(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1356 – 1366 இன் தொடர்ச்சி) |
1367. பொதுமைக் கருத்தியல் | Communist Ideology |
1368. பொம்மையியல் | Plangonology
|
1369. பொருத்தப்பாட்டு உளவியல் கருத்திய உளவியல் எனக் குறிக்கின்றனர். காரண காரியம் பொருந்தி வரும் உளவியல் என்றுதான் பொருள். எனவே, பொருத்தப்பாட்டு உளவியல் எனக் குறித் துள்ளோம். | Rational Psychology |
1370. பொருளாதாரக் குமுகவியல் (மெய்யியல்துறை) | Economic Sociology |
1371. பொருளாய்வியல் | Semiology2 / Semiotics2 |
1372. பொருளியப் புள்ளியியல் | Economic statistics |
1373. பொருளியல் | Economics |
1374. பொருளியல் மானிடவியல் | Economic anthropology |
1375. பொருள் ஒழுக்கவியல் இதனை வாழ்க்கை நியமவியல் என்கின்றனர். நியமம் என்பது செய்கடன், முறைமை, கடன் முதலான பலபொருள்களைக் குறிக்கிறது. இங்கே வாழ்க்கை நியமவியல் என்பது பொருள்சார் ஒழுக்கத்தைக் குறிக்கிறது. எனவே, பொருள் ஒழுக்கவியல் bionomics (2) எனலாம். | Bionomics (2) |
1376. பொருள்முதல் ஏரணவியல் | Materialistic Dialectics |
1377. பொருள்வளப் புவியியல் | Economic geology |
1378. பொருள்விளக்கக் குமுகவியல் | Interperetative sociology |
1379. பொழுதுபோக்கு வளைசலியல் | Recreation ecology |
1380. பொறிஊர்தியியல் / பொறி ஊர்திப் பொறியியல் automobile என்பது ஃபிரெஞ்சு சொல். பழங்கிரேக்கத்தில் autós என்றால் ‘தான்’ எனப் பொருள். Mobile என்னும் ஃபிரெஞ்சு சொல்லின் பொருள்கள் நகருதல், இயங்குதல். எனவே, தானியங்கி என்பது நேர் பொருளாகிறது. எனினும் இவ்வூர்திகள் தானாக இயங்குவன அல்ல. பொறியால் இயங்குவன. எனவே, பொறி ஊர்தி என்பதே பொருத்தமாக இருக்கும். | Automobile Engineering |
(தொடரும்)
No comments:
Post a Comment