தமிழில் எண்ணற்ற அறிவியல் செய்திகள் உள்ளன. இன்றைக்குக் காணப்படும் அறிவியல் உண்மைகள் அன்றே கண்டறியப்பட்டுள்ளன. அறிவியல் தமிழின் அன்றைய வளத்தையும் இன்றைய உண்மையையும் உணர்த்த அனைவருக்குமான அறிவியல் தமிழ் என்னும் நூல் கணியச்சில் உருவாக்கப்பட்டது. 10 ஆண்டுகளாக உறங்கிக் கிடக்கும் உண்மைகளை இணையத்தில் ஏற்றலாம் என இவ்வலைப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. புதிய பதிவுகளும் மேற்கொள்ளப்படும்.
Showing posts with label புதிய அறிவியல். Show all posts
Showing posts with label புதிய அறிவியல். Show all posts
Sunday, March 17, 2013
Thursday, September 6, 2012
அறிவியல் துறைகளின் அருந்தமிழ்ப் பெயர்கள்
அறிவியல் துறைகளின் அருந்தமிழ்ப் பெயர்கள்
- இலக்குவனார் திருவள்ளுவன்
துறைதோறும் துறைதோறும் தமிழ் வளர வேண்டும். தமிழில் வரும் பிற துறைகள் பற்றிய கட்டுரைகளையும் நூல்களையும் பார்க்கும் பொழுது தமிழ் அறிவியல் துறையில் முன்னேறிவிட்டதுபோல் தோன்றும். ஆனால், உண்மையில் நாம் எட்ட வேண்டிய இலக்கு மிக மிகத் தொலைவில் உள்ளது.தஞ்சாவூரில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றபோது அறிவியலிலும்தமிழ் ! அனைத்திலும்தமிழ்! என்பதே அரசின் முழக்கமாக அமைந்தது. ஆனால், இதனைச் செயல்படுத்தும் வகையில் போதிய துறையறிவும் தமிழ்ப்புலமையும் நிறைந்தவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் உள்ளனர். பிற துறை யறிவினர் தமிழில் புலமை பெறுவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும். தமிழ்ப்புலமையாளர்கள், அறிவியல்துறைகளில் தேர்ச்சி பெறுவதைக் கடப்பாடாகக் கொள்ள வேண்டும். ஒரே துறையின் உட்பிரிவாகவும் பல துறைகள் வளர்ந்துள்ளன. ஆனால் அவற்றின் பெயர்களைக்கூட அகராதிகளில் காண இயலவில்லை. இங்கே பெரும்பாலான துறைகளின் பெயர்கள் தமிழில் தரப்படுகின்றன. ஒவ்வொரு
துறைகளைப் பற்றியும் குறைந்தது ஒரு பத்தி, அடுத்து ஒரு கட்டுரை, அதற்கடுத்து ஒரு நூல், பின்னர் பல்வேறு நூல்கள் என அறிவியல் துறைகளில் தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.
- இலக்குவனார் திருவள்ளுவன்
துறைதோறும் துறைதோறும் தமிழ் வளர வேண்டும். தமிழில் வரும் பிற துறைகள் பற்றிய கட்டுரைகளையும் நூல்களையும் பார்க்கும் பொழுது தமிழ் அறிவியல் துறையில் முன்னேறிவிட்டதுபோல் தோன்றும். ஆனால், உண்மையில் நாம் எட்ட வேண்டிய இலக்கு மிக மிகத் தொலைவில் உள்ளது.தஞ்சாவூரில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றபோது அறிவியலிலும்தமிழ் ! அனைத்திலும்தமிழ்! என்பதே அரசின் முழக்கமாக அமைந்தது. ஆனால், இதனைச் செயல்படுத்தும் வகையில் போதிய துறையறிவும் தமிழ்ப்புலமையும் நிறைந்தவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் உள்ளனர். பிற துறை யறிவினர் தமிழில் புலமை பெறுவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும். தமிழ்ப்புலமையாளர்கள், அறிவியல்துறைகளில் தேர்ச்சி பெறுவதைக் கடப்பாடாகக் கொள்ள வேண்டும். ஒரே துறையின் உட்பிரிவாகவும் பல துறைகள் வளர்ந்துள்ளன. ஆனால் அவற்றின் பெயர்களைக்கூட அகராதிகளில் காண இயலவில்லை. இங்கே பெரும்பாலான துறைகளின் பெயர்கள் தமிழில் தரப்படுகின்றன. ஒவ்வொரு
துறைகளைப் பற்றியும் குறைந்தது ஒரு பத்தி, அடுத்து ஒரு கட்டுரை, அதற்கடுத்து ஒரு நூல், பின்னர் பல்வேறு நூல்கள் என அறிவியல் துறைகளில் தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.
- அகச்சுரப்பியியல் - Endocrinology
- அடிசிலியல் - Aristology
- அடையாளவியல் - Symbology
- அண்டவியல் - Universology
- அண்டவியல் - Cosmology
- அணலியல் - Pogonology
- அருங்காட்சியியல் - Museology
- அருளரியல் - Hagiology
- அளவீட்டியல் - Metrology
- அற்புதவியல் - Aretalogy
- ஆடவர் நோயியல் - Andrology
- ஆய்வு வினையியல் - Sakanology
- ஆவணவியல் - Anagraphy
- ஆவியியல் - Spectrology
- ஆறுகளியல் - Potamology
- இசையியல் - Musicology
- இந்தியவியல் - Indology
- இயற்பியல் - Physics
- இரைப்பையியல் - Gastrology
- இலக்கிலி இயல் - Dysteleology
- இறை எதிர் இயல் - Atheology
- இறைமையியல் - Pistology
- இறைமையியல் - Theology
- இன உறுப்பியல் - Aedoeology
- இன்ப துன்பவியல் - Algedonics
- இனப் பண்பாட்டியல் - Ethnology
- இனவியல் - Raciology
- ஈரிடவாழ்வி இயல் - Herpetology
- உடலியல் - Physiology
- உடற் பண்டுவஇயல் - Phytogeography
- உடற்பண்பியல் - Somatology
- உடுவியக்கவியல் - Asteroseismology
- உணர்வகற்றியல் – Anesthesiology
- உயிர் மின்னியல் - electro biology
- உயிர்ப்படிமவியல் - Paleontology
- உயிர்ப்பொருளியல் - Physiology
- உயிர்மியியல் - Cytology
- உயிரித் தொகை மரபியல் - Population Genetics
- உயிரித்தொகை இயக்க இயல் - Population Dynamics
- உயிரிய இயற்பியல் - Biophysics
- உயிரிய மின்னணுவியல் - Bioelectronics
- உயிரிய வேதியியல் - Biochemistry
- உயிரிய வேதிவகைப்பாட்டியல் - Biochemical taxonomy
- உயிரியத்தொழில் நுட்ப இயல் - Biotechnology
- உயிரியப் பொறியியல் - Bioengineering
- உயிரியல் - Biology
- உயிரினக் காலவியல் - Bioclimatology
- உயிரினச் சூழ்வியல் - Bioecology
- உருவகவியல் - Tropology
- உருள்புழுவியல் - Nematology
- உரைவிளக்கியல் - Dittology
- உளவியல் - Psychology
- ஊட்டவியல் - Trophology
- எகிப்தியல் - Egyptology
- எண்கணியியல் - Numerology
- எரிமலையியல் - Volconology
- எலும்பியல் - Osteology
- எலும்பு நோய் இயல் - Osteo pathology
- எறும்பியல் - Myrmecology
- ஒட்பவியல் - Pantology
- ஒப்பனையியல் - Cosmetology
- ஒலியியல் - Phonology
- ஒவ்வாமை இயல் - Allergology
- ஒழுக்கவியல் - Ethics
- ஒளி அளவை இயல் - Photometry
- ஒளி இயல் - Photology
- ஒளி உயிரியல் - Photobiology
- ஒளி விளைவியல் - Actinology
- ஒளி வேதியியல் - Photo Chemistry
- ஒளித்துத்த வரைவியல் - Photozincography
- ஓசையியல் - Acoustics
- கசிவியல் - Eccrinology
- கட்டடச்சூழலியல் - Arcology
- கடப்பாட்டியல் - Deontology
- கடல் உயிரியல் - Marine biology
- கடற் பாசியியல் - Algology
- கண்ணியல் - Opthalmology
- கணிப்பியல் - Astrology
- கதிர் மண்டிலவியல் - Astrogeology
- கதிர் விளைவியல் - Actinobiology
- கரிசியல் - Hamartiology
- கரிம வேதியியல் - Organic Chemistry
- கருத்தியல் - Ideology
- கருதுகை விலங்கியல் - Cryptozoology
- கருவியல் - Embryology
- கருவியல் - Embryology
- கல்வி உளவியல் - Educational Psychology
- கலைச்சொல்லியல் - Terminology
- கழிவியல் - Garbology
- கனி வளர்ப்பியல் - Pomology
- கனிம வேதியியல் - inorganic chemistry
- கனியியல் - Carpology
- கனியியல் - Pomology
- காளானியல் - Mycology
- காற்றழுத்தவியல் - Aerostatics
- காற்றியக்கவியல் - Aerodynamics
- காற்றியல் - Anemology
- கிறித்துவியல் - Christology
- குடல் புழுவியல் - Helminthology
- குருட்டியல் -Typhology
- குருதி இயல் - Haematology / Hematology
- குளுமையியல் - Cryology
- குற்றவியல் - Criminology
- குறிசொல்லியல் - Parapsychology
- குறிப்பியல் - Cryptology
- குறியீட்டியல் - Iconology
- கெல்டிக் சடங்கியல் - Druidology
- கேட்பியல் - Audiology
- கைம்முத்திரையியல்(செய்கையியல் / சைகையியல்)-Pasimology
- கையெழுத்தியல் - Graphology
- கொள்ளை நோயியல்- Epidomology
- கோட்பாட்டியல் - Archology
- கோளியல் - Uranology
- சங்குஇயல் - Conchology
- சமயவிழாவியல் - Heortology
- சரி தவறு ஆய்வியல் - Alethiology
- சாணவியல் - Scatology
- சிலந்தி இயல் - Araneology
- சிலந்தியியல் - Arachnology
- சிறப்புச் சொல் தோற்றவியல் - Onomatology
- சீனவியல் - Sinology
- சுரப்பியியல் - Adenology
- சூழ் வளர் பூவியல் - Anthoecology
- சூழ்நிலையியல் - Ecology
- செதுக்கியல் - Anaglyptics
- செய்கை இயல் - Dactylology
- செல்வ வியல் - Aphnology
- செல்வவியல் - Plutology
- செவ்வாயியல் - Areology
- செவியியல் - Otology
- சொல்லியல் - Lexicology
- சொல்லியல் - Accidence
- சொற்பொருளியல் - Semasiology
- தசையியல் - Myology
- தண்டனையியல் - Penology
- தமிழியல் - Tamilology
- தன்மையியல் - Axiology
- தன்னியல் - Autology
- தாவர உள்ளியல் - Phytotomy
- தாவர நோய் இயல் - Phytopathology
- தாவர வரைவியல் - Phytography
- தாவரஊட்டவியல் - Agrobiology
- தாவரவியல் - Botany
- திணைத் தாவர இயல் - Floristics
- திணையியல் - Geomorphology
- திமிங்கில இயல் - Cetology
- திருமறைக் குறியீட்டியல் - Typology
- திருமனையியல் - Naology
- திரைப்படவியல் - Cinimatography
- தீவினையியல் -Ponerology
- துகள் இயற்பியல் - Particle physics
- துகளியல் - Koniology
- துதிப்பாவியல் - Hymnology
- துயிலியல் - Hypnology
- தூய இலக்கியல் - Heirology
- தூள்மாழை இயல் - Powder Metallurgy
- தேர்தலியல் -Psephology
- தேவதை இயல் - Angelology
- தேவாலயவியல் - Ecclesiology
- தேனீ இயல் - Apiology
- தொடர்பிலியியல் - Phenomenology
- தொண்டை இயல் - Pharyngology
- தொல் அசீரியர் இயல் - Assyriology
- தொல் உயிரியல் - Palaeontology
- தொல் சூழ்நிலையியல் - Paleo ecology
- தொல் பயிரியல் - Paleobotany
- தொல் மாந்தவியல் - Paleoethnology
- தொல் மீனியல் - Paleoichthylogy
- தொல் விலங்கியல் - Palaeozoology
- தொல்தோற்ற இனவியல் (மாந்த - மாந்தக்குரங்கினவியல்) - Anthropobiology
- தொல்லிசையியல் - Ethnomusicology
- தொல்லியல் - Archaeology
- தொல்லினவியல் - Paleethnology
- தொல்லெச்சவியல் - Archaeozoology
- தொழில் நுட்பச் சொல்லியல் - Orismology
- தொழில் நுட்பவியல் - Technlogy
- தொழிற்சாலை வேதியியல் - industrial chemistry
- தொழு நோயியல் - Leprology
- தொற்றி இயல்/ பயிர்ப்பூச்சியியல் - Pestology
- தொன்மவியல் - Mythology
- தோட்டுயிரியியல் - Astacology
- தோல்நோயியல் - Dermatology
- நச்சியியல் - Virology
- நடத்தையியல் - Praxeology
- நரம்பியல் - Neurology
- நல்லுயிரியல் - Pneumatology
- நலிவியல் - Astheniology
- நன்னியல் - Agathology
- நாடி இயல் - Arteriology
- நாணயவியல் - Numismatology
- நாளவியல் - Angiology
- நிகழ்வியல்- Chronology
- நிலத்தடி நீரியல் - Hydrogeology
- நிலநடுக்கவியல் - Seismology
- நிலாவியல் - Selenology
- நிலை நீரியல் - Hydrostatics
- நீத்தாரியல் - Martyrology
- நீர் வளர்ப்பியல் - Hydroponics
- நீர்நிலைகளியல் - Limnology
- நீராடல் இயல் - Balneology
- நுண் உயிரியல் - Microbiology
- நுண் வேதியியல் - Microchemistry
- நுண்பொருளியல் - Micrology
- நுண்மி இயல் - Bacteriology
- நுண்மின் அணுவியல் - Micro-electronics
- நூல் வகை இயல் - Bibliology
- நெஞ்சக வியல் - Cardiology
- நெடுங்கணக்கியல் - Alphabetology
- நெறிமுறையியல் - Aretaics
- நொதி இயல் - Enzymology
- நொதித் தொழில் நுட்பவியல் - Enzyme tecnology
- நோய் இயல் - Pathology
- நோய்க்காரணவியல் - Aetiology
- நோய்க்குறியியல் - Symptomatology
- நோய்த்தடுப்பியல் - Immunology
- நோய்த்தீர்வியல் - acology
- நோய்நீக்கியல் - Aceology
- நோய்வகையியல் - Nosology
- நோயாய்வியல் - Etiology
- நோயியல் - Pathology
- படஎழுத்தியல் - Hieroglyphology
- படிகவியல் - crystallography
- பணிச்சூழ் இயல் - Ergonomics
- பத்தியவியல் - Sitology
- பயிர் மண்ணியல் - Agrology
- பயிரியல்-Phytology
- பரியியல் - Hippology
- பருப் பொருள் இயக்கவியல் - kinematics
- பருவ இயல் - Phenology
- பருவப் பெயர்வியல் - Phenology
- பல்லியல் - Odontology
- பழங்குடி வழக்கியல் - Agriology
- பழம்பொருளியல் - Paleology
- பற் கட்டுப்பாட்டியல் - Contrology
- பறவை நோக்கியல் - Ornithoscopy
- பறவையியல் - Paleornithology
- பனிப்பாளவியல் - Glaciology
- பாசி இயல் - Phycology
- பாப்பிரசு சுவடியியல் - Panyrology
- பாம்பியல் - Ophiology
- பார்ப்பியல் Neossology
- பாலூட்டியல் - Mammalogy
- பாறைக் காந்தவியல் - Palaeo Magnetism
- பாறையியல் - Lithology
- பாறை அமைவியல் - Petrology
- பிசாசியல் - Diabology
- பிளவையியல் - Oncology
- புத்த இயல் - Buddhology
- புத்தியற்பியல் - New physics
- புதிரியல் - Enigmatology
- புதைபடிவ இயல் - Ichnology
- புல உளவியல் - Faculty Psychology
- புல்லியல் - Agrostology
- புவி இயற்பியல் - Geo physics
- புவி உயிர்ப் பரவியல் - Biogeography
- புவி வடிவ இயல் - Geodesy
- புவி வளர் இயல் - Geology
- புவி வேதியியல்- Geo-chemistry
- புவியியல் - Geography
- புவிவெளியியல் - Meteorology
- புள்ளியல் - Ornithology
- புறமண்டிலவியல் - Exobiology
- புற்று நோய் இயல் - Cancerology
- பூச்சி பொட்டு இயல் - Acarology
- பூச்சியியல் - Entomology
- பூச்சியியல் - Entomology
- பூச்சியியல் - Insectology
- பெயர்வன இயல் - Acridology
- பெரு வாழ்வியல் - macrobiotics
- பேயியல் - Demonology
- பொதுஅறிவு இயல் - Epistemology
- பொருள்சார் வேதியியல் - Physical Chemistry
- போட்டியியல் - Agonistics
- போதனையியல் - Patrology
- மகளிர் நோய் இயல் - Gynaecology/ Gynecology
- மண்டையோட்டியல் - Craniology
- மண்ணியல் - Pedology
- மண்புழையியல் - Aerology
- மணி இயல் - Campanology
- மணிவியல் - Gemology
- மதுவியல் - Enology (or Oenology)
- மர ஒளி வரைவியல் - Photoxylography
- மரபு இயைபியல் - Genecology
- மரபு வழியியல் - Geneology
- மரவரியியல் - Dendrochronology
- மரவியல் - Dendrology
- மருத்துவ அளவீட்டியல் - Posology
- மருத்துவ நோயியல் - Clinical pathology
- மருத்துவ மரபணுவியல் - Clinical genetics
- மருந்தாளுமியல் - Pharmacy
- மருந்தியல் - Pharmacology
- மருந்து வேதியியல் - Medicinal chemistry
- மலையியல் - Orology
- மழையியல் - Ombrology
- மனக்காட்சியியல் - Noology
- மனநடையியல் - Nomology
- மன்பதை உளவியல் - Social Psychology
- மன்பதையியல் - Sociology
- மனைவளர்உயிரியல் - Thremmatology
- மாந்த இனவியல் - Ethnology
- மாவியல் - Morphology
- மானிடவியல் - Anthropology
- மின் ஒலியியல் - Electro-acoustics
- மின்வேதியியல் - Electrochemistry
- மின்னணுவியல் - Electronics
- மீனியல் - Ichthyology.
- முகிலியல் - Nephology
- முட்டையியல் - Oology
- முடியியல் - Trichology
- முதற்கோட்பாட்டியல் - Archelogy / Archology
- முதியோர் கல்வியியல் - Andragogy
- முதுமையியல் - Gerontology
- முரண் உயிரியல் - Teratology
- முரணியல் - Heresiology
- முறையியல் - Systomatology
- முனைப்படு வரைவியல் - Polarography
- மூக்கியல் - Rhinology
- மூதுரையியல் - Gnomology
- மூப்பியல் - Gerontology
- மூலக் கூறு உயிரியல் - Molecular biology
- மெய் அறிவியல் - Philosophy
- மெய்ம்மி நோயியல் - Histopathology
- மெய்ம்மியியல் - Histology
- மேகநோயியல் - Syphilology
- மொழியியல் - Philology
- மோப்பவியல் - Olfactology
- ரூனிக்கியல் - Runology
- வகையியல் - Taxology
- வண்ணவியல் - Chromatology
- வழக்குப் பேச்சியல் - Dialectology
- வழிபாட்டியல் - Liturgiology
- வளி நுண்மியல்- Aerobiology
- வளிநுகரியியல் - Aerobiology
- வாந்தியியல் - Emetology
- வாய்நோயியல் - Stomatology
- வாலில்லாக் குரங்கியல் – Pithecology
- வான இயற்பியல் - Astrophysics
- வானஞ்சலியல் (வானஞ்சல்தலையியல்) - Aerophilately
- வானியல் - Astronomy
- வானிலை இயல் - Neteorology/ Astrometeorology
- வானோடவியல் - Aerodonetics
- விசை இயக்க இயல் - Kinetics
- விண்கற்களியல் – Aerolithology
- விண்ணுயிரியியல் - Astrobiology
- விண்பொருளியல் - Astrogeology
- விந்தையியல் - Thaumatology
- விலங்கியல் - Zoology
- விளைச்சலியல் (வேளாண் பொருளியல்) - Agronomics
- வெளிற்றியல் - Agnoiology
- வேதியியல் - Chemistry
- வேதிவகைப்பாட்டியல் - Chemotaxonomy
- வேர்ச்சொல்லியல் - Etymology
கரு வளர் நிலைகள்
கரு வளர் நிலைகள்
- இலக்குவனார் திருவள்ளுவன்
கரு உருவாவதில் இருந்து குழந்தையாகப் பிறக்கும் வரை இயற்கையாகவே பல இடையூறுகள் நேருகின்றன. அவற்றை எல்லாம் எதிர்கொண்டு தாக்குதல்களில் இருந்து தப்பித்தால்தான் நிறைவான நலமான மகப்பேறு நிகழும். இதனை முன்னைத் தமிழ் மக்கள் நன்கறிந்திருந்தனர். மாணிக்க வாசகர் திருவாசகத்தில் இறைவனைப் போற்றிப் பாடும்பொழுது இத்தகைய இடை யூறுகளில் இருந்தெல்லாம் பிழைத்து வந்தமைக்காக நன்றிகூறிப் பாராட்டுகிறார்.
மானுடப் பிறப்பினுள் மாதர் உதரத்து
ஈனம்இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈர்இரு திங்களில் பேர்இருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறுஅலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயர்இடைப் பிழைத்தும்
என்னும் பாடலடிகள் மூலம் கரு உருவாவதில் இருந்து மகப்பேறுவரை நேரும் இடர்களை எடுத்துரைக்கின்றார்.
விந்துயிர்மிகள் கோடிக்கணக்காய் இருப்பினும் அவற்றுள் போராடி இணைந்து கருவாவது ஒன்றுதான். எனவே, போராட்டத்தில் வெற்றி கண்டு கரு உருவாவதை முதலில் குறிப்பிடுகிறார். அவ்வாறு உருவான கரு முதல் திங்களில் இரண்டாகப் பிளவுபடுவதில் இருந்து தப்பிக்கிறது; தனக்காகவென்று தனிவடிவெடுத்தலில் தவறின்றித் தேர்ச்சி பெறுகிறது. எனவே கவனக் குறைவாக இருந்தால் கரு உருவாமலேயே அழியும் வாய்ப்பு உள்ளமையை நன்கு அறிந்திருந்தனர். இரண்டாம் திங்களில் உயிர்வளி கருவிற்குச் சென்று கண்,காது,மூக்கு, வாய் முதலான உறுப்புகளின் தொடக்க முளைகள் வெளி வருகின்றன. இல்லாவிடில் இவை உருவாகாமலேயே அழிந்து விடும். எனவே, இவை இரண்டாம் திங்களில் வலிமை பெறவேண்டும். வலிமை பெறாவிடில் மீண்டும் அழிவு வாய்ப்பு உருவாகும். எனவேதான் மருத்துவர்களும் அன்னையர்களும் சூல் கொண்ட மகளிரை முதல் மூன்று திங்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்துகின்றனர். எனவே, கூடுதல் வலிமை பெறுவதால் அல்லது போதிய வலிமை பெறாமையால் ஏற்படும் அழிவில் இருந்து கரு பிழைக்கின்றது. மூன்றாவது திங்கள் கருப்பையில் பெருகும் கொழுப்பு நீரில் கரு அழிந்து விடும் வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, அவ்விடரில் இருந்தும் பிழைக்கின்றது.
இரண்டாம் திங்களில் ஏற்படும் கண் முளை நிலை, நான்காம் திங்களில்தான் கண் வளர்நிலை ஆகிறது. இல்லையேல் பார்வைப் புலன் பெறாத இருள்நிலை தோன்றலாம். எனவே, நான்காம் திங்கள் கரு உருவம் பெறுகையில் கண்பெறா நிலைமை உண்டாகலாம். அத்தகைய அழிவிலிருந்தும் கரு பிழைக்கிறது. ஐந்தாவது திங்களில் கருக்கலையும் வாய்ப்பு நேருகிறது. எனவே, விழிப்பாக இருக்கவேண்டும்; அத்தகைய கருக்கலைவு வாய்ப்பிலிருந்தும் பிழைக்கிறது. ஆறாம் திங்கள் அனைத்து உறுப்புகளும் நன்கு அமைய வேண்டும். அவ்வாறு ஏற்படாமல் போகிற இடையூறு வராமல் அதிலிருந்தும் கரு தப்பிக்கின்றது.
சிறப்பில் சிதடும்
உறுப்பில் பிண்டமும்
கூனும் குறளும்
ஊனமும்செவிடும்
மாவும் மருளும்
இன்றிக் குழந்தை பிறக்க வேண்டும். அவ்வாறாயின் ஏழாம் திங்களில் நன்கு உரிய வளர்ச்சியைக் குழந்தை பெற்றிருக்க வேண்டும். ஏழாம் திங்கள் குறைப்பேறாய் குழந்தை வெளியேறி பூமிக்கு வர வாய்ப்பு உள்ளது. எனவே, அத்தகைய இடர்ப்பாட்டிலிருந்தும் குழந்தை தப்பிக் கின்றது. 8ஆம் 9ஆம் திங்கள்களிலும் குறை பேறாவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அத்தகைய துன்பத்திலிருந்தும் குழந்தை பிழைக்கின்றது. 10 ஆவது திங்கள் குழந்தை பிறப்பதால் அல்லது தாய் பெறுவதால் இருவருக்குமே துன்பம் ஏற்படுகிறது. அத்தகைய துன்பங்களில் இருந்தும் குழந்தை பிழைக்கின்றது. இவ்வாறு மாணிக்கவாசகர் கூறுகின்றார். திருவாசகம் ஓர் அறிவியல் நூலன்று; இறைவணக்க நூலேயாகும். ஆனால் இதிலேயே வயிற்றில் உள்ள கரு வளர்ச்சி நிலையையும் வளர்ந்து உருவாகும் பொழுது அடையும் இடர்ப்பாடுகளையும் மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார் எனில் மகப்பேறு அறிவியல் அனைவரும் அறியும் அளவிற்கு வளர்ந்த நிலையில் இருந்திருக்கின்றது என்றுதான் பொருள்.
கருத் தொடக்க நிலையில்
ஊட்டக்காம்பு
முகம்
மூளை
பனிக்குடம்
பிரி படலம்
வால்
குடல் பிசிறுகள்
ஆகியன கருவில் அமைந்திருக்கும். கரு நிறை நிலையில்
பனிக்குடம்
தொப்புள்கொடி
சூல்கொடி
ஆகியன அமைந்திருக்கும்.
- இலக்குவனார் திருவள்ளுவன்
கரு உருவாவதில் இருந்து குழந்தையாகப் பிறக்கும் வரை இயற்கையாகவே பல இடையூறுகள் நேருகின்றன. அவற்றை எல்லாம் எதிர்கொண்டு தாக்குதல்களில் இருந்து தப்பித்தால்தான் நிறைவான நலமான மகப்பேறு நிகழும். இதனை முன்னைத் தமிழ் மக்கள் நன்கறிந்திருந்தனர். மாணிக்க வாசகர் திருவாசகத்தில் இறைவனைப் போற்றிப் பாடும்பொழுது இத்தகைய இடை யூறுகளில் இருந்தெல்லாம் பிழைத்து வந்தமைக்காக நன்றிகூறிப் பாராட்டுகிறார்.
மானுடப் பிறப்பினுள் மாதர் உதரத்து
ஈனம்இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈர்இரு திங்களில் பேர்இருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறுஅலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயர்இடைப் பிழைத்தும்
என்னும் பாடலடிகள் மூலம் கரு உருவாவதில் இருந்து மகப்பேறுவரை நேரும் இடர்களை எடுத்துரைக்கின்றார்.
விந்துயிர்மிகள் கோடிக்கணக்காய் இருப்பினும் அவற்றுள் போராடி இணைந்து கருவாவது ஒன்றுதான். எனவே, போராட்டத்தில் வெற்றி கண்டு கரு உருவாவதை முதலில் குறிப்பிடுகிறார். அவ்வாறு உருவான கரு முதல் திங்களில் இரண்டாகப் பிளவுபடுவதில் இருந்து தப்பிக்கிறது; தனக்காகவென்று தனிவடிவெடுத்தலில் தவறின்றித் தேர்ச்சி பெறுகிறது. எனவே கவனக் குறைவாக இருந்தால் கரு உருவாமலேயே அழியும் வாய்ப்பு உள்ளமையை நன்கு அறிந்திருந்தனர். இரண்டாம் திங்களில் உயிர்வளி கருவிற்குச் சென்று கண்,காது,மூக்கு, வாய் முதலான உறுப்புகளின் தொடக்க முளைகள் வெளி வருகின்றன. இல்லாவிடில் இவை உருவாகாமலேயே அழிந்து விடும். எனவே, இவை இரண்டாம் திங்களில் வலிமை பெறவேண்டும். வலிமை பெறாவிடில் மீண்டும் அழிவு வாய்ப்பு உருவாகும். எனவேதான் மருத்துவர்களும் அன்னையர்களும் சூல் கொண்ட மகளிரை முதல் மூன்று திங்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்துகின்றனர். எனவே, கூடுதல் வலிமை பெறுவதால் அல்லது போதிய வலிமை பெறாமையால் ஏற்படும் அழிவில் இருந்து கரு பிழைக்கின்றது. மூன்றாவது திங்கள் கருப்பையில் பெருகும் கொழுப்பு நீரில் கரு அழிந்து விடும் வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, அவ்விடரில் இருந்தும் பிழைக்கின்றது.
இரண்டாம் திங்களில் ஏற்படும் கண் முளை நிலை, நான்காம் திங்களில்தான் கண் வளர்நிலை ஆகிறது. இல்லையேல் பார்வைப் புலன் பெறாத இருள்நிலை தோன்றலாம். எனவே, நான்காம் திங்கள் கரு உருவம் பெறுகையில் கண்பெறா நிலைமை உண்டாகலாம். அத்தகைய அழிவிலிருந்தும் கரு பிழைக்கிறது. ஐந்தாவது திங்களில் கருக்கலையும் வாய்ப்பு நேருகிறது. எனவே, விழிப்பாக இருக்கவேண்டும்; அத்தகைய கருக்கலைவு வாய்ப்பிலிருந்தும் பிழைக்கிறது. ஆறாம் திங்கள் அனைத்து உறுப்புகளும் நன்கு அமைய வேண்டும். அவ்வாறு ஏற்படாமல் போகிற இடையூறு வராமல் அதிலிருந்தும் கரு தப்பிக்கின்றது.
சிறப்பில் சிதடும்
உறுப்பில் பிண்டமும்
கூனும் குறளும்
ஊனமும்செவிடும்
மாவும் மருளும்
இன்றிக் குழந்தை பிறக்க வேண்டும். அவ்வாறாயின் ஏழாம் திங்களில் நன்கு உரிய வளர்ச்சியைக் குழந்தை பெற்றிருக்க வேண்டும். ஏழாம் திங்கள் குறைப்பேறாய் குழந்தை வெளியேறி பூமிக்கு வர வாய்ப்பு உள்ளது. எனவே, அத்தகைய இடர்ப்பாட்டிலிருந்தும் குழந்தை தப்பிக் கின்றது. 8ஆம் 9ஆம் திங்கள்களிலும் குறை பேறாவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அத்தகைய துன்பத்திலிருந்தும் குழந்தை பிழைக்கின்றது. 10 ஆவது திங்கள் குழந்தை பிறப்பதால் அல்லது தாய் பெறுவதால் இருவருக்குமே துன்பம் ஏற்படுகிறது. அத்தகைய துன்பங்களில் இருந்தும் குழந்தை பிழைக்கின்றது. இவ்வாறு மாணிக்கவாசகர் கூறுகின்றார். திருவாசகம் ஓர் அறிவியல் நூலன்று; இறைவணக்க நூலேயாகும். ஆனால் இதிலேயே வயிற்றில் உள்ள கரு வளர்ச்சி நிலையையும் வளர்ந்து உருவாகும் பொழுது அடையும் இடர்ப்பாடுகளையும் மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார் எனில் மகப்பேறு அறிவியல் அனைவரும் அறியும் அளவிற்கு வளர்ந்த நிலையில் இருந்திருக்கின்றது என்றுதான் பொருள்.
கருத் தொடக்க நிலையில்
ஊட்டக்காம்பு
முகம்
மூளை
பனிக்குடம்
பிரி படலம்
வால்
குடல் பிசிறுகள்
ஆகியன கருவில் அமைந்திருக்கும். கரு நிறை நிலையில்
பனிக்குடம்
தொப்புள்கொடி
சூல்கொடி
ஆகியன அமைந்திருக்கும்.
http://www.newscience.in/articles/karu-valar-nilaikal
Tuesday, August 28, 2012
உயிர்மி (உயிரணு) cell
உயிர்மி (உயிரணு)
Cell (Biology)
- இலக்குவனார் திருவள்ளுவன்
ஆகத்து 28, 2012 12:44 இந்தியத் திட்ட நேரம்
நம் உடலில் அமைந்துள்ள கோடிக்கணக்கான நுண்ணறை ஒவ்வொன்றும் உயிர்மி எனப்படும். ஒரே வகையான செயல்திறன் கொண்ட உயிர்மிகளின் இணைப்பானது மெய்ம்மி(திசு) எனப்படும். பலவகைத் மெய்ம்மிகள் வேறுபட்ட விகிதங்களில் இணைந்து உருவாவது உறுப்பு. உறுப்புகள் சேர்ந்து அமைந்தது உடல்.
செங்கற்களை அடிப்படையாகக் கொண்டு கட்டடம் எழுப்பப்படுகிறது; அதே போல் உயிர்மியை அடிப்படையாகக் கொண்டு உடல் கட்டுமானம் அமைந்துள்ளது. குருதி உயிர்மி, நரம்புஉயிர்மி,தசைஇழை உயிர்மி என 200 வகைப்பட்ட உயிர்மிகள் உள்ளன. இவை வடிவிலும் அளவிலும் மாறுபட்டன; என்ற போதும் திறன் மிகுந்த நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்கத் தக்கன. 10,000கோடிக்கு மேற்பட்ட உயிர்மிகள் உடலில் உள்ளன.
நுண்ணறை, உயிரணு, ‘செல்’ என்றெல்லாம் பலரால் அழைக்கப்படுவதும் இதுவே. ஆனால் இச் சொற்களுக்கு வேறு பொருள்களும் உள்ளமையால் உயிர்ப்பிற்கு அடிப்படையான இதனை உயிர்மி என்பது சாலப் பொருத்தமாக அமையும். எனவே வெள்ளணு, சிவப்பணு என்பனவற்றை நாம் வெள்ளுயிர்மி, செவ்வுயிர்மி என்று சொல்லலாம்.
பழந்தமிழில் செந்து என உயிரணு எனப்படும் உயிர்மியைக் குறித்துள்ளனர். இதனைப் பிங்கல நிகண்டு(பா 3561 ) மூலம்அறியலாம். ஆனால், இச்சொல் வழக்கொழிந்து விட்டது. இச்சொல்லை மீண்டும் பயன்படுத்தலாம்
உயிர்மியை இணைக்கும் இடைப்பட்ட உயிரற்ற பொருள் உயிர்ம இடைமை எனப்பெறும்.
உயிர்ம பிணைப்புப் பொருளின் நிலை:
1. பாகு,
2. நார்,
3. நீர்மம்,
4. மாவு,
5. பசைமம்
உயிர்மி பற்றி அறிய வேண்டிய அடிப்படைத் தகவல்கள் வருமாறு
1. நமது உடல் கோடிக்கணக்கான உயிர்மிகளால் (அணுக்களால்) உருவானது.
2. உயிர்மியின் நடுவில் உட்கருவும் அதனைச்சுற்றி ஊன்மமும் உள்ளன.
3. உயிர்மி மெல்லிய சவ்வினால் மூடப்பட்டிருக்கும்.
4. குருதத்தில் உள்ள உயிர்மிகள், செவ்வுயிர்மி (செவ்வணு), வௌ்ளுயிர்மி (வௌ்ளணு) ஆகியன.
5. உயிர்வளியைக் கொண்டு செல்லவும் கரி வளியை வெளியேற்றவும் உதவுவது செவ்வுயிர்மி.
நன்றி : புதிய அறிவியல் http://www.newscience.in/articles/article-17
Cell (Biology)
- இலக்குவனார் திருவள்ளுவன்
ஆகத்து 28, 2012 12:44 இந்தியத் திட்ட நேரம்
நம் உடலில் அமைந்துள்ள கோடிக்கணக்கான நுண்ணறை ஒவ்வொன்றும் உயிர்மி எனப்படும். ஒரே வகையான செயல்திறன் கொண்ட உயிர்மிகளின் இணைப்பானது மெய்ம்மி(திசு) எனப்படும். பலவகைத் மெய்ம்மிகள் வேறுபட்ட விகிதங்களில் இணைந்து உருவாவது உறுப்பு. உறுப்புகள் சேர்ந்து அமைந்தது உடல்.
செங்கற்களை அடிப்படையாகக் கொண்டு கட்டடம் எழுப்பப்படுகிறது; அதே போல் உயிர்மியை அடிப்படையாகக் கொண்டு உடல் கட்டுமானம் அமைந்துள்ளது. குருதி உயிர்மி, நரம்புஉயிர்மி,தசைஇழை உயிர்மி என 200 வகைப்பட்ட உயிர்மிகள் உள்ளன. இவை வடிவிலும் அளவிலும் மாறுபட்டன; என்ற போதும் திறன் மிகுந்த நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்கத் தக்கன. 10,000கோடிக்கு மேற்பட்ட உயிர்மிகள் உடலில் உள்ளன.
நுண்ணறை, உயிரணு, ‘செல்’ என்றெல்லாம் பலரால் அழைக்கப்படுவதும் இதுவே. ஆனால் இச் சொற்களுக்கு வேறு பொருள்களும் உள்ளமையால் உயிர்ப்பிற்கு அடிப்படையான இதனை உயிர்மி என்பது சாலப் பொருத்தமாக அமையும். எனவே வெள்ளணு, சிவப்பணு என்பனவற்றை நாம் வெள்ளுயிர்மி, செவ்வுயிர்மி என்று சொல்லலாம்.
பழந்தமிழில் செந்து என உயிரணு எனப்படும் உயிர்மியைக் குறித்துள்ளனர். இதனைப் பிங்கல நிகண்டு(பா 3561 ) மூலம்அறியலாம். ஆனால், இச்சொல் வழக்கொழிந்து விட்டது. இச்சொல்லை மீண்டும் பயன்படுத்தலாம்
உயிர்மியை இணைக்கும் இடைப்பட்ட உயிரற்ற பொருள் உயிர்ம இடைமை எனப்பெறும்.
உயிர்ம பிணைப்புப் பொருளின் நிலை:
1. பாகு,
2. நார்,
3. நீர்மம்,
4. மாவு,
5. பசைமம்
உயிர்மி பற்றி அறிய வேண்டிய அடிப்படைத் தகவல்கள் வருமாறு
1. நமது உடல் கோடிக்கணக்கான உயிர்மிகளால் (அணுக்களால்) உருவானது.
2. உயிர்மியின் நடுவில் உட்கருவும் அதனைச்சுற்றி ஊன்மமும் உள்ளன.
3. உயிர்மி மெல்லிய சவ்வினால் மூடப்பட்டிருக்கும்.
4. குருதத்தில் உள்ள உயிர்மிகள், செவ்வுயிர்மி (செவ்வணு), வௌ்ளுயிர்மி (வௌ்ளணு) ஆகியன.
5. உயிர்வளியைக் கொண்டு செல்லவும் கரி வளியை வெளியேற்றவும் உதவுவது செவ்வுயிர்மி.
நன்றி : புதிய அறிவியல் http://www.newscience.in/articles/article-17
இவற்றின் அடிப்படையில் உயிர்மி வகைகளைப் பார்ப்போம்.
| ‘ ம’ உயிர்மி | m cell |
| ‘ஆ’ வகை உயிர்மி | B-cells |
| அடர் செவ்வுயிர்மி பருமனளவு | packed cell volume |
| அடர் செவ்வுயிர்மி இரத்தம் | packed cell blood |
| அடி உயிர்மிப்புற்று | basal cell carcinoma |
| அடிப்படை உயிர்மி அடுக்கு | basal cell layer |
| அடுக்கு உயிர்மி | columnar cell |
| அண்டக உயிர்மி | granulosa cell |
| அண்டக்குழாய் தோல் உயிர்மி வளர்ச்சி | oviduct epithelial cell culture |
| அமிலப்பற்று உயிர்மி | acidophil cell |
| ஆக்குயிர்மி (தோற்ற உயிர்மி என்றால் தோல்வியுற்ற என்றோ தோற்றம் தரும் என்றோ தவறான பொருள் கொள்ளப்படலாம். எனவே உருவாக்கம் என்னும் பொருளில் ஆக்க உயிர்மி > ஆக்குயிர்மி என்பது சுருக்கமாக இருக்கும்.) | formative cell |
| இசைவுதரு உயிர்மி | permissive cell |
| இடைநடுவிலக்க உயிர்மித்தண்டு | intermediolateral cell column |
| இடையமைவு உயிர்மி | interstitial cell |
| இடையமைவு உயிர்மி ஊக்கிகள் | interstitial cell stimulating |
| இடையமைவு உயிர்மிச் சுரப்பி | interstitial cell stimulating hormone |
| இடையமைவு உயிர்மிக் கட்டி | intertitial cell tumour |
| இடையீட்டு உயிர்மித்திரள் | intermediate cell mass |
| இணைந்த உயிர்மிப் பகுப்பு | coupled cell division |
| இணைப்பு உயிர்மி | connector cell |
| ஆதரவு உயிர்மி | glial cell |
| இயற்கை கொல் உயிர்மி | natural killer cell |
| இரண்டாம் உயிர்மி ஆரல் | secondary cell wall |
| இரண்டாம் கருவிழி உயிர்மி | secondary iris cell |
| இரத்த உயிர்மி | blood cell |
| இரத்த வெள்ளுயிர்மி எண்ணிக்கை | white blood cells count |
| இரத்தச் சிவப்பு உயிர்மி | red blood cell |
| இருபொதி உயிர்மி | amphicell |
| இருமுனை உயிர்மி | bipolar cell |
| இலையிடை உயிர்மி | mesophyll cell |
| இழைம முகை உயிர்மி | fibroblast cell |
| இறவாத உயிர்மிப் பாதை | immortalised cell line |
| இனப்பெருக்க உயிர்மி | cell reproductive |
| இனப்பெருக்க உயிர்மி (ஆக்க உயிர்மி என்றால் formative cell எனத் தவறான பொருள் கிட்டும்.) | generative cell |
| ஈருயிர்மி நிலை | two cell stage |
| ஈருயிர்மிய | bicellular |
| உடல உயிர்மி | body cell |
| உடல உயிர்மிப் பொருண்மை | body cell mass |
| உடல உயிர்மி கலப்பினவாக்கம் | somatic cell hybridization |
| உடல உயிர்மி மரபணுப் பண்டுவம் | somatic cell gene therapy |
| உடல உயிர்மி மரபியல் | somatic cell genetics |
| உடல் உயிர்மி | body cell |
| உடல்சார் உயிர்மி | somatic cell |
| உடல்சார் மாற்ற உயிர்மி | mutation somatic cell |
| உடனொளிர் தூண்டு உயிர்மிப்பிரிப்பு | fluorescence activated cell sorting |
| உட்சுரப்பு உயிர்மி | internal secretory cells |
| விரைவிந்து உயிர்மி (இத்தாலிய மருத்துவர் என்ரிசன் செருட்டோலியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.) | sertoli cell |
| உமிழ்நீர்ச்சுரப்பி உயிர்மி | salivary gland cell |
| உயிர்மி | cell |
| உயிர்மி அடக்கம் | cell inclusion |
| உயிர்மி அடர்த்தி | cellularity |
| உயிர்மி அற்ற | acellular |
| உயிர்மி இடைவினைகள் | cell-cell interactions |
| உயிர்மி இணைப்பு | cell coupling |
| உயிர்மி இயலுமை எண்ணிக்கை முறை | viable cell count method |
| உயிர்மி உணர்மை | sensitivity of cell |
| உயிர்மி உயிர்ப்பு | cellular respiration |
| உயிர்மி உயிர்ப்புக்காரணிகள் | cell-revival factors |
| உயிர்மி உய்தல் | survival of cell |
| உயிர்மி உள்ளுறை | cell-endothelium |
| உயிர்மி உறுப்புகள் | cell organelle |
| உயிர்மி ஏமம் | cellular immunity |
| உயிர்மி ஒட்டிணைவு | cell adhesion |
| உயிர்மி தனிமைப்படுத்துதல் | isolation of cell |
| உயிர்மி நீரிழப்பு வேட்கை | cellular dehydration thirst |
| உயிர்மி முடக்கம் | cell immobilization |
| உயிர்மி வெளிப்பாய்மப் பருமன் | extracellular fluid volume |
| உயிர்மி வெளிப்பொருள் அணி | extracellular matrix |
| உயிர்மி வேறுபாடுறல் | cellular differentiation |
| உயிர்மி அகப்படுத்தல் | cell entrapment |
| உயிர்மி அமைப்பு | cell system |
| உயிர்மி ஆரல் (உயிர்மிச்சுவர் | cell wall |
| உயிர்மி ஆரல் நுண்ணமைப்பு | microstructure of cell wall |
| உயிர்மி இடை | intercellular |
| உயிர்மி இடை வெளி | intercellular space |
| உயிர்மி இடைப் பகுதி | intracellular space |
| உயிர்மி இணைவு | cell fusion |
| உயிர்மி இறப்பு | cell death |
| உயிர்மி உடலம் | cell body |
| உயிர்மி உயிரக இணைவு | cellular oxidation |
| உயிர்மி உயிரியல் | cell biology |
| உயிர்மி உயிர்ப்பு | cell respiration |
| உயிர்மி உய்வு | cell survival |
| உயிர்மி உருத்தோற்றம் | morphogenetic cell |
| உயிர்மி உறை | cell envelope |
| உயிர்மி ஏற்பி | intra – cellular receptor |
| உயிர்மி ஏற்பு | cell recognition |
| உயிர்மி ஒட்டிணைவு மூலக்கூறு | cell adhesion molecule |
| உயிர்மி சாரா | non-cellular |
| உயிர்மி சார் ஏமம் | cell mediated immunity |
| உயிர்மி சார் நச்சுத்தன்மை | cell mediated cytotoxicity |
| உயிர்மி சார் நிணநீர் வெள்ளை அழிவு | cell mediated lympholysis |
| உயிர்மி சார் நோய்எதிர்ப்பு அமைப்பு | cell-mediated immune system |
| உயிர்மி சுருக்குதல் | cell contractility |
| உயிர்மிச் சிதைவு | cell necrosis |
| உயிர்மி தனித்தெடுத்தல் | cell isolates |
| உயிர்மி நகரும் தன்மை | cell motility |
| உயிர்மி நிகழ்வு | cell phenomenon |
| உயிர்மி நீக்கம் | cell elimination |
| உயிர்மி நீரிழப்பு | cellular dehydration |
| உயிர்மி நோய்க்குறியியல் | cell pathology |
| உயிர்மி பருமனளவு | cell volume |
| உயிர்மி மரபியல் | cell genetics |
| உயிர்மி மிகைப் பெருக்கம் | hyperplasia of cell |
| உயிர்மி மீட்பு | cell recovery |
| உயிர்மி மீள்கட்டுமானம் | cellular reconstruction |
| உயிர்மி யற்ற புரத உற்பத்தி | cell-free protein synthesis |
| உயிர்மி யிடை ஏற்பு | intercellular recognition |
| உயிர்மி யிடைப் பாய்மம் | intercellular fluid |
| உயிர்மி யிணைவழி | cell-to-cell channel |
| உயிர்மி வகை | cell type |
| உயிர்மி வகைமை மாற்றம் | cellular differentiation |
| உயிர்மி வரிசை | cell line |
| உயிர்மி வளர்ச்சி | cell growth |
| உயிர்மி வளர்ப்பு | cell culture |
| உயிர்மி வாழ்வுச் சுழற்சி | life cycle of cell |
| உயிர்மி விரிவடைதல் | cell enlargement |
| உயிர்மி வேறுபடுதல் | cell differentiation |
| உயிர்மி அழற்சி | celluliltis |
| உயிர்மியிடை இணைவு | intercellular adhesion |
| உயிர்மிக் கட்டமைப்பு | cell structure |
| உயிர்மிக் கழிவுகள் | cell debris |
| உயிர்மிக் காரை | cellular cementum |
| உயிர்மிக் கூட்டமாதல் | cell aggregation |
| உயிர்மிக் கோட்பாடு | cell theory |
| உயிர்மிக் கூறுகள் | cell components |
| உயிர்மிச் சந்தி | cell-cell junction |
| உயிர்மிச் சாரம் | cell sap |
| உயிர்மிச் சிதைவு | cell lysis |
| உயிர்மிச் சுழற்சி | cell cycle |
| உயிர்மிச் சூழலமைப்பு | cellular ecology |
| உயிர்மித் தகடு | cell sheet |
| உயிர்மித் தட்டம் | cell plate |
| உயிர்மித் தளம் | cell plane |
| உயிர்மித் தற்காப்பு | cellular defence |
| உயிர்மித் தொங்கல் | cell suspension |
| உயிர்மிப் புற்றுநோய் | cellular oncogene |
| உயிர்மிப் பகுப்பு | cell division |
| உயிர்மிப் படலம் | cell membrane |
| உயிர்மிப் படியாக்கம் | cell clone |
| உயிர்மிப் பண்டுவம் | cell therapy |
| உயிர்மிப் பிளவுநிலை | cell fragility |
| உயிர்மிப் புற | extra cellular |
| உயிர்மிப் புற நாடி | extra cellular artery |
| உயிர்மிப் புறச்செரிப்பு | extra cellular digestion |
| உயிர்மிப் புறநீர்மம் | extra cellular fluid |
| உயிர்மிப் பூச்சு | cell plating |
| உயிர்மிப் பெருக்கம் | cell proliferation |
| உயிர்மிப் பொசிவு | cell permeability |
| உயிர்மிப் பிளவு | cellular division |
| உயிர்மிப் புற | extracellular |
| உயிர்மியக உறுப்புகள் | intracellular bodies |
| உயிர்மியக ஒட்டுண்ணிகள் | intracellular parasites |
| உயிர்மியக நீர் | intracellular water |
| உயிர்மியகச் சுரப்பு | intra cellular-secretium |
| உயிர்மியகத் தடையம் | intracellular resistance |
| உயிர்மியகப் பிரிவு | intracellular compartment |
| உயிர்மி யிடை | intracellular |
| உருமாறு உயிர்மி | amoeboid cell |
| உருளை வடிவ உயிர்மி | cylindrical cell |
| உள் உயிர்மித் திரள் | inner cell mass |
| உள்தோல் உயிர்மி | endodermal cell |
| உள்படல உயிர்மி | endothelial cell |
| உறிஞ்சு உயிர்மி | absorptive cell |
| ஊட்ட உயிர்மி | nutritive cell |
| ஊட்ட அளிப்பு உயிர்மி | trophocyte cell |
| ஊனீர் உயிர்மி | serous cell |
| எதிரடி உயிர்மிகள் | antipodal cells |
| எலும்பணு | bonecell |
| எலும்பு உருவாக்க உயிர்மி | bone forming cell |
| எலும்பைக் கரைக்கும் உயிர்மி | bone resorbing cells |
| என்பாக்க உயிர்மிகள் | osteogenic cells |
| ஏற்பி உயிர்மி | recipient cell |
| ஒத்தக்கருநிலை உயிர்மி வரிசை | homozygous cell line |
| ஒழுங்குபடுத்தும் உயிர்மி | regulatory cell |
| உயிர்மி யற்ற | acellular |
| ஒற்றை உயிர்மி | unicell |
| தனி உயிர்மி அமைவம் | simple cellular organism |
| ஒற்றை உயிர்மி அமைவம் | unicellular organism |
| ஒற்றை உயிர்மி உடைய | unicelluar |
| தனி உயிர்மிப் புரதம் | single cell protein |
| ஒற்றை உயிர்மி நிலை | one cell stage |
| ஒற்றை உயிர்மிச் சுரப்பி | unicellular gland |
| ஒற்றைமய உயிர்மி | haploid cell |
| ஒற்றைமய உயிர்மி வரிசை | haploid cell line |
| ஒற்றைமய உயிர்மி வளர்ப்பு | haploid cell culture |
| ஒற்றைமய முழுத்திறன் உயிர்மி | haploid totipotent cell |
| ஓம்பு உயிர்மி | host cell |
| கணைய உயிர்மி | pancreas cell |
| கணையத் திட்டு உயிர்மி | islet cell of pancreas |
| கரு உயிர்மி | germ cell |
| கருநிலை உயிர்மி | germinal cell |
| கருமுளை உயிர்மி வளர்ப்பு | embryonic cell culture |
| கருமுளை குருத்துயிர்மி | embryonic stem cell |
| கலப்பின உயிர்மி ஆக்கம் | hybrid cell formation |
| கல் உயிர்மி | stone cell |
| கல்லீரல் உயிர்மி | livercell |
| கல்லீரல் உயிர்மி இணைப்புப் புற்றுக்கட்டி | sarcomatoid hepato cellular carcinoma |
| கல்லீரல் உயிர்மி அமிலப் புற்று | hepato cellular adenoma |
| கல்லீரல் உயிர்மிப் புற்றுநோய் | hepatocellular carcinoma |
| கழுத்துப் பாதை உயிர்மி | neck canal cell |
| கழுத்துப்பகுதி உயிர்மி | jacket cells |
| காப்பு உயிர்மி | guard cell |
| காம்பு உயிர்மி | stalk cell |
| காலடி உயிர்மி | foot cell |
| கிடைமட்ட உயிர்மி | horizontal cell |
| கிண்ண உயிர்மி | goblet cell |
| கீழ்விழி வெண்திரை உயிர்மி | hypodermal cornegean cell |
| குச்சி, கூம்பு உயிர்மி | rods and cone cells |
| குருதி வெள்ளுயிர்மி | white blood cell |
| குருதிநீர உயிர்மி | cell, plasma |
| குருத்து முகை உயிர்மி | chondroblast cell |
| குருத்துயிர்மி | stem cell |
| குருத்தெலும்பு உயிர்மி | cartilage cell |
| குழாய் உயிர்மி | tube cell |
| குறுகுப் பாதை உயிர்மி | ventral canal cell |
| குற்றிழைப் புறணி உயிர்மி | celiary epithelial cell |
| கூடை உயிர்மி | basket cell |
| கூம்பு உயிர்மி | cone cell |
| கூறணு | prickle cell |
| கொடல் உயிர்மி | donor cell |
| கேடயச் சுரப்பி உயிர்மிகள் | follicular cells |
| கொம்புரு உயிர்மி | horny cell |
| கொம்புரு உயிர்மி அடுக்கு | horny cell layer |
| கொல்லும் உயிர்மி | killer cell |
| கொழுமை உயிர்மி | adipose cell |
| கொழுப்பு உயிர்மி | fat cell |
| சல்லடை உயிர்மி | sieve cell |
| சல்லடைக்குழாய் துணை உயிர்மிக் கூட்டு | sieve-element- companion-cell complex |
| சிதல் தாய் உயிர்மி | spore mother cell |
| பிளவு உயிர்மி | disintegrating cell |
| சிதை உயிர்மி | lysogenic cell |
| சிறு உயிர்மி | mini cell |
| சிறுசிதல் தாய் உயிர்மி | microspore mother cell |
| சிறுநீர்க்குழல் நிலை மாற்ற உயிர்மிப் புற்று | transitional cell tumour of the ureter |
| சிற்றுயிரிப் புற்று | small cell tumour |
| சீழ் உயிர்மி | pus cell |
| சுடர் உயிர்மி | flame cells |
| ஊறு(ம்) உயிர்மி | secretory cell |
| சுரப்புயிர்மி | gland cell |
| சூழ் உயிர்மி | envelope cell |
| செதில் உயிர்மி அடுக்கு | squamous cell layer |
| செதிள் உயிர்மி | cell, squamous |
| உயிர்மிச் சந்திப்பு | cell junction |
| உயிர்மி மரபுத் தொடர் | cell lineage |
| உயிர்மியகச் செரிப்பு | intracellular digestion |
| தசை உயிர்மி | muscle cell |
| தசையினுள் ஊடுருவிய நிலைமாற்ற உயிர்மிப் புற்று | muscle invasion transitional cell-carcinoma |
| தடுப்பு உயிர்மி | septal cell |
| தட்டக உயிர்மி | discoidal cell |
| தட்டை யுயிர்மிப் படலம் | squamous cell epithelium |
| தட்டை யுயிர்மிப் புற்று | squmous cell carcinoma |
| தண்டு உயிர்மி | rod cell |
| தனி உயிர்மி ஆக்கம் | free-cell formation |
| தாங்கு உயிர்மி | supporting cell |
| தாய் உயிர்மி | mother cell |
| தாய் விந்துயிர்மி | sperm mother cell |
| தாய்ப் பாலின உயிர்மி | sex mother cell |
| தாவர உயிர்மி | plant cell |
| தாவர உயிர்மி வெளிச்சவ்வு | plant cell wall |
| திட்டு உயிர்மி | islet cells |
| உதவி உயிர்மி | accessory cell |
| துணை உயிர்மி | auxiliary cell |
| தோழமை உயிர்மி | companion cell |
| துணைமை உயிர்மி | subsidiary cell |
| தூணுரு உயிர்மி, | cell, columnar |
| தொடக்க உயிர்மி | initial cell |
| நஞ்சுக்கொடி உயிர்மி | placental cell |
| நடு உறை உயிர்மி | mesodermal cell |
| நரம்பு உயிர்மி | nerve cell |
| நரம்பு உயிர்மிக் கட்டமைப்பு | nerve cell structure |
| நரம்பு சுரப்புயிர்மி | neurosecretary cell |
| நரம்புக்கணு உயிர்மி | ganglion cell |
| நார் – உயிர்மி மேம்பாடு | fibre-cell development |
| நாள உயிர்மி ஒட்டும் மூலக் கூறுகள் | vascular cell adhesion molecule |
| நிணநீர் ‘ஆ’ உயிர்மி | lymphocytes B – cell |
| நிணநீர் உயிர்மி | lymph cell |
| நிலைமாற்ற உயிர்மிக் கழலை | transitional cell carcinoma |
| நினை ‘ஆ’ உயிர்மி | memory B cell |
| நினை உயிர்மி | memory cell |
| நுண்ணி உயிர்மி ஆரல் | bacterial cell wall |
| நுண்ணுயிர்மி | cell, bacteria |
| நுண்பொதி உயிர்மி வளர்ப்பு | micro carrier cell culture |
| நுரையீரல் கண்ணறை உயிர்மி | alveolar cell |
| நுனி உயிர்மி | apical cell |
| நொதிம உயிர்மிப் படலம் | yeast cell membrane |
| நேர் உயிர்மி | upright cell |
| பரிமாற்று உயிர்மி | transfer cell |
| பல உட்கரு பேருயிர்மி | multinucleated giant cell |
| பல உயிர்மி அமைவம் | multicellular organism |
| பல் உயிர்மி சார் | multi cellular |
| பல்திறன் மஞ்சை உயிர்மி | multipotent marrow cell |
| பாதை உயிர்மி / வழியிணை உயிர்மி | canal cell |
| பாலின உயிர்மி | sex cell |
| பாலின உயிர்மி மேடு | sex cell ridge |
| பாலூட்டி உயிர்மி | mammalian cell |
| பாற்கூறு தாயுயிர்மி | gamete mother cell |
| பிரி மெய்ம்மி உயிர்மி | meristematic cell |
| பிறழுயிர்மி | gaucher’s cell |
| பின் கொம்பு உயிர்மி | posterior horn cell |
| புலன் உணர்ச்சி நரம்பு உயிர்மி | nerve sensory cell |
| புலன் உயிர்மி | sense cell |
| புறஉயிர்மிச் செயல்பாடு | extracellular activity |
| புறணி உயிர்மி | cortical cell |
| புறத்தோல் உயிர்மி | epithelial cell |
| புற்றுநோய் உயிர்மி | cancer cell |
| பெருஞ்சிதல் தாயுயிர்மி | megaspsore mother cell |
| பேணுயுர்மி | nurse cell |
| மகரந்தத் தாய்உயிர்மி | pollen mother cell |
| மகள் உயிர்மி | daughter cell |
| மண்டை உச்சிப் பக்க உயிர்மி | parietal cell |
| மலட்டணு | sterile cell |
| மாறா நிலை உயிர்மி | stationary phase cell |
| மிதமிஞ்சிய உயிர்மி மறுதலிப்பு | hyperacute cellular rejection |
| மீப் பேருயிர்மி | giant cell |
| மீப் பேருயிர்மி நாடி அழற்சி. | giant cell arteritis |
| மீப் பேருயிர்மிக் கட்டி | giant cell tumour |
| முகட்டுயிர்மி | cap cell |
| முட்டை மூல உயிர்மி / முட்டை தோற்றுவாய் உயிர்மி | egg mother cell |
| முதல்நிலை விந்து வளர் உயிர்மி | primary germ cells |
| முதன்மை உயிர்மி | principal cell |
| முதன்மை உயிர்மி ஆரல் | primary cell wall |
| முதிரா உயிர்மி | immature cell |
| முழுத்திறன் உயிர்மி | totipotent cell |
| முளை உயிர்மி | cell, germinal |
| முள்தண்டுவட முன் கொம்பணுக்கள் | spinal anterior horn cell |
| முன் கொம்பு உயிர்மி | anterior horn cell |
| மூச்சுக்குழல் முனை உயிர்மி | tracheal end cell |
| மூல உயிர்மி | parenchymal cells |
| மூளை உயிர்மி | brain cell |
| மூளையின் நரம்பு ஆட்சி உயிர்மிகள் | neuro territory cells of the brain |
| மைப் புள்ளி உயிர்மி | ink dot cells |
| மைய உயிர்மி | central cell |
| மைய விலகு உயிர்மி | distal cell |
| வலியற்ற உயிர்மி | unsound cells |
| வழிஉயிர்மி கடத்து உயிர்மி | passage cell |
| வளர் உயிர்மி | propagatory cell |
| வளர்நிலை உயிர்மி | vegetative cell |
| வளை உயிர்மி இரத்தச்சோகை | sickle cell anaemia |
| வளை உயிர்மி நோய் | sickle-cell disease |
| வளை உயிர்மி (அரிவாள் போன்ற வளைவு என்பதால் அரிவாள் பெயரால் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளனர். பிறைச் செவ்வுயிர்மி என்றும் சொல்வர்.) | sickle cell |
| விரைப்பை நீர்மக்கட்டி உயிர்மி | testicular cyst cells |
| விலங்கு உயிர்மி | animal cell |
| விலங்கு உயிர்மி வளர்ப்பு | animal cell culture |
| விழுங்கி உயிர்மி | phagocytic cells |
| விளைம உயிர்மி | antigenic cell |
| வீங்கிய உயிர்மி | bulliform cell |
| வெள்ளுயிர்மி எண்ணிக்கை | white cell count |
| வேர்த்தூவி உயிர்மி | root hair cell |
| வேறுபாடடையும் உயிர்மி | differentiating cell |
| வேற்றுவகை உயிர்மி உறை | adventitious sheath of cell |
Subscribe to:
Posts (Atom)




