(வெருளி நோய்கள் 1106-1110: இலக்குவனார் திருவள்ளுவன் தொடர்ச்சி)

செந்நெல்லி(Cranberry)குறித்த அளவுகடந்த பேரச்சம் செந்நெல்லி வெருளி.
1959 ஆம் ஆண்டு , செந்நெல்லி அறுவடையில் அமினோட்ரியசோல்(aminotriazole) என்ற களைக்கொல்லி கலந்திருப்பதாக அரசாங்க அறிக்கைகள் தெரிவித்தன, இதனால் இவ்வுணவு மீது அச்சம் ஏற்பட்டது. இதனால் வந்நதே செந்நெல்லி வெருளி( Kurberiphobia)

00

செம்மஞ்சள் நிற முடியுடையவர்களைக்கண்டால் ஏற்படும் தேவையற்ற வரம்பு கடந்த பேரச்சம் செம்மஞ்சள் முடியர் வெருளி.
Ginger என்பதற்கு இஞ்சி முதலான பொருள்களுடன் மங்கிய செம்மஞ்சள் நிறம் என்றும் பொருள் உண்டு. இங்கே செம்மஞ்சள் நிறம் உடைய முடி உடையவர்களைக் குறிக்கிறது.
00

செம்புற்றுப் பழம்(Strawberry) பற்றிய அளவுகடந்த பேரச்சம் செம்புற்றுப் பழ வெருளி.
Fraoula என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் செம்புற்றுப் பழம் எனப்பொருள்.
00

செம்மஞ்சள் நிறப் பொருள்கள் குறித்த தேவையற்ற பேரச்சம் செம்மஞ்சள் வெருளி.
chrysos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பொன் மஞ்சள். sandarakinos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் செம்மஞ்சள்.
ஒவ்வொரு நிறமாகப்பேரச்சம் உள்ளதாகப் படிக்க வேண்டுமா என எண்ணத் தோன்றும். ஆனால், 250,000 அமெரிக்கர்கள் இப்போது செம்மஞ்சள் வெருளிக்கு ஆளாகியுள்ளதாக மருத்துவப் புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது. அப்படியானால் பிற நிறங்களின் பேரச்சத்திற்கு ஆளானவர்களும் மிகுதியாகத்தானே இருப்பார்கள்.
00