(வெருளி நோய்கள் 1233 -1236 : தொடர்ச்சி)

தார்பக்கு/இசுடார்பக்கு காழநீர் நிறுவனம்(coffee company) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தார்பக்கு வெருளி.
தார்பக்கு/இசுடார்பக்கு, வாசிங்டனில் 1971 இல் தொடங்கப்பட்ட நிறுவனம் . இன்றைக்கு உலகத்தில் 30,000 இற்கு மேற்பட்ட இடங்களில் இதன் காழநீர் மனைகள் உள்ளன.
00

தாவீது இரீடு கதைப்பாத்திரம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தாவீது இரீடு வெருளி.
தாவீது இரீடு பழுப்பு நிறமுள்ள எறும்புத்தின்னி; உணவாக்குக் கலைஞர்.
00

தாழ் கூரை குறித்த வரம்பற்ற பேரச்சம் தாழ் கூரை வெருளி.
cellar என்னும் இலத்தீன் சொல்லிற்கு அடிநிலம் எனப்பொருள். இங்கே அடி கூரையை – தாழ் கூரையைக் குறிப்பிடுகிறது.
00

தாள் துண்டிப்பிக் கருவி(paper shredder) குறித்த வரம்பற்ற பேரச்சம் தாள் துண்டிப்பி வெருளி.
கமுக்கமான அல்லது முடிந்து போன முதன்மை ஆவணங்களைக் கந்தலாக்கித் துகள்களாக அழிப்பதற்காகப் பயன்படுத்தும் இயந்திரமே, தாள் துண்டிப்பி வெருளி. தவறுதலாகத் தேவையான ஆவணத்தை அழித்து விட நேரும் என்ற கவலையிலும் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00