(வெருளி நோய்கள் 1229 -1232 : தொடர்ச்சி)

தாயின் உடன்பிறந்தாள்/பெரியன்னை, சித்தி மீதான அளவுகடந்த காரணமற்ற பேரச்சம் தாய் உடன்பிறந்தாள் வெருளி.
தமிழ் மரபிற்கிணங்கத் தாயின் தமக்கையைப் பெரியம்மா அல்லது பெரியன்னை என்கிறோம். தாயின் தங்கையைச் சித்தி அல்லது சிற்றன்னை என்கிறோம். சிலர் சின்னம்மா என்று சொன்னாலும் வழக்கத்தில் சின்னம்மா என்பது தந்தையின் இரண்டாம் மனைவியைக் குறிப்பதாக உள்ளது. ஆனால் ஆங்கிலத்தில் aunt என ஒரே சொல்தான். auntie, aunty எனவும் பேச்சு வழக்கில் குறிப்பிடுவர். தந்தையின் உடன்பிறந்தாளுக்கும் அதே சொல்தான். ஆனால், தமிழில் தாயுடன் பிறந்த பெண்ணாயின் பெரியம்மா, சித்தி என்றும் தந்தையுடன் பிறந்த பெண்ணாயின் அத்தை என்றும் வெவ்வேறு சொற்களால் குறிப்பிடுவோம். உறவுமுறைச் சிறப்பைத் தமிழ்ச்சொற்கள் உணர்த்துகின்றன.
00

தாயாகிவிடுவோமோ என்ற கவலையால் ஏற்படும் அளவுகடந்த காரணமற்ற பேரச்சம் தாய் வெருளி.
புதின ஆசிரியர் தோரிசு இலெசிங்கு(Doris Lessing), படைத்த பெண் கதைப்பாத்திரங்கள் குறித்து இலின் சுகெனிக்கு(Lynn Sukenick) திறனாய்வுக் கட்டுரை எழுதினார். அதில் இத்தகைய சொல் பயன்பாட்டை இவர் குறிப்பிட்டுள்ளார்.

தாயின் கண்டிப்பால் தாய் மீது ஏற்படும் அளவுகடந்த பேரச்சமும் தாய் வெருளியாகும்.
00

தாரியா கதைப்பாத்திரம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தாரியா வெருளி.
எம்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அசைவூட்டப்படம் ஒன்றின்(Beavis and Butt-Head) கதைப்பாத்திரமே தாரியா மார்கெண்டாராஃபர்(Daria Morgendorffer)

00

  1. தாரை வெருளி – Jettophobia
    தாரை வானூர்தி (jet aircraft, jet)தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தாரை வெருளி.
    தாரை என்பது, இசைக்கருவி, போர்க்கருவி, நீள் ஊது குழல், நீரொழுக்கு, நீர் வீச்சு கருவி, கூர்மை முதலான பல பொருள் ஒரு சொல். இருப்பினும் இங்கே தாரை வானூர்தியைக் குறிக்கிறது.
    00