24 April 2026 அகரமுதல
(வெருளி நோய்கள் 1306 -1310 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1311 -1315
- துடைப்பி வெருளி – Yushuaphobia
ஊர்திகளில் முகப்புக் கண்ணாடியில் மழைநீரைத் துடைப்பதற்காக உள்ள துடைப்பி (wiper) மீதான அளவுகடந்த பேரச்சம் துடைப்பி வெருளி.
shua என்னும் சீனச்சொல்லிற்குத் தூரிகை, துடைப்பி என்று பொருள்கள்.
00
- துணிமணி அடுக்கம் வெருளி – Kr♥kuphobia
துணிமணிகள் அடுக்கம்(clothing rack) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் துணிமணி அடுக்கம் வெருளி
இத்தகையோர் துணிமணிகள் அடுக்கத்தில் துணிமணிகள் ஒழுங்காக அடுக்கி வைக்கப்படவில்லை என்பதுபோன்ற கவலையும் பேரச்சமும் கொள்கின்றனர்.
காண்க: உடைப் பேழை வெருளி(Vinitophobia)
00
- துணி உலர்த்தி வெருளி – Drogerphobia
துணி உலர்த்தி(clothes dryer) பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் துணி உலர்த்தி வெருளி.
சரியாக உலர்த்தியிருக்காது, ஈரத்துடன் இருந்து கிருமி உண்டாகி நோய் பரவும் என்பன போன்றவற்றில் பேரச்சங்களுக்கு ஆளாகின்றனர்.
Droger என்றால் (துணி) உலர்த்தி எனப் பொருள்.
00
- துணி வெருளி – Textophobia
துணி குறித்த வரம்பற்ற பேரச்சம் துணி வெருளி.
குறிப்பிட்ட துணி வகைகள் மீதான காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
செயற்கை இழை,பட்டு, செயற்கைப் பட்டு, பருத்தி எனச் சிலவகை துணிவகைகளை அணிவதற்கு மட்டுமல்லாமல் பார்ப்பதற்கும் தேவையற்ற கவலைகளால் இவர்கள் பேரச்சம் கொள்கின்றனர்.
நெய்தது என்னும் பொருள் உடைய textilis என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து Texto என்பது உருவானது.
00
- துணையிலி வெருளி – Lonerophobia
பகைமை உலகில் தனித்துத் துணையின்றி இருப்பதற்கான அளவுகடந்த பேரச்சம் துணையிலி வெருளி.
தனிமையிலே இனிமை காண முடியுமா
துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா
எனப் பாடல் வரும்.
இவ்வாறு தனிமைத் துயரம் குறித்துப் பல பாடல்கள் உள்ளன. தனிமையினால் ஏற்படும் கவலை, துயரம் மிகுந்து பெரும் மன அழுத்தத்திற்கும் ஆளாவர். தனிமையில் இருக்கும் பொழுது துன்பமோ பேரிடரோ தாக்குதலோ நேர்ந்தால் என் செய்வது என்றும் பேரச்சமும் பெருங்கவலையும் கொள்வர்.எனவே, தனிமை குறித்த வெருளியும் வருகிறது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5
No comments:
Post a Comment