(வெருளி நோய்கள் 1261 -1265 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1266 -1270
- திரம்பு வெருளி – Trumphobia
அமெரிக்கத் தலைவரான தொனால்டு திரம்பு(Donald Trump) மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் தொனால்டு திரம்பு வெருளி எனப்படும்.
அமெரிக்காவின் 45 ஆவது அரசத் தலைவராக இப்போது வீற்றிருக்கும் தொனால்டு திரம்பு, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வார், 3ஆவது உலகப்போரை உ்ண்டாக்கி விடுவார் என்பன போன்ற எண்ணங்கள் ஒருசாராரிடம் உள்ளன. அவர்களில் சிலர் திரம்பு ஆட்சியிலிருந்து நீங்கும் வரை அமெரிக்காவில் இருக்கக்கூடாது என வெளிநாட்டிற்கும் குடி பெயர்ந்துள்ளனர். ஒரு சாராருக்கு அவர் படத்தைப் பார்த்தாலே காரணமற்ற வெறுப்பும் பேரச்சமும் வருகிறது என்கின்றனர்.
இதன் தொடக்க நிலையைத் திரம்பு அழிகேட்டு நோய்க்குறி(Trump Derangement Syndrome) என்று சொல்வர்.
அமெரிக்கா, ஈராக்கு நாடுகள் ஈரானுடன் போர் தொடுத்ததன் தொடர்ச்சியாக ஏற்படும் போர் அழிவுகளாலும் படுகொலைகளாலும் திரம்பு மீது அளவற்ற பேரச்சமும் வெறுப்பும் கொண்டு வெருளிக்கு ஆளாவோர் இப்போது உள்ளனர்.
00
1267.திரி இடியப்ப வெருளி – Spaghettiphobia
திரி இடியப்பம்(spaghetto) மீதான வரம்பற்ற பேரச்சம் திரி இடியப்ப வெருளி.
மெல்லிழை அல்லது சரடு என்னும் பொருள் கொண்ட spago என்னும் இத்தாலியச் சொல்லில் இருந்து உருவானது spaghetto.இதன் பன்மை Spaghetti.
00
- திருட்டு எச்சரிக்கை யொலி வெருளி – Qiedjingphobia
திருட்டு எச்சரிக்கை யொலி(burglar alarm) குறித்த வரம்பற்ற பேரச்சம் திருட்டு எச்சரிக்கை யொலி வெருளி.
கன்னக்காரன் / திருடன் திருட நுழையும் பொழுது எச்சரிக்கை மணி அடிக்கும் கருவி.
00
- திருட்டுத் தடுப்பொலி வெருளி – Zhaoqinphobia
திருட்டுத் தடுப்பொலி (store exit anti-theft alarm) குறித்த வரம்பற்ற பேரச்சம் திருட்டுத் தடுப்பொலி வெருளி.
(கடைகள், அலுவலகங்கள், பணி மனைகள், நூலகங்கள் முதலான இடங்களிலிருந்து பொருள்கள், புத்தகங்கள் ஆகியவற்றைத் திருட்டுத்தனமாக எடுத்துச் சென்றால் மணி ஒலித்து உணர்த்தும் மின்னணுக் கருவி.)
00
1270.திருநங்கை வெருளி – Transphobia/ Transracephobia
திருநங்கையர் மீதான வெறுப்பு, அளவுகடந்த பேரச்சம் திருநங்கையர் வெருளி.
மூன்றாம் பாலினர் தவறாக நடந்து கொள்வர் என்ற எண்ணம், அவர்கள் உடலைத் தொட்டுப் பணம் கேட்பர் என்ற அச்சம் போன்றவற்றால் பலருக்குத் திரு நங்கையரைக் கண்டாலே வெறுப்பும் அச்சமும் ஏற்படுகிறது.
திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் மாற்றுப்பாலினரைக் கேலி செய்யும் காட்சிகள் இடம் பெறுகின்றன. இதைப் பார்ப்போர், திருநங்கையரைப் பார்க்கும் பொழுது கேலி செய்து சீண்டுகின்றனர். மிகவும் தவறான பழக்கமாகும் இது.இதனால் திருநங்கையர்க்குத் தங்கள் மீது கழிவிரக்கமும் வெறுப்பும் உண்டாகும். தம்மைக் கைவிட்டவர்கள் மீதும், சீண்டுவோர் மீதும் சினமும் ஏற்படும். மூன்றாம்பால் நிலையும் ஊனம்தான் என்ற பரிவு நோக்கம்தான் வரவேண்டுமே தவிர, வெறுப்போ அச்சமோ கேலி செய்யும் உணர்வோ வரக்கூடாது.
பிறரைத் தொட்டுத் தொட்டுப் பேசும் திரு நங்கையரும் அப்பழக்கத்தைக் கைவிட வேண்டும்.
மாற்றுப்பாலினரைக் குறிக்கும் Transsexual/Transgender என்பனவற்றின் சுருக்கமே trans என்பது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5
No comments:
Post a Comment