இரும்புச் சத்துள்ள இயற்கை உணவுகள்
சமைக்கும் போது சூடுபடுத்துவதாலும், சில சுவையூட்டிகளைப் பயன்படுத்துவதாலும் உணவின் உண்மையான சத்துக்கள் நசிந்து போய்விடுகின்றன. அதிலும் பள்ளி படிக்கும் பருவத்து பெண்கள் பெரும்பாலும் ரத்தசோகை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சில எளிய இயற்கை உணவை தயாரித்து சாப்பிடலாம்.
பீட்ரூட் பயாசம்: சிறிய பீட்ரூட் ஒன்றை சுத்தமாஙகக, தோல் அகற்றி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் ஜூஸ் எடுத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை மூடி தேங்காய்ப் பால் கலந்து, சுவைக்குவெல்லம் மற்றும் ஏலக்காய், முந்திரி சேர்த்துக் கொள்ளலாம். இது பள்ளி படிக்கும் பருவத்து பெண்கள் தினமும் குடிக்கலாம்.
முருங்கைக்கீரை சூப்: கைப்பிடி அளவு முருங்கைக்கீரையுடன் நான்கு பல் பூண்டு, மிளகு, சீரகம், தோல் நீக்கிய இஞ்சி, உப்பு ஆகியவற்றைக சேர்த்து, நசுக்கிக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம். அசத்தலான இருப்பு சக்திக்கான சூப் ரெடி.
இரத்தம் அதிகரிக்கும் பழ சாலட்: கொய்யாப்பழம், அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி அதில் பன்னீர் திராட்சை மற்றும் மாதுளம் முத்துக்களை சேர்த்து அப்படியே சாப்பிடியே சாப்பிடலாம்.
ரத்த விருத்திக்கான காய்கறி சாலட்: கேரட், பீட்ரூட் காய்களை துண்டுகளாக்கி, சீரகத்தூள், உப்பு கலந்து கொத்தமல்லி, கறிவேப்பிலையை மேலே தூவினால் காய்கறி சாலட் ரெடி.
கொத்தமல்லி ஜூஸ்: ஒரு கைப்பிடி கொத்தமல்லியை அரைத்து வடிகட்டிய சாறுடன், ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு கலந்து 100 கிராம் வெல்லம் சுவைக்கு சேர்த்தால் ரத்த அழுத்தத்தை சீராக்கி, பசியை தூண்டும் ஆற்றல் கொண்டது.
வாழைப்பூ சூப்: வாழைப்பூவை சிறு துண்டுகளாக்கி, நான்கு பல் பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் ஒரு தக்காளி இவற்றை நசுக்கி, சிறிது மிளகு, சீரகம், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, சுவைக்கு வெள்ளம் சேர்க்கலாம். சுவையான வாழைப்பூ சூப் தயார்.
புதினா ஜூஸ்: புதினா இலைகளை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிய சாறுடன், எலுமிச்சை பழ சாறு பிழிந்து, சுவைக்கு வெல்லம் சேர்த்து, அரை லிட்டர் தண்ணீர் கலந்து கொடுக்கலாம். இது வளரிளம் பெண்களின் மாதப்போக்கினைச் சீராக்கும். பசியைத் தூண்டி சுறுசுறுப்பைத் தரும்.
No comments:
Post a Comment