Showing posts with label . தமிழ் அறிவியல். Show all posts
Showing posts with label . தமிழ் அறிவியல். Show all posts

Tuesday, August 13, 2013

வலு தரும் கல்தாமரை


தினஇதழ் Home / அபூர்வ தகவல்கள் / வலு தரும் கல்தாமரை
வலு தரும் கல்தாமரை

வலு தரும் கல்தாமரை

கல்தாமரை மலைப்பகுதியில் வளரும் ஒருவகை கொடி இனமாகும். இதன் இலை தாமரை இலை வடிவில் இருப்பதாலும், மலை, கல் நிறைந்த பகுதிகளில் அதிகம் வளர்வதாலும் இதை கல்தாமரை என்கின்றனர். ஆனால் தாமரை இலையை விட சிறியதாகவும் தடித்தும் இருக்கும்.இதன் இலை மிகுந்த மருத்துவப் பயன் கொண்டது. சித்தா, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.உட்கொள்ளும் மருந்துகள், வெளிப்பூச்சு மருந்துகள் மற்றும் தைல வகைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது. இது கார்ப்புச் சுவை கொண்டது.
உடல் வலுப்பெற:
உடல் வலுப்பெற்றால் நோய்கள் ஏதும் அணுகாமல் பாதுகாக்க முடியும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கேற்ப உடல் நன்கு பலமாக ஆரோக்கியமாக இருந்தால்தான் சிறந்த வாழ்வைப் பெற முடியும். இத்தகைய உடலை வலுப்பெறச் செய்ய கல்தாமரை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக்கொண்டு காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும். அல்லது காய்ந்த கல்தாமரை இலையின் பொடியை நீரில் கொதிக்கவைத்து பனை வெல்லம் கலந்து அருந்தலாம். இவ்வாறு 48 நாட்கள் அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இளைத்த உடல் தேறும்
இடுப்பு வலி தோள்பட்டை வலி நீங்க:
இன்றைய நவீன உணவு மாறுபாட்டாலும், போதிய உற்பயிற்சியின்மையாலும் சிலருக்கு மிகக் குறைந்த வயதிலே கழுத்துவலி, இடுப்பு வலி, மூட்டு வலி, என உண்டாகிறது. இப்படி கை, கால், முட்டுகளில் வலி உண்டாவதற்குக் காரணம் மூட்டுத் தேய்மானம் என்பார்கள். இதனைப் போக்க கல்தாமரை சிறந்த மருந்து. கல்தாமரை இலைகளை நிழலில் காயவைத்து கஷாயம் செய்து அருந்தி, கல்தாமரை இலைகள் சேர்க்கப்பட்ட வெளிப்பூச்சு எண்ணெய்களை பாதிக்கப்பட்ட பகுதிகளில் பூசி வந்தால் மேற்கண்ட பாதிப்புகள் நீங்கும்.
நரம்புகள் வலுப்பெற:
நரம்புகளில் நீர் கோர்த்துக்கொண்டு நரம்பு வறட்சி உண்டானால் அது நரம்புப் பாதிப்பை உண்டுபண்ணும். இதனால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். இத்தகைய குறையைப் போக்கி நரம்புகளை வலுவடையச் செய்ய கல்தாமரையிலை கஷாயம் செய்து அருந்தி வருவது நல்லது. அல்லது கல்தாமரை இலை பொடியில் தேன் கலந்து அருந்தலாம்.
ஆண்மை பெருக:
இன்றைய பொருளாதார சூழ்நிலையால் மன அழுத்தம் உண்டாகி பலருக்கு வீரியக்குறைவு உண்டாகிறது. குழந்தைப்பேறு இன்றி தவிக்கின்றனர். சிலர் திருமணத்திற்குப் பின் வீரியக் குறைவால் அவதிப்படுகின்றனர். இக்குறையைப் போக்க பல விளம்பரங்களைத் தேடி அவர்கள் கொடுக்கும் மருந்துகளை உண்டும் பயனில்லாமல் வேதனையுறுகின்றனர். இவர்கள், கல்தாமரை இலைப் பொடியை பாலில் கலந்து இரவு உணவுக்குப்பின் 48 நாட்கள் அருந்தி வந்தால் வீரியக் குறைவு நீங்கி ஆண்மை பெருகும்.
சருமத்தைப் பாதுகாக்க:
கல்தாமரை இலையை சிறிதாக நறுக்கி நீர் விட்டு அரைத்து, சொறி, சிரங்கு, கரப்பான் உள்ள இடங்களில் பூசி வந்தால் மேற்கண்ட நோய்கள் நீங்கும்.

Thursday, September 6, 2012

பழமொழிகளில் அறிவியல் செய்திகள் 51- 55

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்

இலக்குவனார் திருவள்ளுவன்
  நட்பு : பதிவு செய்த நாள் : 06/09/2012

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்
முந்தையப் பதிவைக்காண இங்கே அழுத்துங்கள்
51. மாம்பூவைக் கண்டு மகிழ்ந்து போகாதே.
52. மாசி மின்னல் மரம் தழைக்கும்.
53. மாசி மரம் தழைக்க மழை.
54. முருங்கைக் கீரை வெந்து கெட்டது; அகத்திக் கீரை வேகாமல்     கெட்டது.
55. முருங்கையை ஒடித்து வளர்க்க வேண்டும்.



Monday, September 3, 2012

தோல் (skin)

தோல்
- இலக்குவனார் திருவள்ளுவன் 



உடலுக்கு பாதுகாப்பு அளிப்பது தோலே ஆகும். தொடு உணர்வு, வலி, வெப்பம்,குளிர், அழுத்தம் முதலியவற்றை இஃது உணர வைக்கிறது. வியர்வை மூலம் கழிவு நீக்கம் செய்வதுடன் உடல் வெப்பத்தைச் சீராக்க உதவுகிறது.

உடலுக்குப் போர்வை போல் அமைவதால் போர்வை என்றும் தோல் உடலுக்குப் புறப்பகுதியாய் அமைவதால் புறணி என்றும் தோல் உரிகின்ற காரணத்தால் உரிவை என்றும் அதள், ஒளியல், வடகம், பச்சை, ஒளி முதலிய பல பெயர்களால் தோலின் தன்மைக்கேற்பவும் பெயரிட்டுள்ளனர். மனிதர்களின் தோல்களுக்கும் பிற உயிரினங்களின் தோல்களுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்திருந்தனர். தோல் வேலை செய்பவர்களைப் பறம்பர் என அழைத்தனர். காலணி வகைகள், கைப் பைகள், கருவிகளின் உறைகள், இசைக்கருவிகளின் உறைகள், ஆயுதங்களின் உறைகள், ஆடைகள், திரைகள், கூடாராம், உருவப் பொம்மைகள் முதலியவற்றைத் தேர்ச்சியாகச் செய்யும் திறமையும் பெற்று இருந்தனர்.தோல் ஒரு புலன் உறுப்பு. இது புறத்தோல், அகத்தோல், அடித்தோல் என மூன்று அடுக்குகள் ஆனது. புறத்தோல்மெய்ம்மி (திசு) அடுக்குகளால் ஆனது. புறத்தோலில் மயிர்க் கால்களும் வியர்வைத் துளைகளும் உள்ளன. அகத்தோல் இணைப்பு மெய்ம்மிகளால் ஆனது. இதில் வியர்வைச் சுரப்பிகள், குருதி நாளங்கள்,எண்ணெய்ச் சுரப்பிகள், மயிர்க்கால் முடிச்சுகள் உள்ளன. அகத்தோலுக்கு அடியில் அமைந்ததே அடித்தோல். இதில் தொகுப்பு உயிர்மிகள் காணப்படுகின்றன. 

-  புதிய அறிவியல்