1676. வளர்ச்சி இயக்கவியல் | Growth kinetics |
1677. வளர்ச்சிஉளவியல் | Developmental psychology |
1678. வளர்ச்சியியல் Axiology ஐ வளர்ச்சியியல் என்கின்றனர். இது தவறு. Auxanology, Auxology என்பனவே வளர்ச்சியியல். Auxo- என்னும் இலத்தீன் முன்னொட்டின் பொருள் வளர்ச்சி. Auxology, இதன் மறு வழக்கான Auxanology ஆகியவற்றின் பொருள் வளர்ச்சி யியல். | Auxanology / Auxology |
1679. வளர்சிதைமாற்றப் பொறியியல் | Metabolic Engineering |
1680. வளைசலியல் Ecology – சூழ்நிலையியல், சூழ்வியல், சூழலியல், சூழியல், சூழ்நிலை ஆய்வு இயல், சுற்றுப்புறச் சூழலியல், சூழ்நிலை ஆய்வு, வாழிடவியல், சுற்றுப்புறத் தூய்மை இயல், உயிர்ச்சூழலியல், உயிரின வாழ்க்கைச் சூழல் ஆய்வியல், உயிரியச் சூழ்நிலையியல் எனப்படுகின்றன. இவற்றுள் கடைசி மூன்றும் பொருள்விளக்கப்படி சரிதான். என்றாலும் Bioecology / Bionomics என உள்ளமையால் அவற்றைச் சேர்ந்தன. எனவே, இங்கே பொருந்தாது. Eco என்னும் கிரேக்கச் சொல்லிற்கு மனை அல்லது சுற்றுப்புறம் எனப்பொருள். Environmentology என்பதை நாம் சூழலியல்/சூழியல் என்பதால் இதனையும் அவ்வாறே கூறுவது பொருட்குழப்பமாகும். சுற்றுப்புறவியல் – Ecology எனலாம் என முதலில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், நாம் சுற்றுப்புறச் சூழல், சுற்றுப்புறம், சூழல் என என்ன சொன்னாலும் ஒரே பொருளையே உள்ளத்தில் நிறுத்துவோம். எனவே பயன்பாட்டுக் குழப்பம்வரலாம். சுற்றுப்பற இயல் என்பதைச் சுற்றியல் எனச் சுருக்கினால் சுழல்வதையும் புற இயல் என்றால் புற வெளியையும் குறிக்கும் என்பதால் சுருக்கியும் பயன்படுத்துவது ஏற்றதாக இல்லை. எனவே, வேறு சொல் பயன்படுத்துவது நல்லது என எண்ணினேன். எனவே, சுற்றுப்புறத்தைக் குறிப்பிடும் வளவு, வளைசல் இரண்டில் ஒன்றைப்பயன்படுத்தலாம். வளவு பொதுவாக ஒரு சுற்றடைப்பிற்குள் உள்ள வீடுகளைக் குறிக்கும். எனவே, சுற்றுப்புறப் பகுதியைக் குறிப்பிடும் வளைசல் என்பதைப் பயன்படுத்தி வளைசலியல் – Ecology எனலாம். Oecology என்பது Ecology என்பதன் மாற்று எழுத்தொலிப்பு வடிவம். | Ecology/ Oecology |
(தொடரும்)
No comments:
Post a Comment