(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 601-605 தொடர்ச்சி)
தமிழ்ச்சொல்லாக்கம் 606-610
(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
606. பட்சி சகுனம் – புற்குறி
607. அத்தினாபுரம் – குருநகர்
நூல் : பெருமக்கள் கையறு நிலையும் – மன்னைக் காஞ்சியும் (1927)
நூலாசிரியர் : அ.கி. பரந்தாம முதலியார்
(தென்னிந்திய தமிழ்க் கல்விச்சங்கக் காரியதரிசி)
★
608. அந்தப்புரம் – உள்ளறை
நூல் : நீதிநெறி விளக்கம் மூலமும் விருத்தி உரையும் (1928)
உரையாசிரியர் : சோடசாவதானம் தி. சுப்பராய் செட்டியார்
★
609. சலதரங்கம் – நீர்க்கிண்ணத்திசை
தென் இந்திய மருத்துவ சங்கம்
21.4.1928 ஆம் நாள் மாலை 5 மணிக்குச் சங்க நிலையத்தில் சிறுத்தொண்ட நாயனார் குரு பூசை நடைபெற்றது. சங்கத் தலைவர் பண்டித எஸ். எஸ். ஆனந்தம் அவர்களின் உருவப்படத்தைச் சங்கத்தில் திரு. மதுரை முத்து முதலியார் அவர்கள் திறந்து வைத்தார். அப்போது பண்டிதர் சித்த-
வைத்தியத்திற்காகவும் மருத்துவ குலத்தாருக்காகவும் செய்த தியாகங்களைப் பற்றி விரிவாகப் பேசினார். பின்னர் இசைப்புலவர் ஆர். வி. நாயுடு அவர்களால் யாழ், சுரகெத், சித்தரா, நீர்க் கிண்ணத்திசை (சலதரங்கம்) முதலிய இன்னிசைக் கருவிகள் வாசிக்கப்பட்டன.
– காரியதரிசி
இதழ் : குடியரசு – 5. 5. 1928
★
610. Petrol, Tank – ஆவி எண்ணெய்ப் பெட்டி
காரைக்குடிக்கும் தஞ்சாவூர்க்கும் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திர(மோட்டார்) உந்து ஒன்றுக்குப் ‘பெட்ரோல் டாங்கி’ (ஆவி எண்ணெய்ப் பெட்டி) ஓட்டையாய் ஓடும்போது தெருவெல்லாம் ‘பெட்ரோல்’ சிந்திக்கொண்டே போகிறது. அதைக் கீழே சிந்தவொட்டாமல் ஒரு தொட்டியில் பிடித்துக் கொண்டு வண்டியின் பின்னால் தொடர்ந்து வர ஒர் ஆள் தேவை. சம்பளம் பிடிக்கும் ‘பெட்ரோலில் ‘பாதியைத் தரப்படும். விருப்பமானவர்கள் தெரிவித்துக் கொள்ளவும். விலாசம், ஆசைக்கார அஞ்சப்பன், பாடாவதி பேருந்து ஊழியம்(bus servuce), காரியக்குடி.
இதழ் : ஆனந்த விசய விகடன் (1928, சூன் தாய் – 1 பிள்ளை – 4 பாக்கட் விகடங்கள், பக்கம் – 196
★
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
No comments:
Post a Comment