Monday, July 7, 2025

வெருளி நோய்கள் 76 -80 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 71-75 தொடர்ச்சி)

76.) 216 ஆம் எண் வெருளி – Diakosioihekkaidekaphobia
216 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 216 ஆம் எண் வெருளி.

முறையே diakosioi, hekkaideka ஆகிய கிரேக்கச் சொற்கள் எண் 200, எண் 16 ஆகியவற்றைக் குறிக்கும்.

666 ஆம் எண் வெருளி உள்ளோர் 6x6x6 = 216 என்பதால் 216 ஆம் எண்குறித்தும் பேரச்சம் கொள்வர்.
00

77.) 22 ஆம் எண் வெருளி – Vigintiduphobia
22 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 22 ஆம் எண் வெருளி.

20 ஐக் குறிக்கும் கிரேக்கச் சொல் viginti 2 ஐக் குறிக்கும் கிரேக்கச் சொல் dyo. 22 என்பது வாழ்க்கை மரத்துடன்(Tree of Life) தொடர்புடையது எனக் கருதுகின்றனர். எண் 22 இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என அஞ்சுவோர் உள்ளனர். இதனால் 22 குறித்த பெருங்கவலையும் பேரச்சமும் உருவாகின்றன. எண் ஆருடத்தில் 22 எதிர்காலத்திற்கு நல்ல எண் அல்ல எனக் கூறப்படுவதை நம்புவதால் 22 கண்டு அஞ்சுவோர் உள்ளனர்.
00

78.) 23 ஆம் எண் வெருளி – Eikositriophobia
23 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 23 ஆம் எண் வெருளி.

eikosi என்னும் கிரேக்கச் சொல் 20ஐயும் trio என்னும் கிரேக்கச் சொல் மூன்றையும் குறிக்கும்.
பெரும்பாலான நிகழ்வுகள் எண் 23 உடன் நேரடியாகத் தொடர்புடையன என்று எண்ணுவோர் உள்ளனர். 13 ஆம் எண்ணிற்கு அடுத்துப் பேரச்ச எண்ணாக 23 ஐக்கருதுகின்றனர்.
கப்பல் நேர்ச்சி ஒன்றில் அதன் தலைவர் கிளார்க்கு என்பவர் இறந்ததாகவும் அதன்பின் அவர் கப்பலைச்செலுத்திய நாளில் இருந்து ஒவ்வோ் 23 ஆவது ஆண்டில் ஒருவர் இறந்ததாகவும் புதின எழுத்தாளர் வில்லியம் பாரோ (William S. Burroughs) கூறியதை நம்புவோர் 23 ஆம் எண் மீது பேரச்சம் கொள்கின்றனர். பறத்தி எண் 23 நேர்ச்சிக்குள்ளாகியது. அதன் தலைமை வலவன்( ) பெரும் கிளார்க்கு என்பதுதான். எனவே, 23 ஆம் எண் கொண்ட எந்த ஊர்தி அல்லது வானூர்தி அல்லது கப்பலில் பயணம் செய்ய அஞ்சுவோர் உள்ளனர்.23 ஆம் அகவையில் வாழ்வு முடிந்துவிடும் என்று பேரச்சம் கொள்வோரும் உள்ளனர்.
00

79.) 250 ஆம் எண் வெருளி – Diakosioipentekontaphobia
250 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 250 ஆம் எண் வெருளி.

diakosioi = 200; pentekonta = 50.

சீனர்கள் எண் 250ஐத் தீப்பேறு எண்ணாகக் கருதுகின்றனர். மண்டரின் மொழியில் இந்த எண் அர் பாய் ஊ (er bai wu எனக் குறிக்கப்பெற்று AR-BUY-OO) என உச்சரிக்கப்படுகிறது. இதன் பொருள் அறிவு முடம் என்பதாகும். தொடக்கத்தில் சீனாவில் 1000 செப்புக்காசு என்பது தரப்படுத்தப்பட்ட அளவாக இருந்த பொழுது 250 என்பதைத் தாழ்வாக எண்ணினர். இதன் தொடர்ச்சியாக 250 என்பதை இகழ் மிகு சொல்லாகவும் அவமதிப்பாகவும் எண்ணினர். இதனால் வணிக வானூர்தி எண் 250ஐ 280 ஆக மாற்றினர். 2000 ஆண்டுகளாக 250ஆம் எண் குறித்த பேரச்சம் உள்ளதால் இதற்குக் காரணமாகச் சீனாவில் 4 கதைகளைக் கூறுகின்றனர். அவற்றின் அடிப்படையில் 250 தீயூழ் எண்ணாகவும் துன்பம் விளைவிக்கக் கூடியதாகவும் கருதிப் பேரச்சம் கொள்கின்றனர்.
00

80.) 26 ஆம் எண் வெருளி – Eikosihexaphobia / triphobia / triophobia
26 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 26 ஆம் எண் வெருளி.

எண் ஆரூடப்படி 26 சேர்க்கைகளாலும் கூட்டுவணிகம், சூது ஆகியவற்றாலும் பேரிடர் தரும். இதன் கூட்டு எண் 8. இது சனியின் எண்ணாகக் கருதப்பட்டுப் பல துன்பங்கள் விளையும் என எண்ணுகின்றனர். இந்த எண் மீது பேரச்சம் கொள்வோர் 26 மீதும் பேரச்சம் கொள்வர்.

கிரேக்கத்தில் eikosi எண் 20 ஐக் (“twenty”) குறிக்கும், hexa எண் 6 ஐக் குறிக்கும்.

13 ஆம் எண்ணைத் தீயூழ் எண்ணாகக் கருதுவதால் அதன் இரட்டிப்பு மதிப்பான26 அதைவிடப் பெருந்தீங்கிழைக்கும் என நம்புகின்றனர். பல துயர நிகழ்வுகள் 26இல் நடைபெற்றதை எண்ணிப்பார்த்தும் 26 மீது பேரச்சம் கொள்கின்றனர். திசம்பர் 26 இல் தமிழ்நாட்டில் நிகழ்ந்த பன்னூறாயிரம் உயிர்களைக் காவு வாங்கிய பெருங்கடல்கோள்(சுனாமி), சீன நிலநடுக்கம்(கன்சு), ஈரான் நிலநடுக்கம்(பாம்) முதலான துன்பியல் நிகழ்வுகள் 26 அன்றுதான் நடைபெற்றுள்ளன.கிரகட்சு எரிமலை வெடிப்பு போன்றவையும் நடந்த நாள் 26. எனவே, 26இல் நடைபெற்ற வரலாற்றுத் துன்ப நிகழ்வுகைளத் தொகுத்துச் சிலர் 26 என்பது குறித்தப்பேரச்சத்தை விளைவித்து வருகின்றனர். சிலருக்கு 26 ஆம் நாள் நிகழ்வுகளைக்கேட்கவே பேரச்சம் வரும்.
00

(தொடரும் )

Sunday, July 6, 2025

வெருளி நோய்கள் 71-75 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 66-70 தொடர்ச்சி)

71.) 19 ஆம் எண் வெருளி – Enneaidekaphobia / nonadecaphobia
19 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 19 ஆம் எண் வெருளி.
கிரேக்கத்தில் ennea என்றால் 8, deca என்றால் 10. சேர்த்துக் குறிப்பிடும் பொழுது 19 ஐக் குறிக்கிறது.
இலத்தீனில் nona என்றால் 9, deca என்றால் 10. இவையும் சேர்ந்து 19ஐக்குறிக்கின்றன. 13 ஆம் எண் மீதான பேரச்சம் வரும் முன்னரே 19 என்பதைத் தீப்பேறு(unlucky) எண்ணாகக் கருதி அஞ்சினர். அகவை 19 என்பது அருவருப்பானது அல்லது சீர்கேடானது என்பது சிலரின் பேரச்சம். இரண்டு உலகப்போர்களும் 1900களில் நடைபெற்றதாலும்19 என்பது குறித்துப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
1999 என்பதை 19 ஐக்குறிக்காமல் 99 என்று மட்டும் குறிப்பிடுவர். 19 ஆம் பிறந்தநாளை 18 அல்லது 20 ஆவது பிறந்த நாள் என்றே இத்தகையோர் குறிப்பிட்டு அவ்வாறே கொண்டாடுவர்.
00
72.) 191 ஆம் எண் வெருளி – Hekatenenekontahenophobia
191 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 191 ஆம் எண் வெருளி.
கிரேக்கத்தில் hekato என்றால் 100, enenekonta என்றால் 90, hen என்றால் 1 எனப் பொருள். 11 ஆம் எண் வெருளி உள்ளவர்கள் 191 இன் கூட்டுத்தொகை 11 என்பதால் இதைக் கண்டும் பேரச்சம் கொள்வர். 191 என்பதை மாற்றியமைத்தால் உருவாகும் 911 குறித்தும் பேரச்சம் கொள்வர். பறத்தி எண் 191 பல நேர்ச்சிகளைச்சந்தித்ததாலும இந்த எண் மீது பேரச்சம் உள்ளது. 191 குறித்த மூடநம்பிக்கையால், வான் பயணத்திற்கு இந்த எண் ஏற்றதல்ல எனக் கருதி, அமெரிக்க வான் நிறுவனம், தெல்டா வான் நிறுவனம் ஆகியன பறத்தி எண் 191 என்பதைத் தடை செய்து விட்டன. பறத்தி எண் 191 இல் பேய்,பிசாசுகள் தங்கியிருப்பதாகவும் சிலர் பேரச்சம் கொள்கின்றனர்.
00
73.) 2 ஆம் எண் வெருளி – Dyophobia / diphobia / duophobia
2 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 2 ஆம் எண் வெருளி.
கிரேக்கத்தில் dyo என்றால் 2 எனப் பொருள்.
இரண்டாகப் பிரியக்கூடியவை மீதும் இருமை வகைப்பாடு மீதும் இத்தகையோருக்குப் பேரச்சம் வரும். இணையாக அல்லது சோடியாக இருப்பனவற்றின் மீது பேரச்சம் கொள்வர். முதாலம் இணையில் இருந்து ஒன்றையும் அடுத்த இணையில் இருந்து ஒன்றையும் பயன்படுத்துவர். சான்றாகக் காலுறை அணிவதாக இருந்தால், ஒவ்வொரு காலுக்கு வெவ்வேறு நிறம் கொண்டவற்றை அணிவர்.
00
74.) 20 ஆம் எண் வெருளி – Vigintiphobia
20 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 20 ஆம் எண் வெருளி.
wīgentī என்னும் தொல் இத்தாலியச்சொல் 20 ஐக் குறிக்கிறது. இதிலிருந்து உருவானதே Viginti. இருபான்(score) என்பது 20 கொண்ட அளவையின் பெயராகும். இந்த அளவையின் மீதும்பேரச்சம் வரும். இருபதுக்கு இருபது என்னும் மட்டையாட்டத்தின் மீதும் பேரச்சம் கொள்வர்.
00
75.) 21 ஆம் எண் வெருளி – Vigintiunusphobia
75.) 21 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 21 ஆம் எண் வெருளி.
சில நாடுகளில் 21 அகவை என்பது வயது வந்ததற்கு அடையாளமாகக் கருதப்படுகிறது. இந்தியாவிலும் முன்பு தேர்தலுக்கான வாக்குரிமைக்கான அகவை 21 என்றிருந்தது. பொறுப்பினை விரும்பாதவர்களுக்கு 21 என்பதன் மீது பேரச்சம் உருவாகிறது.

21 இன் கூட்டுத் தொகை 3. எண் 3 மீது பேரச்சம் கொள்வோர் எண் 21 மீதும் பேரச்சம் கொள்வர்.
00

(தொடரும் )

Saturday, July 5, 2025

வெருளி நோய்கள் 66-70 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 61-65 தொடர்ச்சி)

66.) 14 ஆம் எண் வெருளி – Quattuordecimphobia
14 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 14 ஆம் எண் வெருளி.

00

67.) 15 ஆம் எண் வெருளி Quindecimphobia
15 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 15 ஆம் எண் வெருளி.
00

68.) 16 ஆம் எண் வெருளி – Hekkaidekaphobia
16 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 16 ஆம் எண் வெருளி.
00

69.) 17 ஆம் எண் வெருளி Heptaidekaphobia / Septadecaphobia
17 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 17 ஆம் எண் வெருளி.

பழங்கிரேக்கத்தில் hepta என்றால் ஏழு, deca என்றால் பத்து எனப் பொருள். /0010 = 17 எனக்குறிக்கிறது.
.
இத்தாலியில் 17 தீயூழ் எண்(இராசியில்லாத எண்) என நம்புகின்றனர். இதனால் உருவானதுதான் 17 ஆம் எண் வெருளி. இத்தாலியில் மொழியான உரோமன் எண் 17 என்பது XVII எனக்குறிக்கப் பெறும்.

கரந்துறைமொழி (anagram) என்பது ஒரு சொல்லின் எழுத்துகளை மாற்றியமைத்து ஆக்கப்படும் வேறொரு சொல் ஆகும். சொல்லின் எழுத்துமுறையை மாற்றிப்புதுச் சொல்லாக்குவது என்றும் சொல்லலாம். இந்தமுறையில் 17 / XVII என்பது VIXI எனக் கரந்துரை மொழியாகிறது. இதன் பொருள் நான் வாழ்ந்து முடித்து விட்டேன் / என் வாழ்க்கை முடிந்து விட்டது.

தொன்மக் கதைப்படி இறப்புக் கடவுளான ஓசிரிசு(Osiris) 17 ஆம் நாள் (தேதி) என்று இறந்தார் என்பதால் 17 என்பது இறப்பு எண்ணாக அவர்களால் கருதப்படுகிறது.

சனவரி 17, பிப்பிரவரி 17 எனப் பல மாதங்களில் 17 ஆம் நாள் துன்பநாளாக அமைந்ததும் பேரச்சத்திற்குக் காரணம். ஓசிரிசு இறந்தது 17 ஆம் நாள் முழுநிலவு நாளாகும். எனவே, எல்லா 17 ஆம் நாளுக்கும் அஞ்சாமல் முழுநிலவு நாளன்று வரும் 17 ஆம் நாளுக்கு மட்டும் பேரச்சம் கொள்வர்.
00

  1. 18 ஆம் எண் வெருளி – Octaidekaphobia
    18 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம்18 ஆம் எண் வெருளி.
    கிரேக்கத்தில் octo என்றால் 8, deka என்றால் 10 எனப் பொருள்.
    கிரேக்கத்தில் octo என்றால் 8 என்றால் deka 10 எனப் பொருள். இரண்டும் சேர்ந்த Octaideka என்பது கூட்டுப்பொருளான 18ஐக் குறிக்கிறது.
    இளம்பருவம் முடியும் அகவை 18 என்பதைக் குறிப்பதால் சிலருக்கு 18 என்பது குறித்த பேரச்சம் வருகின்றது. வயதுக்கு வந்துவிட்டதால் இளமை ஆட்டங்களில் ஈடுபட முடியாது எனக் கவலைப்படுவர்.
    சிலருக்கு 666 ஆம் எண் வெருளி / hexakosioihexekontahexaphobia க்குக் காரணமான 666 இன் கூட்டுத் தொகை (6006006=)18 என்பதாலும் அவ்வெருளி உள்ளவர்களுகு்கு 18 குறித்துப் பேரச்சம் வரும்.
    00

(தொடரும் )

Friday, July 4, 2025

வெருளி நோய்கள் 61-65 : இலக்குவனார் திருவள்ளுவன்


(வெருளி நோய்கள் 55-60  தொடர்ச்சி)

61.) 111 ஆம் எண் வெருளி – Hekatohendecaphobia
111 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம்111 ஆம் எண் வெருளி.
கிரேக்கத்தில் hekato – 100, hendeka – 11 எனப் பொருள்களாகும்.
00

62.) 12 ஆம் எண் வெருளி – Dodecaphobia
12 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம்12 ஆம் எண் வெருளி.

00

63.) 120 ஆம் எண் வெருளி – Centumvigintiphobia
120 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 120 ஆம் எண் வெருளி.

00

  1. 13 ஆம் எண் வெருளி – Triskaidekaphobia
    13 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 13 ஆம் எண் வெருளி.

00

  1. ) 13ஆம் நாள் வெள்ளி வெருளி – Paraskevidekatriaphobia
    13ஆம் நாள் இணைந்த வெள்ளி குறித்த வரம்பற்ற பேரச்சம் 13ஆம் நாள் வெள்ளி வெருளி.
    00

(தொடரும் )

Thursday, July 3, 2025

வெருளி நோய்கள் 55-60 : இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 51-54 தொடர்ச்சி)

55. 10 ஆம் எண் வெருளி – Decaphobia

 10 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 10 ஆம் எண் வெருளி.

டெக்கா/ Deca என்பது பத்து என்பதைக் குறிக்கும் முன்ஒட்டுச்சொல்.

00

56. 100 ஆம் எண் வெருளி Hekatophobia  / centumphobia / hectophobia

100 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம்100 ஆம் எண் வெருளி.

கிரேக்கத்தில் hekaton என்றால் 100 எனப் பொருள்.

பிரெஞ்சில் cent, இத்தாலியில் cento, இலத்தீனில் centum  என்பன 100 என்பதைக் குறிக்கும்.

00

57. 1000 ஆம் எண் வெருளி – Milliphobia

1000 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 1000 ஆம் எண் வெருளி.

mille என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் ஆயிரம்

00

58. 100 மாத்தேறல் குப்பி வெருளி –  One hundred bottles of beerphobia

100 மாத்தேறல் குப்பி(One hundred bottles of beer) குறித்த வரம்பற்ற பேரச்சம் 100 மாத்தேறல் குப்பி வெருளி.

00

59. 101 ஆம் எண் வெருளி – Hekatenophobia

101 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 101 ஆம் எண் வெருளி.

00

60. 11 ஆம் எண் வெருளி-  Hendecaphobia  / Undecaphobia

11 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம்11 ஆம் எண் வெருளி.

கிரேக்கத்தில்  hendeka  என்றால் 11.

இலத்தீனில்  undeca என்றால் 11.

+++

(தொடரும் )

Wednesday, July 2, 2025

வெருளி நோய்கள் 51-54 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 47-50 தொடர்ச்சி)

51. ‘வி’ / V’ எழுத்து வெருளி – Victophobia

‘வி’ / V’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘வி’ / V’ எழுத்து வெருளி.

00

52. ‘வேசி / ‘whore’ சொல் வெருளி – Huophobia

‘வேசி / whore’ என்னும் சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘வேசி /whore’ சொல் வெருளி.

ஆண் மட்டுமல்ல, பெண்ணும் மற்றொரு பெண்ணை இழிவுபடுத்துவதற்காக, விலைமகள், வேசி, பரத்தை, வேசிமகள் எனப் பலவகைகளில் ஏசுகின்றனர். இதற்குப் பயன்படுத்தும் ‘வேசி/whore’ என்ற சொல்லைக் கேட்டதும் தாங்கள் இழிவுபடுத்தப்பட்டதாகப் பெருங்கவலையும் பேரச்சமும் கொள்வர்.

அதுபோல், ஆணையும் வேசி மகன், தகா உறவு கொண்டவன் என்பன போன்று ஏசுகின்றனர்.

00

53. 0.5 ஆம் எண் வெருளி  Semiphobia

0.5 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 0.5 ஆம் எண் வெருளி.

பாதி அல்லது அரை என்பதைக் குறிக்கும் .5 எண் குறித்த பேரச்சம். சில நேரங்களில் மன நலம் சரியில்லாதவர்களை  அரை(க்கிறுக்கு)(செமி) என்று சொல்வதாலும் பாதி எண் குறித்த பேரச்சம் எழுகிறது.

00

54. 1 ஆம் எண் வெருளி Henophobia  / unophobia

1 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 1ஆம் எண் வெருளி.

கிரேக்கத்தில் hen என்றால் 1 ; இலத்தீனில்  unus என்றால் 1.

இப்பேரச்சம் உள்ளவர்கள் எதையும் முதல் முறை செய்வதற்கு அஞ்சுவார்கள்.

எண் 1 சூரியனின் ஆட்சிக்குரியது. எனவே, பொதுவாக நற்பலன்கள் கூறப்படுகின்றன. எனினும் இவர்களுக்கு வெப்பத்தால் பாதிப்பு வரும், மலச்சிக்கல் உண்டாகும், பித்தநீர் ஓட்டம் மிகும், கண்பார்வைக் குறைபாடு வரும், இரத்தக் கொதிப்பு, சீரணக் கோளாறுகள், படபடப்பு, தலைவலி வரும் என்றெல்லாம் படித்து விட்டு அவை வந்துவிட்டதாகவே கவலைப்படுவோர் உள்ளனர்.

00

(தொடரும் )

Tuesday, July 1, 2025

வெருளி நோய்கள் 47-50 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள்44-46 தொடர்ச்சி)

47. ‘மலக்கட்டி’ / ‘turd’ சொல் வெருளி – Kusaophobia

‘மலக்கட்டி’ / ‘turd’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘மலக்கட்டி’ / ‘turd’ சொல் வெருளி.

00

48. ‘மா&மு’ வெருளி -M&M phobia

‘மா&மு’ இன்கண்டு தொடர்பான அளவு கடந்த பேரச்சம் ‘மா&மு’ வெருளி.

மார்சு, முர்ரே(Mars & Murrie) நிறுவனங்களின் கூட்டு உருவாக்கம் என்பதால் இதற்கு இப்பெயர். வண்ணப் பொத்தான் வடிவ இன்கண்டு(colorful button-shaped chocolate)களில் ‘எம்’ என்னும் ஆங்கில எழுத்து இடம் பெற்றிருக்கும்.

2003 இலிருந்து 100 ஆண்டுகளுக்கு மேல் விற்பனையாகும் ‘மா&மு’ இன்கண்டு சிலருக்கு ஒவ்வாமை போன்ற கவலையை உருவாக்கிப் பேரச்சத்தைத் தோற்றுவிக்கிறது.

00

49. ‘மூத்திரம்’ /’piss’ சொல் வெருளி – Katourophobia

‘மூத்திரம்’ /’piss’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘மூத்திரம்’ /’piss’ சொல் வெருளி

00

50. ‘யூ / ‘U’ எழுத்து வெருளி – Upsilonphobia

‘யூ / ‘U’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘யூ / ‘U’ எழுத்து வெருளி.

00

(தொடரும் )