தமிழில் எண்ணற்ற அறிவியல் செய்திகள் உள்ளன. இன்றைக்குக் காணப்படும் அறிவியல் உண்மைகள் அன்றே கண்டறியப்பட்டுள்ளன. அறிவியல் தமிழின் அன்றைய வளத்தையும் இன்றைய உண்மையையும் உணர்த்த அனைவருக்குமான அறிவியல் தமிழ் என்னும் நூல் கணியச்சில் உருவாக்கப்பட்டது. 10 ஆண்டுகளாக உறங்கிக் கிடக்கும் உண்மைகளை இணையத்தில் ஏற்றலாம் என இவ்வலைப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. புதிய பதிவுகளும் மேற்கொள்ளப்படும்.
அயல்நாட்டில் வாழும் இந்தியர்கள் (NRI) தொடர்பில் ஏற்படும் தேவையற்ற அச்சம் அயலுறை இந்தியர்கள் வெருளி. சுருக்கமாக அயலிந்தியர் வெருளி எனலாம்.
வெளிநாட்டிலிருந்து செல்வம் திரட்டி வந்து, இங்கே நம் தொழிலைச் சிதைப்பார்கள், செல்வத்தைத் தேய்ப்பாரகள், செல்வாக்கை ஒடுக்குவார்கள், வளர்ச்சியை அழிப்பார்கள் என்றெலலாம் தேவையற்ற கவலையும் அளவு கடந்த வெறுப்பும் கொள்வர்.
Indica என்பது இலத்தீனிலும் கிரேக்கத்திலும் இந்தியாவைக் குறிப்பிடும் சொல்.
00
19. அரசியலர்வெருளி-Politicophobia/ civiliphobia
அரசியல்வாதிகள் அல்லது அரசியல்மீது ஏற்படும் அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் அரசியலர் வெருளி.
அடாவடித்தனம்செய்து மக்களைத் துன்புறுத்தும் அல்லது அச்சுறுத்தும் அரசியல்வாதிகள் உள்ளனர். இதனால் எந்த அரசியல்வாதியைப் பார்த்தாலும் அல்லது அரசியல் என்றாலே சிலருக்கு அச்சம் ஏற்படும்.
அரசியல்வாதிகள் சிலர் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தல், குறுக்கு வழிகளில் பணம் சம்பாதித்தல், தன்னலம், தம் குடும்பநலன் ஆகியவற்றுக்காகப் பிறரை அடக்குமுறைக்கு ஆளாக்குதல் போன்றவற்றை எண்ணி வேறுபாடில்லாது எல்லா அரசியல்வாதிகள் மீதும் அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் கொள்வர்.
அரசியல்வாதிகள் சிலர் செய்யும் அடாவடி, அட்டூழியம், ஒழுக்கக்கேடு, முறைகேடு, ஊழல், வன்முறை போன்றவற்றால் எல்லா அரசியலர் மீதும் சிலருக்குப் பேரச்சம் விளைவது இயற்கைதான். நாடகம், தொலைக்காட்சி, திரைப்படம், கதைகள் இத்தகைய காட்சிகளைக் காண்பதால் வெறுப்பு மேலும் வளர்கிறது.
அரசியல்வாதி வெருளி(civiliphobia) எனப் புதிய வெருளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அரசியலர் வெருளிக்கும் அரசியல்வாதி வெருளிகும் வேறுபாடு இல்லை என்பதால் அதனை இதிலேயே இணைத்துள்ளேன்.
00
20. அயில்வெருளி -Enetophobia
ஊசி அல்லது கூரிய முனை உடைய பொருள்களைப் பார்த்தால் ஏற்படும் இயல்பிற்கு மீறிய பேரச்சம் அயில்/ ஊசி வெருளி.
அலைபேசியைப் பயன்படுத்த முடியாத சூழலில் ஏற்படும் தேவையற்ற பேரச்சமே அலைபேசி வெருளி.
அலை இணைப்பு கிடைக்காமல் அல்லது மின்னேற்றம் இன்மையால் அல்லது வேறு சூழலில் அலைபேசியைப் பயன்படுத்த முடியாமல் போனால் இதனைப் பயன்படுத்துவோர் அடையும் கிலி, மனத் தடுமாற்றம், காரணமில்லாப் பேரச்சம் முதலானவை அலைபேசி வெருளியாக மாறுகிறது. அலைபேசி இயங்கா வெருளி என்பதைச் சுருக்கமாக அலைபேசி வெருளி எனக் குறிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் அல்லது இளைஞர்கள் அலைபேசியைப் பயன்படுத்தும் பொழுது அவர்களின் பெற்றோர் முதலான உறவினர்களுக்கு இவர்கள் தவறாகப் பயன்படுத்தி வாழ்க்கையை அழித்துக் கொள்வார்களோ என்ற பெரும் அச்சம், மனத்தைப்பாதிக்கும் விளையாட்டு அல்லது பாலியல் படங்கள் மூலம் மனச்சிதைவிற்கு ஆளாவார்களோ என்ற பேரச்சம் எழுவதால் அலைபேசி வெருளி எனப் பொதுவாகச் சொல்வதும் பொருத்தம்தான்.
ஐக்கிய இங்கிலாந்தில் பாதிக்கு மேற்பட்டோர் அலைபேசி வெருளியால் துன்புறு கிறார்களாம்.
இதன் ஆங்கிலச்சொல் Nomophobia என்பது இரு சொற்கள் பகுதி கலந்து உருவான ஒட்டுச்சொல்(portmanteau). யூகோவு(YouGov) என்பவர் 2008 இல் இதனைக் கட்டுரையில் குறிப்பிட்ட பொழுது தொலைபேசி இயங்காத பொழுது53 விழுக்காட்டினர் பாதிப்பிற்குள்ளாவதாகத் தெரிவித்து இருந்தார். இப்பொழுது இந்த அளவு கூடியுள்ளது.
00
22. அவைக்கோவெருளி(போப்புவெருளி)-Papaphobia
போப்பாண்டவர் என அழைக்கப்பெறும் அவைக்கோ மீதான தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் அவைக்கோ வெருளி.
உரோமன் கத்தோலிக்க திரு அவையின் தலைவர் போப்பு அல்லது போப்பாண்டவர் என அழைக்கப்பெறுகிறார். திரு அவையின் தலைவர் என்ற முறையில் இங்கே அவைக்கோ எனச் சுட்டப்பட்டுள்ளது. திருத்தந்தை என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.
அணுஆயுதங்கள் மீதான அளவுகடந்த பேரச்சம் அணுஆயுத வெருளி.
அணுஆயுதக்கருவிகள் இல்லாவிட்டாலும் இருந்து பயன்படுத்தப்படாமல் இருந்தாலும், அவை பயன்படுத்தப்பட்டுப் பேரழிவுகள் ஏற்படும் என்று கருதுவதால் உருவாகும் அச்சம் அணுஆயுத வெருளி. அமெரிக்கத் தலைவர்களுக்கு ஈராக்கு மீது ஏற்பட்டஅச்சம் இத்தகையதுதான். என்றாலும் அணுஆயுதக் கருவிகள் இல்லை என்றறிந்த பொழுதும் இருப்பதாகப் பிறரை அச்சுறுத்தி அந்நாட்டை அழிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டது.
போர் முழக்கங்களும் அமைதியின்மையும் வல்லரசு ஆசையும் நிறைந்த உலகில் எல்லா நாட்டினருக்கும் அணுஆயுத வெருளி இருப்பதில் வியப்பில்லை.
போர்க்கொலை நாடுகளில் இது தவிர்க்க முடியாததாக அமைந்து விடுகிறது. சான்றாகத் தமிழ் ஈழத்தில் மக்களைக் காக்கவேண்டிய அரசே எமனாகமாறி நொடி தோறும் வேதியல் குண்டுகளையும் கொத்துக்குண்டுகளையும் பிற குண்டுகளையும் போட்டு அழித்து வந்ததால் மக்களில் பெரும்பாலோர் குறிப்பாகப் பள்ளிச்சிறுவர்களும் பிற சிறுவர்களும் பெண்களும் அணுக்குண்டு வெருளியால் பாதிக்கப்பட்டு மனநோயராக இருக்கின்றனர்.
அணுஆயுத வெருளி (Nucleomituphobia) யைச் சார்ந்ததே இது.
00
9. அண்டவெருளி-Kosmikophobia
அண்ட வெளியில் உள்ளவை குறித்து ஏற்படும் தேவையற்ற அச்சம் அண்ட வெருளி.
‘kosmo’ என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் அண்டம்/முழு உலகம்.
00
10. அதள்வெருளி-Doraphobia
விலங்குத் தோல் மீதான அளவுகடந்த பேரச்சமே அதள் வெருளி.
விலங்குத் தோலால் அல்லது தோல் முடியால்(fur) நோய் ஏற்படும், பெருந்துன்பம் நிகழும் என்று அவற்றிற்கான வாய்ப்பு இல்லாத பொழுதும் தேவையற்று அஞ்சுவது அதள் வெருளி.
சிறு பருவத்தில் விலங்கின் தோல் தொடர்பாகக் கேட்ட கதைகளால் அஞ்சி அதுவே நாளடைவில் பேரச்சமாக வளர்ந்து அதள் வெருளியாவதும் உண்டு.
தோல் அல்லது தோல் முடி குறித்த ஒவ்வாமைபற்றித் தீவிரமாகச் சிந்தித்து வெருளி நோயாக மாறும் வாய்ப்பும் உள்ளது.
அதள் என்பது விலங்கின் தோலினைக்(leather) குறிக்கும்.
dora என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் தோல்.
00
11. அதிர்ச்சிவெருளி-Hormephobia
துயரச் செய்தி அல்லது கெட்ட செய்தி வரும் என்றோ வந்தபின்போ தேவையற்ற பேரச்சம் கொள்வதுஅதிர்ச்சி வெருளி.
காரணமின்றியே மின் அதிர்ச்சி ஏற்படும் என்று தேவையற்று அச்சம் கொள்வதை யும் அதிர்ச்சி வெருளியில் சேர்க்கின்றனர். அதனை மின்வெருளி(Electrophobia)யில் சேர்ப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
தேர்வில் அல்லது தேர்தலில் தோல்வி அல்லது தொழில் முயற்சியில் தோல்வி என்னும் அதிர்ச்சி செய்தி கேட்பதாலோ இதனால் வாழ்வே இருண்டுபோவதாக அஞ்சுவதாலோ எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மை ஏற்பட்டு அதிர்ச்சி வெருளிக்கு ஆளாகின்றனர். முன்பெல்லாம் தொலைவரி(தந்தி) வந்தாலே செய்தி என்ன என்று அறியும் முன்னரே துயரச்செய்தியாக இருக்கும் என்று பேரதிர்ச்சி கொள்வோர் இருந்தனர்.
ஆண்டு ஒன்று போனால் வயது ஒன்று போகும் என்பது இயற்கை. எனினும் சிலருக்கு அகவை கூடுவது தோற்றத்தில் முதுமையைக் காட்டும் எனக் கவலை தருவதாக அமைகிறது. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அகவை கூடினால் வாய்ப்பு குறையும் என்ற அச்சம் வரும். இவற்றால் இத்தகையோர் அகவை கூடுவது குறித்த தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.பெண்களுக்கு அகவை கூடுவது குறித்த அச்சம் இருப்பதாகக் கருதுவர். ஆனால் ஆண்களுக்கும் அகவை கூடுவது குறித்த அச்சம் உள்ளது.
senec என்னும் இலத்தீன் சொல்லிற்கு அகவையாதல் (வயதாதல்) எனப் பொருள்.
இவ்வெருளி உள்ளவர்கள் முதுமை வெருளிக்கும்(Gerontophobia) ஆளாவார்கள்.
00
அச்சவெருளி-Fearaphobia
அச்சம் பற்றிய பேரச்சம் வருவதே அச்ச வெருளி.
பலருக்கு எதைக்கண்டாவது அச்சம் வரும். ஆனால் சிலருக்கு அச்சம் குறித்தே பேரச்சம் வரும். இந்தப் பொருள் அல்லது சூழல் அல்லது படம் அல்லது படக்காட்சி அல்லது நிறம் அல்லது ஆள் அல்லது புத்தகம் அல்லது கதை அச்சத்தை விளைவிக்கலாம் எனக் கருதிப் பேரச்சம் கொள்வர். அச்சந்தரும் செய்திகளைப் படித்தாலும் கேட்டாலும் நாடகம் அல்லது தொலைக்காட்சி அல்லது திரைக்காட்சிகளில் பார்த்தாலும் பேரச்சம் வரும்.
தொடரி, பேருந்து, வானூர்திகளில் பயணம் மேற்கொள்ளும் பொழுது எதிரில் அல்லது உடன் அமர்ந்திருப்பவர் கடத்திவிடுவாரோ என்பது போன்ற அச்சத்திற்கும் ஆளாவர். (அச்சநோய் வரும் என அஞ்சுவது வெருள்நோய் வெருளி. அது வேறு வகை.)
00
அச்சச்சூழல் வெருளி-Counterphobia
அச்சம் ஏற்படுவதற்கான சூழல் உருவானால் அதனைத் தவிர்க்க முயலாமல், அளவுகடந்து அஞ்சுவது அச்சச்சூழல்வெருளி.
counter என்னும் இலத்தீன் சொல்லிற்கு எதிர் எனப் பொருள். counterphobia என்னும் பொழுது அச்சத்திற்கு எதிரான அச்சம் எனப் பொருளாகிறது. அச்சச்சூழலுக்கு எதிரான அச்சம் என்ற பொருளில் குறிக்கின்றனர்.அஞ்சுவதற்குரிய சூழல் நேர்ந்தால் அதனை எதிர்கொள்ளாமல் பெருங்கவலையும் பேரச்சமும் கொள்வதை இது குறிக்கிறது.
இஃதும் அச்சச்சூழலின் ஒரு பகுதிதான்.
00
அடைதாழ்வெருளி-Cleithrophobia/Cleisiophobia
சிறிய இடத்தில் இருக்கும் பொழுது அடைத்துப் பூட்டி வைக்கப்படுவோம் என்று ஏற்படும் தேவையற்ற பேரச்சம் அடைதாழ் வெருளி.
குளியலறை போன்ற சிறிய அறைக்குள் இருக்கும் பொழுது தாழ்ப்பாள் திறக்க முடியாமல் உள்ளேயே இருக்க வேண்டுமோ அல்லது யாரும் கதவைப் பூட்டி விட்டுச் சென்று விடுவரோ அல்லது தானாகக் கதவு பூட்டிக் கொள்ளுமோ என்ற பேரச்சம் வரலாம்.
சிலர் மின்ஏணிக்குள் / ஏணறைக்குள் தனியாக நுழைந்ததும் கதவு திறக்கமுடியாமல் போய்விடுமோ என்று பேரச்சம் கொள்வர்.
cleithro என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் மூடு அல்லது அடை.
00
அடைப்பிடவெருளி-Claustrophobia
வெளியேற முடியாத அளவில் அறைக்குள் இருக்கும்பொழுது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் அடைப்பிட வெருளி.
அடைதாழ் வெருளிக்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது. ஊடுகதிர்க்கருவி முதலான மருத்துவக் கருவி வழி ஆய்வுகளுக்காக ஆய்வறையில் இருக்கும்பொழுது ஆய்வாளர் வெளியில் இருப்பார். அப்பொழுது ஏற்படும் தேவையற்ற அச்சம்.
கதவு பூட்டப்பட்ட ஊர்திகள், பலகணி/காற்றமாடங்கள் இல்லாத அறைகள், தானியங்கித் தாழ்ப்பாள் உள்ள உணவக அறைகள் என இவை போன்றவற்றில் மாட்டிக் கொள்ளும் பொழுது அல்லது மாட்டிக்கொள்ளுவோமோ என எண்ணும் பொழுது வரும் பேரச்சம்.
claustrum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் அடைப்பு.
00
அண்மையர்வெருளி – sedsocophobia
தவறானவர் அடுத்து இருப்பதாகப் பேரச்சம் கொள்வது அண்மையர் வெருளி.
நகரும் படிக்கட்டு அல்லது பொது இடங்களில் அடுத்து அமர்ந்திருப்பவர் தவறானவர் அல்லது தீங்கானவர் எனப் பேரச்சம் கொள்வர். யாரைப்பார்த்தாலும் ஐயம் ஏற்படுவது போன்றதுதான் இதுவும்.
sedsoco என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் மீண்டும் தொடங்குதல் என்பதுதான் நேர் பொருள். அடுத்த வரிசைத் தொடக்கமாக அண்மையில் உள்ளவரைக் குறிக்கிறது.
எதையும் உயரத்தில் வைத்து அடுக்கப் பயம், யாரையும் கோவித்து அடிக்கப் பயம்.
அண்டை மனிதரை அணுகப் பயம், அணுகிய மனிதரை இழக்கப் பயம்.
உறவு பயம்; துறவு பயம்; இரவு பயம்; விடியலும் பயம்; புதியம் பார்க்க ஏனோ பயம்; மதியம் தூங்கி எழுந்தாலும் பயம்;
சோக பயம்; வேக பயம்; நோய்(உரோகப்) பயம்; நோக பயம், போக பயம், வருவதும் பயம் எனக்கு; வாழ பயம், சாகவும் பயம் ! இவ்வாறு பயங்கள்பற்றிக் கமல் அடுக்கிக் கொண்டே போவார். இடையில், பத்துப் ‘போபியோ’ பெயர்களைக் குறிப்பிட்டு ஆங்கிலத்தில் உள்ள எல்லா ‘போபியா’க்களும் தன்னிடம் இருப்பதாக மருத்துவர் பஞ்ச பூதம் சொன்னதாகக் கதை நாயகர் சொல்வார். இவற்றை அச்சநோய்பற்றி அறியாதவர்கள் அறிய உதவும் குறிப்புகளாகக் கொள்ளலாம்.
இத்தகைய பயங்களையும் மேலும் பலவற்றையும் குறிப்பிடும் வெருளி நோய் குறித்துத்தான் நாம் பார்க்கப் போகின்றோம்.
வெருளிகளைத் தனித்தனியாகத்தான் குறிப்பிடுகின்றனர். எனினும் எளிதில் அறிவதற்காகப் பின்வரும் வகைப்பாடுகளை வரையறுத்துள்ளேன்.
அண்டம் சார் வெருளிகள்
அறம் சார் வெருளிகள்
ஆயுதம் சார் வெருளி
இடவகை வெருளிகள்
இயற்கை சார் வெருளிகள்
இலக்கியம் சார் வெருளிகள்
உடலியக்க சார் வெருளிகள்
உடல்ஊட்டம் சார் வெருளிகள்
உணர்வு சார் வெருளிகள்
உயிரினம் சார் வெருளிகள்
உறவு சார் வெருளிகள் palvakai
உறுப்பு சார் வெருளிகள்
ஊர்தி சார் வெருளிகள்
எண் சார் வெருளிகள்
ஒலி, ஒளி சார் வெருளிகள்
ஒழுக்கம் சார் வெருளிகள்
கட்டடம் சார் வெருளிகள்
கருத்துசார் வெருளிகள்
கலை சார் வெருளிகள்
களவு சார் வெருளிகள்
கற்பிதம் சார் வெருளிகள்
கற்பிதம் சார் வெருளிகள்
கனவு சார் வெருளிகள்
காற்று வெருளிகள்
கூர்மை தொடர்பான வெருளிகள்
சமயம் சார் வெருளிகள்
சுவை சார் வெருளிகள்
செயல்பாட்டு சார் வெருளிகள்
சொற்கள் சார் வெருளிகள்
தண்ணீர் சார் வெருளிகள்
தனிமைத் தொடர்பான வெருளிகள்
தன்மை வெருளிகள்
தீண்டல் சார் வெருளிகள்
தீர்வு சார் வெருளிகள்
தூய்மை வெருளிகள்
நாடு சார் வெருளிகள்
நிற்றல்சார் வெருளிகள்
நீர் சார் வெருளிகள்
நோய் சார் வெருளிகள்
பயிர் வெருளிகள்
பருவ வெருளிகள்
பாலியல் சார்ந்த வெருளிகள்
பொருள் வெருளிகள்
பேச்சு சார் வெருளிகள்
மக்கள் சார் வெருளிகள்
மருத்துவம் சார் வெருளிகள்
மாழை சார் வெருளிகள்
வண்ணம் சார் வெருளிகள்
வளம் சார் வெருளிகள்
வேலை சார் வெருளிகள்
இவற்றை இன்னும் சிலவற்றுடன் சேர்த்து இறுதியில் விளக்குவேன்.