(வெருளி நோய்கள் 1206-1210 : தொடர்ச்சி)

தற்பாலுறவு குறித்த பேரச்சம் தற்பாலுறவு வெகுளி.
(தன்+பால்+ உறவு+வெருளி) தற்பால் உறவு கொள்பவர் தற்பால் உறவர்.
இதனை, ஓரினச் சேர்க்கை என்றே அனைவரும் குறிக்கின்றனர். மனித இனம் மனித இனத்துடன்தான் உறவு கொள்ள வேண்டும். ஆணினம், பெண்ணினம் என்பது தவறு. பகுத்தலைக் குறிக்கும் பால் என்பதன் அடிப்படையில்தான், ஆண்பால் முதலான ஐந்து பால்பாகுபாடுகளும் குறிக்கப்பட்டுள்ளன. எனவே, பால் என்பது பாலினத்தைக் குறிக்கும். எனவே பால் அடிப்படையில் குறிப்பதே ஏற்றதாக இருக்கும். ஆண்பாலினர் ஆண்பாலினருடனும் பெண்பாலினர் பெண்பாலினருடனும் சேர்க்கை / உடலுறவு கொள்வதை – ஒரு பாலினர் தன்னுடைய பாலினருடன் உறவு கொள்வதைத் தற்பாலுறவு என்று சொல்லலாம்.
சிலர் தற்பாலுறவும் பிறர்பாலுறவும் கொள்பவர்களாக உள்ளனர்.
homosexualphobia என்பது சுருக்கமாக homophobiaஎன அழைக்கப்படுகிறது.
00

தனிப்பாதை (drive way or drive in)குறித்த வரம்பற்ற பேரச்சம் வண்டிப்பாதை வெருளி.
தனிப்பாதை என்றால், தனியார் மனை எல்லைக்குள் செல்லும் பாதை அல்லது உணவகங்களுக்குள் ஊர்தி வந்து செல்ல(அதிலிருந்தே உணவருந்துவதற்காக) அமைக்கப்படும் பாதை, ஊர்தியில் அமர்ந்தவாறே திரைப்படம் பார்ப்பதற்கு அமைக்கப்படும் பாதை, எனத் தனியருக்கு உரிமையான பாதை. வண்டிப்பாதை என்றால் பொதுவான பாதையைக் குறிக்கும். தனியர் பாதையைக் குறிக்காது. எனவே, வண்டிப்பாதை எனக் குறிக்கவில்லை.
00

தனிமைபற்றிய காரணமற்ற பேரச்சம் தனிமை வெருளி.
“தனிமையிலே இனிமை காண முடியுமா” என்ற திரைப்பாடலை அறிவோம்.
தனிமை தேவையற்ற சிந்தனையையும் கவலையையும் உருவாக்கும். தனிமையை நல்ல எண்ணங்களிலோ நல்ல செயல்களிலோ திருப்பாமல் இருப்பதுதான் கவலையை உருவாக்குகிறது.
mono என்னும் பழங்கிரேக்க முன் ஒட்டுச் சொல் யாருமற்றுத் தனித்து இருத்தலைக் குறிக்கிறது.
00

தனித்து வாழ்வது தொடர்பில் ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் தனியர் வெருளி.
தவறானவரைத் திருமணம் செய்துவிடும் அச்சத்தில் திருமணமாகாமல் தனித்து இருப்பது குறித்து வரும் மிகையான பேரச்சம் கொள்வோரும் உள்ளனர்.
திருமண வெருளியுடன் தொடர்புடையது இது. தன் மனம் ஒப்பானவருடன் அல்லது தவறானவருடன் திருமணம் நிகழ்ந்து மன அளவில் தனித்து விடப்படுபவரும் இவ்வெருளிக்கு ஆளாகிறார்.
பிறரால் விரும்பப்படாதவர்களாகவும் ஒதுக்கப்பட்டவர்களாகவும் எண்ணிக் கவலைப்பட்டு மிகையான பேரச்சத்தில் மூழ்குவது.
நுப்பிடியாலிசு(nūptiālis) என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் மண வாழ்க்கைக்குரிய என்பதாகும். a எதிர்மறை முன்னொட்டு. இச்சொல்லில் இருந்து உருவான Anupta என்னும் சொல் மணவாழ்க்கையில் இருந்து விலிகித் தனியராய் இருப்பதைக் குறிக்கிறது.
00