23 June 2025 அகரமுதல
வெருளி நோய்கள் (Phobia) 6 – 10
6. ‘ஆண் குறி ‘/’penis’ சொல் வெருளி – Yinjingphobia
‘ஆண் குறி’ /’penis’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஆண் குறி /’penis’ சொல் வெருளி.
மறைவுறுப்புப் பெயர்களைப் பொதுவிடங்களில் சொல்லுதல், அவற்றைப் படித்தல், பிறர் சொல்லக் கேட்டல் முதலியவற்றால் அருவருப்பு அடைவோர் இவ்வெருளிக்கு ஆளாகின்றனர்.
ஆண் குறி தொடர்பாகக் கெட்ட வார்த்தைகள் எனச் சொல்லப்படுவன வழக்கத்தில் உள்ளன. அவற்றை அறிந்தவர்கள் அவற்றில் பொருத்தமான ஒன்றை இங்கே கருதிப்பார்த்துக் கொள்க. அறியாதவர்கள் அது குறித்துப் பொருட்படுத்த வேண்டா. இங்கே குறிப்பிட்டவாறு ஆண்குறி என்னும் பொதுவான சொல்லையே பயன்படுத்தி அறிக.
00
7.‘ஆம்’ / ‘yes’ சொல் வெருளி – Itaphobia
‘ஆம்’ / ‘yes’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘ஆம்’ / ‘yes’ சொல் வெருளி.
பலருக்கும் “ஆமாம், சாமி!” போடுபவர்களைப் பார்த்தால் பிடிக்காது. எரிச்சல் வரும். இத்தகையோருள் சிலர் ஆம் என்னும் சொல்லைக் கேட்டாலே அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
00
8. ‘ஆர்’/’R’ எழுத்து வெருளி – Rhophobia
‘ஆர்’/’R’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘ஆ’/’R’ எழுத்து வெருளி.
00
9. ‘இசட் / Z’ எழுத்து வெருளி – Zetaphobia
‘இசட் / Z’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘இசட் / Z’ எழுத்து வெருளி.
00
10. ‘இல்லை’ / ‘ain’t’ சொல் வெருளி – Wuophobia
‘இல்லை’ / ’ain’t’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘இல்லை’ / ‘ain’t’ சொல் வெருளி.
ஆங்கில வட்டாரப் பேச்சில், am not, is not, are not, has not,have not எனச் சொல்லப்படுவனவற்றின் குறுக்கமே ain’t. சில வட்டார வழக்கில் do not, does not, and did not என்றும் இப்போதைய சில வழக்குகளில் to be not, to have not, and to do not என்றும் சொல்லப்படுவனவற்றின் குறுக்கம்.
00
(தொடரும் )
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment