Monday, August 19, 2013

தோல் நோயை க் குணமாக்கும் கருஞ்சீரகம்

தோல் நோயை க் குணமாக்கும் கருஞ்சீரகம்









பொதுவாகவே கருஞ்சீரகம் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இது எல்லோரின் வீட்டிலும் சமையல் அறையில் காணப்படும் பொருள் தான், இருந்தாலும் இதன் மகத்துவம் என்னவென்று அறிந்துக் கொள்ள வேண்டாமா?
* அடிக்கடி ஜலதோஷத்தால் பாதிக்கப்படுவோர் கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் இரண்டு அல்லது மூன்று சொட்டுகள் விட்டால் ஜலதோஷத்துக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.
* கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீரக‌ கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும்.
* கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.
* சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.
* கருஞ்சீரகத்தைக் விநிகரில் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும். பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.
* பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலிக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
* கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்து. சொரி, சிரங்கு, நாய்க்கடி, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணி.

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் - ஆக.19

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் - ஆக.19

* கடுக்காய் பொடி, நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் கலந்து சாப்பிட்டார் மார்புச்சளி, மூக்கடைப்பு தீரும்.
* தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் கடல் பாசியை தினமும் உணவில் சேர்த்து வர, தைராய்டு அறவே நீங்கும்.
* வேப்ப இலை, ஓமம் அரைத்து நெற்றியில் தடவ மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.
* ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியாவை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டுவர சுகப்பிரசவம் ஆகும்.
* மஞ்சள் கரிசலாங்கண்ணி கிரையை தொடர்ந்து சாப்பிட மேனியின் நிறம் பொன்னிறமாக மாறும்.
* உப்புடன், கல்யாண முருங்கை இலையைச் சாறு எடுத்து கலந்து படையின் மீது தடவினார், கருப்புநிறப் படை விரைவில் குணமாகும்

Tuesday, August 13, 2013

வலு தரும் கல்தாமரை


தினஇதழ் Home / அபூர்வ தகவல்கள் / வலு தரும் கல்தாமரை
வலு தரும் கல்தாமரை

வலு தரும் கல்தாமரை

கல்தாமரை மலைப்பகுதியில் வளரும் ஒருவகை கொடி இனமாகும். இதன் இலை தாமரை இலை வடிவில் இருப்பதாலும், மலை, கல் நிறைந்த பகுதிகளில் அதிகம் வளர்வதாலும் இதை கல்தாமரை என்கின்றனர். ஆனால் தாமரை இலையை விட சிறியதாகவும் தடித்தும் இருக்கும்.இதன் இலை மிகுந்த மருத்துவப் பயன் கொண்டது. சித்தா, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.உட்கொள்ளும் மருந்துகள், வெளிப்பூச்சு மருந்துகள் மற்றும் தைல வகைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது. இது கார்ப்புச் சுவை கொண்டது.
உடல் வலுப்பெற:
உடல் வலுப்பெற்றால் நோய்கள் ஏதும் அணுகாமல் பாதுகாக்க முடியும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கேற்ப உடல் நன்கு பலமாக ஆரோக்கியமாக இருந்தால்தான் சிறந்த வாழ்வைப் பெற முடியும். இத்தகைய உடலை வலுப்பெறச் செய்ய கல்தாமரை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக்கொண்டு காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும். அல்லது காய்ந்த கல்தாமரை இலையின் பொடியை நீரில் கொதிக்கவைத்து பனை வெல்லம் கலந்து அருந்தலாம். இவ்வாறு 48 நாட்கள் அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இளைத்த உடல் தேறும்
இடுப்பு வலி தோள்பட்டை வலி நீங்க:
இன்றைய நவீன உணவு மாறுபாட்டாலும், போதிய உற்பயிற்சியின்மையாலும் சிலருக்கு மிகக் குறைந்த வயதிலே கழுத்துவலி, இடுப்பு வலி, மூட்டு வலி, என உண்டாகிறது. இப்படி கை, கால், முட்டுகளில் வலி உண்டாவதற்குக் காரணம் மூட்டுத் தேய்மானம் என்பார்கள். இதனைப் போக்க கல்தாமரை சிறந்த மருந்து. கல்தாமரை இலைகளை நிழலில் காயவைத்து கஷாயம் செய்து அருந்தி, கல்தாமரை இலைகள் சேர்க்கப்பட்ட வெளிப்பூச்சு எண்ணெய்களை பாதிக்கப்பட்ட பகுதிகளில் பூசி வந்தால் மேற்கண்ட பாதிப்புகள் நீங்கும்.
நரம்புகள் வலுப்பெற:
நரம்புகளில் நீர் கோர்த்துக்கொண்டு நரம்பு வறட்சி உண்டானால் அது நரம்புப் பாதிப்பை உண்டுபண்ணும். இதனால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். இத்தகைய குறையைப் போக்கி நரம்புகளை வலுவடையச் செய்ய கல்தாமரையிலை கஷாயம் செய்து அருந்தி வருவது நல்லது. அல்லது கல்தாமரை இலை பொடியில் தேன் கலந்து அருந்தலாம்.
ஆண்மை பெருக:
இன்றைய பொருளாதார சூழ்நிலையால் மன அழுத்தம் உண்டாகி பலருக்கு வீரியக்குறைவு உண்டாகிறது. குழந்தைப்பேறு இன்றி தவிக்கின்றனர். சிலர் திருமணத்திற்குப் பின் வீரியக் குறைவால் அவதிப்படுகின்றனர். இக்குறையைப் போக்க பல விளம்பரங்களைத் தேடி அவர்கள் கொடுக்கும் மருந்துகளை உண்டும் பயனில்லாமல் வேதனையுறுகின்றனர். இவர்கள், கல்தாமரை இலைப் பொடியை பாலில் கலந்து இரவு உணவுக்குப்பின் 48 நாட்கள் அருந்தி வந்தால் வீரியக் குறைவு நீங்கி ஆண்மை பெருகும்.
சருமத்தைப் பாதுகாக்க:
கல்தாமரை இலையை சிறிதாக நறுக்கி நீர் விட்டு அரைத்து, சொறி, சிரங்கு, கரப்பான் உள்ள இடங்களில் பூசி வந்தால் மேற்கண்ட நோய்கள் நீங்கும்.

Friday, July 5, 2013

பாட்டி மருத்துவம்.....

பாட்டி மருத்துவம்.....


* கடுக்காய் பொடி, நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் கலந்து சாப்பிட்டார் மார்சளி, மூக்கடைப்பு தீரும்.
* தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் கடல் பாசியை தினமும் உணவில் சேர்த்து வர, தைராய்டு அறவே நீங்கும்.
* வேப்ப இலை, ஓமம் அரைத்து நெற்றியில் தடவ மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.
* ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியாவை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டுவர சுகப்பிரசவம் நடைபெறும்.
* மஞ்சள் கரிசலாங்கண்ணி கிரையை தொடர்ந்து சாப்பிட மேனியின் நிறம் பொன்னிறமாக மாறும்.
* உப்புடன், கல்யாண முருங்கை இலையைச் சாறு எடுத்து கலந்து படையின் மீது தடவினார், கருப்புநிறப் படை விரைவில் குணமாகும்

Sunday, June 23, 2013

பாட்டி மருத்துவம்..

பாட்டி  மருத்துவம்..

* மாதுளைச் சாறு தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
* பொடி செய்த ஓமத்தை பாலில் கலந்து வடிகட்டி படுக்கும் முன் குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளியை தூர விரட்டும்.
* திராட்சையை பன்னீரில் ஊறவைத்துச் சாப்பிட்டால் இதயம் பலம் பெறும். தொடர்ந்து திராட்சை உண்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிச்சயம்.
* வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வைத்து மோரில் கரைத்து உப்புப் போட்டுச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்; வயிற்று வலியும் இருக்காது.
* குழந்தைகள் ஞாபகசக்தியுடன் இருக்க வேண்டுமானால் தினமும் காலை உணவுக்குப் பின் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வையுங்கள்.

Wednesday, June 12, 2013

தேங்காய் எண்ணெயின் பயன்கள்

தேங்காய் எண்ணெயின் பயன்கள் பல

தென்னை மரம் என்றாலே அது பல வகைகளில் மனிதனுக்கு உபயோகமாக உள்ளது.
அதிலும் தேங்காயில் இருந்து பெறப்படும் தேங்காய் எண்ணெய் மனித வாழ்க்கையோடு ஒன்றிப்போன ஒரு விஷயமாகும்.
பொதுவாக நமது தலைச் சருமத்தைப் பாதுகாக்க அடிப்படையான விஷயம் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான்.
வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய்தான் மிகச் சிறந்த மருந்தாகும். குளிர் காலத்தில் பொதுவாக அனைவரது சருமமும் வறண்டு போய்விடும். அந்த சமயத்தில் கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தடவுவது நல்லது.
வெப்பத்தால் பாதிக்கப்படும் சருமத்திற்கு அருமருந்தாக இருப்பது தேங்காய் எண்ணெய் தான்.
புண்களில் நீர்த்தன்மையை அகற்றி அது விரைவாக ஆறுவதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது.
தலை முடியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருப்பது தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெயை தடவ பிடிக்காதவர்கள் கூட, இரவில் தேங்காய் எண்ணெய் வைத்து காலையில் தலைக்குக் குளித்து விடலாம்.
உதடுகள் உலர்ந்து போகாமல் இருக்க உதவும் நல்ல லிப் பாம் ஆக இருப்பதும் தேங்காய் எண்ணெய் தான்.
தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் விழுதை முகத்திற்குப் பயன்படுத்தலாம். நல்ல பலனை அளிக்கும்.
தலைப் பொடுகை நீக்க, தேங்காய் எண்ணெயுடன் சில சொட்டு எலுமிச்சை சாறை விட்டு அதை வைத்து தலைக்கு மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு தலைக்கு குளியுங்கள். இவ்வாறு ஒரு வாரத்தில் 2 முறை செய்தால் பொடுகு நீங்கிவிடும்.
சளித் தொந்தரவு உள்ளவர்கள், தேங்காய் எண்ணெயை நன்கு சூடாக்கி இறக்கி அதில் ஒரு சிறிய கட்டி கற்பூரத்தைப் போட்டு வெதுவெதுப்பாக எடுத்து நெஞ்சுப் பகுதிகளில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.
வறண்ட சருமம் மற்றும் வறண்ட கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் நன்மை அளிக்கும்.

இரும்புச் சத்துள்ள இயற்கை உணவுகள்

இரும்புச் சத்துள்ள இயற்கை உணவுகள்


சமைக்கும் போது சூடுபடுத்துவதாலும், சில சுவையூட்டிகளைப் பயன்படுத்துவதாலும் உணவின் உண்மையான சத்துக்கள் நசிந்து போய்விடுகின்றன. அதிலும் பள்ளி படிக்கும் பருவத்து பெண்கள் பெரும்பாலும் ரத்தசோகை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சில எளிய இயற்கை உணவை தயாரித்து சாப்பிடலாம்.
பீட்ரூட் பயாசம்: சிறிய பீட்ரூட் ஒன்றை சுத்தமாஙகக, தோல் அகற்றி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் ஜூஸ் எடுத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை மூடி தேங்காய்ப் பால் கலந்து, சுவைக்குவெல்லம் மற்றும் ஏலக்காய், முந்திரி சேர்த்துக் கொள்ளலாம். இது பள்ளி படிக்கும் பருவத்து பெண்கள் தினமும் குடிக்கலாம்.
முருங்கைக்கீரை சூப்: கைப்பிடி அளவு முருங்கைக்கீரையுடன் நான்கு பல் பூண்டு, மிளகு, சீரகம், தோல் நீக்கிய இஞ்சி, உப்பு ஆகியவற்றைக சேர்த்து, நசுக்கிக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம். அசத்தலான இருப்பு சக்திக்கான சூப் ரெடி.
இரத்தம் அதிகரிக்கும் பழ சாலட்: கொய்யாப்பழம், அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி அதில் பன்னீர் திராட்சை மற்றும் மாதுளம் முத்துக்களை சேர்த்து அப்படியே சாப்பிடியே சாப்பிடலாம்.
ரத்த விருத்திக்கான காய்கறி சாலட்: கேரட், பீட்ரூட் காய்களை துண்டுகளாக்கி, சீரகத்தூள், உப்பு கலந்து கொத்தமல்லி, கறிவேப்பிலையை மேலே தூவினால் காய்கறி சாலட் ரெடி.
கொத்தமல்லி ஜூஸ்: ஒரு கைப்பிடி கொத்தமல்லியை அரைத்து வடிகட்டிய சாறுடன், ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு கலந்து 100 கிராம் வெல்லம் சுவைக்கு சேர்த்தால் ரத்த அழுத்தத்தை சீராக்கி, பசியை தூண்டும் ஆற்றல் கொண்டது.
வாழைப்பூ சூப்: வாழைப்பூவை சிறு துண்டுகளாக்கி, நான்கு பல் பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் ஒரு தக்காளி இவற்றை நசுக்கி, சிறிது மிளகு, சீரகம், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, சுவைக்கு வெள்ளம் சேர்க்கலாம். சுவையான வாழைப்பூ சூப் தயார்.
புதினா ஜூஸ்: புதினா இலைகளை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிய சாறுடன், எலுமிச்சை பழ சாறு பிழிந்து, சுவைக்கு வெல்லம் சேர்த்து, அரை லிட்டர் தண்ணீர் கலந்து கொடுக்கலாம். இது வளரிளம் பெண்களின் மாதப்போக்கினைச் சீராக்கும். பசியைத் தூண்டி சுறுசுறுப்பைத் தரும்.