(தமிழ்ச்சொல்லாக்கம் 111-117 தொடர்ச்சி)
(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
118. ஆண்டிமொனி – நிமிளை
அச்செழுத்து எப்படி உண்டாகிறது?
நாலு பங்கு ஈயத்துக்கு ஒரு பங்கு நிமிளை (ஆண்டிமொனி) கூட்டுவார்கள்.
நூல் : மூன்றாம் சுடாண்டர்டு புத்தகம் – பதப்பொருளும் வினா விடையும் (1897)
நூலாசிரியர் : எத்திராச முதலியார்.
★
119. அம்போதரங்கம் – நீரின் அலை
அம்போதரங்கம் (நீரின் அலை) அல்லது அசையடி – இது கடல் அலைகள்போல அடிகள் அளவடியாய்ப் பெருத்தும், சிந்தடியாய்ச் சிறுத்தும், குறளடியா யதனினும் சிறுத்தும் தாழிசைக்குப் பின் வருவது; நாற்சீராலாகிய ஈரடியால் இரண்டும், ஒரடியால் நான்கும், முச்சீரடியால் எட்டும், இரு சீரடியால் பதினாறுமாக வருவது சாதாரணம்.
நூல் : தமிழ் இலக்கணத் தெளிவு (1897) பக். 273.
நூலாசிரியர் : சோசப், பி.ஏ., முதுநிலை விரிவுரையாளர், (இ)ராசாமுந்திரி கல்லூரி.
★
120. அனுடம் – பனை
121. கேட்டை – துளங்கொளி
122. ஆயிலியம் – கட்செவி
123. மிருகசீரிடம் – மான்றலை
மேற்படி நூல் : பக்கம் – 334.
(குறிப்பு : இச்சொல்லாக்கங்கள் அடிக்குறிப்பில் உள்ளவை)
★
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
No comments:
Post a Comment