Friday, August 31, 2012

Mouth, teeth and tongue வாயும் பற்களும் நாக்கும்

வாயும் பற்களும் நாக்கும்    

- இலக்குவனார் திருவள்ளுவன்


வாய், உடல் நலம் காட்டும் கண்ணாடியாக விளங்குகிறது. உடல் நலம் குன்றினால் மருத்துவர்கள்நாக்கைத்தான் முதலில் நீட்டச் சொல்லி ஆய்கிறார்கள். நாக்கின் நிறம், உமிழ்நீரின் தன்மை, உமிழ்நீர் சுரக்கும்அளவு, வாய்ப்புண், ஈறுகளின் நிலை, பற்களின் நிலை ஆகியவற்றின் மூலம் நோயைப் பற்றிய தன்மைகளைக்கண்டறிய இயலும்.

உணவுச் செரிமானம் தொடங்கும் இடம் வாய்தான். உட்கொள்ளுவனவற்றை அல்லது உணவுப் பொருள்களைமீச்சிறு துண்டாக்கி மென்று கூழாக்கிக் குருதியில் கலப்பதற்கு ஏற்றவாறு உள்ளே அனுப்புவது அல்லதுவிழுங்குவது வாய்தான்.

வாய்க்குழியை மூக்கறையில் இருந்து பிரிப்பதும் வாய்க்குழியின் கூரை போல் அமைந்துள்ளதும் அண்ணம்ஆகும். எலும்பினால் ஆன பகுதி வல்லண்ணம் என்றும் தசையினாலும் சவ்வினாலும் ஆன பகுதிமெல்லண்ணம் என்றும் இதன் நடுப்பகுதி உள்நாக்கு என்றும் கூறப்படுகின்றன.

உண்பதற்கும் பேசுவதற்கும் உள்ள உறுப்பு இதழ் அல்லது உதடு ஆகும். கீழிதழ் அதரம் என்றும் மேலிதழ்ஓட்டம் என்றும் அழைக்கப்பெறும்.

பல்

குழந்தை பிறக்கும் பொழுது பற்கள் இருக்குமா? இருக்கா; 6ஆம் திங்கள் முதலே பற்கள் முளைக்கத்தொடங்குகின்றன. முதலில் முளைக்கும் பற்களுக்குப் பெயர் பால்பற்கள். இவை 8 வெட்டுப்பற்கள், 4கோரைப்பற்கள் 8 கடைவாய்ப்பற்கள், ஆக மொத்தம் 20 பற்களாகும். இவை 6ஆம் ஆண்டிலிருந்து விழத்தொடங்கும். மீண்டும் முளைக்கும் பற்கள் நிலைப்பற்கள் ஆகும். இவற்றின் எண்ணிக்கை 32 ஆகும்.

அண்பல் என்பது அண்ணத்தைப்பொபாரு்நதியிருக்கும் மேல்வாய்ப்பல் ஆகும்.

வாயின் முனபுறம் சிற்றுளி போன்று கூராய் அமைந்தவை - உணவுப் பொருள்களைக் கண்டந் துண்டமாகவெட்டும் - வெட்டுப் பற்கள் ஆகும்.

கடினமான பொருள்களைக் கிழித்து உதவுவது நீளமான, முனையான, கோரைப் பற்கள் ஆகும்.

உணவை நொறுக்கிக் கூழாக்க உதவுவன கடைவாய்ப்பற்களும் முன்கடைவாய்ப் பற்களும் ஆகும்.

ஒவ்வொரு பல்லும் நிலையாகப் பற்றும் வகையில் தாடை எலும்பில் உள்ளது வேர் ஆகும்.

பல்லின் உட்பகுதி வாய்ப்பகுதியில் காதண்மைச் சுரப்பிகள், கீழ்த்தாடைச் சுரப்பிகள், நாவடிச் சுரப்பிகள் என 3இணை உமிழ் நீர்ச் சுரப்பிகள் உள்ளன. பல்லைப் பாதுகாக்கும் வெண்ணிறப் புற உறை பற்சிப்பி எனப்படும்.

நாக்கு

’நால்‘ என்றால் தொங்குதல் என்று பொருள். வாயில் தொங்கிக் கொண்டு இருக்கும் உறுப்பு நால் என்பதன் அடிப்படையில் நா என்றும் நாக்கு என்றும் சொல்லப் பெறுகிறது.

நாக்கில்,

01. நாக்குப் பள்ளங்கள்

02. கசப்பு உணரி

03. காரம் உணரி

04.இனிப்பும் உப்பும் உணரி

05. நிணநீர் உயிர்மச் சேர்க்கை

06. சுற்றகழிக் குழிகள்

07. கூம்புக்குமிழ்கள்

08. முகட்டுக் குமிழ்கள்

09. உப்பு உணரி

10. இனிப்பு உணரி

முதலியவை உள்ளன.

No comments:

Post a Comment