytology

1048. மெய்ம்மி நோயியல்

Histo pathology

1049. நுரையீரலியல்

pulmō என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நுரையீரல்.

Pulmonology

1050. நுரையீரல் இயக்கவியல்

Pulmonary Mechanics

1051. நூல் இயல்

Bibliology

1052. நெஞ்சக வியல்

kardía என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நெஞ்சு.

Cardiology

1053. நெடுங்கணக்கியல்

ஒரு மொழியில் அம்மொழி முறைக்கேற்ப வரிசைப்பட அமையும் எழுத்துகளின் வரிசையே நெடுங்கணக்கு எனப்படும். இதனை அகர வரிசை என்றும் கூறுவர். தமிழில் அடிப்படை எழுத்துகளான உயிரெழுத்து (12), மெய்யெழுத்து (18), ஆய்த எழுத்து (1) ஆகிய மட்டும் குறுங்கணக்கு என  அழைக்கப் பெறும். இத்தொகுப்பில் உயிர் மெய் எழுத்தும்(216) சேரும் பொழுது நெடுங்கணக்கு எனப் பெறும்.

Alphabetology

1054. நெடுஞ்சாலைப் பொறியியல்

Highway Engineering

1055. நெறிமுறை யியல்

aretḗ என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் அறநெறி/ நெறிமுறை.

Aretaics 

1056. நேரியத் திணையியல்

Linear Topology

1057. நேரியல்சாரா ஒளியியல்

Nonlinear optics

1058. நேரியல்சாரா ஒலியியல்

Nonlinear acoustics

1059. நேர்இறக்கையின இயல்

Orthopterology

1060. நேர்கோட்டு ஒளியியல்

காண்க: நேர்கோட்டு ஒலியியல்

Ray optics

1061. நேர்கோட்டு ஒலியியல் / வடிவ ஒலியியல்

Ray – கதிர் என்னும் அடிப்படையில் கதிர் ஒலியியல் என்றும் கூறுகின்றனர். ஆனால் அந்நேர் பொருளை விட நேர்கோட்டு ஒலியியல் என்பதுதான் சரியான விளக்கமாக அமையும். எனவேதான் வடிவ ஒலியியல் என்றும் கூறப்படுகிறது.

Ray acoustics / Geometrical acoustics

(தொடரும்) 

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Thursday, March 10, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1040 – 1043: இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல






(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1022 – 1039 இன் தொடர்ச்சி)

1040. நுண்ணுயிரி மரபியல்

Microbial genetics

1041. நுண்ணுயிரி  வளைசலியல்

Microbial Ecology

1042. நோய்மி முறிப்பியல்

Antibiotic என்பதற்கு ஆண்ட்டி பையாட்டிக்கு, உயிரி எதிர்ப்பி, உயிரி முறிப்பி, உயிரி யெதிர்ப்பி, உயிர் எதிரி, எதிர்  உயிர்ம மருந்து, எதிர்மருந்து, கிருமி முரணி, நச்சொடுக்கி, நுண்மக்கொல்லி, நுண்ணுயிரி முறி, நுண்ணுயிரி முறிப்பியல், நுண்ணுயிரிக் கொல்லி, நுண்ணுயிரிக் கொல்லி (முறி), நுண்ணுயிர் எதிரி, நுண்ணுயிர் எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பொருள், நுண்ணுயிர்க் கொல்லி, நுண்ணுயிர்ப் பகை, நுண்மக் கொல்லி, நோய் நுண்ணுயிர்க் கொல்லி, பாக்(கு)டீரியப் பகை எனப் பலவகையாகக் கூறுகின்றனர். ஒலி பெயர்ப்புச் சொற்களைப் பயன்படுத்தியுள்ள சொற்கள் நமக்குத் தேவையில்லை. உயிருக்கு எதிராகக் கூறுவதும் தவறு. உயிரைக் கொன்று மரணத்தை அளிக்கவில்லை. எனவே, உயிர் அல்லது நுண்ணுயிர் எனப் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் சரியல்ல. உயிரி என்பது எல்லா உயிரினங் களையும் குறிக்கும் பொதுச் சொல். எனவே, அதுவும் பொருந்தாது.

ஓர் அகராதியில் ‘தழிஞ்சி’ எனப் பயன்படுத்தியுள்ளனர். தழிஞ்சி என்பது தொல்காப்பியர் குறிப்பிடும் புறத்துறை. பகைவீரர்களால் தாக்குதலுக்கு உண்டான படைவீரர்களைப் பாராட்டியும் பொருள் கொடுத்தும் அரசன் தழுவிக் கொள்வதைக் கூறுவது. அதேபோல், தோற்றோடும் வீரரை எதிர்த்துத் தாக்காத மறப் பண்பினையும் கூறுவது. எனவே, இது பொருந்தாது. பகைப் படையினர் நாட்டு எல்லையுள் நுழையாதபடி வரும் வழிகளைக் காப்பதும் தழிஞ்சி என்னும் புறத்துறையாகும். இந்தப் பொருளில் பகை நுண்மிகள் வராத வகையில் காப்பதால் தழிஞ்சி எனக் கருதிப் பார்த்திருக்கலாம். நல்ல சிந்தனை. எனினும் பெரும்பான்மை ஒத்து வராமையால் பின்பற்றுவது முறையாகாது.

உடலுக்குக் கேடு விளைவிக்கும் நோய்மிகளை எதிர்ப்பது அவற்றிற்கான மாற்று மருந்துமாகும். எனவே, நோய்மி முறிப்பியல் எனலாம்.

Antibiotics

1043. நோய்மி யியல்

நச்சியஇயல், நோய் நுண்நச்சாய்வியல்,  நச்சியியல், நச்சுநுண்மவியல், நச்சுயிரி யியல், நச்சுரி இயல், நச்சுயிரியல், நோய் நுண்ணியியல், நுண்ணுயிரி, நோய் நுண்ம நச்சாய்வு நூல், வைரசியல், வைரசு இயல் எனப் பலவாறாகக் கூறப்படுகிறது.  நச்சுயிரி இயல் என்பதுதான் நச்சுரி இயல் என அச்சுப்பிழையாக இடம் பெற்றுப் பலராலும் அவ்வாறே பகிரப்பட்டுள்ளது. இவற்றுள் கடைசி இரண்டும் ஒலி பெயரப்புச் சொற்கள். நோய்தரும்  தீ நுண்மியைச் சுருக்கமாக நோய்மி(virus) எனலாம். நோய்மிபற்றிய ஆராய்ச்சி

நோய்மி யியல் – Virology

கணிப்பொறித்துறையில் உள்ள virus என்பதைச் சிதைப்பி என்று சொல்ல வேண்டும்.

Virology என்பதைச் சிலர் நச்சியல் என்கின்றனர்.  Toxicology என்பதைச் சிலர் நச்சியல் என்பதால் குழப்பம் வரலாம்.

Virology

 

(தொடரும்) 

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Wednesday, March 9, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1022 – 1039 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1018-1021 இன் தொடர்ச்சி)

1022. நுட்பியல்

technology  என்பது ஓர் அகராதியில் அச்சுப்பிழையாக  technlogy என்று இடம் பெற்றுப் பல இடங்களில் பகிரப் பட்டுள்ளது. ஆராயாது முதலில் நானும் அவ்வாறு குறித்துள்ளேன்.  தொழில் நுட்பவியல் என்பது கூட்டுச்  சொற்களாக உள்ளமையால்  நுட்பவியல்>நுட்பியல் போதும் என அதையே பயன்படுத்தலாம்.

Technology

1023. நுண் தட்பியல்

காண்க : தட்பியல்-Climatology

Micro climatology

1024. நுண் உயிரியல்

Microbiology

1025. நுண் குமுகவியல்     

Micro Sociology

1026. நுண் நிலநடுக்கவியல்

Microseismology

1027. நுண் பாய்வியல்

Microrheology

1028. நுண் பொருளியல்

Micro Economics

1029. நுண் மின்னணுவியல் / நுண்மின் அணுவியல்

Micro Electronics/ Microelectronics

1030. நுண் வரைவியல்

Micro Graphics

1031. நுண்வானிலையியல்

Mesometerology

1032. நுண் வேதியியல்

Microchemistry

1033. நுண் அரசியல்

Micropolitics

1034. நுண் உருமாற்றவியல்

Microrthelogy

1035. நுண் ஒளியியல் 

Microoptics

1036. நுண்ணணுப் பொறியியல்

Microelectronic Engineering

1037. நுண்ணலை ஒலியியல்

Microwave Acoustics

1038. நுண்ணலை ஒளியியல்

Microwave Optics

  

(தொடரும்) 

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000


Tuesday, March 8, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1018-1021 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  995 -1017இன் தொடர்ச்சி)

1018.  நீர் வள இயல்

Fluviology –  நீர்நிலையியல், நீர்வழி யியல், ஆற்றியல் எனக் குறிக்கப் பெறுகிறது.

Limnology – நன்னீரியல், ஏரிகளின் புறநிலை இயல்பாராய்ச்சி, குள வாழ்வு உயிரினங்கள் பற்றிய ஆய்வு, ஏரியியல், நன்னீர் உயிரியல், நீர்நிலைகளியல் எனக் குறிக்கப் பெறுகிறது.

நீர் என்றால் நாம் சாக்கடை நீரைக் கருதுவதில்லை. நீர் நிலைகளின் நீர் தூய்மையாக இருப்பதில்லை. எனவே, நன்னீர் என்ற குறிப்பு இங்கே தேவையில்லை.

Limno எரி, குளம், குட்டை எனப் பொருள்கள். Limnology என்றால் நீர்வள அறிவியல் எனப் பொருள்.

Fluviology, Limnology இரண்டும் ஒரு பொருள் குறித்தன. எனவே, பொதுவாக நீர் வள இயல் எனலாம். இவ்வாறு குறிப்பிடும் பொழுது நீர்நிலைகளுடன் நீர்நிலைகளில் வாழும் உயிரினங்களையும் குறித்ததாக அமையும்.

நீர் வள இயல் – Fluviology / Limnology 

 எனலாம்.

Hydrology என்பதே நீரியல். எனவே, இங்கே நீரியல் எனக் குறிக்கப்பெறவில்லை.

Fluviology/ Limnology

1019. நீள்தடப் பொறியியல்

Long-Lines Engineering

1020. நுட்பஅறிவுப் பொறியியல்

அறிவு சார்ந்த அமைப்புகளை உருவாக்குதல், பேணுதல், பயன்படுத்துதல் ஆகிய அனைத்துத் தொழில் நுட்ப, அறிவியல், குமுக இயல்புகளைக் குறிக்கிறது. நேர் பொருள் அறிவுப் பொறியியல் என்றாலும் வரையறைக் கிணங்க, நுட்ப அறிவுப் பொறியியல் எனப் பட்டது.

Knowledge Engineering

1021. நுட்பச் சொல்லியல்

orismos என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் வரையறை. Logos என்னும் பழங் கிரேக்கச்சொல் இந்த இடத்தில் சொல் என்னும் பொருளுடையது. இருப்பினும் கலைச்சொற்கள் அல்லது நுட்பச்சொற்களைப் பற்றி மட்டுமே ஆராய்கிறது. எனவே, நுட்பச் சொல்லியல் எனப்பட்டது.

Orismology

(தொடரும்) 

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Monday, March 7, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 995 -1017: இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  976 – 994 இன் தொடர்ச்சி)

995. நீரியவானிலை யியல்

Hydrometerology

996.  நீரியங்கியல்

Hydro Dynamics

997. நீர்மப் பொறியியல்

Hydraulic Engineering

998. நீர்ம இயல்

Hydrology

999. நீரிழிவியல்

Diabetology

1000. நீர் உயிரியல்

Hydrobiology  / Aquatic Biology

1001. நீர் நச்சியல்

Aquatic toxicology

1002. நீர்நில வாழியியல்

bátrakhos என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் தவளை. தவளை முதலான ஈரிட வாழ்வி – நீர்நில வாழி குறித்த ஆராய்ச்சியியலை  Batrachology என்கின்றனர்.

Batrachology

1003. நீர்நுட்பியல்

Water Technology

1004. நீர்நுண்ணுயிரியல்  

Aquatic Microbiology

1005. நீர்வழங்கல் பொறியியல்

Water-Supply Engineering

1006. நீர் வேளாணியல்

நீர்ப்பயிரீடு, நீர்மத் தாவர வளர்ப்பு, நீர் வளர்ப்பியல், நீர் வேளாண்மை, மண்ணிலி வேளாண்மை, மண்ணில்லாச் செடிவளர்ப்பு எனப் பல வகையாகக் குறிக்கப் படுகின்றது. நீர் வளர்ப்பு என்றால் நீரை வளர்ப்பதாகப் பொருள் கொள்ளக் கூடாது. அதுபோல் நீர் வேளாண்மை என்றால் நீரில் வேளாண்பணி மேற்கொள்வது. மண்ணில்லாமல் நீரில் பயிரிடும் முறைபற்றிய இயல் என்பதால் எல்லாம் சரிதான். எனினும் சுருக்கமாக hydroponics-நீர் வேளாணியல் எனலாம். 

கிரேக்கத்தில் hydro என்றால் நீர் என்றும் ponos என்றால் வேளாண்மை என்றும் பொருள்.

Hydroponics 

1007. நீர் வானிலையியல்

நீர்வெளி இயல்/நீரியல்சார் வானிலையியல்/நீர் வானியல் எனக் குறிப்பிடுகின்றனர்.

Hudro என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் நீர். இங்கே நீரியலைக் குறிக்கிறது. எனவே, நீரிய  வானிலையியல்  எனச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.

Hydrometeorology

 

1008. நீர் வளைசலியல்

Ecohydrology / Hydroecology

1009. நீர்ப் புவியியல்

Hydrogeology/Geohydrology– நிலத்தடி நீரியல், நீர்ப்புவியியல், புவிநீர் அமைப்பியல், நீரிய நிலத்தியல், நீர்ப்புறவியியல், நீர்சார் நிலவியல், நீர்நிலப் பொதியியல், நீர் நிலவியல், நிலநீரியல், புவிநீரியல் எனப் படுகிறது.

Hydro என்றால் நீர் எனப்பொருள். எனினும் நிலத்தடி நீரை இங்கே குறிக்கிறது. Geology என்பதைப் புவியியல் என்றே குறிப்பிடு கிறோம். எனவே,

நீர்ப்புவியியல் – Hydrogeology/  Geohydrology எனலாம்.

Hydrogeology / Geohydrology

 

1010. நீர்ப் பொருளியல்

Hydroeconomics

1011. நீர்ம இயக்க இயல்

Hydrokinetics

1012. நீர்ம ஒலியியல்

Hydroacoustics

1013. நீர்ம விசையியல்

Hydromechanics

1014. நீர்மக் கட்டியியல்

Cystology

1015. நீர்மக் காந்தவியல்

Hydromagnetics

1016. நீர்மநிலை ஒப்புமையியல்

Hydrostatic analogy

1017. நீர்ம யியல்

Hydraulics– நீர்ம விசையியல், நீர்மவியல், நீர்ம யியல்,  நீர் விசையியல், நீரியல், நீர்ப்பாயவியல், பாய்பொருளியல், நீர்ப்பாசனவியல், நீரழுத்தவியல், நீரியல் ஆய்வுத்துறை,  நீரியக்க இயல் எனப் பலவாறாகப் பயன்படுத்து கின்றனர்.

அதே நேரம் Hydromechanics என்பதும் நீர்ம விசையியல் எனப்படுகிறது. நீர்ப்பாசனவியல் என்றால் Irrigation எனத் தவறாகப் புரிந்து கொள்ள நேரிடும். நீரழுத்த வியல் என்பதை Hydrostatics எனச் சிலர் குறிப்பிடுவதால் இங்கே பயன்படுத்த வேண்டா.

ஆனால், இவ்வறிவியல் நீரின் பயன்பற்றி மட்டு மல்லாமல் திரவ/நீர்ம வடிவிலுள்ள எதன் பயனையும் பற்றியது. எனவே, நீர்மம் அல்லது பாய்பொருள் என்ற குறிப்பில் உள்ளனவே சரியானவை.

இவற்றில் சுருக்கமான

நீர்மயியல் – Hydraulics இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

Hydraulics

(தொடரும்) 

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000