Friday, July 15, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 274-280

 அகரமுதல

(தமிழ்ச்சொல்லாக்கம் : 267 – 273 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் : 274-280

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

274-280. பண்கள்

274. சட்சம்      —        குரல்

275. ரிசபம்     —        துத்தம்

276. காந்தாரம் —        கைக்கிளை

277. மத்திமம் —        உழை

278. பஞ்சம்    —        இளி

279. தைவதம் —        விளி

280. நிசாதம்    —        தாரம்

நூல்      :           கொக்கோகம் (1910) பக்கம் -106

நூலாசிரியர்      :           அதிவீரராம பாண்டியன்

உரையாசிரியர்  :           கொற்றமங்கலம் இராமசாமிப்பிள்ளை

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Thursday, July 14, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 267 – 273

 அகரமுதல

(தமிழ்ச்சொல்லாக்கம் 256-266 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் : 267 – 273

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

267. DEG – நீண்ட சதை

மன்னன் வருகிறான் என்பது கேட்டுணர்ந்த இராசகுமாரத்தி தனக்கு நேரக்கூடிய அகெளரவம் ஒன்றையே பெரிதெனக்கருதித் தன் ஆசை மணாளனை, ஆங்கிருந்த (DEG) என்ற நீண்ட சமையல் பாத்திரத்தில் புகுந்து மறைத்தாள்.

இதழ் :           இதழ் செந்தமிழ் (1910) தொகுதி – 8. பகுதி – 10 சாதாரண ௵ ஆவணி ௴

கட்டுரை     :           (இ)லெபன்னிசா

கட்டுரையாசிரியர்        :           வீ. சுப்பிரமணிய (ஐயர்) (தமிழ்ப் பண்டிதர்)

***                 

268. Cheeks – கதுப்புகள்

குசாக்கிர புத்தியுள்ள மேனாட்டு வித்துவானொருவர் இம் முத்தமிடும் வாடிக்கை பூர்வத்தில், மனிதர்கள் மாமிச பட்சணிகளாய் (Cannibals) இருந்த காலத்தில், புருசன்தான் பெண்ணாருத்தியினிடம் கொண்ட விசேடப் பிரியத்தை அவளுக்குச் செவ்வனே தெரிவிப்பதற்காகத் தன்னுடைய பற்களினால் அவள் உதடுகளிலும் கதுப்புகளிலும் (Cheeks) கடித்து, அவளை (இ)ரசமுள்ள மாம்பழம் போல விழுங்க வேண்டுமென்ற தன்னுடைய அவாவைக் காட்டும் அவ்வாடிக்கையிலிருந்து மாறி நாகரீகத்தினால் உண்டான அனுசுடானமே இம் முத்தமிடுதல் எனக் கூறுகின்றார்.

இதழ் :           செந்தமிழ் (1910) தொகுதி – 8, பகுதி 10, பக்கம் 508

கட்டுரை     :           முத்தமிடலின் வரலாறு

கட்டுரையாசிரியர்        :           வீ. சுப்பிரமணிய ஐயர் (தமிழ்ப் பண்டிதர்)

***

269. அங்குசுட்டம்      —        பெருவிரல்

270. தர்சனி       —        சுண்டுவிரல்

271. மத்தியமம் —        நடுவிரல்

272. அனாமிகை            —        ஆழிவிரல்

273. கனிசுட்டம்            —        கடை விரல்

நூல்      :           கொக்கோலம் (1910) (கொக்கோகம் என்பதன் அச்சுப்பிழையாக இருக்கலாம்.)

அத்தியாயம்     :           5, சுரதலட்சணம், பக்கம் – 163

உரையாசிரியர்  :           கொற்றமங்கலம் இராமசாமிப்பிள்ளை

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Sunday, July 10, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 256-266

 அகரமுதல

(தமிழ்ச்சொல்லாக்கம் 245 – 255தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

256. விசித்திரம் – பேரழகு

நூல்   :           அமிச சந்தேசம் (சித்திரபானு, பங்குனி)

நூலாசிரியர்         :           கவித்தலம் துரைசாமி மூப்பனார்.

257. பிரசண்ட மாருதம் :           பெருங்காற்று (1909)

இதழ் :           செந்தமிழ், செளமிய ௵ மார்கழி, தொகுதி : 8 பகுதி : 2. பக்கம் – 71

கட்டுரையாளர்    :           வீராசாமி ஐயங்கார்

258. சந்திபாதம்    –           முதலிற்பிடித்துப் பஞ்சாப் போடுதல்

259.அவதூதம்       –           புறங்கையாற் கீழே தள்ளுதல்

260. பரக்கேயணம்         –           இழுத்துத் தளளுதல்

261. முட்டி   –           கைகுவித்து இடித்தல்

262. கீலநிபாதம்  –           முழங்கை, கணைக்கைகளினால் இடித்தல்

263. வச்சிரநிபாதம்        –           கைவிளிம்புகளால் இடித்தல்

264. பாதோத்தூதம்        –           நடுவிரல் ஆழிவிரல் என்பவற்றினடுவே

பெருவிரல் வைத்துக் குத்தல், காலாற் றுக்கியெறிதல்

265. பிரமிருட்டம் –          உடம்பெல்லாம் இறுகப் பிடித்துத் தள்ளியழக்குதல்

266. மற்போராவது          :           ஆயுதமின்றித் தத்தம் உடம்பினாற் செய்யும் போர்,

                        அது சந்நிபாதம், அவதூதம், பிரக்கேபணம், முட்டி, கீலபாதம், வச்சிரதிபாதம், பாதோத்துாதம், பிரமிருட்டம் என எண் வகைப்படும். இவை முறையே முதலிற் பிடித்துப் பஞ்சாப் போடுதல்.

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Friday, July 8, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 245 – 255

 அகரமுதல

(தமிழ்ச்சொல்லாக்கம் 238 – 244 தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

245. அநுபந்தம்     –           பின்வருவது

246. அபிதானம்    –           பெயர்

247. அபிநயம்        –           கைமெய்காட்டல்

248. அவிழ்தம்       –           மருந்து

249. இலக்குமி       –           தாக்கணங்கு

250. இலக்கு            –           குறிப்பு

251. சுபாவம்          –           இயற்கை

252. கோமளம்       –           இளமை

253. சுதந்தரம்       –           உரிமை

254. திலகர் –          மேம்பட்டவர்

255. வருணாச்சிரமம்    –           சாதியொழுக்கம்

நூல்   :           மார்க்கண்டேய புராணம் வசன காவியமும் அரும்பத விளக்கமும் (1909) (இரண்டாம் பதிப்பு)

நூலாசிரியர்         :           உபய கலாநிதிப் பெரும்புலவர் – தொழுவூர் வேலாயுத முதலியார்.

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Wednesday, July 6, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 238 – 244

 அகரமுதல

(தமிழ்ச்சொல்லாக்கம் 228 – 237தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

238. சுக்கிலம்        –           வெண்மை

239. கிருட்டிணம்   –           கருமை

240. பீதம்     –           பொன்மை

241. இரக்கதம்          –           செம்மை

242. அரிதம்            –           பசுமை

243. கபிலம்            –           புகைமை

244. இரத்தினம்    –           மணி

நூல்   :           தருக்க கெளமுதியும் நியாய பதார்த்தம் பதினாறும் (1909) பக்கம் : 8.

நூலாசிரியர்         –            தஞ்சை மாநகரம் வெ. குப்புசாமி இராசு.

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, July 4, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 228 – 237

 அகரமுதல

(தமிழ்ச்சொல்லாக்கம் 218 -227தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

228. தேசிய கீதம் – நாட்டுப் பாட்டு (1908)

பரலி ச. நெல்லையப்பர்

229. அஞ்சலி           –           கும்பிடல்

230. அதீதம்            –           எட்டாதது

231. அபிநயம்        –           கைமெய் காட்டல்

232. சம்மதம்          –           உடன்பாடு

233. சுதந்தரம்       –           உரிமை

234. கனிட்டர்        –           இளையவர்

235. நிருத்தம்        –           கூத்து

236. இரத்தம்          –           புண்ணீர்

237. விவாகம்         –           மணம்

நூல்   :           மார்க்கண்டேய புராணம் வசன காவியமும் அரும்பத விளக்கமும் (1909).

நூலாசிரியர்     –       உபயகலாநிதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுத முதலியார்.

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Saturday, July 2, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 218 -227

 அகரமுதல

(தமிழ்ச்சொல்லாக்கம் 213 – 217 தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

218. அசாதாரண தருமம்   –    சிறப்பியல்பு

219. ஆசீர்வாத ரூபம்     – வாழ்த்து

220. திருக்கு – அறிவு

221. நாநா    –          பல

222. பரசுபரம்      – ஒன்றற் கொன்று

223. பத்தியம் – பாடல்

224. பிரதியோகி  – எதிர்மறை

225. பிராக பாவம் – முன்னின்மை

226. விசேடம் – அடைகொளி

227. விட்சேபம்      – புடைபெயர்ச்சி

நூல்   :           வேதாந்த சூளாமணி மூலமும் உரையும் (1908)

குறிப்புரை :           கோ. வடிவேலு செட்டியார்

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்