Tuesday, February 3, 2026

வெருளி நோய்கள் 1076-1080: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 1071-1075: தொடர்ச்சி)

புனைவுரு பாத்திரமான சுயூ எல்லென்(Sueellen) குறித்த வரம்பற்ற பேரச்சம் சுயூ எல்லென் வெருளி.
00

சுரங்கைக் காணாட்டம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சுரங்கை வெருளி.
காணாட்ட வெருளி உள்ளவர்களுக்குச் சுருங்கை வெருளி வர வாய்ப்புள்ளது.
00

சுருக்கக் குறியீடு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சுருக்கக் குறியீட்டு வெருளி.
Abbreviato என்னும் இத்தாலியச் சொல்லிற்குக் குறுக்க வடிவம் எனப் பொருள்.
00

இருப்பூர்தி முதலியவற்றின் போக்குவரத்திற்கான நிலத்தடியில் அமையும் குடைவழிப்பாதை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சுருங்கை வெருளி.
சுருங்கை, சுரங்கை என்பனவற்றின் பொருள் ஒன்றுதான். எனினும் சுரங்கை என்பது நிலக்கீழ் அறையாகிய சிறு பரப்பினது. சுருங்கை என்பது நீள்வழியானது. சுருங்கை வெருளி என்பது செயற்கையாகப் பூமிக்கடியில் உருவாக்கப்படும் பாதைபற்றியது. சுரங்கை வெருளி(Cubranchiophobia) என்பது சுரங்கைக் காணாட்டம்பற்றிய வெருளி.
பால வெருளி(Gephyrophobia/ Gephysrophobia) போன்றதே இதுவும்.
00

  1. சுவரெழுத்து வெருளி – Graffitiphobia

சுவரெழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் சுவரெழுத்து வெருளி.
graffiti என்றால் சுவரோவியம் எனப் பொருள். எழுத்துகளில் ஓவியமும் அடங்கும். இவை, விளம்பரங்களுக்குப் பயன்பட்டாலும் தமிழ் நாட்டில் சுவரெழுத்துகளால் தமிழ் எழுச்சியும் தன்மான உணர்வும் பரப்பப்பட்டுள்ளன.
00

Monday, February 2, 2026

வெருளி நோய்கள் 1071-1075: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 1066-1070)

1071. சுடுநர் வெருளி – sniperphobia

மறைவான இடத்திலிருக்கும் ஒருவரால் சுடப்படுவோம் என்றுகாரணமற்ற அளவு கடந்த பேரச்சம் சுடுநர் வெருளி.

sniper என்றால் பதுங்கிச் சுடுநர். அஃதாவது பதுங்கி மறைவாக இருந்து குறிபார்த்துச் சுடுநர் எனப் பொருள். யாரும் மறைவாக இருந்து சுடுகிறார்களோ என்ற பேரச்சத்தையே குறிக்கிறது. போர்க்களத்தில் பதுங்கு குழியில் இருந்து யாரும் சுடுகிறார்களோ என்ற பேரச்சத்திற்கு ஆளாவதால் வெருளி உண்டாகிறது.

00

1072.சுட்டுரை வெருளி – Twitterphobia 

சுட்டுரை குறித்த வரம்பற்ற பேரச்சம் சுட்டுரை வெருளி.

யாக்கு உடோர்சி(Jack Dorsey), நோவா கிளாசு(Noah Glass), பிசு தோன்(Biz Stone), இவான் வில்லியமிசு(Evan Williams)  ஆகியோரால் சுட்டுரை(Twitter)2006 மார்ச்சில் உருவாக்கப்பட்டு, அதே ஆண்டு சூலையில் வெளியிடப்பட்டது.

எழுத்துரு வரம்பு, பகிர்வு வரம்பு போன்றவற்றால் சுட்டுரை பலருக்கு வெறுப்பைத் தந்தாலும் மிகுந்த பயனுள்ளதாகவும உள்ளது.  எனினும் பொதுவாகப் பிற இணையச் செயலி அல்லது குமுகத்தளம் போல் இதன் மூலம் வங்கி எண், கடவுச்சொல் முதலான நமது கமுக்கச் செய்திகள் வெளியாகும் என்ற அச்சத்தில் பலருக்கு இது வெறுப்பையும் உண்டு பண்ணுகிறது.

பின் தொடருநர்,  வந்த செய்தி தவறானது என அறியாமல் பகிரும் அவலம் போன்றவற்றாலும் சிலர் கவலைகளும் வெறுப்பும் கொள்கின்றனர்.

00

1073. சுண்ணக வெருளி-Asvestiophobia

சுண்ணகச் சத்து தொடர்பான காரணமற்ற மிகையான பேரச்சம் சுண்ணக வெருளி.

Asvestio என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் சுண்ணகம் எனப் பொருள்.

1074. சுதைப் பலகை வெருளி – Fenbanphobia 

சுதைப் பலகை குறித்த வரம்பற்ற பேரச்சம் சுதைப் பலகை வெருளி.

சுதைப்பலகையைத் துடைக்கும்பொழுது கையில் கீறல் ஏற்படுவதபோன்ற உணர்வாலும் பிறாண்டுவதுபோல் இருப்பதாலும் வெறுப்பு கொள்கின்றனர்.

00

1075. சுமோக்கி வெருளி – Smokeyphobia

சுமோக்கி(Smokey)கரடி என்னும் விளம்பர முத்திரை குறித்த வரம்பற்ற பேரச்சம் சுமோக்கி வெருளி.

சுமோக்கி என்பது பல்வேறு பொருள்களில் வரும ஒரு சொல். எனினும் இங்கே சுமோக்கி கரடியையே குறிக்கிறது.

சுமோக்கி கரடி( Smokey bear) என்பது அமெரிக்க வனப்பணியின் காட்டுத்தீத் தடுப்புப் பரப்புரையின் விளம்பர முத்திரையாகும். விளம்பர முத்திரையில் உள்ள கரடிப் படத்தைப் பார்த்தாலும் பேரச்சம் கரடியைப் பார்க்கும் பொழுது காட்டுத் தீயைப் பற்றி எண்ணி அதனாலும் வரும் பேரச்சம்.

புகைபோல் கரு நிறத்தில் தோற்றமளிக்கும் கரடி சுமோக்கி எனப்படுவதாகக் கொண்டால் இதனைப் புகைக்கரடி வெருளி என்று சொல்லலாம்.

கரடி வெருளி உள்ளவர்களுக்குச் சுமோக்கி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.

00

Sunday, February 1, 2026

வெருளி நோய்கள் 1066-1070: இலக்குவனார் திருவள்ளுவன்

     02 February 2026   அகரமுதல

வெருளி நோய்கள் 1061-1065: இலக்குவனார் திருவள்ளுவன் தொடர்ச்சி)

(



கினி எலி என அழைக்கப்பெறும் சீமை எலி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சீமை எலி வெருளி.
ஆங்கிலத்தில் இதன் தோற்றத்தைப் பார்த்து கினி பன்றி(guinea pig) என்கின்றனர். Guiné என்னும் கிழக்கு ஆப்பிரிக்க மக்கள் இனத்தைக் குறிக்கும் போர்த்துக்கீசியச் சொல்லில் இருந்து கினி(யா) நாட்டிற்குப் பெயர் வந்தது. ஆனால் இந்நாட்டிற்கும் இவ்வுயிரிக்கும் தொடர்பு இல்லை. ஆண்டெசு(Andes) நாடே இவற்றின் பிறப்பிடம்.
அதுபோல் இதற்கும் பன்றி இனத்திற்கும் தொடர்பில்லை. கொறிக்கும் விலங்குவகையைச் சார்ந்த இதைத் தமிழில் உருவ அடிப்படையில் எலி எனக் குறிக்கின்றனர். இயல்பான எலியிலிருந்து வேறுபடுத்த வெள்ளெலி என்றும் கினி எலி என்றும் கூறுகின்றனர். வெள்ளெலி(Hamster) எனத் தனிவகை இருப்பதால் அவ்வாறு அழைத்தால் குழப்பம் வரும். சீமை எலி எனக் கலைச் சொல்லகராதியில் குறித்துள்ளது. வேறு பெயர் கிடைக்கும்வரை நாமும் சீமை எலி என்றே சொல்லலாம்.
00

சீனா தொடர்பான தேவையற்ற வெறுப்பும் அளவுகடந்த பேரச்சமும் சீன வெருளி.
பெரும்பாலும் அமெரிக்கர்களில் ஒரு சாராருக்கும் தலாய்லாமாவின் தலைமையை ஏற்றுக் கொண்டவர்களிடையேயும், திபேத்து, ஆங்காங்கு முதலான நாட்டினரில் ஒரு பகுதியினருக்கும் முதலாளித்துவ நாடுகளிலும் சீனாவால் பாதிப்புற்ற நாட்டினரிடமும் சீனமக்கள், சீனப் பொருள்கள் முதலானவை மீது தேவையற்ற வெறுப்பும் பேரச்சமும் உள்ளன.
வண்ணக்கிளி என்னும் திரைப்படத்தில் வரும், “சின்னப்பாப்பா எங்கள் செல்லப்பாப்பா” என்னும் பாடலில்
“சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா” என ஒரு வரி வரும். அதற்கு முன்னரும் சீனப் பொம்மை பாடல்களில் இடம் பெற்றுள்ளது. நெடுங்காலமாகவே சீனப்பொருள்கள் மலிவு விலையில் நம் நாட்டில் விற்கப்படுகின்றன. இதன் காரணமாக நாட்டுப்பொருள் உற்பத்தியாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் சீனப் பொருள் என்றாலே வெறுப்பும் அச்சமும் ஏற்படுவது இயல்புதான்.
00

சுக்கான் / சக்கரத் திருப்பி (steering wheel/driving wheel/hand wheel) குறித்த வரம்பற்ற பேரச்சம் சுக்கான் வெருளி.
கப்பலில் பயன்படும் திருப்பியைச் சுக்கான் என்பதால் ஊர்தியில் உள்ள திருப்பியையும் சுக்கான் எனலாம்.
Volan என்னும் உருமானியச் சொல்லிற்குச் சுக்கான் எனப் பொருள்.
00

சூடானபானங்கள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சுடு பான வெருளி.
சூடான பானங்கள் வாயில் புண்ணை உண்டாக்கும், குடலைப் பாதிக்கும், வயிற்றைப் பாதிக்கும் என்றும் அளவுகடந்த கவலை கொள்கின்றனர். மேலும், “பானங்களை மிகவும் சூடாக அருந்தினால் உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்பட்ட வாய்ப்புள்ளது” என ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற செய்திகளைப் படித்தவர்கள் அளவுகடந்த அச்சத்திற்கு ஆட்படுத்திக் கொள்கின்றனர்.
00

துப்பாக்கி அல்லது துமுக்கி எனப்படும் வேட்டகம், சுடுகலன், முதலியன் மீது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் சுடுகருவி வெருளி.
சுடுகருவிகளால் தாங்களோ குடும்பத்தினரோ அறிந்தவர்களோ பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது பிறர் உயிரிழந்ததைக் காணவோ அறியவோ நேர்ந்திருந்தால் இவற்றால் தமக்கும் குடும்பத்தாருக்கும் அழிவு வரும என்று பேரச்சம் கொண்டிருப்பர். எங்கிருந்தோ சுடுகருவி ஒலி கேட்டாலும் நடுக்குறுவர். சுடுகருவிப்படங்கள், சுடுகருவிகள் பயன்படுத்தப்படும நாகங்கள், திரைக்காட்சிகள் ஆகியவற்றைக் காணல், இவை தொடரபான கதை, கட்டுரைகளைப் படித்தல் போன்றவற்றால் அளவுகடந்த பேரச்சம் கொண்டு பாதிப்புறுவர்.
hoplites என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் படைக்கருவி.
00