Showing posts with label மொழி மாற்றுச் சொற்கள். Show all posts
Showing posts with label மொழி மாற்றுச் சொற்கள். Show all posts

Monday, January 1, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1003 – 1009

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 991- 1002 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1003 – 1009

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. இலட்சுமி – மலர்மகள் (1951)
    திருச்சி – டவுன்ஃகால் அரசினர் மகளிர் உயர் நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரியும் திருமதி இலட்சுமி நித்தியானந்தம் எம்.ஏ.பி.டி., அவர்கள் 1951ஆம் ஆண்டு முதல் மலர்மகள் என்னும் பெயரில் கவிதைகள், கட்டுரைகள் எழுதி வந்தவர். இப்போது இவர் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை உறுப்பினர்களுள் ஒருவராகவும் இருக்கிறார்.
  2. எம்பிராய்டரி – பூந்துகிற் கலை
    மனிதனுடைய தேகத்திற்கும் மனத்திற்கும் இன்ப மளிப்பவையெல்லாம். தெய்வத்திற்குப் பொறுக்காது என்பது தலைகால் தெரியாத நம்பிக்கைகளில் ஒன்று. இதையொட்டித்தான், சிறு பெண்கள் புத்தகம் படிப்பதும், பாட்டு, நாட்டியம், சிற்பம், ஒவியம், பூந்துகிற்கலை (எம்பிராய்டரி) இவற்றைக் கற்பது எல்லாம் வீட்டைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிடும் என்று பலர் நினைப்பதும், நாடகம் பார்த்தாலும் சினிமா பார்த்தாலும் மனிதன் கெட்டுப் போவான் என்று நினைப்பதும் இதே மாதிரிதான்.
    நூல் : குட்டிக் கட்டுரைகள் (1951), பக்கம் : 61, 62
    நூலாசிரியர் : வித்துவான் ந. சுப்ரமணியன் எம். ஏ.
  3. Book Post – அவிழ்மடல்
    1952இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நாவலர் நா. மு. வேங்கடசாமி நாட்டார் உருவப்படத்திறப்புவிழா அழைப்பிதழில் Book-post என்ற சொல்லுக்கு ‘அவிழ்மடல்’ என்னும் சொல் உருவாக்கப்பட்டது. அச்சொல்லை முதன் முதலில் உருவாக்கித் தமிழுலகிற்கு உலவவிட்டவர் க. அரசுமணி, இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் புலவர் இவர், பேராசிரியர் முனைவர் அ. சிதம்பரநாதன், பேராசிரியர் (இ)லெப. கரு. இராமநாதஞ் செட்டியாரின் மாணவர்.
    அவிழ்மடல் :சொல்லாக்கம் – புலவர் க. அரசுமணி (1952)
  4. Press – அழுத்தகம்
  5. Capitalism – முதலாண்மை
  6. Brains Trust – புத்தி மண்டலம்
  7. Pension – இளைப்பாறும் சம்பளம்
    நூல் : கூட்டுறவு அல்லது ஐக்கிய வாழ்வு (1952)
    நூலாசிரியர் : அ. அருளம்பலம் (வழக்கறிஞர்,
    ⁠ஐக்கியதீப ஆசிரியர், யாழ்ப்பாணம்)

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, December 25, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 991- 1002

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 984-990 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 991- 1002

  1. இரசீது – பணப் பற்றுச் சீட்டு
    இப்பணியில் ஆர்வமுள்ள அன்பர்களும், பத்திரிகைகளுக்குரியவர்களும் ஆசிரியர்களும் பொதுமக்களிடம் கட்டணம் நன்கொடை திரட்டிப் பெயர் விவரங்களுடன் அளித்துதவினால், அவரவர்கள் கொடுக்கும் பெயர்ப்பட்டியின்படி குருகுலத்தின் பணப் பற்றுச் சீட்டு – இரசீதுகள் அனுப்பப் பெறும்.
    நூல் : தமிழ்ப்பணி (1950), பக்கம் : 54
    நூலாசிரியர் : தமிழகத்தின் தமிழ்ப்பணிக் குழுவினர்
    ⁠(உறையூர் – திருச்சிராப்பள்ளி)

992.பஞ்சபாணம் – ஐந்தம்பு

  1. த்வசம் – கொடி
  2. சமரகேசரி – போர்ச்சிங்கம்

நாளியல் விளக்கம் என்னும் நந்தன வருடத்துச் சுத்த வாக்கிய பஞ்சாங்கம் (1951)
ஆசிரியர் : வித்வான் : சோ. அருணாசல தேசிகர் (சீர்காழி)

  1. Lipstick – உதட்டுச்சாயம்
    உதட்டுச்சாயம் அழிந்து போய் விடுமே என்று காதலனை முத்தமிடத் தயங்குகிறவளைப் பற்றியும், சரிகை வேட்டி அழுக்காய் போய் விடுமே என்று தெருவில் சுவாமி புறப்பாடானபோது சாசுட்டாங்க வணக்கம் செய்யப் பால் மாறுகிறானே பக்தன்! அவனைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறீர்களல்லவா? அந்த வரிசையில் இந்த ஆசாமியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
    நூல் : குட்டிக் கட்டுரைகள் (1951), பக்கம் :34, 35
    நூலாசிரியர் : வித்துவான் ந. சுப்பிரமணியன் எம். ஏ.
  2. பஞ்சாங்கம் – நாளியல் விளக்கம்
    நாளியில் விளக்கம் என்னும் நந்தன வருடத்துச் சுத்த வாக்கிய பஞ்சாங்கம். இது சீர்காழி, வித்துவான் சோ. அருணாசல தேசிகரால் கணிக்கப்பட்டது.
    நாளியல் விளக்கம் என்னும் நந்தன வருடத்துச் சுத்த வாக்கிய பஞ்சாங்கம் (1951)
    ஆசிரியர் : சோ. அருணாசல தேசிகர்
    ( கவிஞர் சுரதா அவர்களின் யாப்பிலக்கண ஆசிரியர் )
  3. அபிலாசை – விழைவு
  4. வியாக்கிரபாதர் – புலிக்கான் முனிவர்
    999.பீதாம்பரம் – பொன்னுடை
  5. அசுட்டாட்சர் – எட்டெழுத்து
  6. இரணியன் – பொன்னன்
  7. இரதவீதி – தேர்மறுகு

நூல் : திருச்சிறுபுலியூர் உலா (1951)
குறிப்புரை : கி. இராமாநுசையங்கார்

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, July 31, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 776 – 785

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  770- 775 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில்

தமிழ்ச்சொல்லாக்கம்  776 – 785

(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

776. சப்தாலங்காரம்          –              சொல்லணி

777. அர்த்தாலங்காரம்      –              பொருளணி

778. உபமாலங்காரம்        –              உவமையணி

779. திருட்டாந்த அலங்காரம்         –              எடுத்துக்காட்டுவமையணி

780. அபூத உவமை             –              இல்பொருளுவமையணி

781. ரூபக அலங்காரம்      –              உருவக அணி

782. சந்தேக அலங்காரம்  –              ஐயவணி

783. வ்யதிரேக அலங்காரம்            –              வேற்றுமையணி

784. பிரதீப அலங்காரம்   –              எதிர்நிலையணி

785. பரிசுர அலங்காரம்    –              கருத்துடை அடைமொழியணி

சங்கர அலங்காரம்          –              கலவையணி

நூல்        :               சிற்றிலக்கண விளக்கம் (1936)

பக்கங்கள்            :               200, 201, 202, 203, 204, 205, 206

நூலாசிரியர்         :               கா. நமச்சிவாய முதலியார்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, July 24, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 770- 775

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 764 -767 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  770- 775

(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

770. பாசியம்       :               விருத்தியுரை

771. எமதர்மன்    :               அறக்கடவுள்

நூல்        :               வைணவ சமய வினாவிடை (1936), பக்கங்கள் 11, 13.

நூலாசிரியர்         :               காரைக்கால் நா. சிரீரீ காந்த ராமாநுசதாசர்

772. கருத்தா – இயற்றுவோன்

உபாதானத்தைக் கோசரிக்கும் அபரோட்சஞானம், செய்யும் இச்சை, முயற்சி இவற்றையுடைமை கருத்தா இயற்றுவோன்)த்தன்மையாம்.

நூல்        :               தருக்க சங்கிரகமும் தருக்க சங்கிரக தீபிகையும் (1936)

மொழி பெயர்ப்பு              :               சி. சுப்பையா சுவாமி

773. ஆதாரம் – பற்றுக்கோடு

அங்ஙனமாயினும் காலம் எல்லாவற்றிற்கும் பற்றுக்கோடு (ஆதாரம்) ஆகையால் எல்லா இலக்கணங்களுக்கும் ஆண்டு அதிவியாப்தி எனின், அற்றன்று, எல்லாவற்றிற்கும் ஆதாரத்தை யுண்டாக்கும் (காலீசு) சம்பந்தத்தினும் வேறான சம்பந்தத்தால் இலக்கணத்திற்கு ஒப்பியிருப்பதால்.

நூல் ; பக்கம் – 15

774. மூலகன்மம் – முதல் வினை

உயிர்கள் ஆணவத்தில் அழுந்திக் கிடக்குங்கால் பல பேதமான ஏற்றத் தாழ்வுள்ள ஆணவ சம்பந்தமுடையதாக இருந்திருத்தல் வேண்டும். அதனோடு இறைவன் அருள் சம்பந்தமும் உடையதாக இருந்திருக்கிறது. இவ்விருவகை சம்பந்தத்தால் உயிர்கள் அனாதியே பாவ புண்ணிய முடையதாயிருந்திருக்கின்றன. இதுவே மூலகன்மம் (மூலகன்மம் – முதல் வினை).

நூல்        :               சித்தாந்தம் பொன்மொழி (சிற்றுரை (1936) பக்கங்கள் -8, 9

நூலாசிரியர்         :               வித்வான் ம. பெரியசாமிப் பிள்ளை

775. பரிசம் – தொட்டால் அறிதல்

உயிர் என்பது யாது? நான் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது எதுவோ அதுவே உயிர். எனது உடல் என்பதனால் உடலினின்று வேறானது உயிர். ஓசை, ஒளி, மணம், சுவை, பரிசம் (தொட்டால் அறிதல்) ஆகிய ஐம்புலன்களையும் மனம் புத்தி இவற்றின் உதவியால் அறிகின்றது எதுவோ அதுவே உயிர்.

நூல் : பக்கம் 15

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Sunday, May 14, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 704-708

 




(தமிழ்ச்சொல்லாக்கம் 699 -703  தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 704-708

(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. 
கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

704. Picture Gallery – ஓவியக்கூடம்

பேர் பெற்ற பெரியாரால் தீட்டப்பட்ட ஓரழகிய ஓவியம் இருந்தது. ஒரு கோடீசுவரன், கலைகளின் அருமை சிறிது மறியாதவன், புகழ் கருதி அதை வாங்கித் தன் ஓவியக் கூடத்தில் (Picture Gallery) வைத்தான். அக்கூடமானது ஒரு கலைஞன் ஆட்சிக்குட்பட்டிருந்ததால், அக்கலைஞன் அவ்வோவியத்தைக் காணுந்தோறும், மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் உற்றான்.

நூல்        :       கட்டுரை மலர் மாலை 1933

கட்டுரை      :       செல்வமும் வறுமையும், பக்கம் – 102

கட்டுரையாசிரியர்       :     சாமி, வேலாயுதம் பிள்ளை, பி.ஏ., எல்.டி.,

⁠(தலைமை ஆசிரியர், கழக (போர்டு) கலாசாலை,

அய்யம்பேட்டை, தஞ்சம் சில்லா)

705. பன்னசாலை – இலை வீடு

காவிரியாற்றின் கரையில் (பன்னசாலை) இலை வீட்டில் சுபத்திரையான, தன் மனையாளோடு பரதன் வாழுநாளில் ஒருநாள் அப்பரதன், அரிய தவஞ் செய்தாலன்றி அருமகவைப் பெறலாகுமா? ஆதலால் இங்கிருந்து யான் என்செய்வேனென்று தன் மனையாளோடு கூறினன்.

நூல்        :     திருத்துருத்திப் புராணம் (1933)

திருவாலங்காட்டுப் படலம், பக்கம் – 17

உரைநடை, குறிப்புரை : ப. சிங்கார வேற்பிள்ளை

(குற்றாலம், கழக (போர்டு ) உயர்தரக்

கலாசாலைத் தலைமைத் தமிழ்ப்பண்டிதர்)

706. Museum – பொருட்காட்சிச் சாலை

707. Scientist – அறிபொருள் வல்லுநர்

நான் ஒரு பெரிய பொருட்காட்சிச் சாலைக்குச் சென்றேன். ஓர் அறிவில்லாப் பணக்காரன், அதன் உயர்வை உணராதவன். அதைத் தனதென்று பெயரிட்டுக் கொண்டிருந்தான். ஆனால், அதன் மேற்பார்வையாளராகிய ஒர் அறி பொருள் வல்லுநர் (Scientist) அதிலுள்ள பொருள்களுள் ஒவ்வொன்றின் அருமையையும் உணர்ந்து, அவற்றின் மெய்ப்பொருள் காண்பதில் கண்ணுங் கருத்துமாய், அவற்றைத் தேடி ஆராய்ந்து அடுக்கி வைப்பதில் தம் வாழ்நாளெல்லாவற்றையும் செலவழித்தவராய் இருந்தார்.

நூல் : கட்டுரை மலர் மாலை, பக்கங்கள் – 101, 102 – 1933

708. Will – இறப்பு ஏற்பாடு

ஓர் அரிய விருந்திற்கு ஓரறிவாளர் வந்திருந்தார்; ஒரு பணக்காரனும் வந்திருந்தன். பணக்காரன் தற்பெருமை வாய்ந்தவனாதலின், அறிவாளர் அவனை அணுகவில்லை. அதனால் மனம் புழுங்கிய செல்வன், மதிவலாரை நோக்கி, யான் ஒரு கோடீசுவரன் என்பது உனக்குத் தெரியாதா? – எனக் கடுங்குரலில் கழறினன். அதற்கவர் மிக்க அமைதியுடன், அவ்வளவுதான் உனது பெறுமானமென்பது எனக்குத் தெரியும் என்றார். இத்தகைப் பெரியாரொருவர், யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் உயரிய உணர்வுடன் அழகுபட எழுதி வைத்திருக்கிற இறப்பு ஏற்பாடு (Will) பின்வருமாறு அமைந்துள்ளது.

நூல்        :         கட்டுரை மலர் மாலை 1993

கட்டுரை       :    செல்வமும் வறுமையும், பக்கம் – 105, 106

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Sunday, April 23, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 688 - 694



(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 683-687)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 688 - 694

(சொல்மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழி மாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

688. பரசுபரம் – ஒருவர்க்கொருவர்

மதங்களின் ஏற்றத் தாழ்வை யுன்னி யானை கண்ட குருடர்போல் பரசுபரம் (ஒருவருக்கொருவர்) கலகம் விளைவித்துக் கொள்ளா நிற்கும் மதசுதர்களென்பான், துயதிது தீயதிது வென்னு மாக்கள்’ என்றும், இவ்வாறு மதசுதர்கள் தத்தம் சித்தாந்தத்திற் கேற்ற தத்துவத்தைக் கொள்ளினும் அவர்கள் யாவருக்கும், விரோதமின்றி அவ்வத் தத் வமாயிலங்குபவன் இறைவன் என்பான் ‘அது வதுவா யிறை யிருக்கும்’ என்றும், அதுபோல் யாமும் மதசுதர்க ளெல்லாரோடும் விரோதமின்றி யொழுகுவோமாக வென்பான், ‘இறை இருக்கும் படியேயா யிருக்க என்றும் கூறினார்.

நூல்        :               சசிவன்ன போதம் (1930) பக்கம் – 9

நூலாசிரியர்         :               காஞ்சி நகர் ஆ. செங்கல்வராய முதலியார்

:               ⁠ (தருக்க வேதாந்த போதகாசிரியர்)

689. பீதாம்பரம் – மின்நூல் ஆடை

நூல்        :               நூல் புள்ளிருக்கும் வேளுர் தேவாரம் (1929)

பதிப்பித்தவர்     :               ச. சோமசுந்தர தேசிகர்

:               ⁠ (வைத்தீசுவரன் கோயில்)

690. ஈசானம்         –              ஆளுதல்

691. தற்புருடம்   –              காத்தல்

692. அகோரம்     –              அழித்தல்

693. வாமதேவம் –              விளக்கல்

694. சத்தியோசாதம்          –              தோற்றுவித்தல்

திருமறைக் காட்டிலே பகவன் என்று ஒருவனிருந்தான். சீரிய ஒழுக்கம் பெற்றவன். சோமன், சூரியன், அக்கினி என்ற மூன்று விழிகளையுடையவராயும், ஈசானம் (ஆளுதல்), தற்புருடம் (காத்தல்), அகோரம் (அழித்தல்), வாம தேவம் (விளக்கல்), சத்தியோ சாதம், (தோற்றுவித்தல்) என்கின்ற ஐந்து முகங்களையுடையவராயும், இராசத வடிவத்திற்றோன்றிய பிரமன், தாமத வடிவிற் றோன்றிய விட்ணு, சாத்துவீக வடிவிற்றோன்றிய உருத்திரன் முதலியவர்களுக்கு முதல்வராக வீற்றிருக்கின்ற சிவபெருமானை, நாடோறும் அன்போடு போற்றும் தன்மையை யுடையவன்.

நூல்        :               திருக்குடந்தைப் புராண வசனம் (1932) பக்கம் – 78

நூலாசிரியர்         :               பு, து, இரத்தினசாமி பிள்ளை

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்