06 March 2026 அகரமுதல
(வெருளி நோய்கள் 1221-1224 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1225-1228
- தாத்தா, பாட்டி வெருளி – Pappoudephobia
தாத்தா, பாட்டி தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தாத்தா, பாட்டி வெருளி.
தாத்தா பாட்டிகளின் கண்டிப்பைத் தவறாகப் புரிந்து கொண்டு பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
- தாமி திபில் வெருளி – Tommytibblephobia
தாமி திபில்(Tommytibble) என்னும் அசைவூட்டப் படப்பாத்திரத்தின் மீதான அளவுகடந்த பேரச்சம் தாமி திபில் வெருளி.
தாமி திபில்(Tommy Tibble) திம்மி திபில்(Timmy Tibble) ஆகிய இரட்டையர்களுள் தாமி திபில் ஒருவர். இவர்கள் திபில்கள் இரட்டையர்கள் அல்லது திபில்கள என அழைக்கப்படுகின்றனர்.
00
- தாம் செறி வெருளி – Tomjerrophobia
தாம் பூனை, செறி சுண்டெலி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தாம் செறி வெருளி.
தாம், செறி ஆகிய இரு கதைப்பாத்திரங்கள் குறித்த அளவுகடந்த பேரச்சம்.
00
- தாயுடன் பிறந்தோர் வெருளி – Mibliphobia
தாய் மாமா, பெரியம்மா, சித்தி ஆகியோர் மீதான அளவுகடந்த பேரச்சம் தாய் உடன்பிறப்பு வெருளி.
மாமன்மார், பெரியம்மா, சித்திமார் நெறியுரைகள் குறித்து எரிச்சலுற்றுப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment