10 February 2026 அகரமுதல
(வெருளி நோய்கள் 1101-1105: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1106-1110
- செந்நாய் வெருளி – Coyotephobia
செந்நாய் (coyote) குறித்த அளவுகடந்த பேரச்சம் செந்நாய் வெருளி.
இயல்பான ஓநாயிலிருந்து வேறுபடுத்த மலை ஓநாய் செந்நாய் எனப்படுகிறது.
செந்நாய் மக்களையும் நாய் முதலிய பிற விலங்கினங்களையும் தாக்கும் இயல்புடையன.
பிப்பிரவரி, செந்நாய்க்கான சேர்க்கைக் காலம். அப்பொழுது இவை வலிந்து தாக்கும் முரட்டுப் போக்கில் இருக்கும். நாட்டிற்குள் புகுந்து மக்களைத் தாக்கிக் கொல்லும். எனவே, விழிப்பாக இருக்குமாறு செந்நாய்கள் இருக்கக்கூடிய மாசிடோனியா போன்ற பகுதியில் காவல் துறை எச்சரிக்கை விடுப்பது வழக்கம். எனவே, செந்நாய்பற்றிய செய்திகள் அச்சத்தை உண்டாக்கிச் செந்நாய் மீதான காரணமற்ற அளவுகடந்த பேரச்சத்தை உருவாக்குகின்றன.
00 - செஞ்சுருள் நொறுவை வெருளி – Abzicheetophobia
செஞ்சுருள் நொறுவை (red spicy cheetos) குறித்த வரம்பற்ற பேரச்சம் செஞ்சுருள் நொறுவை வெருளி.
1948 இல் Chee-tos என்று குறிக்கப்பெற்றது. 1998 முதல் Cheetos எனப்பெறுகிறது.
00 - செட்டம்பர் வெருளி – Jiuyuephobia
செட்டம்பர்(September) மாதம் குறித்த வரம்பில்லாப் பேரச்சம் செட்டம்பர் வெருளி.
jiǔ என்னும் சீனச் சொல்லிற்கு ஒன்பது எனப் பொருள். yue என்னும் சீனச்சொல்லிற்கு மாதம் எனப் பொருள். எனவே, jiuyue ஒன்பதாம் மாதமாகிய செட்டம்பர் மாதத்தைக் குறிக்கிறது.
00 - செந்தசைக்கனிவெருளி – Smeourophobia
செந்தசைக்கனி(raspberry) மீதான அளவுகடந்த பேரச்சம் செந்தசைக்கனி வெருளி.
இனிய இளஞ்சிவப்பு மது என்னும் பொருள் தரும் raspise என்னும் சொல்லில் இருந்து raspberry உருவானது.
00 - செப்பு வெண்கல வெருளி – Cuprophobia
செப்பு-வெண்கலம்((copper and bronze) குறித்த வரம்பற்ற பேரச்சம் செப்பு-வெண்கல வெருளி.
cupro என்பது தாமிரம் என்னும் பொருளிலான முன்னொட்டு. இச்சொல் செம்பு,தாமிரம் என்னும் பொருள்களை உடைய cuprum என்னும் இலததீன் சொல்லில் இருந்து உருவானது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
No comments:
Post a Comment