(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 187-205 இன் தொடர்ச்சி)
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 206- 237
206. உணர்ச்சி உடம்பியியல் Physiology Of Emotion உணர்ச்சியின் உடலியங்கியல், உணர்ச்சியின் உடலியல், உணர்ச்சி இயங்கியல் எனக் கூறப்படுகிறது. Physiology – உடம்பியியல் எனப் பயன்படுத்துவதால் உணர்ச்சி உடம்பியியல்- Physiology Of Emotion என்றே சொல்வோம். | Physiology of emotion |
207. உணர்ச்சி யியல் | Emotionology |
208. உணர்வகற்றியல் / மயக்கவியல் | Anesthesiology / Anaesthesiology |
209. உணர்வு இயங்கியல் | Sensory Physiology |
210. உணர்வுசார் பொறியியல் | Emotional Engineering |
211. உணவாக்க நுட்பியல் | Catering Technology |
212. உணவியல் | Bromatology |
213. உணவு நுட்பியல் | Food Technology |
214. உணவு நுண்ணுயிரியல் | Food Microbiology |
215. உண்ணி நோயியல் | Rickettsiology |
216. உதட்டு வரியியல் | Lipsology |
217. உதிர் உயிர்மியியல் exfoliō என்னும் இலத்தீன் சொல் இலையுதிர்வைக் குறிக்கும். இங்கே உயிர்மி உதிர்வை மட்டும் குறிக்கிறது. | Exfoliative Cytology |
218. உப்பல் புடவி அண்டவியல் | Inflationary Universe Cosmology |
219. உமிழ்நீரியல் | Sialosemeiology |
220. உயரழுத்த இயற்பியல் | High pressure physics |
221. உயர் நுட்பியல் | High technology |
222. உயர் ஆற்றல் இயற்பியல் | High energy physics |
223. உயர் ஆற்றல் வானக இயற்பியல் | High energy astrophysics |
224. உயர் பாலூட்டியியல் | Primetology |
225. உயர்நிலை அண்டவியல் | Advanced Cosmology |
226. உயிரி நுட்பியல் | Zootechnics |
227. உயிரி மின்னியல் | ElectroBiology |
228. உயிரிப் பரவலியல் | Phenology |
229. உயிரிய அளவியல் | Biometrics |
230. உயிரிய அறவியல் | Bioethics |
231. உயிரிய ஆற்றலியல் | Bioenergetics |
232. உயிரிய இயக்கவியல் உடலியக்கவியல் எனச் சிலர் விளக்குகின்றனர். Physiology என்பதை அவ்வாறு கூறுவதால், இங்கே பொருந்தாது. உயிரி வினையியல் என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். இது Sakanology உடன் தொடர்பு படுத்திக் கூறப்படுவதால் குழப்பம் வரும். mechanics – விசையியல் என்றும் இயக்க இயல் என்றும் குறிப்பிடுகின்றனர். எனினும் உயிரிய விசையியல், உயிரி எந்திரவியல் என்பன எந்திரவியலுடன் தொடர்பு படுத்தித் தவறாகப் பொருள் கொள்ளக்கூடும். எனவே Biomechanics – உயிரிய இயக்கவியல் என்பதே ஏற்ற சொல்லாக அமையும். காண்க: விசையியல்(Mechanics) | Biomechanics/ Biokinetics |
233. உயிரிய இயங்கியல் | Biodynamics |
234. உயிரிய இயற்பியல் | Biophysics |
235. உயிரிய உளவியல் | Biopsychology |
236. உயிரிய எந்திரப் பொறியியல் | Biomechanical Engineering |
237. உயிரிய ஒப்புமையியல் Organic Analogy என்பது உயிரிஉடல் (சூழல்) ஒப்புமை என்றும் உயிரின ஒப்புமை யியல் என்றும் இருவகையாகச் சொல்லப்படுகின்றது. சுருக்கமான சொல்லாட்சியாக உயிரிய ஒப்புமையியல் என்று இங்கே பயன்படுத்தப் பட்டுள்ளது. | Organic Analogy |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
No comments:
Post a Comment