Showing posts with label : இலக்குவனார் திருவள்ளுவன். Show all posts
Showing posts with label : இலக்குவனார் திருவள்ளுவன். Show all posts

Sunday, May 8, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1611 – 1620 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1601-1610இன் தொடர்ச்சி)
1611. மெய்ம்மி நுட்பியல்Histotechnology
1612. மெய்ம்மி நோயியல்Histopathology
1613. மெய்ம்மை யளவையியல்Criteriology
1614. மெல்லமைப்பியல்Gnathology
1615. மெல்லுடலி யியல்    Malacology(2)
1616. மேக நோயியல்Syphilology
1617. மேடுபள்ள விளிம்புUndulate Margin
1618. மேலாண்மை வரைவியல்Management Graphics
1619. மேலாண்மைக் குமுகவியல்Managerial sociology
1620. மேலாண்மைப் பொருளியல்    Managerial economics

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல்வகைமைச்சொற்கள் 3000

Thursday, April 21, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1411 – 1423 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1401 – 1410 இன் தொடர்ச்சி)

1411. மதலையியல்

neonātus என்னும் இலத்தீன் சொல் பச்சிளங்குழந்தையைக் குறிக்கிறது. அண்மையில் பிறந்த மழலையரைக் குறிக்கும் மதலை என்னும் சொல்லைக் கையாண்டுள்ளோம்.

Neonatology

1412. மதிப்புச்செய்திறனியல்

மதிப்பு மேலாண்மைக்கு ஒத்ததாக இது கருதப்படுகிறது. செயல்பாட்டை மேம்படுத்து வதன் மூலம் செலவையும் குறைத்து மதிப்பை உருவாக்குவது குறித்த செய்திறன்துறை. எனவே, இதனை மதிப்புப் பொறியியல் என்று சொல்வதைவிட, மதிப்புச் செய்திறனியல் எனலாம்.

Value Engineering

1413. மதுக்காய்ச்சியல்

brew  என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் மது வடிப்பு.

Brewology

1414. மதுக்கலவையியல்

Mix என்னும் சொல்லின் நேர் பொருள் கலத்தல். எனினும் இங்கே மதுக்கலவையைக் குறிக்கிறது.

Mixology

1415. மதுவியல்

eno- / œno-  என்னும் பழங்கிரேக்கச் சொற்களின் பொருள் மது.

Enology / Oenology

1416. மர ஒளி வரைவியல்

Photoxylography

1417. மர நுட்பியல்

மரக்கட்டைத் தொழில்நுட்பம் மரக்கட்டை நுட்பியல், மரத் தொழில்நுட்பம் எனப்படுகின்றது.

 தொழில் நுட்பவியல் என்பதை நான் சுருக்கி நுட்பியல் எனக் குறித்து வருகிறேன். எனவே,  மரக்கட்டைத்தொழில் நுட்பத்தை மரக்கட்டை நுட்பியல் என்றேன்.

அறைகலன் முதலான மரப்பொருள் ஆக்கத்தில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம் குறித்த அறிவியல் இது. மரக்கட்டை என்று சொல்ல வேண்டிய தேவையில்லை. இதற்கு அடிப்படை மரம்தான். எனவே, சுருக்கமாக மரப்பொருள் நுட்பியல் > மர நுட்பியல் என மாற்றியுள்ளேன்.

Wood technology

1418. மரங்கொத்தி யியல்

Woodpeckerology

1419. மரணத்தண்டனை இயல்

Ktenology

1420. மரபணுக்கட்டுப்பாட்டு நுட்பியல்

Gene manipulation technology

1421. மரபணு வளைசலியல்

Gene Ecology

1422. மரபியல்

Genetics

1423. மரபு வளைசலியல்

Genecologyசூழல்சார் பரம்பரையியல், மரபு இயைஇயல், மரபு இயைபியல், பிறப்புச்சூழலியல் எனப் படுகின்றது.

Ecology என்பதை வளைச லியல் எனக் கூறலாம் என வகுத்துள்ளோம். எனவே,

மரபு வளைசலியல் – Genecology எனலாம்.

Genecology

(தொடரும்

இலக்குவனார்திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Sunday, April 17, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1367 – 1380 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1356 – 1366 இன் தொடர்ச்சி)

1367. பொதுமைக் கருத்தியல்

Communist Ideology

1368. பொம்மையியல்

Plangonology

 

1369. பொருத்தப்பாட்டு உளவியல்

கருத்திய உளவியல் எனக் குறிக்கின்றனர். காரண காரியம் பொருந்தி வரும் உளவியல் என்றுதான் பொருள். எனவே, பொருத்தப்பாட்டு உளவியல் எனக் குறித் துள்ளோம்.

Rational Psychology

1370. பொருளாதாரக் குமுகவியல் (மெய்யியல்துறை)

Economic Sociology

1371. பொருளாய்வியல்

Semiology2 / Semiotics2

1372. பொருளியப் புள்ளியியல்

Economic statistics

1373. பொருளியல்

Economics

1374. பொருளியல் மானிடவியல்

Economic anthropology

1375. பொருள் ஒழுக்கவியல்

இதனை வாழ்க்கை நியமவியல் என்கின்றனர். நியமம் என்பது செய்கடன், முறைமை, கடன் முதலான பலபொருள்களைக் குறிக்கிறது. இங்கே வாழ்க்கை நியமவியல் என்பது பொருள்சார் ஒழுக்கத்தைக் குறிக்கிறது. எனவே,

பொருள் ஒழுக்கவியல் bionomics (2) எனலாம்.

Bionomics (2)

1376. பொருள்முதல் ஏரணவியல்

Materialistic Dialectics

1377. பொருள்வளப் புவியியல்

Economic geology

1378. பொருள்விளக்கக் குமுகவியல்

Interperetative sociology

1379. பொழுதுபோக்கு வளைசலியல்

Recreation ecology

1380. பொறிஊர்தியியல் /  பொறி ஊர்திப் பொறியியல்

automobile என்பது ஃபிரெஞ்சு சொல். பழங்கிரேக்கத்தில் autós என்றால் ‘தான்’ எனப் பொருள். Mobile என்னும் ஃபிரெஞ்சு சொல்லின் பொருள்கள் நகருதல், இயங்குதல். எனவே, தானியங்கி என்பது நேர் பொருளாகிறது. எனினும் இவ்வூர்திகள் தானாக இயங்குவன அல்ல. பொறியால் இயங்குவன. எனவே, பொறி ஊர்தி என்பதே பொருத்தமாக இருக்கும்.

Automobile Engineering

(தொடரும்

இலக்குவனார்திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Saturday, February 19, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 803 – 819 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல







(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  780 – 802 இன் தொடர்ச்சி)

803. தாங்குட்டியல்                                                                       

தாங்குட்டு(Tangut) மக்களின் மொழி, கலை,

பண்பாடு, வரலாறு முதலியன குறித்து

 ஆராயும் துறை தாங்குட்டியல் எனப்படுகிறது.


804. தாசியா இயல்        

தாசியா இயல்(Dacology) என்பது திரேசியலின்(Thracology ) ஒரு பிரிவாகும். பழைய உரோமானியப் பேரரசின் தாசியா நாட்டு மக்களின்  மொழி, இலக்கியம், வரலாறு, சமயம், கலை, பண்பாடு, பொருளியல், நெறிமுறைகள் குறித்து ஆராயும் துறையே தாசியா இயல்.

Tangutology


Dacology

805. தாடைஎலும்பியல்

தாடை எலும்பு என்னும் பொருள் கொண்ட கிரேக்கச் சொல்லின் அடிப்படையில்  Siagonology சொல் உருவானது.

Siagonology

806. தாதுசார் நோயியல்

Humoral Pathology

807. தாந்தே இயல்

Dantology

808. தாமிரக் குளவியியல்

Chalcidology – தாமிரநிறக் குளவியியல் > தாமிரக் குளவி யியல்

 khalkos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தாமிரம் / செம்பு. இதன் நிறம் உடைய குளவி இதே பொருளில் Chalcid என அழைக்கப்பெறுகிறது.

தாமிரக் குளவி யியல் – Chalcidology எனலாம்.

Chalcidology

809. தாவர உயிர்மி யியல்

Plant Cytology

810. தாவர உள்ளியல்

Phytotomy

811. தாவர நுண்ணுயிரி வகை

Spirogyra

812. தாவர நோயியல்

Phytopathology

813. தாவர வடிவியல்

Plant morphology

814. தாவர வரைவியல்

Phytography

815. தாவரக் குமுகவியல்

Phytosociology

816. தாவர வளைசலியல்

Plant Ecology

817. தாவரத் தொல்லியல்

Palynology (2)

818.தாவர நோய்ம யியல்

Phytobacteriology

819. தாவரப் புவி யியல்

Phyto என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் தாவரம்.

Geographia என்னும் இலத்தீன், பழங்கிரேக்கச் சொற்களின் பொருள் புவி.

எனவே, தாவரப் புவியியல். ஆனால், அச்சுப்பிழையாகக் கருதும் வகையில் ஓர் அகராதியில் உடற்பண்டுவ இயல் எனக் குறிக்கப்பெற்று மற்றொரு தொகுப்பு அகராதி யிலும் இடம் பெற்றுவிட்டது. முதலில் நான்  ஆராயாமல் இதைக் குறித்து விட்டேன். பின்னர்த் தவற்றினை உணர்ந்து திருத்தியுள்ளேன்.

சிலர் புவித்தாவர இயல் என்கின்றனர்.அதனினும் தாவரப்புவியியல் என்பதே ஏற்றது.

Phytogeography

 

(தொடரும்) 

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Thursday, January 20, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 378 – 395 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  371-377 இன் தொடர்ச்சி)

378. ஒண் செடியியல்

Orchidology

379. ஒத்திசைவியல்

Cohomology / Harmonology / Synchronology

380. ஒப்பனை யியல்

 

381. Cosmetology  – எழிலியல், அழகியல், அழகு சாதனவியல், அழகுக் கலையியல் எனக் குறிப்பிடுகின்றனர்.

 Cosmeto என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உடையும் அணியும் எனப் பொருள்.

Cosmetics என்றால் ஒப்பனை யியல் எனப் பொருள்.

ஒப்பனையியல் என்பது மேற்குறித்தவற்றை உள் ளடக்கியதாகும்.

எனவே, ஒப்பனையியல் –  Cosmetology  / Cosmetics எனலாம்.

Cosmetology  / Cosmetics

382. ஒப்புமை யியல்

Analogy

383. ஒப்பியத் தொற்றியல்

Comparative Epidemiology

384. ஒப்பிய உளவியல்       

Comparative Psychology

385. ஒப்பிய மொழியியல்

Comparative linguistics

386. ஒப்பியச் சூலியல்        

Comparative Embryology

387. ஒப்புமைக்காலவியல்

 

Relative Chronology என்பது, சார்  காலக்கணிப்பியல், படுகைச் சார்புக் கால யியல், உறவினர் காலவரிசை என மூவகையாகக் குறிக்கப் பெறுகிறது. இவற்றுள் உறவினர் என்பது தவறான புரிதலில் இடம் பெற்ற சொல்லாட்சி. காலவரிசைமுறை குறித்த chronology என்பதற்குக் காலயியல் என்கிறோம். Relative என்பது தொடர்புபடுத்தி ஒப்பிட்டு ஆய்வதைக் குறிக்கிறது. எனவே , ஒப்பீட்டுக் காலவியல் என முதலில் குறிப்பிட்டேன். ஒப்பீடு என்பது Comparative எனப் பொருள் கொள்ள நேரிடலாம். எனவே, ஒப்புமை என்பது ஏற்றதாக இருக்கும் என்பதால் ஒப்புமைக் காலவியல் எனக் குறித்துள்ளேன்.

Relative Chronology

388. ஒப்புமைப் பரப்புருவியல்

 

Relative Topology என்பதைச் சார்புப் பரப்புருவியல், சார் திணையம், உறவினர் இடவியல் எனக் குறிக்கின்றனர். தவறான புரிதலில் உருவானது உறவினர் இடவியல். Relative Topology என்பதற்கு ஒப்பீட்டுத் திணையியல் என முதலில் குறித்திருந்தேன். இது கணிதத்துறை என்பதால் பரப்புருவியல்தானே சரியாக இருக்கும். மேலும் ஒப்பீடு என்பது Comparative எனப் பொருள் கொள்ள நேரிடலாம். எனவே,  ஒப்புமைப் பரப்புரு வியல் என்பதே ஏற்றது என மாற்றியுள்ளேன்.

Relative Topology

389. ஒப்பீட்டுத் தொன்மவியல்

Comparative mythology

390. ஒப்புக் கிளைமொழியியல்      

Comparative Dialectology

391. ஒப்புமை நீர்மயியல்

Hydraulic analogy

392. ஒருகாலக் கிளை மொழியியல்

Synchronic Dialectology

393. ஒருங்கு  வளைசலியல்

Synecology

394. ஒருங்கொளியியல்

 

Integrated Optics –   ஒருங்கிணை ஒளியியல், ஒருங்கிணைந்த ஒளியியல், தொகு ஒளியியல், தொகுப்பு ஒளியியல் எனக் கூறுப்படுகின்றது. நாம் சுருக்கமாக

ஒருங்கொளியியல் – Integrated optics  எனலாம்.

Integrated optics

395. ஒருமை யியல்

 

ஒன்று என்னும் பொருள் கொண்ட heîs என்னும் பழங் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது.

Henology

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000