(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 876 -894 இன் தொடர்ச்சி)
| 895. தொல்லியல் | Archaeology |
| 896. தொழிலக உளவியல் | Industrial Psychology |
| 897. தொழிலக நுண்ணுயிரி யியல் | Industrial Microbiology |
| 898. தொழிலக மின்னணுவியல் | Industrial Electronics |
| 899. தொழிலக வானிலை யியல் | Industrial Meteorology |
| 900. தொழிலக வேதி யியல் | Industrial Chemistry |
| 901. தொழிலகக் குமுகவியல் | Industrial Sociology |
| 902. தொழிலகப் பொருளியல் | Industrial Economics |
| 903. தொழிலகப் பொறி யியல் | Industrial Engineering |
| 904. தொழில்முனைவோரியல் கெளவை என்றால் வணிகம் எனப் பொருள். வணிகத்தில் ஈடுபடுநர் குறித்த இயல் என்பதால் கெளவையியல் என்றும் சொல்லலாம். ஆனால் பழக்கத்திற்கு வரவேண்டும். | Entreprenology |
| 905. தொழு நோயியல் | Leprology |
| 906. தொற்று நோயியல் | Epidemiology |
| 907. தொன்மவியல் | Mythology |
| 908. தோட்டுயிரி யியல் | Astacology |
| 909. தோலியல் dérma என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்குத் தோல் என்று பொருள். தோல் குறித்தும் தோல் நோய் குறித்தும் ஆராயும் துறை. எனவே, தோலியல் என்றும் தோல் நோயியல் என்றும் சொல்லப்படுகின்றது. சுருக்கமான தோலியல் என்பதையே பொதுவாகக் கையாளலாம். | Dermatology |
| 910. தோல் கூற்றியல் | Dematoglyphics |
| 911. தோற்றப்பாட்டியல் phenomenon என்னும் பண்டைய கிரேக்கச் சொல்லின் பொருள் பார்க்கத் தோன்றும் பொருள். புறஞ்சாரா இயல் (Phenomenology2), நிகழ்வியல் (Phenomenology3), நனவு இயல் (Phenomenology4), தொடர்பிலி யியல், தோற்றக் கொள்கை யியல், எனவும் வெவ்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன | Phenomenology (1) |
| 912. தோற்றரவு முரணியல் haunting, ontology ஆகிய இரு சொற்களின் பகுதி இணைப்புச் சொல் Hauntology. | Hauntology |
| 913. நக நோயியல் Unguis என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நகம். இச்சொல்லிலிருந்து உருவானது Onycho. | Onychopathology |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
No comments:
Post a Comment