Showing posts with label பழமொழி. Show all posts
Showing posts with label பழமொழி. Show all posts

Wednesday, September 12, 2012

பழமொழிகளில் அறிவியல் செய்திகள் - Science in Proverbs

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்

தரவு:இலக்குவனார் திருவள்ளுவன்
  நட்பு  - பதிவு செய்த நாள் : 12/09/2012

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்
முந்தையப் பதிவைக்காண இங்கே அழுத்துங்கள்
61. வேர் நின்றால் மரம் நிற்கும்.

Thursday, September 6, 2012

பழமொழிகளில் அறிவியல் செய்திகள் 51- 55

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்

இலக்குவனார் திருவள்ளுவன்
  நட்பு : பதிவு செய்த நாள் : 06/09/2012

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்
முந்தையப் பதிவைக்காண இங்கே அழுத்துங்கள்
51. மாம்பூவைக் கண்டு மகிழ்ந்து போகாதே.
52. மாசி மின்னல் மரம் தழைக்கும்.
53. மாசி மரம் தழைக்க மழை.
54. முருங்கைக் கீரை வெந்து கெட்டது; அகத்திக் கீரை வேகாமல்     கெட்டது.
55. முருங்கையை ஒடித்து வளர்க்க வேண்டும்.



Monday, September 3, 2012

பழமொழிகளில் அறிவியல் செய்திகள் 36-40

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்

தரவு:இலக்குவனார் திருவள்ளுவன்
நட்பு - பதிவு செய்த நாள் : 03/09/2012

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்
முந்தையப் பதிவைக்காண இங்கே அழுத்துங்கள்
36. நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல.
37. நீர் பெருத்தால் நெல் சிறக்கும்.
38. நெருக்க நட்டு நெல்லைப் பார் ; கலக்க நட்டுக் கதிரைப் பார்.
39.பழுத்துக் கெடுப்பது பாகல் ; பழுக்காமல் கெடுப்பது இரத்தக் கட்டி.
40. பனி பெய்தால் மழை இல்லை; பழம் இருந்தால் பூ இல்லை.

பழமொழிகளில் அறிவியல் செய்திகள் 31-35

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்

நட்பு - பதிவு செய்த நாள் : 01/09/2012

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்
முந்தையப் பதிவைக்காண இங்கே அழுத்துங்கள்
31. சிறியாரோடு இணங்காதே; சேம்புக்குப் புளியிட்டுக் கடையாதே.
32. சேம்புக்குத் தண்ணீர் சோம்பாமல் இறை.
33. தள்ளிய வாழை வந்து தாய் வாழையைக் கெடுத்தாற் போல்.
34. தை எள்ளு தரையிலே, மாசி எள்ளு மச்சிலே.
35. தோட்டத்துப் பச்சிலை மருந்துக்கு உதவாது.

Monday, August 27, 2012

பழமொழிகளில் அறிவியல் செய்திகள் 11-15

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்

தரவு:இலக்குவனார் திருவள்ளுவன்
  நட்பு : பதிவு செய்த நாள் : 27/08/2012


முந்தைய பதிவை க் காண இங்கே அழுத்துங்கள்
11. எரிகிற புண்ணில் புளி இட்டது போல.
12. எருமணமில்லாப் பயிர் நறுமணமில்லாப் பூ
13. ஐப்பசி நெல் விதைத்தால் அவலுக்கும் ஆகாது.
14. ஐப்பசி வெள்ளாமை அரை வெள்ளாமை.
15. ஒதிய மரம் தூணாகுமா?