Thursday, July 28, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 316- 320

 அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்: 309-315 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 316-320

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

316. அபிமானம் – பற்றுள்ளம்

ஆரியம் வேதமுதலியன நிறைந்துள்ள தெய்வமொழி என்று அடிப்படுகின்றமையின், தெலுங்கு முதலியன அதினின்று பிறந்தன எனின் அவ்வம்மொழியார் கனிவு காட்டுதலும், தமிழினின்று அவை பிறந்தனவெனின் முனிவு காட்டுதலும், பற்றுள்ள மேயன்றி முறைமையாகாது. அப்பற்றுள்ளத்தினின்றும் நீங்கி யுண்மை யெதுவென ஆராய்ந்து தெளிதல் வேண்டும். பற்றுள்ளம் – அபிமானம்.

நூல்   :     மொழிநூல் (1913) பாயிரவியல், பக்கம் 34

நூலாசிரியர்    :    மாகறல் கார்த்திகேய முதலியார்

317. கிரகபதி – கோளரசு

செந்தமிழ் நிலம் நடுவிலும், அதனைச் சூழப் பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடும், அக்கொடுந்தமிழ் நாட்டைச் சூழச் சிங்களம் சோனக முதலிய நாடுகளும் வைத்துக் கூறினதை யுய்த்துணரின் செந்தமிழ்க்குப் பன்னிரண்டு கொடுந்தமிழ் மொழியும் அணுக்கவியைபுடையன என்பதும், சிங்களம் சோனக முதலியன சேய்மை யியைபுடையன என்பதும் பெறப்பட்டமை காண்க. ஏனைய கோள்களுக்கும் அக்கோள்களி னடுவிலுள்ள சூரியனுக்கும் இயைபுண்மை போல, ஏனையமொழிகளுக்கும் அம்மொழிகளி னடுவிலுள்ள செந்தமிழ்க்கும் இயைபுண்மை பெற்றாம். சூரியன் கோளரசென்பது போலத் தமிழ் மொழியரசென்பது பெறப்படுகின்றது. கோளரசு – கிரகபதி.

நூல்   :    மொழிநூல் (1913) பாயிரவியல், பக்கம் 38

நூலாசிரியர்    :  மாகறல் கார்த்திகேய முதலியார்

318. Museum – பல பொருள் காட்சி சாலை

மியூசியம் : பல பொருள் காட்சி சாலை, இது எழும்பூரிலிருக்கும் ஓர் நேர்த்தியான கட்டடம். நானாவிதமான நூதன வசுதுக்களையும் வினோதப் பொருள்களையும் கொண்டு வந்து சேர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நாடக சாலையும், பெரியதொரு புத்தக சாலையும் இருக்கின்றன.

நூல்   :           விட்ணு தல மஞ்சரி (1908-1913)

இரண்டாம் பாகம் பக்கங்கள் 89-93

நூலாசிரியர்  :   மயிலை கொ. பட்டாபிராம முதலியார்

319. Cycle – மிதிவண்டி

நிமிடத்தில் நூறு மையிலோடும் நேர்த்தியுள்ள ரயில்வண்டி, முந்நூறு கப்பல், நாலஞ்சுகப்பல் தப்பமுடன் மிதிவண்டி ஒவ்வொரு கப்பல், தப்புகள் வராமலே உயர்வான மோட்டார் கார்வண்டி,…

நூல்   :   சந்தியா வந்தனம் (1913), பக்கம் – 35

நூலாசிரியர்  :    கோ. வெங்கிடாசல ஆச்சாரியார், திருச்சிராப்பள்ளி

320. மகாநாடு (மாவட்ட) மாநாடு

1 அமெரிக்க மதுரை மிசினில் உள்ள கிறித்துவ ஆலயங்களின் மாவட்ட மாநாட்டின் மூன்றாவது ஆண்டு அறிக்கை : முதற்பதிப்பு; II சாமுவேல் சோசப்பு அய்யர், அருப்புக்கோட்டை, லெனாக்சு பிரசு, பசுமலை, சூலை, 1913

நூல்   :   அமெரிக்க மதுரை மானினில் உள்ள கிறித்துவ ஆலயங்களின் மாவட்ட மாநாட்டின் மூன்றாவது ஆண்டு அறிக்கை (1913)

நூலாசிரியர்  :    ஏ.எசு. அப்பாசாமி பிள்ளை தமிழ்நூல் விவர அட்டவணை (1911-1915) மூன்றாம் தொகுதி – மூன்றாம் பகுதி பக்கம் – 34 பொதுப் பதிப்பாசிரியர் கொண்டல் மகாதேவன், பி.எசி, எம்.ஏ.

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Tuesday, July 26, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 309-315

 அகரமுதல


      27 July 2022      No Comment



(தமிழ்ச்சொல்லாக்கம்: 305- 308 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 309-315

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

309-315. ஏழிசை ஒலிகள்

309. ச, சட்சம்         —        மயிலொலி

310. ரி, ரிடபம்       —        எருத்தொலி

311. க, காந்தாரம்            —        யாட்டொலி

312. ம, மத்திமம்   —        கிரவுஞ்சவொலி

313. ப, பஞ்சமம்    —        குயிலொலி

314. த, தைவதம்   —        குதிரையொலி

315. நி, நிடாதம்    —        யானையொலி

நூல்   :           மொழிநூல் (1913) பாயிரவியல், பக்கம் 15

நூலாசிரியர்         :           மாகறல் கார்த்திகேய முதலியார் (சைதாப்பேட்டை, கண்டி வெசுலேனியன் மிசன் தியலாசிகல் காலேசு தமிழ்ப்பண்டிதர்)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Sunday, July 24, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 305- 308

 அகரமுதல

     25 July 2022      No Comment








(தமிழ்ச்சொல்லாக்கம்: 302-304 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 305-308

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

305. சர்வசுதந்தரம் – முற்றூட்டு

இராசநீதிகளையும், ஆசாராதிகளையும், வழக்கங்களையும், தெய்வத்தையும், புண்ணிய பாவ மோட்ச நரசாதிகளையும், சிவஞானத்தையும் யாவர்க்கும் உணர்த்துவதும், பூர்வ சரிதங்களை விளக்குவதும் இவ்வியற்புலமையன்றோ? இத்தகைய உயர்வு தாழ்வுகளையறிந்தே பூர்வ அரசர்களில் எத்தனையோ பேர், இயற்புலவர்கட்கு முற்றூட்டாகப் (சர்வசுதந்தரம்) பல கிராமங்களைத் தானஞ்செய்தும் பற்பல ஆடையாபரண வாகன முதலிய விசேட மரியாதைகளைச் செய்தும் பாதுகாத்ததுடன் தமக்கு முக்கிய மந்திரிகளாகவும், உயர்ந்த துணைவர்களாகவும், தம்மினுமிக்க மரியாதையுடன் எப்போதுந்தம்முடன் (இவ்வியற்புலவர்களையே) வைத்து, அவர்கள் சொல்வழி நின்று புவிபுரந்து புகழ்புனைந்து வாழ்ந்தார்களென்பது புறநானூறு முதலிய பழைய நூல்களால் நன்கு புலப்படுவதாகும்.

நூல்   :  இயலிசைப்புலவர் தாரதம்மியம் (1911) பக்கம் – 3

நூலாசிரியர்    :     மு. ரா. கந்தசாமிக் கவிராயர்

306. Photo – நிழல்படம்

ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் 5-மணியோடு கண்காட்சி சாலை முடிந்ததும் அன்றிரவு 8மணி முதல் 10 மணி வரை செயின்டு மேரி ஐசுகூல், போனரே சாமியார் அவர்கள் நிழல்படம் காட்ட ம-ள-ள-சிரீ என்.எசு.செம்புணாதய்யர் அவர்கள், ஊர்வன சாதி, பட்சி சாதி இவற்றைப்பற்றி ஒரு உபந்நியாசம் செய்தார்.

இதழ் :    விவேக போதினி (நவம்பர் 1911) எண்,5. பக்கம் – 223

சொல்லாக்கம்     :    சி. வி. சாமிநாதையர்

307. Vote – வாக்கு

மேற்றிசை மதங்கள் தற்காலத்திய ‘ஸயன்சு’ என்னும் சாத்திர வாராய்ச்சியின் எதிர்நிற்கச் சத்தியற்று, படு சூரணமாய் மண்ணோடு மண்ணாய் மாறியும் குருட்டு நம்பிக்கையையும் மூட விசுவாசத்தையும் மிசனரி சபைகளில் (vote) வாக்கின்பேரில் முடிவாகும் சித்தாந்தங்களையுமே பிரமாணமாகக் கொண்டிருக்கும் மேற்றிசை மேற்பூச்சு மதங்களெல்லாம் சாத்திர வாராய்ச்சியாகிற பெருஞ் சம்மட்டியால் மொத்துண்டு இருந்தவிடந் தெரியாமல் பசுபமாகியும்; சாத்திர ஆராய்ச்சி விர்த்தியாக ஆக, அவைகளை யனுசரித்து அத்தேசத்திய மத நூல்களுக்கெல்லாம் பொருள் செய்தும், கடைசியில் அதுவும் சரிப்படாமற் போகவே, அம்மத நூல்களெல்லாம் குப்பை கூளங்கள் நிறைந்த அறைகளுக்கு அலங்கார சாமான்களாக மாற நேரிட்டும், மேற்றிசையில் உண்மையாய் மதவிசாரணை செய்பவர் தங்கள் மதத்தின் உபயோகமற்ற தன்மையைக் கண்டு, அதைத் துறந்து தீர்க்க சந்தேகிகளாகவும் இருந்து வருகிற இச்சமயத்தில் உண்மையாய் உயிருடன் இருக்கும் மதங்கள் அமிருத கலசங்களென்னும்படியான வேதங்களில் ஞானாமிர்தத்தைப் பானம் பண்ணிய இந்துமதமும் பெளத்த மதமுமே என்பது ஒர் அதிசயமல்லவா?

நூல்   :    விவேகானந்த விசயம் (1912). பக்கங்கள் :124, 125

நூலாசிரியர்  :  மகேச குமார சர்மா

308. Boarding House – விடுதி வீடு

ஆங்கிலம் கற்றற்கு நமது பிள்ளைகள் கொழும்பு, மதுரை, சென்னை, புதுக்கோட்டை முதலிய விடங்களுக்குப் போய் அசெளகரியத்தோடு படிப்பதைப் பார்க்கிலும் நம்மவர் வசிக்கிற பெரிய ஊர்களான தேவி கோட்டை, காரைக்குடி, கானாடு காத்தான் முதலிய விடங்களில் உயர்தர வித்தியாசாலை (High School) களும் அதையொட்டி மாணவர் விடுதிவீடு (Boarding House) களும், ஏற்பட்டுவிட்டால் நிரம்ப செளகரியமாக விருப்பத்தோடு சாசுத்தியான பிள்ளைகள் படிக்கவும் ஏதுவாகும்.

நூல்   :   வியாசங்களும் உபந்தியாசங்களும் (1913) இரண்டாம் பதிப்பு: பக்கம் : 31

நூலாசிரியர்   :   மு. சின்னையா(செட்டியார்), மகிபாலன்பட்டி

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Friday, July 22, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 302-304

 அகரமுதல



(தமிழ்ச்சொல்லாக்கம்: 295 – 301 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 302-304

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

302. Atoms – உயிரணு

பூமியில் எங்கு பார்த்தாலும் பதார்த்தங்கள் நிறைந்திருக்கின்றன. இப்பதார்த்தங்களை (இ)ரசாயன சாசுதிரிகள் பலவிதமாகச் சோதனை பண்ணிக் கடைசியில் அவை துண்டு பண்ண முடியாமலிருக்கும்படியான நிலைமையை அடைகின்றன என்று தாபித்திருக்கிறார்கள்.

அப்பேர்ப்பட்ட நிலைமையை உடையன ஏறக்குறைய எண்பது விதமானவை. அவற்றை உயிரணு (Atoms) என்று சொல்வது வழக்கம்.

நூல்   :           வியாசப்பிரகாசிகை (1910), பக்.97.

பதிப்பாளர்            :           பி. எசு. அப்புசாமி (ஐயர்)

(உரிமையாளர்    :           சக்கரவர்த்தினி பத்திரிகை)

303. பிரசண்ட மாருதம் – பெருங்காற்று (1909)

பின்பு அவ்வணிகன் புறப்படும்போது சக்திதேவன் தானும் கூட வருவதாகச் சொல்ல அவனும் சம்மதித்து தங்களிருவர்க்கும் வழிக்கு வேண்டும் உணவுப் பதார்த்தங்களை நிரம்ப வைத்துக் கொள்ள இருவரும் கப்பலின் மீதேறிக் கடல்மார்க்கமாகப் பிள்ளை பிரயாணமானார்கள்.

பின்னர் அக்கப்பலானது நெடுந்தூரங்கடந்து அந்த உத்தலத்(து) விபத்தை யடைவதற்குச் சொற்ப தூரத்திற் செல்லுங்கால் மின்னற் கொடியாகிய நாவுடன் கூடி முழங்குகின்ற கரிய மேகமாகிய இராக்கத வடிவம் ஆகாயத்திற் கிளம்பிற்று. அச்சமயத்தில் இலேசான பொருள்களை உயரவெடுத்தெறிகின்றதும், கனத்த பொருள்களைக் கீழே கொண்டமிழ்த்துகின்றதுமாகிய பிரசண்டமாருதம் (பெருங்காற்று) விதியின் ஆரம்பம் போல வீசிற்று.

இதழ் :           செந்தமிழ் (1910), தொகுதி -8, பகுதி – 2, பக்கம் -71

கட்டுரை     :           கதாசரித சாசரம்

மொழிபெயர்ப்பாளர்   :           வீராசாமி (ஐயங்கார்)

304. அலிட்ரேசன் – முற்றுமோனை

நளன்சீர் நவிலுநல நல்கும் என்பதில் நகர முற்று மோனையால் வந்திருப்பதைக் கவனிக்க. அங்கில முடையார் இதை அலிட்ரேசன் என்பர்.

நூல்   :    நள வெண்பா மூலமும் அகல உரையும் (1910) நூற் சிறப்புப் பாயிரம், பக்கம் – 4

உரையாசிரியர்   :           தமிழ்வாணர் – மதுரகவி ம. மாணிக்கவாசகம் (பிள்ளை)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Wednesday, July 20, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 295 – 301

 அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்: 289-294 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் : 295-301

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

295. சாமானியம்  —        பொதுமை

296. விசேடம்         —        சிறப்பு

297. இரசம்  —        சுவை

298. பரிமாணம்    —        அளவு

299. பேதம்  —        வேற்றுமை

300. பிரயத்தனம் —        முயற்சி

301. சத்தம்  –           ஓசை

நூல்   :           தருக்க கெளமுதி (செளமிய ௵ (1910)

நூலாசிரியர்         :           தஞ்சை மாநகரம் வெ. குப்புசுவாமி இராசு

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, July 18, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 289-294

 அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்: 281-288 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் : 289-294

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

289 – 293. உடலசைவுகள் : 5

289. உத்தானிதம் —        மல்லாத்தல்

290. திரியக்கு        —        குறுக்கு அல்லது ஒருகணித்தல்

291. ஆசிதகம்       —        உட்காத்தல்

292. (இசு)திதம்       —        நிற்றல்

293. ஆன்மிதம்      —        குனிதல்

நூல் : கொக்தோகம் (1910) பக்கம் : 171

294. மகாவித்துவான் – பெரும்புலவர்

மார்க்கண்டேய புராணம்

வசனகாவியமும் அரும்பத விளக்கமும்

இஃது

சென்னை பிரசிடென்சி காலேசில் தமிழ்ப்புலமை நடாத்திவரும்

சமரசவேத சன்மார்க்க சங்க வித்வான்களிலொருவராகிய உபயகலாநிதிப் பெரும்புலவர்

தொழுவூர் வேலாயுத முதலியார்

மொழிபெயர்த்தது

நூல்   :           மார்க்கண்டேய புராணம் வசனகாவியமும் அரும்பத விளக்கமும் (1909)

நூலாசிரியர்         :           தொழுவூர் வேலாயுத முதலியர் (1909)

பரிசோதித்தவர்  :           தொழுவூர் வே. திருநாகேஸ்வர முதலியார்

(தொழுவூர் வேலாயுத முதலியாரின் மூத்த புதல்வர்)

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Saturday, July 16, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 281- 288

 அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்: 274-280 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் : 281-288

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

281- 288. தழுவுதல்

281. லதாவேட்டிதாலிங்கம்    —        கொடிபோலக் சுற்றித் தழுவுதல்

282. விருட்சாதிரூடாலிங்கனம்           —        மரத்தைப் போலேறித் தழுவுதல்

283. திலதண்டுலாலிங்கனம்   —        எள்ளும் அரிசியும் போலக்கலந்து தழுவுதல்

284. சீர நீராலிங்கனம் —        பாலும் நீரும் போல ஒன்றுபடத் தழுவுதல்

285. ஊருப்பிரகூடாலிங்கனம் —        தொடையால் நெருக்கித் தழுவுதல்

286. சகனோபசிலேசாலிங்கனம்         —        குறிகள் சேரத் தழுவுதல்

287. (இசு)தனாலிங்கணம்       —        கொங்கையழுந்தத் தழுவுதல்

288. (இ)லாலாடிகாலிங்கணம் —        நெற்றிபொருந்தத் தழுவுதல்

நூல்      :           கொக்கோகம் (1910) பக்கம் -141

நூலாசிரியர்      :           அதிவீரராம பாண்டியன்

உரையாசிரியர்  :           கொற்றமங்கலம் இராமசாமிப்பிள்ளை

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்