(வெருளி நோய்கள் 1291 -1295 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1296 -1300
- தீயஇலை வெருளி –Evilleafyphobia
தீயிலை அல்லது ஈவில் இலீபி(Evilleafy) என்னும் அசைவூட்டப்படப் பாத்திரத்தின் மீதான அளவுகடந்த பேரச்சம் தீயிலை வெருளி.
கற்பனைத் தீவிற்கான சண்டை(BFDI- Battle for Dream Island), மறுபடியும் கற்பைனத் தீவிற்கான சண்டை (BDFIA-Battle for Dream Island Again) ஆகிய மெய்ம்மைக் காட்சியில் (reality show)இடம் பெறும் கற்பனை அசைவூட்டப் பாத்திரமே தீயிலையாள் / தீயிலை.
00
- தீயச் சூழல் வெருளி – Kakophobia / Cacophobia
தீயச் சூழல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தீயச் சூழல் வெருளி
பொதுவாக மக்கள் தீய சூழல் அல்லது தீங்கிழைக்கும் தீய செயல்களில் இருந்து விலகி இருக்கவே விரும்புவர். ஆனால், இது குறித்து அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் கொள்வோரே தீயச் சூழல் வெருளிக்கு ஆளாகின்றனர்.
kakos என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் கெட்ட அல்லது தீய எனப் பொருள்.
00
- தீயணை குழாய் வெருளி – Firehydrantphobia
தீயணைக்கும் நெடுநீர்க் குழாய்(fire hydrant) பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் தீயணை குழாய் வெருளி.
உயரமான கட்டடத்தில் பயன்படுத்த நெடுநீர்க் குழாய் உதவியானது. ஆனால், அதைக் கையாளும் இடர்ப்பாட்டால் அதன்மீது பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
- தீயணை வண்டி வெருளி – Xiaofaphobia
தீ அணைப்பு வண்டி(fire engine) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தீயணை வண்டி வெருளி.
தீ அணைப்பு வண்டியின் மணியொலியைக் கேட்டாலே அஞ்சி வெறுப்போர் உள்ளனர். வேறு எங்கும் தீப்பற்றினாலும் தங்கள் பகுதிக்கும், வீட்டிற்கும் தீ பரவும் என்று காரணமற்ற பேரச்சம் கொள்கின்றனர் சிலர்.
00
- தீக் காவலர் வெருளி – Pyrosvestisphobia
தீயணைப்பு, தீத்தடுப்புக் காவலர் மீதான அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் தீக் காவலர் வெருளி.
Pyros, vestis ஆகிய கிரேக்கச் சொற்களுக்கு முறையே, தீயுடன் சண்டையிடுநர்(தீ அணைப்போர்), உடை எனப் பொருள்கள்.
பொதுவாகச் சீருடை அணிந்தவர்கள் மீது பேரச்சம் கொள்பவர்களும் தீ யணைப்பு வீரர்கள்மீதும் அச்சம் கொள்கின்றனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5
No comments:
Post a Comment