(தமிழ்ச்சொல்லாக்கம்  129-132 தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

133. பட்சி

பட்சி – பட்சமுடையது (பட்சம் – இறகு)

நூல் : குசேலோபாக்கியாநம் மூலமும் உரையும் (1904)

நூலாசிரியர் : வித்துவான் – காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு

134. ஆறு பகை

காமம் – ஒரு பொருளின் மீது செல்லும் விருப்பம், குரோதம் – அப்பொருள் கிடையாத போதுண்டாகும் கோபம், உலோபம் – தானும் அநுபவிக்காமல் பிறர் கொடாமலிருக்கும் குணம், மோகம் – மாதர் மீதுண்டாகுமிச்சை, மதம் – செருக்கு, மாற்சரியம் – பொறாமை, இவ்வாறும் பிறவிக்கேதுவாய், ஆன்மாக்களுக்குத் துன்பம் விளைத்தலால் இவற்றை ஆறு பகை என்றார். இவற்றை வடநூலார் அரிசட் வர்க்கம்’ என்பர்.

மேற்படி நூல் : பக்கம் 105, 106

135. மீகான்

மீகான் – கப்பலோட்டுகிறவன். இச்சொல், மேலிடத்துள்ளானெனப் பொருள்படும். மீயான் என்பதன் மரூஉ வென்றாயினும், மீகாமன் என்பதன் விகாரமென்றாயினும், மியான் என்ற பெயர் பகுதி விகுதிகளினிடையே குச்சளியை பெற்றதென்றாயினும் கொள்க.

மேற்படி நூல் :

136. Parliment – பாராளுமன்று

ஒராத காட்சி பல உண்ட கண்கள் தேக்கு; மந்தப் பாராளு மன்று தனைப்

பார்த்த கண்ணோ தேக்காது.

நூல் : விவேக ரச வீரன் கதை (1904)

நூலாசிரியர் : பாலசுப்பிரமணிய பிள்ளை

137. Train – ஆவிவண்டி

தெம்சு நதிக்கீழ் ஆவி வண்டி

சேர்கின்ற தாங்கிலரின்

வம்சப்பேர் எக்காலும்

மாறா அடையாளம்.

ஆவிக்கப்பல் மேலோட

ஆவி வண்டி கீழோட

மேவச் செய் ஆங்கிலர்வி

சித்திரத்தை யாதுரைப்பேன்?

நூல்⁠ :விவேக ரச வீரன் கதை (1904)

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச் சொல்லாக்கம்