Showing posts with label தமிழ்ச்சொல்லாக்கம். Show all posts
Showing posts with label தமிழ்ச்சொல்லாக்கம். Show all posts

Wednesday, August 10, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 346-354

 அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்: 345 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 346-354

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

346. Tamil Cyclopedia – தமிழ்க் களஞ்சியம்

தமிழ்க்களஞ்சியம் (Tamil cyclopedia) இப்பெயர் கொண்ட நூலொன்று மாத சஞ்சிகையாக வெளிவருகிறது. பகுதி ஒன்று வெளி வந்தது. இதில் தமிழின் உற்பத்தி, தமிழின் தொன்மை, தமிழின் பதப்பொருள், தமிழ்ச்சிறப்பு (தமிழ் உயர்தனிச் செம்மொழி, தமிழ்த் தெய்வ பாஷை, தமிழ் மூலபாஷை) தமிழ்ச் சங்கம், தலைசங்கம் முதலிய விசயங்க ளடங்கியிருக்கின்றன. சஞ்சிகையொன்றுக்கு விலை அணா 8. வேண்டியவர்கள் சென்னை பிரம்பூர் தமிழ் சைக்ளோபீடியா ஆபீசுக்கு எழுதிப் பெற்றுக் கொள்ளலாம்.

இதழ்   :           சித்தாந்தம் (1918 சனவரி) தொகுதி 7, பகுதி-1 பக்கம், 16.

சொல்லாக்கம்  :           பூவை கலியாண சுந்தர முதலியார்

347. Double Pneumonia – அள்ளு மாந்தம்

என் குழந்தைகளில் 4 பிராயமுள்ள குழந்தை ஒன்றுக்கு அள்ளு மாந்தம் (Double Pneumonia) என்னும் கொடிய வியாதியால் வருந்தும் போது அவரது தேவி சித்த பூரணச் சந்திரோதயத்தின் பெருமையையும், அது அக்கொடிய வியாதியைக் குணப்படுத்தினதையும் முக்கியமாய்த் தெரிவிக்கப் பிரியப்படுகிறேன். இவரது சித்தவைத்தியத்தின் திறமையை என்னால் சொல்லத் திறமல்ல.

சி. ஆர். ஆதிகேசவலு (நாயுடு),

Shrodtriathar, Monicipal Commissioner

348. Weaver’s Loom – தறிமரம்

தறிமரம் : தறியின் மரம் (தறி = A weaver’s Loom)

நூல்      :           ரிப்பன் ஐந்தாம் வாசகப் புத்தகம் (1918) பக்கம் – 56

நூலாசிரியர்      :           தி. செல்வக் கேசவராய (முதலியா)ர். எம்.ஏ., (சென்னை பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்)

349. Company – கூட்டம்

இங்க்லண்டிலிருந்து சில இங்க்லிசுகாரர் வருத்தகம் செய்யும்படி ஒரு கூட்டமாக (கம்பெனியாக) இந்தியாவுக்கு முதலில் வந்தனர். தங்கள் வருத்தகச் சரக்குகளைப் பத்திரப்படுத்தி வைக்கும் பொருட்டு அவர்கள் பொம்பாய், கள்ளிக்கோட்டை, சென்னை, கல்கத்தா முதலான பட்டினங்களில் கொஞ்சங் கொஞ்சம் இடம் சொந்தமாகச் சம்பாதித்து, அங்கங்கே சரக்கறைகளைக் கொஞ்சம் இடம் சொந்தமாகச் சம்பாதித்து, அங்கங்கே சரக்கறைகளைக் கட்டிக் கொண்டார்கள்,

மேற்படி நூல் : ரிப்பன் ஐந்தாம் வாசகப் புத்தகம் (1918) பக்கம் -2

350. அனுசரன் —        ஏவற்காரன்

351. சந்திரசாலை        —        நிலா முற்றம்

352. சாரம்       —        பொருள், உள்ளீடு

353. பிரதாபம் —        மேன்மை

354. விமானம் —        ஏழடுக்கு வீடு

                        நூல்      :           மேகதூதக் காரிகை (1918) (காளிதாச மகாகவி)

மொழி பெயர்த்தியற்றியவர்     :           சுன்னாகம் அ. குமாரசுவாமி(ப் பிள்ளை)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, August 8, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 345

 அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்: 342 – 344 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 345

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

 345. கலியாண சுந்தரம் – மணவழகு

1917இல் திசம்பர் மாதம் 24உ செம்பியத்தில் கூடிய மகாசமாசக் கூட்டத்தில் நடந்த தீர்மானங்கள்.

1. இவ்வருடத்து அறிக்கைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டது.

2.

சிரீமான் – கி – குப்புச்சாமி முதலியார் அவர்கள் ஐந்து வருடமாகப் புரிந்த உதவிக்காக சமாசம் நன்றி பாராட்டுகின்றது.

சபைத்தலைவர்            :           சித்தாந்த சரபம் – அட்டாவதானம் சிவபிரீ – கலியாண கந்தர யதீந்திர சுவாமிகள், சென்னை

உதவி சபைத் தலைவர் :           சிரீமான் செ.எம். நல்லசாமிப் பிள்ளையவர்கள், B.A.; B.C.; High Court Vakil, மதுரை

சிரீமான் T. நல்லசிவன் பிள்யைவர்கள், B.A., B.L., High Court Vakil சென்னை

காரியதரிசி       :           சிரீமான் கே. சுப்பிரமணியப் பிள்ளை. அவர்கள் எம்.ஏ., எம்.எல், பொக்கிதார் : சிரீரீமான் W.T. கோவிந்தராச முதலியார் அவர்கள், சென்னை

பத்திராசிரியர்   :           சித்தாந்த சரபம் -அட்டாவதானம் சிவசிரீ – கலியானசுந்தர யதீந்திரவர்கள் சென்னை (மணவழகு)

இதழ்   :           சித்தாந்தம் (1918) தொகுதி -7 பகுதி – 1 பக்கம் – 21, 22

 கலியாண சுந்தரம் – மணவழகு (1918) (மற்றொன்று)

ம-ள-ள -சிரீ சிரீபெரும் பூதூர் குமார வேலாயுத முதலியார் என்பவர் சிவானந்தச் செல்வராகிய தாயுமான சுவாமிகள் பாடலுக்கு ஒரு தக்கவுரை எழுதி யுபகரிக்கின் சஞ்சிகை ரூபமாக வெளிப்படுத்திக் கொள்வே னென, அவர் வேண்டுகோளுக் கியைந்து சைவாசார துல்யரான தாயுமான சுவாமிகள் திருவடித் தியானத்தால் திருவருளை முன்னிட்டு ஆசிரியர் இருதயத்துண்மை சூழ்ந்து, பர பிரம சூத்திரமாகிய சித்தாந்த மகா சூத்திரம் என்று அறிஞரானுய்த் தோதப் பெறுஉம் வடமொழிச் சிவஞான போத மொழி பெயர்ப்பாகிய தென்மொழிச் சிவஞான போதமாதி மெய்கண்ட சாத்திரங்கட்கும் திராவிட திராவிட மகா பாசியாதிகட்கும் இணங்கப் பலவரிய பெரிய சுத்தாத்துவித சித்தாந்த சாத்திரப் பிராமாணங்கள் எண்ணில காட்டி, மெய்கண்ட விருத்தியுரை என வொன்றியற்றினான்.

ஆன்மாவிற்கு இயற்கையாக வமைந்துள்ள திரோதானத்தால் ஏதாகிலும் மாறுபாடு விளைந்திருக்குமேல் முன்பின்னராய்ச்சியால் முறைப்படுத்தி வாசித்துக் கொள்ளும்படி சன்மார்க்கர்களை வந்தனத்துடன் கேட்டுக் கொள்ளுகின்றனன்.

சென்னைப் பட்டணம் 1918

– மணவழகு

கீலக ௵ கன்னி இரவி

நூல்      :           தாயுமான சுவாமிகள் திருப்பாடற்றிரட்டு முதலிய மூலமும் சித்தாந்த சரபம் அட்டாவதானம் பூவை – கலியாண சுந்தர முதலியார் மெய்கண்ட விருத்தியுரையும். பக்கம்-2

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Saturday, August 6, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 342 – 344

 அகரமுதல






(தமிழ்ச்சொல்லாக்கம்: 340 – 341 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 342-344

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

342. நவநீதகிருட்டிணன் – வெண்ணெய்க்கண்ணன்

இது மகா-ள-ள-சிரீ பிரசங்க வித்துவான் நவநீதகிருட்டிண பாரதியென்றும் கண்ணபுரத்துக் கவுணிய வெண்ணெய்க் கண்ணனார் இயற்றியது.

நூல்      :           சத்திய அரிச்சந்திரப் பா (1916 பக்கம் – 4.

நூலாசிரியர்      :           மதுரை, தல்லாகுளம் சி. முத்திருள முதலியார்.

நூலைப் பரிசோதித்தவர் :           பிரசங்க வித்துவான் நவநீத கிருட்டிண பாரதியார்.

343. தரித்திரம் – நல்கூர்வார்

இலர்பல ராகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர் என்னும் இக்குறளைக் கவனியுங்கள். உலகத்தில் செல்வர்கள் சிலராக, நல்கூர்வார் (தரித்திரர்) பலராதற்குக் காரணம் யாதென் றாராய்ந்துழி; அது தவஞ்செய்வார் சிலராகவும் செய்யாதார் பலராதலும் போல வென்றார்.

நூல்      :           தவம் (1917) பக்கம் – 4.

நூலாசிரியர்      :           ச. தா. மூர்த்தி முதலியார் (தமிழ் நாட்டில் தமிழனே ஆளவேண்டும்; தமிழ்க்கொடி பறக்கவேண்டும் என்று முதன்முதல் கவிதை பாடியவர்)

344. களந்தை கிழான்

சைவ சித்தாந்த சமாசத்தின் பன்னிரண்டாவது அண்டுவிழா இச்சமாசத்தின் பன்னிரண்டாவது ஆண்டு நிறை விழா 1917ஆம் வருடம் திசம்பர் ௴ 23, 24, 25ஆம் தேதிகளில் சென்னைக்கடுத்த பிரம்பூர் செம்பியத்தில் அமைத்துள்ள ஓர் நாடகக் கொட்டகையில் கூடி சமாசத்தின் நிருவாக சபை அங்கத்தவரில் ஒருவராய் வெம்பியம் கிராம முனிசீப் சிரீமான் – பண்டிதரத்தினம் புழலை – திருநாவுக்கரசு முதலியாரவர்கள் (Honorary Magistrate) பெரு முயற்சியாய் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சித்தாந்த சரபம் – அட்டாவதானம் சிவபூ கலியான சுந்தர யதீந்திர சுவாமிகள் அத்திராசனம் வகித்து விழாவை அணிபெற நடத்தினர்.

களந்தை கிழான் (கி. குப்புச்சாமி)

இதழ்   :           சித்தாந்தம் (1918 சனவரி) தொகுதி – 7, பகுதி – 1, பக்கம் – 17,

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்