Showing posts with label இலக்குவனார் திருவள்ளுவன். Show all posts
Showing posts with label இலக்குவனார் திருவள்ளுவன். Show all posts

Tuesday, June 7, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1713-1719 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1712 இன் தொடர்ச்சி)
713. வானகத் தொல்லியல்Astroarcheaology
1714. வானக
Astro – வான், விண், அசுரோ, சோதிடம், உடு எனக் கூறப்படுகின்றன. அசுரோ என்பது ஒலிபெயர்ப்புச் சொல். சோதிடம் தமிழ்ச்சொல்லல்ல. உடு என்பதற்கு விண்மீன் என்பது பொருள். எனவே, இந்த இடத்தில் உடு என்பது பயன்படுத்தப்பட வேண்டா. வானின் அகத்தே உள்ள பொருள்கள் என்னும் பொருளில் வானகம் எனலாம். முன்னொட்டுச் சொல்லிற்கு வானக  – Astro என்று குறிக்கலாம்.    
Astro  
1715. வானிலையியல்  
Neteorology – வானியல், வானிலையியல் எனச் சில அகராதிகளில் குறிக்கப் பெற்றுள்ளன. Meteorology என்னும் சொல் எழுத்துப் பிழையாக  Neteorology என்று ஒன்றில் இடம் பெற்று அதுவே பிற அகராதிகளிலும் பதிவாகி யுள்ளது. வானம் என்பதைப் புவிக்கு வெளியிலுள்ள பகுதி எனக் கருதிப், புவிவெளியியல் என்று சொல்வோரும் உள்ளனர். வானிலுள்ள கோள்கள், உலவிகள், உழலிகள் முதலான வான்பொருள்கள் குறித்தவற்றை வானியல் எனலாம். வானில் அமையும் மழை, வெயில், தட்ப வெப்பம் முதலான நிலைகளைப்பற்றிய அறிவியல் வானிலையியல் என்பது பொருத்தமாக இருக்கும்.   இதனைக் காலநிலை யியல் என்கின்றனர் சிலர். இவ்வாறு கூறுவது  Climatology  என்ற எண்ணத்தை விளைவித்துக் குழப்பத்தை ஏற்படுத்தும். வானிலையால் அமையும் காலநிலைச் செயல்பாடுகள் பற்றிய ஆய்வு இது. எனவே, காலஅமைப்பியல் எனலாம் எனக் கருதிப் பார்த்தோம். இதைவிட நேரடியாக வானிலையியல் என்பதே ஏற்றதாக இருக்கும் என்பதால் வானிலையியல் எனக் குறித்துள்ளோம்.
Meteorology
1716. வானக இயற்பியல்Astrophysics
1717 வானிலை ஒளியியல்Meteorological Optics
1718. வானூர்தி வித்தை
aerial-acrobatics என்னும் இரு சொற்களின் இரு பகுதி ஒட்டுச்சொல்.
Aerobatics
1719. வானூர்திப் பொறியியல்Aeronautical Engineering       +++++++++      

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Friday, June 3, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1712 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல






(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1707-1711 இன் தொடர்ச்சி)

1712. வானகவியல்  
Astronomy – வானியல், வானசாத்திரம், ககோளசாத்திரம், வான நூல், வான வியல், வானவியல் வான நூல், வானூல், வான்கோள ஆய்வியல், விண்ணியல், கணிதசாத்திரம், சோதிட நூல், காலக்கணிதம், காலக் கணனம்பற்றிய வானசாத்திரம், சோதிசாத்திரம் எனக் கூறப்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இவற்றுள் வானியல் என்பதையும் கணனம்(சோதிடம்) என்பதையும் Astronomy குறிப்பிடுகிறது. Ástron என்னும் கிரேக்கச் சொல்லுக்கு வானிலுள்ள பொருள்கள் எனப் பொருள். அஃதாவது, கோள்கள், நட்சத்திரங்கள் முதலியவை. Astrologia என்னும் இலத்தீன் சொல்லிற்கும் அதேபொருள்தான். எனினும் நடைமுறையில் வான்பொருள்கள் கூறுவன எனப் பொருளாகிறது. வான்பொருள்களைப்பற்றிய ஆராய்ச்சி வானியல் – Astronomy. வான் பொருள்கள் நமக்குக் கூறுவதாகக் கருதப்படும் நன்மை தீமைகள் குறித்த ஆராய்ச்சி கணனவியல் – Astrology இவற்றுள் வானியல்  – Astronomy(1) கணனவியல் – Astronomy (2) என இரண்டும் பொருந்தி வருவனவாக உள்ளன. ஆனால், Meteorology என்பதையும் வானியல் என்றே அனைவரும் கையாள்கின்றனர். (நாம் வானிலையியல் எனக் குறிக்கிறோம்.) Astronomy வானகத்தில் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள் முதலியவற்றைப்பற்றி விவரிக்கும் துறை. எனவே, வானியலில் – Meteorology   இருந்து வேறு படுத்த வானகவியல் எனலாம். அதுபோல்,  Astrology என்பதைக் கணனவியலாக வரையறுத் துள்ளதால் Astronomy என்பதைக் கணனவியலாகப் பயன் படுத்துவதைத் தவிர்க்கலாம்.   வானகவியல் என்று மட்டுமே குறிக்கலாம்.
Astronomy(1)

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Wednesday, June 1, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1707-1711 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1707-1711 : இலக்குவனார் திருவள்ளுவன்



(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1701-1706 இன் தொடர்ச்சி)

1707. வாழ்க்கைப் புள்ளியியல்  
இன்றியமையாத புள்ளி விவரங்கள், உயிர்ப் புள்ளியியல், உயிர்ப் புள்ளிவிவரவியல், பிறப்பு இறப்பு விவரங்கள், உயிர்நிலைப் புள்ளிவிவரம், குடிவாழ்க்கைப் புள்ளியியல், குடிசனப் புள்ளிவிபரம், சனன மரணக் கணக்கு, சனங்களின் பிறப்பிறப்புப் பதிவுப் புத்தகம், பிறப்பிறப்பு விபரங்கள், பிறப்பிறப்புப் புள்ளிகள், பிறப்பு இறப்பு விவரங்கள், பிறப்பு-இறப்புப் புள்ளி விவரங்கள், முதன்மைப் புள்ளிவிவரங்கள், வாழ்க்கைப் புள்ளிவிபரம், வாழ்க்கைப் புள்ளிவிவரவியல் எனப் பலவாறாகக் கூறப் படுகின்றது.   உயிர், உயிர் நிலை, முதலானவற்றைக் கையாள் வதை விட பிறப்பு, இறப்பு முதலானவற்றின் புள்ளி விவரங்களை ஆராய்வதை வாழ்க்கைப் புள்ளி விவரயியல் என்று வாழ்க்கையைக் குறிப் பிடுவது பொருத்தமாக உள்ளது. இதனைச் சுருக்கமாக வாழ்க்கைப் புள்ளியியல் – Vital Statistics என இங்கே தரப்பட்டுள்ளது. ஆடை  அளவீடுகளையும் நலவாழ்விற்கான உடலியல் புள்ளிவிவரங்களையும் Vital Statistics (2), Vital Statistics (3) என்கின்றனர்.
Vital Statistics  
1708. வானஞ்சலியல் Aerophilately1
1709. வானஞ்சல் தலையியல்Aerophilately2
1710. வானலை யியல்Rf Engineering
1711. வானகஉயிரி யியல்Astrobiology  

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Sunday, May 29, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1701-1706 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல





(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1696 – 1700 இன் தொடர்ச்சி)

1701. வாய் நோயியல் – Oral Pathology / Stomatology

stóma என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் வாய்.

1702. வாய், முகத்தாடைநோயியல் – Oral & maxillofacial pathology

1703. வாய்க் கதிரியல் – Oral radiology

1704. வார்ப்பக நுட்பியல் – Foundry technology

1705. வார்ப்பகப் பொறியியல் – Foundry Engineering

1706. வாலில்லாக் குரங்கியல் – Pithecology
píthēkos என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் வாலில்லாக் குரங்கு.
சிலர் மனிதக் குரங்கியல் என்று கூறுகின்றனர். பேச்சு வழக்கில் உள்ளவாறு சொல்வதை விட வாலில்லாக் குரங்கியல் என்பதுதான் சரியாக இருக்கும்.

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Friday, May 27, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1696 – 1700 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல


(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1691 – 1695 இன் தொடர்ச்சி)

1696. வாந்தியியல்
Eméō> emeto என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் வாந்தி எடுத்தல். 
Emetology 
1697. வாயு
Aero  வாயு, வான், காற்று, வான, வானூர்தி, விமான என்னும் பொருள்களில் பயன்படுத்துகிறது. காற்று என்பதையும் காற்று வழங்கும் வானத்தையும் வானத்தில் பறக்கும் வானூர்தி யையும் இடத்திற்கேற்பப் பயன்படுத்தலாம். வாயு என்பதும் தமிழ்ச்சொல்லே. வாய் என்றால் நிறைதல் என்றும் பொருள். எங்கும் நிறைந்துள்ளதால் காற்று என்பதற்கு வாயு என்றும் பெயர் வந்தது. Air – காற்று என்றும் Aero – வாயு என்றும் வகைப்படுத்திக் கொள்ளலாம். ஒரே பொருள்தான் என்றாலும் தனித்தனிப் பயன்பாட்டிற்கு இவ்வகைப்பாடு உதவும்.
Aero
1698. வாயு இயங்கியல்Aero dynamics
1699. வாயு உயிரியல்         Aerobiology
1700. வாயுப் பூந்தாதியல்
வாயுமண்டலத்திலுள்ள பூந்துகள்/ பூந்தாது, வித்துகள் பற்றிய ஆய்வியல். எனவே,  அகராதிகளில் குறிப்பிட் டுள்ளவாறு, சூழ்ப் பூந்துகளியல்  என்று சொல்லாமல் வாயுப் பூந்தாதியல் எனலாம். Palynology என்பதைப் பூந்தாதியல் என வரையறுத்துள்ளதால் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
காண்க: பூந்தாதியல்    
Aeropalynology

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Wednesday, May 25, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1691 – 1695 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல





(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1681-1690 இன் தொடர்ச்சி)

1691. வளைவரை
தட்பியல் காண்க : தட்பியல்-Climatology
Dendroclimatology
1692. வறுமையியல்
ptōkhós என்னும் பழங் கிரேக்கச்சொல்லின் பொருள் வறுமை.
Ptochology
1693. வனைமுறை  இயங்கியல்  
Process  செயல்முறை, நடைமுறை, செயலாக்க முறை, செயல் முறைக்குள்ளாக்கு, முறைப்படுத்து, படிமுறை, பதனம் செய், செலுத்தம்  எனப் பலவாறாகக் கூறுகின்றனர். படிப்படியாக நிகழ்விக்கும் செயல்பாட்டை மட்கலங்கள் செய்யப்படும் வனைதல் முறையுடன் ஒப்பிடலாம். மண்பானை செய்யத் துணை நிற்கும் சக்கரத்தை வனை கலத்திகிரி எனச் சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது. வனைதல் என்றால் உரு அமையச்செய்தல் எனப் பிங்கல நிகண்டு கூறுகிறது. எனவே, Processing  என்றால் வனைதல் எனலாம். இடத்திற்கேற்றவாறு இச்சொல் வனைமம் என்றும் வனைவம் என்றும் வனைவி என்றும் மாறுகிறது. செருமனியில் நடைபெற்ற ஐந்தாவது இணையத் தமிழ் மாநாட்டில்(அட்டோபர் 2009) கணிணிச்சொற்கள் குறித்து நான் அளித்த கட்டுரையில் இவ்வாறு பல சொற்களை உருவாக்கிக் காட்டியுள்ளேன். எனவே, வனைதல்  எனலாம். இதனடிப்படையில் வனைமுறை  இயங்கியல் –  Process Dynamics எனலாம். எனினும் Fish processing technology என்னும் பொழுது மீன் பதன நுட்பியல் எனலாம். பதனம்  – processing(2) (மீனியல்)
Process Dynamics
1694. வனைமப்பொறியியல்  
காண்க: வனைம இயங்கியல்  குறிப்பை; process re-engineering என்னுமிடத்தில்பொறியியலைக்குறிக்கவில்லை. மறுசீரமைப்பைக்குறிக்கிறது.
Process Engineering
1695. வாட்டிகனியல்Vaticanology      

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல்வகைமைச்சொற்கள் 3000

Monday, May 23, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1681-1690 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1676-1680 இன் தொடர்ச்சி)

1681. வாயு விசையியல் Aeromechanics

1682. வளிம அசைவியல்               Gas kinematics

1683. வளிம இயங்கியல்               Gas dynamics

1684. வளிம விசையியல்               Gas mechanics

1685. வாயுவெப்ப இயங்கியல்   Aerothermodynamics

1686. வளிமண்டல இயற்பியல்  Atmospheric Physics

1687. வளிமண்டல ஒலியியல்     Atmospheric Acoustics

1688. வளிமண்டல ஒளியியல்     Atmospheric Optics

1689. வளிமண்டலவியல்             Atmospherology

1690. வளிமவியல்              Pneumatics

pneuma என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் காற்று.

அழுத்தப்பட்ட வளிமம் குறித்து ஆராயும் துறை.

எனவே வளிம இயல் > வளிமவியல் எனப்படுகிறது.

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல்வகைமைச்சொற்கள் 3000

Saturday, May 21, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1676-1680 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1671 -1675இன் தொடர்ச்சி)
1676. வளர்ச்சி இயக்கவியல்Growth kinetics
1677. வளர்ச்சிஉளவியல்Developmental psychology
1678. வளர்ச்சியியல்
Axiology ஐ வளர்ச்சியியல் என்கின்றனர். இது தவறு. Auxanology, Auxology என்பனவே வளர்ச்சியியல். Auxo- என்னும் இலத்தீன் முன்னொட்டின் பொருள் வளர்ச்சி. Auxology, இதன் மறு வழக்கான  Auxanology ஆகியவற்றின் பொருள் வளர்ச்சி யியல்.
Auxanology / Auxology
1679. வளர்சிதைமாற்றப் பொறியியல்Metabolic Engineering
1680. வளைசலியல்
Ecology – சூழ்நிலையியல், சூழ்வியல், சூழலியல், சூழியல், சூழ்நிலை ஆய்வு இயல், சுற்றுப்புறச் சூழலியல், சூழ்நிலை ஆய்வு, வாழிடவியல், சுற்றுப்புறத் தூய்மை  இயல், உயிர்ச்சூழலியல், உயிரின வாழ்க்கைச் சூழல் ஆய்வியல், உயிரியச் சூழ்நிலையியல் எனப்படுகின்றன. இவற்றுள் கடைசி மூன்றும் பொருள்விளக்கப்படி சரிதான். என்றாலும்   Bioecology / Bionomics என உள்ளமையால் அவற்றைச் சேர்ந்தன. எனவே, இங்கே பொருந்தாது.   Eco என்னும் கிரேக்கச் சொல்லிற்கு மனை அல்லது சுற்றுப்புறம் எனப்பொருள். Environmentology என்பதை நாம் சூழலியல்/சூழியல் என்பதால் இதனையும் அவ்வாறே கூறுவது பொருட்குழப்பமாகும். சுற்றுப்புறவியல் – Ecology  எனலாம் என முதலில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், நாம் சுற்றுப்புறச் சூழல், சுற்றுப்புறம், சூழல் என என்ன சொன்னாலும் ஒரே பொருளையே உள்ளத்தில் நிறுத்துவோம். எனவே பயன்பாட்டுக் குழப்பம்வரலாம். சுற்றுப்பற இயல் என்பதைச் சுற்றியல் எனச் சுருக்கினால் சுழல்வதையும் புற இயல் என்றால் புற வெளியையும் குறிக்கும் என்பதால் சுருக்கியும் பயன்படுத்துவது ஏற்றதாக இல்லை. எனவே, வேறு சொல் பயன்படுத்துவது நல்லது என எண்ணினேன். எனவே, சுற்றுப்புறத்தைக் குறிப்பிடும் வளவு, வளைசல் இரண்டில் ஒன்றைப்பயன்படுத்தலாம். வளவு பொதுவாக ஒரு சுற்றடைப்பிற்குள் உள்ள வீடுகளைக் குறிக்கும்.  எனவே, சுற்றுப்புறப் பகுதியைக் குறிப்பிடும் வளைசல் என்பதைப் பயன்படுத்தி வளைசலியல் –  Ecology எனலாம். Oecology என்பது Ecology என்பதன் மாற்று எழுத்தொலிப்பு வடிவம்.
Ecology/ Oecology

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல்வகைமைச்சொற்கள் 3000


Thursday, May 19, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1671-1675 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1671-1675 : இலக்குவனார் திருவள்ளுவன்



(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1661 -1670இன் தொடர்ச்சி)
1671. வளைசப் பூவியல்Anthoecology
1672. வளைசப் பொருளியல்Ecological Economics
1673. வளைசப் பொறியியல்  Ecological Engineering
1674. வளைசலியல்
Ecology – சூழ்நிலையியல், சூழ்வியல், சூழலியல், சூழியல், சூழ்நிலை ஆய்வு இயல், சுற்றுப்புறச் சூழலியல், சூழ்நிலை ஆய்வு, வாழிடவியல், சுற்றுப்புறத் தூய்மை  இயல், உயிர்ச்சூழலியல், உயிரின வாழ்க்கைச் சூழல் ஆய்வியல், உயிரியச் சூழ்நிலையியல் எனப் படுகின்றன. இவற்றுள் கடைசி மூன்றும் பொருள் விளக்கப்படி சரிதான். என்றாலும்   Bioecology / Bionomics என உள்ளமையால் அவற்றைச் சேர்ந்தன. எனவே, இங்கே பொருந்தாது.   Eco என்னும் கிரேக்கச் சொல்லிற்கு மனை அல்லது சுற்றுப்புறம் எனப் பொருள். Environmentology என்பதை நாம் சூழலியல்/சூழியல் என்பதால் இதனையும் அவ்வாறே கூறுவது பொருட் குழப்பமாகும். சுற்றுப்புறவியல் – Ecology  எனலாம் என முதலில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், நாம் சுற்றுப்புறச் சூழல், சுற்றுப்புறம், சூழல் என என்ன சொன்னாலும் ஒரே பொருளையே உள்ளத்தில் நிறுத்துவோம். எனவே பயன் பாட்டுக் குழப்பம் வரலாம். சுற்றுப்புற இயல் என்பதைச் சுற்றியல் எனச் சுருக்கினால் சுழல்வதையும் புற இயல் என்றால் புற வெளியையும் குறிக்கும் என்பதால் சுருக்கியும் பயன்படுத்துவது ஏற்றதாக இல்லை. எனவே, வேறு சொல் பயன்படுத்துவது நல்லது என எண்ணினேன். எனவே, சுற்றுப்புறத்தைக் குறிப்பிடும் வளவு, வளைசல் இரண்டில் ஒன்றைப் பயன்படுத்தலாம். வளவு பொதுவாக ஒரு சுற்றடைப்பிற்குள் உள்ள வீடுகளைக் குறிக்கும்.  எனவே, சுற்றுப்புறப் பகுதியைக் குறிப்பிடும் வளைசல் என்பதைப் பயன்படுத்தி வளைசலியல் –  Ecology எனலாம். Oecology என்பது Ecology என்பதன் மாற்று எழுத்தொலிப்பு வடிவம்.  
Ecology / Oecology
1675. வளரிளம்பருவ உளவியல்        Adolescent Psychology

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல்வகைமைச்சொற்கள் 3000