Showing posts with label மாெழி மாற்றுச் சொற்கள். Show all posts
Showing posts with label மாெழி மாற்றுச் சொற்கள். Show all posts

Monday, February 12, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1061-1065

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1048-1060 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1061-1065

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. இண்டர்வியூ – நேர்காணல்
    வினா – விடை என்ற இண்டர்வியூ முறையை ஆங்கிலேயர் அறிமுகப்படுத்தினர். அதனை நேர்காணல் என்னும் தனித் தமிழ்ச் சொல்லால் முதன் முதல் குறிப்பிட்டவர் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார்தான்
    பாபநாசம் குறள்பித்தன்
    நூல் : முதன் முதலாக உலகில் நடந்த நிகழ்ச்சிகள், திசம்பர் 1992
    ★
  2. கவிராத்திரி – பாடல் இரவு
    தமிழமுத மன்றத்தின் சார்பில், கவிஞரும் மருத்துவருமாகிய ச. அறிவுடை நம்பி அவர்களது மருத்துவ மனையில் 7.11.1992 அன்று மாதாந்திரப் பாடல் இரவு (கவிராத்திரி) சிறப்பாக நடைபெற்றது.
    இதழ் : முத்தமிழ் முரசு, 21.12.92
    ஆசிரியர் : மு. சுப. கருப்பையா, தஞ்சை
    ★
  3. Treadle – மிதித்தியக்கும் அச்சுப் பொறி
    1933இல் கல்விக் கழகத்துக்கு மிதித்தியக்கும் அச்சுப் பொறி (Treadle) ஒன்று வாங்கி ஒர் அச்சகம் நிறுவப் பெற்றது.
    இதழ் : செந்தமிழ்ச் செல்வி, மார்ச்சு 1973, சிலம்பு : 47; பரல் – 7 பக்கம் : 366
    கட்டுரையாளர் : வ. சுப்பையா பிள்ளை
    ★
  4. Complimentary Copy- அன்பிதழ்
    இதழ் : விடுதலை, நாள் :10, 7. 2001
    ★
  5. செராக்(கு)சு – ஒளியச்சு
    மு. இளங்கோவன்
    தமிழ் ஆராய்ச்சியாளர்
    பாரதிதாசன் பல்கலைக் கழகம்
    திருச்சிராப்பள்ளி – 620 024
    (6. 12, 95 – அவர் எழுதிய கடிதத்திலிருந்து)

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, August 28, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 808 – 813

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 797-807 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 808 – 813

(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

808. புட்பாவதி – மலர் முகத்தம்மையார் (1938)

பேராசிரியர் மயிலை. சிவமுத்து அவர்களுக்கு முன் பிறந்த குழந்தையின் பெயர் புட்பாவதி என்பது. இந்த அம்மையார் இன்று மலர் முகத்தம்மையார் என்று அழைக்கப்படுகிறார். இவர் 1938 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு அறப்போரில் ஈடுபட்டுத் தமிழ் மொழிக்காகச் சிறை சென்றவர்.

தமிழ்நெறிக் காவலர் பேராசிரியர் மயிலை சிவமுத்து நினைவு மலர்

மாணவர் மன்ற வெளியீடு, சென்னை.

★

809. சலசாட்சி – தாமரைக்கண்ணி (1938)

சலசாட்சி என்பவர் தமிழறிஞர் வல்லை பாலசுப்பிரமணியம் அவர்களின் துணைவியாராவார். சலசாட்சி என்னும் வடமொழிப் பெயரை நீக்கி, தூய தமிழில் தாமரைக் கண்ணி என்று பாற்றியமைத்தவர் பேராசிரியர் மயிலை சிவமுத்து அவர்களாவார். திருமதி. தாமரைக் கண்ணி அம்மையார் 1938 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு அறப்போரில் ஈடுபட்டுத் தமிழ்மொழிக்காகச் சிறைசென்றவரின் தெரியவராவார்.

★

810. உருத்திரம் – பெருஞ்சினம்

பொருள் என்பது யாதோ எனின், அகத்திற்கும் புறத்திற்கும் பொது என்பது. அகத்தைச் சார்ந்துவரும் பொருளெல்லாம் அகப்பொருள் எனப்படும். புறத்தைச் சார்ந்து வரும் பொருளெல்லாம் புறப்பொருள் எனப்படும். இச்சுவை வீரம், அச்சம், இழிவு, வியப்பு, காமம், அவலம், உருத்திரம் (பெருஞ்சினம்), நகை, சாந்தம் என ஒன்பதாகும்.

நூல்      :           அகப்பொருளும் அருளிச்செயலும் (1938), பக்கம் : 5

நூலாசிரியர்       :           பிரபந்த வித்துவான்,

                        திருப்புறம்பயம் இராமசுவாமி நாயுடு

★

811. காந்தர்வ மணம்- களவொழுக்கம்

உலகின்கண் எல்லாச் சமயத்தாராலும், உலகத்தாராலும் வெறுக்கப்பட்ட களவொழுக்கத்தை எதற்காகக் கற்றல் வேண்டும். இங்குக் கூறும் களவொழுக்கம் (காந்தர்வமணம்) தீமை செய்யாது வீடு பயப்பது ஒன்றாகும்.

நூல் : பக்கம் : 19

★

812. வெள்ளை வாரணன் – வெண் கோழி (1938)

★

813. கிருட்டிணசுவாமி – வல்லிக்கண்ணன் (1535)

1930களிலும், 40களின் ஆரம்ப வருடங்களிலும், தேசீய உணர்ச்சியோடு விடுதலை முழக்கம் செய்யும் வேகமான எழுத்துகளை வெளியிடும் பத்திரிகைகள் பல தோன்றி, நடந்து, மறைந்து கொண்டிருந்தன. (உ)லோகசக்தி, பாரதசக்தி, என்ற பத்திரிகைகள் அப்படிப்பட்டவை.

அவற்றில் நான் கதைகளும், உணர்ச்சிகரமான கட்டுரைகளும் பாடல்களும் நிறையவே எழுதினேன், பலரது கவனத்தையும் அவை ஈர்த்தன.

அந்தச் சந்தர்ப்பத்தில் தான் எனக்கு ஒரு புனைபெயர் தேவை என உணர்ந்தேன். அதுவரை ரா. சு. கிருட்டிணசுவாமி என்றும், ராசுகி, என்றும்தான் எழுதிக் கொண்டிருந்தேன்.

கவிபாரதியார் தன் நண்பர் குவளையூர் கிருட்டிணமாச்சாரி என்ற பெயரைக் குவளைக் கண்ணன் என மாற்றியிருந்தது என் மனத்தில் பதிந்திருந்தது. அதே போல என் சொந்த ஊரான இராசவல்லிபுரத்தில் உள்ள வல்லியையும் கிருட்டிணசுவாமி என்பதைக் கண்ணன் என மாற்றி அதையும் இணைத்து, வல்லிக்கண்ணன் என்று எனக்கு நானே சூட்டிக் கொண்டேன்.

நூல்      :           வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்

எடுத்து எழுதியவர்        :           ஏந்தல் இளங்கோ

இதழ்    :           தாய் – 22. 6. 1986

★

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்