ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1707-1711 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1701-1706 இன் தொடர்ச்சி)
1707. வாழ்க்கைப் புள்ளியியல் இன்றியமையாத புள்ளி விவரங்கள், உயிர்ப் புள்ளியியல், உயிர்ப் புள்ளிவிவரவியல், பிறப்பு இறப்பு விவரங்கள், உயிர்நிலைப் புள்ளிவிவரம், குடிவாழ்க்கைப் புள்ளியியல், குடிசனப் புள்ளிவிபரம், சனன மரணக் கணக்கு, சனங்களின் பிறப்பிறப்புப் பதிவுப் புத்தகம், பிறப்பிறப்பு விபரங்கள், பிறப்பிறப்புப் புள்ளிகள், பிறப்பு இறப்பு விவரங்கள், பிறப்பு-இறப்புப் புள்ளி விவரங்கள், முதன்மைப் புள்ளிவிவரங்கள், வாழ்க்கைப் புள்ளிவிபரம், வாழ்க்கைப் புள்ளிவிவரவியல் எனப் பலவாறாகக் கூறப் படுகின்றது. உயிர், உயிர் நிலை, முதலானவற்றைக் கையாள் வதை விட பிறப்பு, இறப்பு முதலானவற்றின் புள்ளி விவரங்களை ஆராய்வதை வாழ்க்கைப் புள்ளி விவரயியல் என்று வாழ்க்கையைக் குறிப் பிடுவது பொருத்தமாக உள்ளது. இதனைச் சுருக்கமாக வாழ்க்கைப் புள்ளியியல் – Vital Statistics என இங்கே தரப்பட்டுள்ளது. ஆடை அளவீடுகளையும் நலவாழ்விற்கான உடலியல் புள்ளிவிவரங்களையும் Vital Statistics (2), Vital Statistics (3) என்கின்றனர். | Vital Statistics |
1708. வானஞ்சலியல் | Aerophilately1 |
1709. வானஞ்சல் தலையியல் | Aerophilately2 |
1710. வானலை யியல் | Rf Engineering |
1711. வானகஉயிரி யியல் | Astrobiology |
(தொடரும்)
No comments:
Post a Comment