Thursday, July 3, 2025

வெருளி நோய்கள் 55-60 : இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 51-54 தொடர்ச்சி)

55. 10 ஆம் எண் வெருளி – Decaphobia

 10 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 10 ஆம் எண் வெருளி.

டெக்கா/ Deca என்பது பத்து என்பதைக் குறிக்கும் முன்ஒட்டுச்சொல்.

00

56. 100 ஆம் எண் வெருளி Hekatophobia  / centumphobia / hectophobia

100 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம்100 ஆம் எண் வெருளி.

கிரேக்கத்தில் hekaton என்றால் 100 எனப் பொருள்.

பிரெஞ்சில் cent, இத்தாலியில் cento, இலத்தீனில் centum  என்பன 100 என்பதைக் குறிக்கும்.

00

57. 1000 ஆம் எண் வெருளி – Milliphobia

1000 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 1000 ஆம் எண் வெருளி.

mille என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் ஆயிரம்

00

58. 100 மாத்தேறல் குப்பி வெருளி –  One hundred bottles of beerphobia

100 மாத்தேறல் குப்பி(One hundred bottles of beer) குறித்த வரம்பற்ற பேரச்சம் 100 மாத்தேறல் குப்பி வெருளி.

00

59. 101 ஆம் எண் வெருளி – Hekatenophobia

101 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 101 ஆம் எண் வெருளி.

00

60. 11 ஆம் எண் வெருளி-  Hendecaphobia  / Undecaphobia

11 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம்11 ஆம் எண் வெருளி.

கிரேக்கத்தில்  hendeka  என்றால் 11.

இலத்தீனில்  undeca என்றால் 11.

+++

(தொடரும் )

Wednesday, July 2, 2025

வெருளி நோய்கள் 51-54 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 47-50 தொடர்ச்சி)

51. ‘வி’ / V’ எழுத்து வெருளி – Victophobia

‘வி’ / V’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘வி’ / V’ எழுத்து வெருளி.

00

52. ‘வேசி / ‘whore’ சொல் வெருளி – Huophobia

‘வேசி / whore’ என்னும் சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘வேசி /whore’ சொல் வெருளி.

ஆண் மட்டுமல்ல, பெண்ணும் மற்றொரு பெண்ணை இழிவுபடுத்துவதற்காக, விலைமகள், வேசி, பரத்தை, வேசிமகள் எனப் பலவகைகளில் ஏசுகின்றனர். இதற்குப் பயன்படுத்தும் ‘வேசி/whore’ என்ற சொல்லைக் கேட்டதும் தாங்கள் இழிவுபடுத்தப்பட்டதாகப் பெருங்கவலையும் பேரச்சமும் கொள்வர்.

அதுபோல், ஆணையும் வேசி மகன், தகா உறவு கொண்டவன் என்பன போன்று ஏசுகின்றனர்.

00

53. 0.5 ஆம் எண் வெருளி  Semiphobia

0.5 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 0.5 ஆம் எண் வெருளி.

பாதி அல்லது அரை என்பதைக் குறிக்கும் .5 எண் குறித்த பேரச்சம். சில நேரங்களில் மன நலம் சரியில்லாதவர்களை  அரை(க்கிறுக்கு)(செமி) என்று சொல்வதாலும் பாதி எண் குறித்த பேரச்சம் எழுகிறது.

00

54. 1 ஆம் எண் வெருளி Henophobia  / unophobia

1 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 1ஆம் எண் வெருளி.

கிரேக்கத்தில் hen என்றால் 1 ; இலத்தீனில்  unus என்றால் 1.

இப்பேரச்சம் உள்ளவர்கள் எதையும் முதல் முறை செய்வதற்கு அஞ்சுவார்கள்.

எண் 1 சூரியனின் ஆட்சிக்குரியது. எனவே, பொதுவாக நற்பலன்கள் கூறப்படுகின்றன. எனினும் இவர்களுக்கு வெப்பத்தால் பாதிப்பு வரும், மலச்சிக்கல் உண்டாகும், பித்தநீர் ஓட்டம் மிகும், கண்பார்வைக் குறைபாடு வரும், இரத்தக் கொதிப்பு, சீரணக் கோளாறுகள், படபடப்பு, தலைவலி வரும் என்றெல்லாம் படித்து விட்டு அவை வந்துவிட்டதாகவே கவலைப்படுவோர் உள்ளனர்.

00

(தொடரும் )

Tuesday, July 1, 2025

வெருளி நோய்கள் 47-50 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள்44-46 தொடர்ச்சி)

47. ‘மலக்கட்டி’ / ‘turd’ சொல் வெருளி – Kusaophobia

‘மலக்கட்டி’ / ‘turd’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘மலக்கட்டி’ / ‘turd’ சொல் வெருளி.

00

48. ‘மா&மு’ வெருளி -M&M phobia

‘மா&மு’ இன்கண்டு தொடர்பான அளவு கடந்த பேரச்சம் ‘மா&மு’ வெருளி.

மார்சு, முர்ரே(Mars & Murrie) நிறுவனங்களின் கூட்டு உருவாக்கம் என்பதால் இதற்கு இப்பெயர். வண்ணப் பொத்தான் வடிவ இன்கண்டு(colorful button-shaped chocolate)களில் ‘எம்’ என்னும் ஆங்கில எழுத்து இடம் பெற்றிருக்கும்.

2003 இலிருந்து 100 ஆண்டுகளுக்கு மேல் விற்பனையாகும் ‘மா&மு’ இன்கண்டு சிலருக்கு ஒவ்வாமை போன்ற கவலையை உருவாக்கிப் பேரச்சத்தைத் தோற்றுவிக்கிறது.

00

49. ‘மூத்திரம்’ /’piss’ சொல் வெருளி – Katourophobia

‘மூத்திரம்’ /’piss’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘மூத்திரம்’ /’piss’ சொல் வெருளி

00

50. ‘யூ / ‘U’ எழுத்து வெருளி – Upsilonphobia

‘யூ / ‘U’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘யூ / ‘U’ எழுத்து வெருளி.

00

(தொடரும் )

Monday, June 30, 2025

வெருளி நோய்கள் 44 – 46 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 41-43 தொடர்ச்சி)

44. ‘பு – டை’  சொல் வெருளி – Inmaophobia

‘மறைவுறுப்பு’ / ‘cunt’ சொல் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும்

‘பு – டை’ / ‘cunt’ சொல் வெருளி.

பெண்களின் மறைவுறுப்பு குறித்த கீழ்த்தரமான சொல்மீது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம்  எனப்படும்.

செருமானியக் குடும்பமொழிகளில்  kunta என்றும் kunte என்றும் conte என்றும் அழைக்கப்பட்டது  ‘cunt’ என ஆனது.

பெண்ணுறுப்பு வெருளி என முதலில் குறிப்பிட்டிருந்தேன்.‘பெண்ணுறுப்பு’ / ‘twat’ சொல் வெருளி – Younaophobia உள்ளதால் வேறுபடுத்த வேண்டியுள்ளது. ‘cunt’ என்பது கீழ்த்தரமாக ஏசும் வகையில் சொல்லப்படுவது. எனவே, தமிழில் அவ்வாறு ஏசும் வகையில் சொல்லும் மூன்றெழுத்துச் சொல்லே பொருத்தமாக இருக்கும். எனவே, அதனையே இடையி் உள்ள ‘ண்’ எழுத்தைக் கோடிட்டுமறைத்து ‘பு–டை’ எனக் குறித்துள்ளேன். ஆக, மறைவுறுப்பில் நடுவெழுத்து மறைக்கப்பட்டுள்ளது.

காண்க: பெண்ணுறுப்பு வெருளி-Eurotophobia

00

45. ‘மலம்’ / ‘shit’ சொல் வெருளி – Skataphobia

‘மலம்’ / ‘shit’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘மலம்’ / ‘shit’ சொல் வெருளி.

00

46. ‘பிறப்புறுப்பு’ / ‘twat’ சொல் வெருளி – Younaophobia

‘பெண்ணுறுப்பு’ / ‘twat’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் பிறப்புறுப்பு / ‘twat’ சொல் வெருளி.

பெண்ணுறுப்பு சொல்லைக் கேட்க நேர்ந்தாலோ படிக்க நேர்ந்தாலோ அளவுகடந்த பேரச்சம் கொள்வர். ‘அல்குல் என்பது பிறப்புறுப்பிற்கும் இடைக்கும் இடைப்பட்ட பகுதி. எனினும் இச்சொல்’ பிறப்புறுப்பைக் குறிப்பதாக எண்ணிக் காரணமற்ற வெறுப்பும் பேரச்சமும் கொள்வோர் உள்ளனர்.

00

Sunday, June 29, 2025

வெருளி நோய்கள் 41- 43 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 36-40 தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 41-43

41. ‘புணர் வாய்’ /’vagina’ சொல் வெருளி – Yindaophobia

‘புணர் வாய்’ /’vagina’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் புணர் வாய் /’vagina’ சொல் வெருளி.

பெண்ணின் பிறப்புறுப்பைக் குறிக்கும் ‘vagina’ என்ற  சொல்லைப் பொதுவிடங்களிலும் தனிமையிலும் பெண்ணை வெறுப்பேற்ற சொல்கின்றனர். இப்பொழுது அலைபேசிவாயிலாகவும் தெரிவித்து ஏளனம் செய்வோரும் வெறுப்பூட்டுவோரும் உள்ளனர். எனவே, இச்சொல்லைக் கேட்டதும் வெறுப்பும் பேரச்சமும் கொள்வோர் உள்ளனர்.

00

42. ‘புணர்குறி’ / ‘dick’ சொல் வெருளி Imkengphobia

‘புணர்குறி’ / ‘dick’ சொல்பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் ‘புணர்குறி’ / ‘dick’ சொல் வெருளி.

புணர்ச்சி உறுப்புகள் குறித்துக் கேள்விப்பட்டாலும் படத்தைப் பார்க்க நேர்ந்தாலும் அஞ்சுவோர் அந்தச்சொல்லைக் குறிப்பிடவும் அஞ்சுவர்.

காண்க :‘ஆண் குறி ‘/’penis’ சொல் வெருளி – Yinjingphobia

00

43. ‘பூனா’ சொல் வெருளி – Nuyinphobia

‘பூனா’ சொல் (‘pussy’ ) சொல்  தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘பூனா’ சொல் வெருளி.

பூனை அடிக்கடி தன் எச்சிலை முன்னங்காலால் தொட்டு முகத்தைப் பூசிக்கொள்ளும்.எனவே, இதனைப் பூசை என்பர். பூசை என்பதுதான் பூனையாக மாறிற்று என்பர்.

“வெவ்வாய் வெருகினைப் பூசை யென்றலும்” எனத் தொல்காப்பியர் (தொல்காப்பிம், மரபியல் 69) கூறுகிறார்.

ஆனால், தமிழில் பூசை என்பதற்கும் பெண்குறி என்பதற்கும் எத் தொடர்பும் இல்லை. ஆனால், ஆங்கிலத்தில் pussy பூனையைக் குறிப்பதுடன் கோழை அல்லது நலிவடைதல் முதலான வேறு சில பொருள்களையும் குறிக்கும். மேலும் பெண்குறி, கருவாய்க்குழல், பெண்ணுடன் உடலுறவு கொள்ளுதல் ஆகிய பொருளையும் தரும். எனவே, சிலர் இரு பொருளில் குறிப்பதால் இச்சொல்லைக் கண்டு வெறுப்போர் உள்ளனர். எனவே, தமிழில் இத்தகைய தொடர்பு இல்லாவிட்டாலும், பரவலாக இப்பொழுது வழக்கிலில்லாத பூச்சை என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டேன்.

‘பூனா’ சொல் வெருளி என்றால் ஒலிப்பில் பூனையுடன் ஒத்து வருகிறது. உண்மையில் இதற்கும் பூனைக்கும் தொடர்பில்லை. பெண்குறியைக் கொச்சையாகக் குறிக்கும் மூன்றெழுத்து சொல்லின் முதலெழுத்து அடிப்படையில் இவ்வாறு கூறுவதைக் கதைகளில் பயன்படுத்தி உள்ளனர். எனவே, நேர் பொருளாகச் சொல்வது பொருந்தாது என்பதால் இவ்வாறு குறித்துள்ளேன்.

00

(தொடரும் )

Saturday, June 28, 2025

வெருளி நோய்கள் 36-40 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 31-35 தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 36-40

36. ‘டி’ / ‘D’ எழுத்து வெருளி Deltaphobia

‘(ண்)டி’ / ‘D’ எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘டி’ / ‘D’ எழுத்து வெருளி.

00

37. ‘தீயன்’ / ‘booger’ சொல் வெருளி – Biniuphobia

‘தீயன்’ / ‘booger’ குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘தீயன்’ / ‘booger’ வெருளி

00

38. ‘நரகத்திற்குப் போ’ / ‘damn’ சொல் வெருளி – Jigotophobia

‘damn’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘நரகத்திற்குப் போ’ / ‘damn’ சொல் வெருளி.

சாபமிடுதல், பழிச்சொல், தெறுமொழி எனப் பல பொருள் தரும் பலரால் விரும்பத்தகாத ஆங்கிலச் சொல்   என்பது. இதனைக் கேட்டாலே பலருக்கு அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் வரும்.தன்னை ஏளனப்படுத்துவதாக எண்ணியும் கவலையும் வெறுப்பும் கொள்வர்.

00

39. ‘பறிதல்’ / ‘fart’ சொல் வெருளி – Fongpiphobia

‘பறிதல்’ / ‘fart’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் பறிதல் / ‘fart’ சொல் வெருளி.

பறிதல் என்பதன் நேர் பொருள் ஒலியுடன் வெளிப்படுதல். குகர, சுகரத்தில் வரும் ஈரெழுத்துச் சொல்லைக் குறிக்கிறது. இடக்கர் அடக்கலாகப் பறிதல் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

00

40. ‘பாலினம்’ / ‘sex’ சொல் வெருளி –  Fylophobia

‘பாலினம்’ / ‘sex’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘பாலினம்’ / ‘sex’ சொல் வெருளி.

00

Friday, June 27, 2025

வெருளி நோய்கள் 31-35: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 26-30 தொடர்ச்சி)

31. ‘கே’ /’K’ எழுத்து வெருளி – Kappaphobia

‘கே’ /’K’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘கே’ /’K’ எழுத்து வெருளி

00

32. ‘சாணம்’ /’cock’ சொல் வெருளி – Lantsuophobia

சாணக்குவியல்(cock) சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘சாணம்’ /’cock’ சொல் வெருளி.

00

33. ‘சி’ / ‘C’ எழுத்து வெருளி-Cammaphobia

‘சி’ / ‘C’ எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘சி’ / ‘C’ எழுத்து வெருளி.

00

34. ‘சிறுக்கி’ /’bitch’ சொல் வெருளி – Mugouphobia

‘சிறுக்கி’ /’bitch’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘சிறுக்கி’ /’bitch’ சொல் வெருளி.

00

35. ‘டபுள்யூ’ / ‘W’ எழுத்து வெருளி – Wauphobia

‘டபுள்யூ / ‘W’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘டபுள்யூ / ‘W’ எழுத்து வெருளி.

(தொடரும் )