(தமிழ்ச்சொல்லாக்கம்: 437-446 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 447-452

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

447.  Scientific culture – சாத்திரக்கல்வி

448. Fine Arts – நற்கலை

மநோபிவிர்த்தியினுக்குப் பிரதான சாதனங்களாயுள்ளன முறைப்பட்ட சாத்திரக்கல்வி (Scientific culture)யும் இலக்கியப்பயிற்சியும், நற்கலைத் (Fine Arts) தேர்ச்சியுமேயாம்.

நூல்      :           தமிழ் வியாசங்கள் (1922) பக்கம் -8

நூலாசிரியர்      :           வி.கோ. சூரியநாராயண சாத்திரியார், பி.ஏ.,

449. Foot-Ball – உதைப் பந்தாட்டம்

450. Tennis – சல்லடைப் பந்தாட்டம்

451. Cricket – மரச்சட்டப் பந்தாட்டம்

வேலை செய்ய வேண்டாதவன் உடல்விருத்தி விளையாட்டுக்களாகிய உதை பந்தாட்டம் (Foot-Bail), சல்லடைப் பந்தாட்டம் (Tennis), மரச் சட்டப் பந்தாட்டம் (Cricket) முதலியனவாதல் ஆடல் வேண்டும்.

நூல்      :           தமிழ் வியாசங்கள் (1922) பக்கம் – 7

நூலாசிரியர்      :           வி.கோ. சூரியநாராயண சாத்திரியார், பி.ஏ.,

திரு. அ. சுப்பிரமணிய பாரதி

செந்திலாண்டவன் திருவடி துணை

மார்க்கண்டேயர்

வரகவி. திரு. அ. சுப்பிரமண்ய பாரதி இயற்றியது.

ப. ராமா அண்டு கம்பெனி, திருவல்லிக்கேணி, சென்னை (1923)

452. Mount Road – மலைச் சாலை

திருக்குறள் வீட்டின்பால் – இது பதினான்கு சைவ சித்தாந்த நூல்கட்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பும் விரிவுரையும் ஆக்கியோராகிய திரு. சே.எம். நல்லசாமி பிள்ளை பீ.ஏ. பி.எல், அவர்களால் எழுதப்பட்டது. மலர் -2 பல்கலைக்கழகப் பதிப்பு நிலையம், மலைச்சாலை, சென்னை. 1923, விலை அணா இரண்டு.

நூல்      :           திருக்குறள் வீட்டின் பால் – முதற் பதிப்பு (1923) பக்கம் -1

நூலாசிரியர்      :           சே.எம். நல்லசாமி பிள்ளை, பீ.ஏ., பி.எல்.

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்