Showing posts with label மொழிமாற்றச் சொற்கள். Show all posts
Showing posts with label மொழிமாற்றச் சொற்கள். Show all posts

Monday, September 18, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 831-850

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 822-830– தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 831-850

(சொல்மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழிமாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

831. க்ருக(ஹ)ம் –           வீடு

832 ஆகாச(ஸ)ம்           –           வெளி, விண்

833. ச(ஸ)ந்தோச(ஷ)ம்  –           மகிழ்ச்சி

834. ஆகாரம்    –           உணவு

835. (இ)ரதம்    –           தேர்

836. (இ)லாவண்யம்     –           அழகு

837. வாக(ஹ)னம்         –           ஊர்தி

838. அலங்காரம்           –           அணி

839. ச(ஸ)ர்ப்பம்           –           பாம்பு

840. ஆபரணம் –           இழை

841. உத்ச(ஸ)வம்          –           திருவிழா

842. வித்வான்  –           அறிஞன்

843. புட்(ஷ்)பம் –           பூ, மலர்

844. கசுட்(ஷ்)டம்         –           வருத்தம்

845. தர்மம்       –           அறம்

846. ப்ரயோச(ஜ)னம்    –           பயன்

847. பார்யை    –           மனைவி

848. வரம்         –           காய்ச்சல்

849. புருச(ஷ)ன் –           கணவன்

850. உட்(ஷ்)ணம்          –           சூடு

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Sunday, March 26, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 663 -670

 




( தமிழ்ச்சொல்லாக்கம் 654-662 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 663- 670

(சொல்மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழி மாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

663. பிரதமை திதி               –              முதல்நாள்

664. துவிதியை திதி            –              இரண்டாம் நாள்

665. திரிதியை திதி              –              மூன்றாம் நாள்

666. சதுர்த்திய திதி             –              நான்காம் நாள்

667. பஞ்சமி திதி –              ஐந்தாம் நாள்

668. சசுட்டி திதி  –              ஆறாம் நாள்

முருகன் வரத்தில் அசுரர்கள் பிறந்து தேவர்களுக்கிடுக்கண் செய்வதையொழிக்க சிவன் தனது மனையாளிடம் மோகிக்குங்கால் அவர் கண் வழியாக ஐப்பசி மாத பூர்வசத்துப் பிரதமை திதியில் (முதல்நாள்) காமமாகிய வீரியந் தோன்றிற்று. அந்த விந்தே துவிதியை திதியில் (இரண்டாம் நாள்) பார்வதி கருப்பையிற் செலுத்தப்பட்டது. அதே விந்து திதியைத் திதியில் (மூன்றாம்நாள்) பார்வதி கருப்பையிலிருந்தெடுத்து, அக்கினி பகவானிடம் கொடுக்க அவனந்த அசுசியை வகித்திருந்து சதுர்த்திய திதியில் (நான்காம் நாள்) கங்கை நதியில் எறிந்துவிட, கங்கை நதி அக்கலிதத்தைச் சரவண குட்டையில் ஒதுக்கிவிட அவைகள் ஆறு குழந்தைகளாக அக்குழந்தைகளுக்குப் பஞ்சமி திதியில் (ஐந்தாம் நாள்) கிருத்திகா தேவிகளால் பாலூட்டி உயிர் நிறுத்த சசுட்டி திதியில் (ஆறாம் நாள்) பார்வதி தன் கணவனுடன் வந்து அந்த ஆறு குழந்தைகளையும் அந்தக் குளத்திலிருந்து சேர்த்தெடுக்க ஆறு தலைகளும், பன்னிரு புசங்களும், உடல் ஒன்றும் கால்களிரண்டுமாய்த் திரண்டு விட்டதாம். இந்த இயல்பலாத  பிறப்புடையவன்தான் ஆறுமுகனாம்.

நூல்        :               சிரீ ஆறுமுகக் கடவுள் வரலாறு முதற்பதிப்பு (1930) பக்கம் – 27

நூலாசிரியர்         :               க. அயோத்திதாசு பண்டிதர்

669. Desert – விளைவிலாப் படுநிலம்

முருகன் பிறந்தது இமயமலை கங்கை நதி யோரத்துச் சரவண குளமாயிருக்க, வானலோக மேறுந்திடன் முருகனுக்கேதோ? பார்ப்பார் மத விட்ணு விளைவிலாப் படுநிலமுள்ள (Indian Desert) ஆரிய வர்த்தனமென்னும் வைகுந்த ஊராகிய (இ)ராசபுத்தானா வருகிலும், பிரமன் பருமா தேசத்திலும், சிவன் காசுமீர் தேசத்திற்குச் சிறிது வடகிழக்கில் சுமார் நூற்றுஐம்பது மைல் தூரமுள்ள கைலை மலை குகையிலு மிருந்தார்க ளென்றால், தேவேந்திரன் வானலோகத்திலிருந்திருப்பானா? அல்லது அமராவதி ஆற்றோர மிருந்திருப்பானா? வென்று நீங்களே நினைத்துப் பாருங்கள்.

நூல்        :               சிரீ ஆறுமுகக் கடவுள் வரலாறு முதற்பதிப்பு (1930) பக்கம் – 30

நூலாசிரியர்         :               க. அயோத்திதாசு பண்டிதர்

670. Magic Lantern — படக்காட்சிக் கருவிகள்

சொற்பொழிவாளர்கள் பலரை அமைத்து அவர்கட்குத் தக்க ஊதியங்கள் அளித்து இச்சென்னை நகரின் மட்டுமேயல்லாமற் சென்னை மாகாண முழுமையும் அளவிலாச் சொற்பொழிவுகள் அங்கங்கும் நிகழ்த்தி நம்மவர்களைப் புலால் மறுக்கும்படி செய்தல் வேண்டும். விரிவுரைகட்குப் படக்காட்சிக் கருவிகளும் (Magic Lantern) பயன்படுத்துதல் வேண்டும்.

நூல்        :               ஏன் புலால் மறுத்தல் வேண்டும்? (1930) ஒரு வேண்டுகோள் – மேலட்டையின் மூன்றாம் பக்கம்

நூலாசிரியர்         :               பண்டிதர் பாலசுந்தரம் பிள்ளை

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Sunday, March 19, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 654-662

 




தமிழ்ச்சொல்லாக்கம் 648-653 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 654-662

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. 

கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

654. உத்யானம் – பூத்தோட்டம்

உத்யான பத்திரிகை என்ற வடமொழியில் வெளிவரும் மாத சஞ்சிகை – ஒரே உரூபாய் சந்தாவுள்ள மாத சஞ்சிகை, திருவையாறு என்று கூறப்படும் ஊரிலிருந்து வெளிவரும். இதை ஐந்து ஆறுகளின் மத்தியில் விளங்கும் உன்னதமான உத்யானத்தில் -பூத்தோட்டத்தில் வீசும் வாசனையைக் கிரகித்து வெளிவரும்.

நூல்   :           சுயமரியாதை கண்டன திரட்டு (1929) பக்கம் – 8

கட்டுரையாளர்    :           நாரதர்

சரிகை         –           பொன்நூல் (641 காண்க)

655. சீவன்முத்தர் –           கதிமேலார்

656. மோட்சம்        –           பேராப்பதம்

657. சையோகம்   –           புணர்ச்சி

658. கவிவாணர்   –           பாவலர்

நூல்   :           நளாயினி வெண்பா (1929)

நூலாசிரியர்         :           திருப்பத்துார் கா.அ. சண்முக முதலியார்.

659. City Police – பட்டணக் காவலாளிகள்

1459இல் ஃகுமாயூன் தன் படைகளுடன் கிளர்ச்சித் தலைவனாகிய தெலிங்கானா சமீன்தாரை சயிக்கப் படை எடுத்த போது பீதரில் ஓர் கலகம் நேர்ந்தது. அதை அல்லாவுத்தீன் கேள்வியுற்று பீதர் சென்று பட்டணக் காவலாளிகள் (City Police) இரண்டாயிரம் நபர்களை அசாக்கிரதை என்னும் குற்றத்திற்காகக் கொலை செய்தான்.

இதழ்     :               ஆனந்த போதினி தொகுதி – 15, (15.12.1929) பகுதி – 6 பக்கம் 376

கட்டுரையாளர்  :               கதாரத்ன சே. கிருஷ்ணசாமி சர்மா

*

660. வசனம் – உரைநடை

661. (இ)ரசவாதிகள் – பொன் செய்வோர்

நூல்        :               மதிமோச விளக்கம் (1929)

(நான்காம் பதிப்பு) பக்கம் : 4

மொழியாக்கம்  :               நா. முனிசாமி முதலியார்

(‘ஆனந்த போதினி’ பத்திராதிபர்)

662. அந்தப்புரம் – உள்ளறை

‘அந்தர்’ என்னும் வடமொழித் திரிபு ஆதலால் தற்பவம்.

நூல்        :               நீதிநெறி விளக்கம் மூலமும் விருத்தி உரையும் (1929) பக்கம் : 35

உரையாசிரியர்   :               சோடசாவதானம் தி. சுப்பராய செட்டியார்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Saturday, January 14, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 601-605

 அகரமுதல




( தமிழ்ச்சொல்லாக்கம் 597 – 600 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 601-605

(சொல்மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழி மாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

601. போசன பாத்திரம் –           பரிகலம்

602. அக்கினிச் சுவாலை         –           தீக்கொழுந்து

நூல்   :           திருக்குற்றாலக் குறவஞ்சி (1927)

அரும்பதவுரை     :           மதுரைத் தமிழ்ச் சங்க வித்துவான் மு. ரா. அருணாசலக்கவிராயர்.

603. Agricultural Stage        –           பயிரிடும் பருவம்

604. Symbol  –           அடையாளக் குறி

605. பீடம்     –           ஆவடையார்

நூல்   :           வேளாளரது தோற்றமும் அவர்தம் வரலாறும் (1927)பக்கங்கள் 9, 31, 32

நூலாசிரியர்         :           வல்லை. பாலசுப்பிரமணியன்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Friday, November 18, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 522-526

 அகரமுதல







( தமிழ்ச்சொல்லாக்கம் 516 -521 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 522-526

(சொல்மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழி மாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

522. Director – தலைமையோர்

தூத்துக்குடியில் சுதேசிக் கப்பற் கழகம் ஏற்பட்டிருந்த காலத்தில் நமது நண்பர் அதைத் தொடங்கினோர்க்கு வேண்டும் உதவிகளை நெல்லையிலிருந்து புரிந்து வந்தபடியாலும், பொதுவாக உலக நடையில் சிறந்த அநுபவமுடையவரா யிருந்தபடியானும், மேற்படி காரியங்களை நிகழ்த்தும் தலைமையோர் (டைரக்டர்)களில் இவரும் ஒருவராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

மேற்படி நூல் : பக்கம் – 60

523. அரித்துவாரம் – சிங்கத்துளை

நூல்   :           பிரமானந்த நான்மணி மாலை (1924 பக்கம் 13

நூலாசிரியர்         :           பி.பி.நாராயணசாமி நாயுடு (திருநெல்வேலி சிந்துபூந்துறை பென்சன் போலீசு இன்சுபெக்டர்)

524. வசன நடை – ஒழுக்கம்

பத்மினி பெயர்க்கிணங்க நல்லொழுக்கம் நன்கமைந்தது; (ஒழுக்கம்-வசனநடை என்பதும் ஒருபொருள்) எவர்க்கும் எளிதில் பொருள் விளக்கும் எழிலது, செந்தமிழணங்கின் கீர்த்தியைத் தெரிவிப்பது நடந்தே நவில்வது.

நூல்   :           பத்மினி (1924 பக்கம் : 6)

தலைப்பு     :           சில தமிழ் அபிப்பிராயங்கள்.

சொல் விளக்கம்  :           திருப்பாதிரிப்புலியூர் சிரீமத்து ஞானியார் மடாலயத்து சுவாமிகள்

525. பிரசவம் – பிள்ளைப்பேறு

பூர்ணமான பிண்டாண்டத்தில் (1) குழந்தை அல்லது பிண்டம், 2) குழந்தை மிதந்து கிடக்கும் பனிநீர், 3) பனிநீரையடக்கஞ் செய்து கொண்டிருக்கும் சவ்வுகள், 4) மாயை, கொப்பூழ் கொடி, இவைகளடங்கி யிருக்கின்றன. சனன வாய்க்காலின் வழியாய்ப் பிண்டாண்டமானது வெளியில் தள்ளும் சக்திகளால் வெளியாகும் விதானத்திற்குப் ‘பிரசவம்’ அல்லது ‘பிள்ளைப்பேறு’ என்று சொல்லப்படும்.

நூல்   :           மருத்துவ மாணாக்கியர்களுக்கு உபயோகமான கைப்புத்தகம் (1924) பக்கம், 15.

நூலாசிரியர்         :           கோ. கி. மதுசூதனராவு

526. Typewriting – கையச்சு

கும்பகோணத்தில் முனிசிபாலிடியார் ஒரு சித்திர பாடசாலை வைத்திருக்கிறார்கள். அதில் சுமார் 100 பிள்ளைகள் உயர்ந்த சித்திர வேலை செய்யக் கற்றுக் கொள்ளுகிறார்கள். டைப்ரைட்டிங் என்ற கையச்சு வேலையில் பயில பல பாடசாலைகள் எங்குப் பார்த்தாலும் இருக்கின்றன.

நூல்   :           தஞ்சாவூர் சில்லாவின் வரலாறு (1924 பக்கம் : 87)

நூலாசிரியர்         :           ஆர். விசுவநாத ஐயர் (Assistant, Govt., Model High School, Saidapet)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்