(தமிழ்ச்சொல்லாக்கம் 688-698 தொடர்ச்சி)
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 699-703
(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு.
கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
699. Artesian Well – தானாகவே தண்ணீர் வெளியேறும் கிணறு
மகாமக வருடத்தில் நகரபரிபாலன சபையர் தண்ணிறைத்துச் சேறள்ளி மணலிட்டு வருகின்றனர். இவ்வருடம் ஒரு தீர்த்தத்தில் தானாகவே தண்ணீர் வெளியாகும் கிணறு (Artesian Well) உண்டாக்க முயன்றதில் பயன் பெறவில்லை.
நூல் : திருக்குடந்தை புராண வசனம் (1932)
மகாமக தீர்த்த மகிமைப் படலம், பக்கம். 51
நூலாசிரியர் : புது. இரத்தினசாமி பிள்ளை
(கும்பகோணம் பசார் அஞ்சல் தலைவர்)
★
700. Tennis – நிலைச்செண்டு
நிலைச்செண்டு என்பது நின்ற நிலையிலிருந்தே பந்துகளை வீசி விளையாடுவது போலும். தற்காலம் (Tennis) டென்னிசு முதலியன போல)
நூல் : சேக்கிழார் (1933)
நூலாசிரியர் : கோவை – வழக்கறிஞர்
சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார், பி.ஏ.,
★
701. அவபிருதம் – முடிவு
பிரமதேவர் கும்பேசருக்கு ஒன்பது நாள் உத்சவம் நடத்திய பின்னர், பத்தாம் நாள் அவபிருத சுநானம் நடத்தி உத்சவத்தை பூர்த்தி செய்த விசயம் ஈண்டு கூறப்படும். அவபிருதம் – முடிவு: இங்கு உத்சவ முடிவின் நீராட்டு.
நூல் : கும்ப கோண தலபுராண வசனம் (1933)
மகாமக தீர்த்த மகிமை, பக்கம் – 45
நூலாசிரியர் : பள்ளி ஆய்வாளர் சாமிநாத முதலியார்
★
702. Oral Evidence – வாழ்மொழிக் கூறு
703. Documentary Evidence – சுவடிக் கூறு
ஆவணம் என்பது, ஒரு வழக்கைத் தீர்மானிக்க உதவும் சுவடி ஓலை முதலிய எழுத்துச் சீட்டுகள். அயலார் காட்சி என்பது வழக்கு நிகழ்ச்சியை கண்டார் சொல்வது. இவை முறையே (Oral Evidence) வாய்மொழிக்கூறு என்றும், (Documentary Evidence) சுவடிக் கூறு என்றும் தற்கால ஆங்கில நீதிமுறையில் பேசப்பெறும்.
நூல் : சேக்கிழார் 1933 (முதற்பதிப்பு)
நூலாசிரியர் : கோவை வழக்கறிஞர்
சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார், பி.ஏ.,
★
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
No comments:
Post a Comment