Showing posts with label அகரமுதல.ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள். Show all posts
Showing posts with label அகரமுதல.ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள். Show all posts

Monday, March 14, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1107-1120 – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1081-1106 இன் தொடர்ச்சி)

1107. படிகவியல் 

Crystallography / Crystallology / Crystallogy / Leptology(1)– படிக அமைப்பாய்வியல், படிக அமைப்பியல், படிக இயல், படிகவியல், படிகவுருவியல், பளிங்கியல், பளிங்குவரைபியல், படிக விளக்க ஆராய்ச்சித்துறை எனப் பலவாறாகக் கூறப் படுகின்றன. நாம் சுருக்கமாக உள்ள

படிகவியல் – Crystallography / Crystallology /Crystallogy/ Leptology(1)

என்பதையே பயன்படுத்துவோம்.

Crystallography, Crystallology / Leptology(1) )/ Promorphology

1108. படிமலர்ச்சி அறவியல்

Evolutionary ethics

1109. படிமலர்ச்சி ஒட்பவியல்

Evolutionary epistemology

1110 படிமையியல்

பண்பாட்டுப் படிமையியல் என்பதன் சுருக்கமாகப் படிமையியல் எனப்படுகிறது.

Imagology

1111. படியாக்கவியல்

clone என்றால் இணையான ஒன்றை ஆக்குதல். எனவே, இணையான படியை உருவாக்குவதால் படியாக்கம் என்கின்றனர்.

Clonology

1112. படைப் புவியியல்

Military geology

1113. படைப் பொறியியல்

Military Engineering

1114. பட்டறிவியல்

heuristic என்னும் சொல் உணர்ந்து அறிவதைக் குறிக்கிறது. அஃதாவது துன்பப் பட்டு, இன்னல்பட்டு, அல்லல் பட்டு  உணர்ந்து அறியும் பட்டறிவைக் குறிக்கிறது.

Heuristics

1115. பணிநெறி யியல்

இதுவே மனிதக் காரணிகள் இயல்(Human-factors engineering) என்றும் கூறப்படுகிறது.

பணிச்சூழியல், பணிச்சூழலியல், பணிச்சூழ் இயல், பணித் திறனியல், வினை செயலியல், வேலைச் சூழலியல், வேலைச் சூழியல் எனப் பலவாறாகக் குறிக்கின்றனர். ஓர் அகராதியில் பணி(ச் சூழலியல்) என்பது பண(ச் சூழலியல்)எனத் தவறாகத் தட்டச்சிடப்பட்டு அச் சொல், பிறரால் மேற்கொள்ளப் பட்டுள்ளது. அஃது எழுத்துப் பிழை என்பதறிக.

பணிச்சூழியல் என்பது பணி புரிபவர்களுக்கு ஏற்றவாறு வேலை, துணைக்கருவி, பணியிடம் போன்றவற்றை வடிவமைக்கும் அறிவியல் ஆகும்.

Ergo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் வேலை.

-nomics என்பது முறைமை, ஒழுங்கு, நெறி முதலியவற்றைக் குறிக்கும் பின்னொட்டுச்சொல்.

எனவே, மேற்குறித்த யாவும் சரிதான். என்றாலும் தரப்படுத்தினால்தான் குழப்பம் வராமல் இருக்கும்.  எனவே பணிநெறி தொடர்பான இயலைப் பணிநெறியியல் – Ergonomics எனலாம்.

Ergonomics

1116. பண்டுவ இயல்

Thereology

1117. பண்டுவ நீரியல்

Crenology

1118. பண்டுவக் காலவியல்

Chronooncology(2)

1119. பண்டைய

Palae- என்பதைத்  தொல், பழைய, பண்டைய என மூவகையாகப் பயன்படுத்து கின்றனர். Ancient, Old என்பனவற்றையும் தொல், பழைய, பண்டைய என்றெல்லாம் மாறி மாறிப் பயன்படுத்துகின்றனர்.

Ancient – தொல், Old – பழைய, Palae –  பண்டைய என வரையறுத்துக் கொள்ளலாம். எனவே,

பண்டைய – Palae எனலாம்.

Palae

 

1120. பண்டைய படிமவியல்

 

Paleontology / Palaeontology  தொல்லுயிரியல், பழவூற்றியல், தொல் உயிரியல், தொல்லுயி ராய்வியல், புதைபடிவ ஆய்வியல், புதைபடிவ ஆய்வு நூல், கற்சுவட்டியல், புதைப் படிமவியல், பழமை யிருப்பியல், தொல்லுயிர் ஆய்வியல், தொல் இனவியல், புதைப்படிவு. ஆய்வியல் எனப் பலவாறாகச் சொல்லப் படுகின்றன. Palae–பண்டைய என்னும் சொல்லேற்பு அடிப்படையில்

பண்டைய படிமவியல் – Paleontology / Palaeontology எனலாம்.

Pale என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள்  பண்டைய; on என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உயிரி எனப் பொருள்.

பண்டைய உயிரியல் – Palaebiology

பண்டைய உயிரிகளைப் புதை படிவம் அல்லது படிமம் மூலமே பெரும்பாலும் ஆராய்வதால் பண்டைய படிமவியல் Paleontology / palaeontology என்பதுடன் இதை இணைத்துள்ளோம்.

Palaenotology / Paleontology / Palaebiology

(தொடரும்) 

இலக்குவனார்திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Saturday, February 26, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 855 – 867 இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  850 – 854 இன் தொடர்ச்சி)
855. துருக்கியியல்Turkology
856. துருவார்ப்பியல்Uredinology / Urenology
857. துறைமுகப் பொறியியல்Harbor Engineering
858. தூசியியல் koniology  – துகளியல், தூசுயிர்த் தொடர்பியல்,  தூசி யியல். Konía என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தூசி. எனவே, நாம் சுருக்கமான தூசியியல் – koniology என்பதையே பயன்படுத்தலாம்.Koniology / Coniology
859. தூய இலக்கிய இயல்  hiero- என்னும் பழங்கிரேக்கச் சொல் தூய நிலையையும் அதன் வழித் தூய பொருள்களையும் குறிக்கிறது. தூய பொருள்கள் குறித்த இலக்கியம் திருநிலை இலக்கிய இயல் என முதலில் குறிப்பிட்டிருந்தேன். சுருக்கமாகக் குறிப்பிட இப்பொழுது தூய இலக்கிய இயல்   எனலாம்.Heirology
860. தூய கணிதவியல்Pure mathematics
861. துப்புரவு நுட்பியல்Cleaner Technology
862. தூய பொருளியல்PureEconomics
863. மாசில் நிலக்கரி நுட்பியல்Clean Coal Technology
864. போர்வை யியல்   துரின்(Turin) அல்லது தூரின் இத்தாலியின் வடமேற்குப் பகுதியில் உள்ள வியமாந்தின் தலைநகரம் ஆகும். இந்நகரில் பாதுகாக்கப்படும் நார்மடி(இலினன்), வணக்கம் செலுத்தப்படுகின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் அடக்கத் துணித் துண்டு ஆகும். இதனை உடற்போர்வை, சவப்போர்வை, புனிதப்போர்வை எனப் பலவகையாகக் கூறுகின்றனர். இத்துணியில் பதிந்திருக்கின்ற மனிதனின் உருவச்சாயல் சிலுவையில் அறையுண்டு இறந்து, துணியால் பொதிந்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசுவின் உருச்சாயலாக இருக்கலாம் என்று பலர் கருதுகின்றனர். அறிவியலார், இறையியலார், வரலாற்றாளர், ஆய்வாளர் போன்ற பலதுறை வல்லுநர்கள் நடுவே இதன் காலம், உண்மைத்தன்மை முதலியன குறித்து மாறுபட்ட கருத்துகள் உள்ளன. இதை ஆராயும் துறையே தூரின் நகரப் போர்வையியல். இவ்வாறுதான் முதலில் பிறர்போல் குறித்திருந்தேன். எனினும் சுருக்கமாகப் போர்வையியல் என இப்போது குறித்துள்ளேன். Sindon என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்கள் நார்மடி, போர்வை,  நார்மடிப் போர்வை.Sindonology
865. தூள்மாழை இயல்Powder Metallurgy
866. தெள்ளுப்பூச்சி யியல் பழங்கிரேக்கத்தில் síphōn என்றால் குழல் என்றும் ápteros இறக்கை யற்றவை என்றும் பொருள்கள். Siphonaptera என்பது தெள்ளுப்பூச்சியைக் குறிக்கிறது. Siphonapterology
867. தேநீரியல்   தேயிலையைக் குறிக்கும் சப்பான், சீன எழுத்தான சா என்பதன் மறு ஆக்கமே Tsio என்பது. தேயிலை நீர் >தேநீர்      Tsiology

(தொடரும்) 

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000