(தமிழ்ச்சொல்லாக்கம் 208-212தொடர்ச்சி)
(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
213. GLAND- உமிழ்நீர்க் கோளம்
கீழ்த்தாடை என்பு, மேல்தாடை என்பு இவற்றில் உமிழ்நீர்க் கோளங்கள் ஒவ்வொன்றிலும் மும்மூன்றாக அணைந்திருக்கின்றன.
நூல் : சரீரவியவசேத சாத்திரம் என்னும் அங்க விபாக சுகரண வாதம் (1906) பாகம் 15
நூலாசிரியர் டி. ஆர். மகாதேவ பண்டிதர்
★
214. தத்தம் – கொடுக்கப்பட்ட பொருள்
215. சூதிகாகாரம் – பிள்ளை பெறும் வீடு
216. திகுதிகு – சுடுகடு
நூல் : சிரீ பாகவத தசமசுகந்த கீர்த்தனை (1907)
நூலாசிரியர் அனந்த பாரதி சுவாமிகள்
★
217. மீமாம்சை – ஆராய்ச்சி
பூர்வ மீமாம்சை தருமமீமாம்சை யெனவும், உத்தரமீமாம்சை பிரம மீமாம்சை யெனவும் சொல்லப்படும். எதில் தருமத்தின் மீமாம்சை இருக்கிறதோ அது தரும மீமாம்சையாம். எதில் பிரமத்தின் மீமாம்சை யிருக்கிறதோ அது பிரமமீமாம்சையாம். மீமாம்சை – ஆராய்ச்சி
நூல் : வேதாந்த சூளாமணி மூலமும் உரையும் (1908) சிறப்புப் பாயிரம், பக்கம் – 17
விரிவுரை : பிறைசை அருணாசல சுவாமிகள் (திருத்துருத்தி, இந்திரபீடம் – கரபாத்திர சுவாமிகள் ஆதீனம்)
குறிப்புரை: கோ. வடிவேலு செட்டியார் (சென்னை இந்து தியலாசிகல் காகஇசுகூல்தமிழ்ப் பண்டிதர்)
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
No comments:
Post a Comment