Saturday, February 21, 2026

வெருளி நோய்கள் 1166-1170 : இலக்குவனார் திருவள்ளுவன்

      22 February 2026      அனரமுதல



(வெருளி நோய்கள் 1161-1165: தொடர்ச்சி)

தசைக்கனி (Berry) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தசைக்கனி வெருளி.
இதனைச் சிலர் Fructophobia என்கின்றனர். fructus என்னும் இலத்தீன் சொல்லிற்குப் பழம் எனப் பொருள். எனவே, Fructophobia என்பதைப் பழ வெருளி எனப் பொதுவாகக் குறிப்பிட வேண்டும். Mourophobia என்பது குறிப்பாகத் தசைக்கனியைக் குறிப்பது.
தசைக்கனியில் வழல் நச்சம்(சப்போனின்/saponin) என்னும் நச்சுக் கலவை உள்ளது. இது குமட்டல், வாந்தி, வயிற்றுப் பிடிப்பை முதலியவற்றை ஏற்படுத்தக் கூடும். இதனால் தசைக்கனி மீது அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00

குடும்பத்தட(Family Echo) வலைத்தளம் தொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் தடத்தள வெருளி.
குடும்ப வழி வழி மரபினரைக் குறிப்பிடும் குடும்பத்தட விளக்கப்படத்தைக் குடும்ப மரம்(Family Tree) என்றும் கூறுவர்.
00

தடைப்பி(brake) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தடைப்பி வெருளி.
தடைப்பி சரியாகச் செயல்படாதிருக்குமோ, நேர்ச்சி(விபத்து) ஏற்படுமோ உயிருக்கு அல்லது உடலுக்குக் கண்டம் (ஆபத்து)வருமோ என்று தேவையற்ற பேரச்சத்தை வரம்புமீறி அடைவர் இத்தகையோர்.
Freno என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தடைப்பி(brake).
00

தட்டிசை(hip hop) குறித்த வரம்பற்ற பேரச்சம் தட்டிசை வெருளி.
தட்டிசை(hip hop)யைக் கேட்பதற்கே பேரச்சமாக உள்ளதாகச் சிலர் கூறுகின்றனர். இரைச்சல் ஒலி கேட்பவரை வன்முறைக்குத் தூண்டும் எனச் சிலர் கூறுகின்றனர். தட்டிசைக்கு எதிரான கட்டுரைகள் இதழ்களில் வந்துள்ளன. இவற்றையெல்லாம் கேட்டும் படித்தும் பிறருக்கும் தட்டிசை குறித்த பேரச்சம் வருகிறது.
00

தண்கலன்(refrigerator) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தண்கலன் வெருளி.
சிறு பருவத்தில் தண்கலைனைப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட அச்சம் நாளடைவில் காரணமின்றிச் சிலருக்கு வளர்ந்து விடுகிறது. கெடு நாளுக்குப் பின்னரும் உணவுப் பொருளை வைத்து விட்டு அது கெட்டு அதனால் நலக்குறைவு ஏற்பட்டால் தண்கலன்தான் காரணம் என எண்ணி அதன் மீது வெறுப்பை வளர்ப்பவர்களும் உண்டு. அன்றைக்குச் சமைத்த உணவைச்சுடச்சுட உண்ண வேண்டும்.இதற்கு மாறாகத் தண்கலன் பயன்பாடு உள்ளது என அதனை வெறுப்பவர்களும் உள்ளனர்.
00

Friday, February 20, 2026

வெருளி நோய்கள் 1161-1165: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 1156-1160:தொடர்ச்சி)

புனைவுரு கதைப்பாத்திரமான சோனிகன்(Sonic) குறித்த வரம்பற்ற பேரச்சம் சோனிகன் வெருளி
சப்பானியக் காணொளி ஆட்டத்தின் பெயரே ‘சோனிக்கு’ (Sonic, the Hedgehog). இப்பெயரில் திரைப்படமும வந்துள்ளது. இவ்வாட்டத்தை ஆடுபவர்களுக்கும் இதனை ஆடும் சிறுவர்களால் அவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என அஞ்சும் பெற்றோர்களுக்கும் சோனிகன் வெருளி வருகிறது.
‘க்‘ எழுத்தில் சொல் முடியாது. எனவே, ‘சோனிக்’ என்பது அன் விகுதி சேர்த்து சோனிகன் எனப்பட்டது.
00

ஞாயிற்றுக்கிழமை குறித்த வரம்பற்ற பேரச்சம் ஞாயிற்றுக் கிழமை வெருளி.
விடுமுறை நாள் என்பதால் வரும் சோம்பல், வார விடுமுறையில் செய்யலாம் என ஒதுக்கி வைத்த வேலைகளின் குவியல், விடுமுறையில் பிள்ளைகளின் தொல்லைகள், பொழுதுபோக்கு அச்சம் போன்றவபற்றால் ஞாயிறு வந்தாலே பேரச்சம் கொள்கின்றனர் சிலர்.
Kyriaki என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் ஞாயிற்றுக்கிழமை.
Dimancho என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் ஞாயிற்றுக்கிழமை.
காண்க: ஞாயிற்று மாலை வெருளி(Hebdomaphobia)
:
00

  1. ஞாயிற்று மாலை வெருளி – Hebdomaphobia
    ஞாயிற்றுக்கிழமையின் மாலைப்பொழுது அல்லது இரவுநேரம் முடியப்போகிறதே என்ற வரம்புகடந்த பேரச்சம் ஞாயிற்று மாலை வெருளி.
    பொதுவாகவே ஞாயிறு பிறக்கும் பொழுது அல்லது பிறக்க இருக்கும் பொழுது அதை எண்ணி அளவுகடந்த மகிழ்ச்சி கொள்பவர்கள் உள்ளனர். இவர்கள் ஞாயிறு முடியப் போவதை எண்ணி – திங்கட்கிழமை விடிந்ததும் வழக்கமான வேலை தொடங்கிவிடுமே என்ற அச்சத்திற்கு ஆட்படுகின்றனர்.
    சிறு பருவத்தில் பள்ளி மாணாக்கர் நிலையில் இவ்வெருளி உண்டாகி நாளடைவில் வளர்வதும் உண்டு.

ஞாயிற்றுக் கிழமை என்றாலே விருந்து,கொண்டாட்டம் என்று பொழுது போக்குபவர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை முடிந்து விடுமே என்ற பேரச்சம் வருகிறது.

ஏழைக் குறிக்கும் heptய என்னும் சொல்லில் இருந்து உருவான Hebdoma என்னும் இலத்தீன் சொல், 7, (திங்கட்கிழமையிலிருந்து) 7 ஆம்நாள், (7 நாள் கொண்ட) வாரம், வார முடிவு நாள் எனப்பொருள்கள் உடையது.
காண்க: ஞாயிற்றுக்கிழமை வெருளி(Kyriakiphobia / Dimanchophobia)
00

தகாக் கலவி(Incest) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தகாக் கலவி வெருளி.
பாலுறவு மேற்கொள்ளக்கூடாத நெருங்கிய உறவினர்களிடையே மேற்கொள்ளும் கூடாப்புணர்ச்சி நம் நாட்டிலும் குற்றமாகக் கருதப்பட்டது. இப்பொழுது குற்றமில்லை என்று மாற்றியுள்ளனர். எனினும் அறவழியலும் மரபு வழியிலும் இதனைக் கற்றமாகக் கருதி வெறுத்தொதுக்க வேண்டும்.
தகாப்புணர்ச்சி அல்லது கூடாப்பாலுறவு என்னும் பொருள் உடைய incestus என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து incest சொல் உருவானது.
00

தசை ஒருங்கிணைப்பு இன்மையால், படபடப்பு, சீர்குலைவு, ஒழுங்கின்மை, போன்ற சூழலில் இருப்பதாக அளவுகடந்து பேரச்சம் கொள்வது தசை ஒத்தியங்கா வெருளி.
இதைத் தள்ளாட்ட வெருளி என்று சொல்லலாம். ஆனால், மழையரின் தள்ளாட்ட நடை வெருளி (Nipiophobia) யுடன் குழப்பம் வரும் என்பதால் அவ்வாறு குறிப்பிடவில்லை.
00

Thursday, February 19, 2026

வெருளி நோய்கள் 1156-1160: இலக்குவனார் திருவள்ளுவன்

      20 February 2026      அகரமதல



(வெருளி நோய்கள் 1151-1155: தொடர்ச்சி)

சோளம்(corn)மீதான மிகையான பேரச்சம் சோள வெருளி.
நீரிழிவு, உடல் பருமன், செரிமானக் கோளாறு, வாந்தி, அரிப்பு, மயக்கநிலை, பறித் தொல்லை(Flatus) முதலியன சிலருக்கு ஏற்படலாம். இதனால் சோள வெருளி கொள்வோர் உள்ளனர்.
சோளம் என்பதற்கான கிரேக்கச் சொல்லே Kalampoki.
00

சோளத் தோசை(tortilla)பற்றிய அளவற்ற பேரச்சம் சோளத் தோசை வெருளி.
சோள வெருளி உள்ளவர்களுக்குச் சோளத்தோசை வெருளி வர வாய்ப்பு உள்ளது.
Tortilla என்னும் இசுபானியக்கூட்டுச்சொல்(தோசை என்னும் பொருள் கொண்ட tort(a) + மென்மை என்னும் பொருள் கொண்ட ஒட்டுச்சொல் illa) மெல்லிய தோசையைக் குறிக்கிறது.
மென்தோசை வெருளி என்றால் பொதுவாக அரிசி மாவு தோசையைக் குறிக்கும் என்பதால் சோளத்தோசை எனக் குறிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் சோள மாவில் சுட்டாலும் கோதுமை மாவிலும் சுடுவார்கள்.
00

சோளப் பொரி குறித்த அளவு கடந்த பேரச்சம் சோளப் பொரி வெருளி.
சோள வெருளி உள்ளவர்களுக்குச் சோளப் பொரி வெருளி வர வாய்ப்பு உள்ளது.
00

சோளப் பொறிப்பி(popcorn popper) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சோளப் பொறிப்பி வெருளி.
சோளப் பொரி உள்ளவர்களுக்குச் சோளப் பொறிப்பி வெருளி வர வாய்ப்பு உள்ளது.
00

சோனி நிறுவனப் பொருள்கள் குறித்த வரம்பற்ற பேரச்சம் சோனி வெருளி.
“sonus” என்னும் இலத்தீன் சொல் ஒலியைக் குறிக்கிறது. இதிலிருந்து உருவானதே Sony. இதன் பெயரில் உருவானதே சோனி நிறுவனம்.
00

Wednesday, February 18, 2026

வெருளி நோய்கள் 1151-1155: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 1146-1150: தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 1151-1155

சேலாப்பழம் (Cherry) பற்றிய அளவுகடந்த பேரச்சம் சேலாப்பழ வெருளி.
சேலாப்பழத்தில் கொடிய நச்சுப்பு(சயனைடு) உள்ளது. ஒவ்வொரு கல்(கிராம்) விதையிலும் 0.17 கல்(கிராம்) நச்சுப்பு உள்ளது இருப்பதால், புதியதாக உடைக்கப்பட்ட பருப்பு ஒன்று அல்லது இரண்டு உட்கொண்டாலே உயிரை எடுக்கும். பருப்பின் அளவைப் பொறுத்து நச்சுத்தன்மை அளவும் மாறுபடும். பக்க விளைவுகளும் உண்டு. எனவே, இதனை மிகுதியாக உட்கொள்ளக் கூடாது. சேலாப்பழம் மீது வெருளி கொள்கின்றனர்.
Kerasi என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சேலாப்பழம்(cherry)
00

சேறு குறித்த பேரச்சம் சேற்று வெருளி.
blénnos என்னும் பழங்கிரேக்கச்சொல்லிற்கும் myso என்னும் கிரேக்கச் சொல்லிற்கும் சகதி அல்லது சேறு எனப் பொருள்.
slime(சகதி) என்பதை slim எனத் தவறாகப் பொருள் புரிந்து எழுதப்பட்டதைப் படித்து நான் முன்னர் மெலிவு வெருளி எனத் தவறாகக் குறிப்பிட்டிருப்பேன். இப்பதிவு பல இடங்களிலும் பகிரப்பட்டுள்ளது. இதனைப் படிப்பவர்கள் அந்த இடங்களில் திருத்திக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
00

சொகுசு உந்து(luxury vehicle) மீதான அளவுகடந்த பேரச்சம் சொகுசு உந்து வெருளி.
சொகுசு என்பது தமிழ்ச்சொல்லே. சொக்கவைத்தல், மயங்க வைத்தல் எனப்பொருள். எனவேதான் மயங்க வைக்கும் அழகுடையவனைச் சொக்கன் என்றனர். சொக்குதல் அடிப்படையிலான சொகுசு என்றால் அழகு, நேர்த்தி, சிறப்பு முதலான பொருள்கள் உள்ளன. பிறரைத் தன் மயமாக்குபவனை அவன் சொக்குப்பொடி போட்டுவிட்டான் என்பர். எனவே, பகட்டான தோற்றமும் ஏந்து(வசதி)களும் உடைய உந்து சொகுசு உந்து எனப்படுவது பொருத்தமானது.
00

அமைப்புகளில் அல்லது மன்றங்களில் கலந்து பேசி உரையாடும் சொல்லாடல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சொல்லாடல் வெருளி
lal என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் சொல்லாடல் என்று பொருள்.
உரை வெருளி(Glossophobia), பேச்சு வெருளி(sermophobia) காண்க.
00

சொற்கள் மீதான அளவுகடந்த காரணமற்ற பேரச்சம் சொற்கள் வெருளி.
வார்த்தை வெருளி – Logophobia என்கின்றனர். எண்ணத்தின் வார்ப்பாக உருவாகும் வார்த்தையும் தமிழ்ச்சொல்லே. எனினும் ஒரே பொருளில வெவ்வேறு சொற்கள் வேண்டா.
நாம் சில நேரம் சொல்லியிருப்போம் அல்லது பிறர் சொல்லக் கேட்டிருப்போம், ஏதேனும் பெயரைக் குறிப்பிட்டு, இந்தப் பெயரைக் கேட்டாலே பிடிக்கவில்லை என்று. இக்காரணமில்லா வெறுப்பு அளவுகடந்து போகும் பொழுது வெருளியாகிறது.
சொல் என்பது வெறும் பொருளால் மட்டும் அச்சம் தருவதல்ல. உணர்ச்சியுடன் இணைந்து அச்சம் தருவது. சொல் ஏமாற்றம் தந்தாலோ துன்பம் தந்தாலோ அதிர்ச்சி தந்தாலோ வரக்கூடிய வெருளிதான். தலைவி தன்னை மறந்துவிட்டதாகக் கூறும் பொழுது தலைவன் வேதனையில் இருப்பதை உணர்த்தும் பாடல் உள்ளது.
அவளா சொன்னாள் இருக்காது அப்படி எதுவும் நடக்காது
நடக்கவும் கூடாது நம்ப முடியவில்லை இல்லை இல்லை
உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா
உதட்டிலே வந்தது உள்ளமே நினைத்ததா
எனச் ‘செல்வம்’ திரைப்படத்தில் வாலி எழுதிய பாடல் இடம் பெறும். இதுபோல் திரைப்படத்தில் பல காட்சிகள் உள்ளன. இவற்றைச் சொல் வெருளியை விளக்குவதாக எடுத்துக் கொள்ளலாம்.
நெடுஞ்சொல் வெருளி (Hippopotomonstrosesquippedaliophobia/ Sesquipedalophobia), பெயர் வெருளி (Onomatophobia/Nomatophobia) ஆகியன இவ்வகையினவே.
ஒரே பொருளுடைய வெவ்வேறு சொற்களைத் தனித்தனிச் சொற்களாக வைகப்படுத்த வேண்டா என்பதால் ஒன்றாகவே குறித்துள்ளேன்.
logo என்னும் கிரேக்கச் சொல்லிறகும் verbo என்னும் இலத்தீன் சொல்லுக்கும் பொருள் சொல்.
00

Tuesday, February 17, 2026

வெருளி நோய்கள் 1146-1150: இலக்குவனார் திருவள்ளுவன்

      18 February 2026      அகரமுதல



(வெருளி நோய்கள் 1141-1145: தொடர்ச்சி)

சேகா நிறுவனத்தின் காணாட்டம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சேகா காணாட்ட வெருளி.

சேகா என்பது சப்பானின் தோக்கியாவில் உள்ள சினகாவா(Shinagawa) நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டுக் காணாட்ட நிறுவனமாகும்.
Service Games என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கமே சேகா (Se Ga)என்பது.
00

சேடன் மகிழுந்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சேடன் வெருளி.
உட்கார் என்னும் பொருள் காெண்ட “sedere” என்னும் இலத்தீன் சொல்லில் இருற்து உருவானதே “sedan”. அமர்ந்து செல்வதற்கு வசதியானது என்பதை உணர்த்தும் வகையில் இம்மகிழ்வுந்து உருவாக்கப்பட்டது.
00

சேண்மக் கோள் (Neptune) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சேண்மக் கோள் வெருளி.
கோள்கள் வெருளி(Planitiphobia) உள்ளவர்களுக்குச் சேண்மம் குறித்த வெருளி வருகிறது.
00

சேண்மியம்(Pluto) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சேண்மிய வெருளி.
கோள்கள் வெருளி(Planitiphobia) உள்ளவர்களுக்குக் குறுங்கோளான (குறுமி) சேணாகம் குறித்த வெருளி வருகிறது.
00

Monday, February 16, 2026

வெருளி நோய்கள் 1141-1145: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 1136-1140: தொடர்ச்சி)

செவ்வாய்க் கோள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் செவ்வாய்க் கோள் வெருளி.
கணியம் அல்லது சோதிடம் என்பது உண்மையானால் செவ்வாய்க்குரிய நற்பலன்கள் மீதும் நம்பிக்கை வரவேண்டும்.ஆனால் பணத்தைக் கறப்பதற்காகச் “செவ்வாய் எப்போதும் தீமைகளையே கொடுப்பார். செவ்வாய்த் திசை வந்தால் துன்பங்களும், இன்னல்களும் நேர்ச்சிகளும்(விபத்துகளும்) வந்து சேரும்” என்றும், “செவ்வாய்க் கோளானது அது அமர்ந்த வீட்டுக்கும் அது தொடர்பு பெற்றிருக்கும் இடங்களுக்கும் மிக மோசமான பாதிப்பை உண்டாக்கும்” என்றும் சொல்கின்றனர். இதற்குக் கழுவாயாக/பரிகாரமாக ஏதேனும் செய்வதாகச் சொல்லிப் பணம் சம்பாதிப்போர் உள்ளனர். இதன் காரணமாகவும் செவ்வாய் மீது அளவுகடந்த பேரச்சம உள்ளது.
Martis என்னும் இலத்தீன் சொல்லிற்குச் செவ்வாய்க் கோள் எனப் பொருள்.
Aris என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் செவ்வாய்க் கோள் எனப் பொருள்.
காண்க: செவ்வாய்க் கிழமை வெருளி (Tritiphobia)
00

செவ்வாய் அண்மித்தாக உள்ள உலவியான செவ்வண்மி(Phobos)தொடர்பான அளவுகடந்த பேரச்சம் செவ்வண்மி வெருளி.
கிரேக்கத் தொன்மத்தின்படி அச்சம்தரும் கடவுள் செவ்வண்மி.
00

செவ்விந்தியர் மீது அமெரிக்கருக்கு இருக்கும் அளவு கடந்த பேரச்சம் செவ்விந்தியர் வெருளி.
Indiano என்பது இங்கே செவ்விந்தியரைக் குறிக்கிறது.அமெரிக்கக் கண்டத்தின் மண்ணின் மைந்தர்களான பழங்குடியினர் மீது வெறுப்பு என்பதால் நான் முதலில் ‘அமெரிக்க மண் மைந்தர் வெருளி’ எனக் குறிப்பிட்டிருந்தேன். சுற்றி வளைத்துச் சொல்வானேன் என்று இப்பொழுது நேரடியாகச் ‘செவ்விந்தியர் வெருளி’ எனக் குறித்துள்ளேன்.
00

செவ்வை(correctness)யான நிலைமை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் செவ்வை வெருளி.
எதுவும் செவ்வையாய் இருக்க வேண்டும என விரும்புபவர்களுக்கு அடுத்தவர்களின் செவ்வையின்மை எரிச்சலையும் சினத்தையும் ஏற்படுத்திச் செவ்வை வெருளியை உருவாக்குகிறது. சிலர் அரசியலில் செவ்வையை எதிர் நோக்குகின்றனர். அத்தகையோரைப் பார்ப்பது அரிதாக உள்ளமையால் தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.
Sosto என்றால் இலாத்துவியன்(Latvian) மொழியில் அரியணை எனப் பொருள். ஆட்சியாளர்களின் செவ்வை நிலை தொடர்பான வெருளியைக் குறிக்கும் வகையில் இதனைப் பயன்படுத்தி உள்ளனர்.
00

  1. செவ்வொளி வெருளி-Ereuthrophobia/Erythrophobia/Erytophobia/ Ereuthophobia செவ்வொளி தொடர்பான தேவையற்ற பேரச்சம் செவ்வொளி வெருளி.
    நாணத்தினால் முகம் சிவப்பதைக்கண்டும் வெறுப்பும் அச்சமும் கொள்வோர் உள்ளனர். கன்னஞ் சிவத்தல் வெருளி என இதனைக் குறிப்பர். சிவக்கின்ற முகம், சிவப்பு ஒளி சார்ந்த பொருள்கள் முதலானவற்றைப்பற்றிய எண்ணமும்கூட இவர்களுக்குப் பேரச்சம் தரும்.
    erythros என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் சிவப்பு எனப் பொருள்.

Sunday, February 15, 2026

வெருளி நோய்கள் 1136-1140: இலக்குவனார் திருவள்ளுவன்

      16 February 2026      அனரமுதல



(வெருளி நோய்கள் 1131-1135: தொடர்ச்சி)

பார்வைத்திறன், கேட்புத்திறன் ஆகிய இரண்டுமில்லாதவர்கள் தொடர்பான தொடர்பான பேரச்சம், செவிடர் குருடர் வெருளி.
பார்வைத்திறன் குறைபாடும் கேட்புத்திறன் குறைபாடும் ஒவ்வொருவருக்கு ஒவ்வோர் அளவில் இருக்கும். எனினும் இரு திறனும் இன்றிச் செவிட்டுக் குருடராக இருப்பவர்கள் இரங்கத்தக்கவர்கள். அவர்கள், தன்வெறுப்பும் கொள்பவர்களாக உள்ளனர்.
Surdo, caeco ஆகிய இலத்தீன் சொற்களுக்கு முறையே செவிடு, குருடு எனப் பொருள்கள்.
00

செவிடர் தொடர்பான பேரச்சம் செவிடர் வெருளி.
காது கேளாதவர்கள், கேட்பு உதவியை(Hearin Aid) அணிந்து கொள்ளத் தாழ்வு மனப்பான்மை கொள்கின்றனர். இவர்களிடம் கூறியதையே திரும்பத் திரும்பக் கூற வேண்டி வருவதாலும், தவறாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப எதிர்வினையாற்றிக் குழப்பத்தை ஏற்படுத்துவதாலும், பொறுமையை மறந்து வெறுப்பு கொள்வோர் உள்ளனர்.
Surdo என்னும் இலத்தீன் சொல்லிற்குச் செவிடு எனப் பொருள்.
00

செவ்வகம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் செவ்வக வெருளி
செவ்வக வடிவிலான அைற, செவ்வக வடிவிலான அரங்கு, செவ்வக வடிவிலான கட்டடம், செவ்வக வடிவிலான பொருள்கள் முதலியவற்றின் மீது காரணமற்ற பகுத்தறிவிற்குப் பொருந்தாத பேரச்சம் வரும்.
கிரேக்கச்சொற்களான ஆர்த்தோ (Ortho(நேராக/வலது) , கோனியா(gonio/கோணம்) என்பதிலிருந்து பெறப்பட்டதே செவவ்கம் என்னும் பொருள்கொண்ட Orthogoniophobia என்னும் சொற்சேர்க்கை.
00

செவ்வணில்(chipmunk) குறித்த அளவுகடந்த பேரச்சம் செவ்வணில் வெருளி.
செவ்வணில், தீங்ஙகு விளைவிக்காத கொறிப்பி (கொறித்துண்ணி). எனினும் இதன் மூலம் தொற்றுநோய்கள் பரவும் பேரிடர் வாய்ப்பு உள்ளது. எனவே, இது கண்டு அஞ்சி வெறுப்பு கொள்கின்றனர்.
00